Saturday, 30 December 2017
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 3
சாமிரியின் தங்கக் காளையும் பண்டைய எகிப்தும்.
Exodus என்பது யூதர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் வேதத்தின் இரண்டாவது நூலாகும். இந்த நூலே அவர்கள் ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் எப்படி இருந்தார்கள் என்பது பற்றி கூறுகிறது. எகிப்தை ஆண்ட பாரோக்கள் இஸ்ரவேலர்களை அடிமையாக பயன்படுத்தி வந்தனர். அப்படிப்பட்ட சமூகத்துக்கு விடுதலையையும் சுதந்திரத்தையும் பெற்றுக் கொடுக்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவரே ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளைக் கொண்டு மூஸா நபியவர்கள் தனது சமூகத்தை பரோக்களின் கொடுமைகளிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தார்.
யூதர்களின் இரண்டாவது நூலான Exodus இல் குறிப்பிடப்பட்டுள்ளதும் இஸ்லாமியர்களின் திருக் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதுமான மிக முக்கியமான சம்பவமே சாமிரியின் தங்கக் காளை பற்றிய சம்பவமாகும். அல்லாஹ்வின் கட்டளையின் பேரில் எகிப்திய ஆட்சியாளர்களிடமிருந்து யூதர்களை காப்பாற்றிய மூஸா (அலை) அவர்களின் கட்டளைக்கு அச்சமூகம் காது கொடுக்காமல் சாமிரியின் பேச்சில் மயங்கி காளை ஒன்றை வணங்கினர். இப்படிப்பட்ட ஒரு நிலைமை உருவாக மிக முக்கியமான காரணம் மூஸா நபியவர்கள் அவர்களுக்கு போதித்த ஒரு கடவுட் கொள்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் உருவ வழிபாட்டின் பக்கம் மிக இலகுவாக சாய்ந்தனர்.
இது பற்றி திருக் குர்ஆன் இப்படி கூறுகிறது.
"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."
''நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவையாவும் (முற்றிலும்) வீணானவையே'' (என்றும் கூறினார்)."
''அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்'' என்றும் அவர் கூறினார்."
சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்)
(138-140)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.......
பதிவு நாள்: 31-12-2017.
முத்தலாக் விஷயத்தில் இனி என்ன செய்ய வேண்டும்?
முத்தலாக் தடைச் சட்டத்தை மக்களவையில் அவசர அவசரமாக நிறைவேற்றியிருக்கின்றது, மோடியின் அரசு. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கான திட்டமிட்ட முயற்சிதான் இது என்பதில் சந்தேகமில்லை.
இந்தச் சட்டம் முத்தலாக் பிரச்னையையும் தீர்க்காது. உல்டாவாக இது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.
இந்தச் சட்டத்தை எதிர்த்து என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஆவேசப்படக் கூடாது. ஆத்திரப்படக் கூடாது. முடங்கிவிடவும் கூடாது.
அதே சமயம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையே அளிக்காத வகையில் முஸ்லிம்கள் தம்முடைய நடத்தையை அமைத்துக் கொள்வதுதான் ஒரே வழி.
அதற்காக பின்வரும் பத்து அம்சத் திட்டத்தின் படிச் செயல்பட வேண்டும்.
1. முஸ்லிம்கள் மத்தியில் ஷரீஅத் பற்றிய அறிவை, தெளிவை, விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இடைவிடாத, தொடர் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
2. ஷரீஅத்தின்படி வாழ்வதில்தான் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியும் வளமும் சார்ந்து இருக்கின்றன என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
3. மாநிலங்களெங்கும், மாவட்டம்தோறும், ஊர்கள்தோறும், முஹல்லாகள் அனைத்திலும் இதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
4. திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும். கவுன்சிலிங் சான்றிதழை நிகாஹ்வுக்கான நிபந்தனையாக ஆக்க வேண்டும்.
5. கணவன்-மனைவிக்கு இடையில் பிரச்னை முளைகின்ற போது அதனைத் தீர்ப்பதற்கான முறையான மெக்கானிஸம் முஹல்லாக்கள் தோறும் இருக்க வேண்டும்.
6. கட்டை பஞ்சாயத்து செய்வதைத் தவிர்த்து தாருல் கஸாக்கள் - ஷரீஅத் நீதிமன்றங்களை அமைத்து வழக்குகளை விரைவாகயும் நீதியுடனும் இஸ்லாமிய உணர்வுடன் தீர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
7. குடும்ப வாழ்வு தொடர்பான இஸ்லாமியப் போதனைகளைப் பரப்ப வேண்டும். அவற்றின் படி வாழ வேண்டும்.
8. திருமணங்களில் வீண் விரயங்களைத் தவிர்க்க வேண்டும். வரதட்சிணை, சீர்வரிசை, பிரியாணி விருந்து போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். பேரீத்தம் பழ திருமணங்களைப் பிரபலமாக்க வேண்டும்.
9. பெண்களுக்கு மார்க்க விழிப்பு உணர்வை ஏற்படுத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
10. இஸ்லாமிய ஷரீஅத்தின் படி வாழ்கின்ற உரிமையை நிலைநாட்ட சட்டரீதியான, அரசியல்ரீதியான அனைத்து வழிமுறைகளையும் அமைதியான, ஆக்கப்பூர்வமான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக நிகாஹ், தலாக், குளா, ஃபஸ்கே நிகாஹ் போன்றவை தொடர்பான இஸ்லாமிய சட்டதிட்டங்களை முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கும் புரிய வைப்பதற்கும் மிகப் பெரும் அளவில் திட்டமிட்ட பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
செய்வோமா?
செய்வோம், இன்ஷா அல்லாஹ்
#Azeez Luthfullah

பெண்ணே !உன் பெருமை.
ஆண்களைப் போலவே பெண்களுக்கும் அல்லாஹூத்தஆலா அனைத்திலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.
உணவில் சம உரிமை, உறங்குவதில் சம உரிமை, உடுத்துவதில் சம உரிமை, கல்வியில் சம உரிமை,சம்பாதிப்பதில் சம உரிமை என வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் சம உரிமையை வழங்கி இருக்கின்றான்.
பெண்களுக்கு தாய்மை போன்று பல சிறப்புகளை தந்த அல்லாஹ், முஸ்லிம் பெண்களுக்கு சலுகைகள், சிறப்புகள் என வழங்கி மேன்மை படுத்தி இருக்கின்றான்.
அகீகா – பெண்ணுக்கு ஒரு ஆடு, ஆணுக்கு இரண்டு ஆடு
தங்க நகைகள் ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்
பட்டாடை ஆணுக்கு ஹராம் , பெண்ணுக்கு ஹலால்
தனக்கு விருப்பமான கணவரை பெண் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு.
திருமணத்தின் போது பெண்ணுக்கு எந்தவொரு பொருளாதார செலவும் இல்லை. ஆனால் பெண் கேட்கும் மஹர் தொகையை ஆண்மகன் கட்டாயம் கொடுக்க வேண்டும்
தனக்கு பிடிக்காத கணவரிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமை பெண்ணுக்கும் உண்டு
குழந்தைகளுக்காக பொருளாதாரம் திரட்டுவது ஆணுக்குத் தான் கடமை, பெண்களுக்கு கடமை இல்லை.
பெண் சம்பாதிக்க தேவையில்லை, ஆண் சம்பாதித்து பெண்ணுக்கும் கொடுக்க வேண்டும்.
ஒரு பெண் சம்பாதித்ததை ஆணுக்கு தர தேவையில்லை, ஆண் சம்பாதித்து கட்டாயம் பெண்ணுக்கு தர வேண்டும்
கடைசிவரை பெற்றோரை பாதுகாப்பது ஆணுக்கு கடமை, பெண்ணுக்கு அது இல்லை.
அகீகா தந்தை கொடுக்க வேண்டும், தாய்க்கு அது இல்லை.
மூமினான பெண்கள் மீது யாரும் அவதூறு கூற முடியாது. அப்படி களங்கம் சுமத்தினால் நான்கு சாட்சிகளை கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் அவனுக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும். அவனது சாட்சியை ஏற்றுக் கொள்ளவே கூடாது என இஸ்லாம் சொல்கின்றது.
ஒரு ஆண்மகன் மாதத்தின் எல்லா நாட்களிலும் தொழுதே ஆக வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும் தொழ வேண்டாம் என தொழுகையில் இறைவன் சலுகையளித்துள்ளான்.
ஒரு ஆண்மகன் ரமலான் மாதத்தின் எல்லா நாட்களிலும் நோன்பு வைத்தே ஆக வேண்டும். ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் பிரசவ காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் நோன்பு வைக்க வேண்டாம், அடுத்தடுத்த மாதங்களில் வைத்தால் போதும் என இறைவன் பெண்களுக்கென நோன்பில் சலுகை வழங்கி இருக்கின்றான்.
இவ்வாறு இறைவன் சலுகைகளையும் உரிமைகளையும் சிறப்புகளையும் பெண்களுக்கு வழங்கி மேன்மைபடுத்தி இருக்கின்றான்.
அது மட்டுமா!
இறைவன் இரண்டு பெண்மணிகளை சுட்டிக்காட்டி இவர்கள் , உலக மூமின்களுக்கு முன்மாதிரி என்று குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் 66 வது அத்தியாயாம் 11 & 12 வது வசனங்களில் அல்லாஹு_தஆலா உலகிலுள்ள நம்பிக்கை கொண்ட மூமின்கள் அனைவருக்கும் ஆஸியா மற்றும் மர்யம் அம்மையார்களையே முன்மாதிரியாக சொல்கிறான்.
இறுதியாக இங்கே இன்னொரு சம்பவத்தையும் நான் குறிப்பிடுகின்றேன்.
தனது குழந்தை தாகத்தால் தவித்த போது மக்காவில் ஸஃபா மர்வா மலைகளுக்கிடையில் அன்னை ஹாஜர் அவர்கள் தண்ணீருக்காக ஓடினார். அந்த அம்மையார் செய்தது போல உம்ரா, ஹஜ்ஜூக்காக செல்பவர்கள் செய்ய வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் அந்த பெண்மணி செய்தது போல் செய்கிறார்கள்.
இவ்வாறு அல்லாஹ_தஆலா பெண்களை மேன்மைபடுத்தி வைத்திருக்கின்றான்.
தொகுப்பு - இணையம்.

கண் விழிப்போம்!
இந்திய இஸ்லாமியர் மிகக்குறிப்பாக
தமிழக இஸ்லாமியர் நாம்,
இனியாவது கண் விழிப்போம்!
ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களுக்கும் வாழ்விருந்தும் வாழா வெட்டியாக
தம்மை தாமே புறந்தள்ளி வைத்திருப்பது துரதிஷ்டமே.
அல்ஹாஜ் ஷஹீத் பழநி பாபா அஹ்மத் அலி அவர்களால் அறிவுப்பூர்வமாக ஆக்கப்பூர்வமாக புள்ளி விவரம் திரட்டப்பட்டு மேடையெங்கும் முழங்கியுங்கூட, அன்றும்
இஸ்லாமிய சமுதாயம் தூங்க் கொண்டிருந்தது!
இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறது.
இதோ படியுங்கள்!
தமிழக முஸ்லிம்களின் தொகுதி பலம்:-
------------------------------------------
தமிழகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏறத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது.
அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:
1. நன்னிலம்
2. கடலாடி
3. கோயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்தியப் பகுதி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை கடற்கரை
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எழும்பூர்
16. சென்னை பூங்காநகர்
17. ராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்.
இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் என்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.
23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.
தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 100 சட்டமன்றத் தொகுதிகளிலும், 16 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும்.
அன்பு சகோதரர்களே !...
மேற்காணும் உண்மை நிலையையும் , புள்ளி விபரங்களையும் படித்து சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அழையும் சமுதாயத்தை என்னன்பது சகோதரர்களே!
தீனை பிரித்து, ஆயிரம் இயக்கமாக இருந்து விட்டு போ. ஆனால் அரசியல் என்று வரும் போது சுயேட்சையாக இருந்தாலும் இயக்க தலைகள் கூடி பேசி ஒட்டு மொத்த சமுதாயத்தின் ஓட்டுக்களையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பது ஒவ்வொரு இஸ்லாமிய தலைவர்களின் கடமை.
பழநி பாபா:- மாவீரன் அல்ஹாஜ் பழனி பாபா அவர்களின் ஆசைகள்...!
பழனிபாபா அவர்கள் நம் சமூகத்தை பாதுகாக்க சொன்ன வழிகள்//
1. ஒரு பள்ளிவாசல் மொஹல்லா (பகுதி) யில் உள்ள சமூக உணர்வு உள்ள 10 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும்
ஒரு மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளது
நம் சமூத்தினருக்கு ஒரு பிரட்சனை என்றால் ஒரு பள்ளிவாசல் முஹல்லாவிற்கு ஒரு கார் வீதம் 100 பள்ளிவாசல்களுக்கும்
100 கார்களுடன் 1000 நபர்கள் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டால்
அந்த மாவட்ட ஆட்சியர்
உங்கள் பிரச்சனையை உடனே தீர்த்து வைப்பார்!
இவ்வாறு நீங்கள் செயல்பட்டால் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்
எந்த எதிரிகள் தாக்குதலும் ஏற்படாது!
( பள்ளிவாசல் நிர்வாகத்திலோ அல்லது மார்க்க விஷயத்திலோ தலையிட கூடாது மார்க்க அறிஞர்களுக்கு ஜமாத்துக்கு காவலாளியாக இருக்க வேண்டும் )
2. நம் சமுதாய விழிப்புணர்வு அடைய சிறந்த பேச்சாளரை உருவாக்குங்கள்
அந்த பேச்சாளர் நம் நாட்டில் முன்னோர்கள் நாட்டிற்கு செய்த தியாகம் , மற்றும் அரசியல் உட்பட அனைத்து விஷயங்களையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டும்!
3. நம் சமுதாய இளைஞர்கள்
ஆயுதம் ஏந்தி போராடுவதோ,
நடிகர் சங்கம் பின்னால் போவதோ தவிர்த்து
மக்கள் பிரச்சனைக்கு போராட தயார்படுத்தனும்!
4. தேர்தலில் முஸ்லிம்கள் தனித்து நின்று ஒருமுறையாவது தன்னுடைய அரசியல் செல்வாக்கை காட்ட வேண்டும்!
5. எல்லா மாவட்டத்திலும்
குறைந்த பட்சம் ஒரு வழக்கறிஞராவது உருவாக்க வேண்டும்!
அந்த வழக்கறிஞர் நம் பிரச்சனைகளுக்கு முன்னின்று வாதாடுபவராக
இருக்க வேண்டும்!
பாபாவின் கனவை நினைவாக்க,
பாபா விட்டு சென்ற பணியை தொடர,
சமுதாயத்தை வழிநடத்த,
நல்ல தலைவர் கிடைக்க
அல்லாஹ் விடம் துஆ செய்வோம்!
சிந்திப்பீர்!
தமிழ்நாட்டில் 30 க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் 12000 பள்ளிவாசல்கள் உள்ளது!
ஒரு பள்ளிவாசல் மொகல்லாவிற்கு
10 பேர் வீதம் 12,000 பள்ளிவாசலுக்கு 1,20,000 பேர் நிர்வாகிகளாக இருப்போம்!
இந்த 1,20,000 பேர்
ஒரு தலைமையின் கீழ் உறுவாகுமேயானால்
1000 வாகனங்களுடன்
சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையை முற்றுகையிட்டால்...
சிறைவாசிகளின் விடுதலைக்கு
தீர்வு மட்டும் அல்லாமல்
1கோடி முஸ்லிம்களுக்கு
விடிவுகாலம் பிறக்கும்!
பதிவு உதவி:
சகோ. Nowshad Ali Khan Politician
நன்றி இணையம்....
தாய்மையை பேணுவோம்.
பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன
உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் பிரசவ வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.
வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன ஏதேதோ சத்தம் கேட்டது.
நமக்கு என்ன நடக்கப் போகிறதோ...!!! என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசலாடியது.
அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது..!!!
வழக்கமாக நாம் பேசும் இறைவனையே கேட்டு விடலாம் என்று குழந்தை இறைவனை அழைத்தது.
குழந்தை :
இறைவா ! என்னை எங்கு அனுப்பப் போகிறாய்? வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே! எனக்கு ஒன்றும் புரியவில்லையே.!!
இறைவன்:
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்.
குழந்தை :
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்.!!
இறைவன்:
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் சந்தோசமாகவே இருப்பாய். சென்று வா...
குழந்தை :
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.?
இறைவன்:
கவலைப் படாதே குழந்தாய்.. அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக எல்லாம் செய்யும், உன் மீது அன்பு செலுத்தும், அந்த அன்பை நீ உணர்வாய்.
குழந்தை :
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய். நான் மிகச் சிறியவன், என்னால் நடக்க முடியாது, என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.
இறைவன்:
அது மிகவும் சுலபம். உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும். உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.
குழந்தை :
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் இறைவனையே பார்த்தது) ம்ம்ம்…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.
இறைவன் :
(மென்மையாக சிரித்து)
நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.
குழந்தை :
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்..?
இறைவன் :
(வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.
குழந்தை:
(மிகவும் சோகமான
முகத்துடன்)
இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா...!!!
இறைவன் :
(குழந்தையை அன்பாக அணைத்து)
உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லித்தரும். சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திரும்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க முடியாது.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின...
குழந்தை :
(மிகவும் இறைவனைப் பிரியும் சோகத்துடன்)
இறைவா இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன்...
நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்...
இறைவன் :
குழந்தாய் தைரியமாக சென்று வா... உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் உனக்கு முக்கியமில்லை. ஆனால் அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.
குழந்தாய் கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன் கேள்.
நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதை அம்மாவின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.
குழந்தை சரி என்று வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….
தாய்மையை போற்றுவோம்.

Friday, 29 December 2017
ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 2
மூஸா நபியின் பிரதிநிதி
இரண்டாவது முறையாக மூஸா நபி அவர்கள் தூர்ஸினாய் மலைக்குச் சென்றபோது இவர்களையே அவர்கள் தங்கள் பிரதிநிதியாக நியமித்துச் சென்றார்கள். அப்போதுதான் ஸாமிரி பொன்னால் காளை மாட்டைச் செய்து அதனைக் கடவுளாக வணங்குமாறு பனீ இஸ்ராயீல்களை வழி கெடுத்தான். இவர்கள் எவ்வளவோ தடுத்தும் அந்த மக்கள் ஸாமிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டார்கள்.
சினத்துடன் திரும்பிய மூஸா அலைஹிஸ்ஸாம்
அதனை இறைவன் மூலம் உணர்ந்து அடங்காச் சினத்துடன் திரும்பிய நபி மூஸா அலை அவர்கள்,
(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) ‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?’ என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) ‘என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) ‘பகைவர்களுக்கு என் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்’ இன்னும் என்னை அநியாயக்காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்’ என்று கூறினார். – அல்-குர்ஆன் 7:150
(இதற்கு ஹாரூன்:) ‘என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; ‘பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!’ என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்’ என்று கூறினார். – – அல்-குர்ஆன் 20:94
இறை ஆணைப்படி தௌராத் வேதத்தை வைப்பதற்கு ஓர் ஆலயத்தை நிர்மாணித்து அதன் நிர்வாகியாய் இவர்களை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நியமித்தார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
பதிவு நாள்: 29-12-2017.
Thursday, 28 December 2017
காதலர் தினம் - கற்பு கொள்ளையர் தினம்
பிரப்வரி 14 காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது
கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை (காமக்களியாட்டத்தை) ஊக்கப் படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கி சமுதாயத்தை சீரழித்து கொண்டு இருக்கின்றன. மீடியாக்கள் காதல் என்ற பெயரில் காமக் களியாட்டங்களில் ஈடுபடுவதை சாதாரணமான விஷயமாக்கிவிட்டது.
கேள் ஃபிரண்ட் இல்லாதவர்களை கோமாளிகள் போல் சித்தரித்து, கேள் ஃபிரண்ட் இல்லாத நல்ல ஒழுக்கம் உள்ள இளைஞர்களை ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு காதலை கவுரமான விஷயமாக மாற்றி விட்டது.
உங்கள் காதலிக்கு, காதலனுக்கு SMS அனுப்புங்கள் அதை டிவியில் போடுகின்றோம் விலை வெறும் ரூ.3, ரூ.6 தான் என இளஞர்களின் உணர்வுகளை காசாக்கி கொண்டிருக்கின்றனர் மீடியாக்கள். இதை அறியாத அப்பாவி இளைஞர்களும் இளம் பெண்களும், இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் மூழ்கி வருகின்றனர்.
காதலிப்போர் கவனத்திற்க்கு :
காதல் என்பது ஒரு மாயை, இளம்வயதியில் வரும் உணர்வுகளின் வெளிப்பாடு, இதை நாம் கவனமாக கட்டுப்பாடுடன் வைத்து கற்பை காத்து கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டில் கொஞ்சம் கவனம் தவறினாலும் கற்பை இழந்து சமுதாயத்தில் இழிபிறவிகளாக நடமாட வேண்டியது தான்.
பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை, திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத் தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,
ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை தான் மிஞ்சி இருக்கும். ஏன் இவளை திருமணம் செய்தோம் நம் தாய் தந்தையர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து இருக்கலாம் என எண்ணம் வரும் பின்பு வாழ்க்கை கசந்துவிடும், பெற்றோர்களின் ஆதரவு இல்லாததால் , தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவன் என்ன தவறு செய்தாலும் பெரியவர்களிடம் முறையிட முடியாமல் போய்விடும், (காதலன் ) கணவன் செய்யும் எல்லா கொடுமைகளையும் சகித்துகொண்டும் வாழ வேண்டிய அவல நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். இன்று காதலுக்கு துணை நிற்க்கின்றேன் என்று சொல்லும் நண்பர்கள் எல்லாம் நாளை காணமல் போய்விடுவார்கள், வாழ்வில் கஷ்டம் மட்டுமே மிஞ்சி இருக்கும்.
சினிமாக்கள் தான் உங்களுக்கு தவறான வழிகாட்டுகின்றன, சினிமாவில் பார்ப்பது போல் இல்லை காதல், காதல் எங்கு போய் முடியும் என்றால், ஒன்று கற்பை இழந்து இழி பிறவிகளாக சமுதாயத்தில் நடமாடுவது, அல்லது காதலனை திருமணம் செய்தாலும் அவன் செய்யும் அனைத்து கொடுமைகளையும் சகித்து கொண்டு உதவ ஆளில்லா மல் கஷ்ட்டப்பட்டு கொண்டே வாழ்வது.
காதல் செய்வதால் ஏற்படும் இழப்புகள் :
இளம் பெண்களே! பெரும்பாலும் காதலிக்கும் இளைஞர்கள் தங்களுடைய உணர்வுகளுக்கு தீனிபோடவே பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி காதல் என்னும் மாய வலை யில் விழ வைத்து தங்கள் இச்சைகளை தீர்த்துகொள்கின்றனர். இது அறியாத அப்பாவி இளம் பெண்கள் ஆண்களின் ஆசை வார்த்தையில் மயங்கி தங்களுடைய கற்பை தொலைத்து மானம் இழந்து, மரியாதை இழந்து பெற்றோர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திகொடுத்து சமுதாயத்தின் இழி சொல்லுக்கும் பழி சொல்லுக்கும் ஆழாகின்றனர். நீங்கள் காதலிப்பதாலோ, காதல் என்ற போர்வையில் ஆண்களுடன் தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதினாலோ ஆண்களுக்கு எந்த நஷ்ட்டமும் இல்லை, அனைத்து நஷ்டமும், கஷ்டமும் பெண்களுக்குதான்.
காதல் காதல் என்று உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு அவனால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள், திருமணம் கடினமாகின்றது, பிறகு நமக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு இந்த விஷயம் தெரிந்தால் நம்மை மதிப்பார்களா? சிந்தித்து பாருங்கள் இளம் பெண்களே! ஆண்கள் தன் இச்சையை தீர்த்துகொள்ள உங்களை ஏமாற்றுகின்றான், நம்பாதீர்கள், பெற்றோர் சொல்லும் அறிவுறையை கேட்டு நல்ல ஒழுக்கமுள்ள, ஆற்றல் உள்ள பெண்களாக சமுதாயத்தில் கண்ணியத்துடன் வலம் வாருங்கள், உங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களுக்கு நற்பெயரை வாங்கி கொடுங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை மதித்து நடக்கும் படி சமுதாயத்தில் மதிப்புள்ள மங்கையாக வாழுங்கள். உணர்வுகளை கட்டுபடுத்தி கட்டுபாட்டுடன் இருந்தால் கண்ணியமாக வாழலாம்
படிக்கும் இளைஞர்களே!
காதலிக்காக ஒதுக்கும் நேரத்தை நம் படிப்பிற்க்காக ஒதுக்கினால் அரியர் இல்லாமல் (பெயில் ஆகாமல்) தெர்வில் தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமரலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும் வாழ்கையையும் வீணடிப்பது.
இளைஞர்களே!
உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர். காதலியின் சின்ன சிரிப்பிற்க்காக உங்கள் பெற்றோர்கள் கஷ்ட்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டுமா? சிந்தித்து பாருங்கள். சினிமாவை பார்த்து காதல் என்னும் மாய வலையில் விழுந்து தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லை என வாழ்க்கையை தொலைத்தவர்கள் எத்தனை பேர். நீங்கள் ஒரு பெண்ணை விரும்பி அந்த பெண் உங்களை புறக்கணித்தால் நீங்கள் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாவீர்கள் அது எப்போதும் உங்களை சோகத்திலேயே வைத்திருக்கும், வாழ்வில் சந்தோஷம் என்பதே பிறகு இருக்காது. உங்கள் ஆற்றல் அறிவு , கல்வி அனைத்தையும் இழந்து மன நோயாளியாக உலகத்தில் உலாவர வேண்டி இருக்கும். இளைஞர்களே! இது உங்களுக்கு தேவையா? எனவே காதலிக்க வேண்டும் என கனவில் கூட நினைக்காதீர்கள். வாழ்கை இழந்து மன நோயாளியாகிவிடுவோம்.
காதலும் (காம களிய்யாட்டங்களும்) விபச்சாரம்தான்
காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்கள் அதிகரிக்க இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த தீமைகளில் இருந்து விலகி இருக்க முடியும்.
இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது”
(நூல்: புகாரி 6243)
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை. ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரணமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன. ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன. வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிருக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.தன்னை பெற்றத் தாய் வளர்த்த தந்தை தன்னை நேசிக்கவில்லை என எந்த ஒரு இளைஞனும் தற்கொலை செய்து கொண்டுள்ளானா? ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம். மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா? தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா?’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சுகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள். ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள். அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!
டிசம்பர் 1 ஆம் தேதிக்கு காரணமே பிப்ரவரி 14 ஆம் தேதி தான்
எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோயை ஒழிக்க டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அனுசரிக்கப்படுகின்றது. எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் காமக் களியாட்டங்களை (காதலை) அங்கீகரிக்கும் இந்த காதலர் (கற்பு கொள்ளையர் ) தினமும் உலக எயிட்ஸ் தினமும் ஒன்றே. எயிட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவ இது போன்ற காம களியாட்டங்களை அறங்கேற்றும் விழாகள் முதல் நிலை காரணிகளாய் இருக்கின்றன. எயிட்ஸ் நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு எயிட்ஸ் நோய் வர காரணமாய் இருக்கும் இந்த காதலுக்கு (காம களியாட்டத்திற்க்கு) எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14-ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பறிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை இன்ஷா அல்லாஹ் காப்பாற்றலாம்!
நன்றி இணையம்.

ஈமான், இஸ்லாம் , இஹ்ஸான்
ஈமான் என்றால் என்ன?
‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் ‘இறைநம்பிக்கை’ என்று பொருள். அதாவது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் நம்ப வேண்டும் என்று கூறினார்களோ அவற்றில் எதையும் அதிகமாக்காமலும் எதையும் விட்டுவிடாமலும் உள்ளதை உள்ளபடி உண்மையென உள்ளத்தால் உறுதிகொள்வதே ‘ஈமான்’ என்பதாகும்
ஈமானின் கடமைகள் எத்தனை?
ஈமானின் கடமைகள் ஆறு ஆகும் . பின்வரும் ஹதீஸிருந்து அவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்
ஜிப்ரீல் ( அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஈமான்(இறைநம்பிக்கை) என்றால் என்ன? என்று வினவினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குமார்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இன்னும் மறுமை நாளையும் நீங்கள் நம்புவதாகும். நன்மை, தீமைகள் யாவும் அல்லாஹ்வின் (நாட்டமாகிய) விதியின் படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : முஸ்லிம் (9)
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்பது ஐந்து தூண்களின் மீது கட்டமைக்கப்பட்டதாகும். . பின்வரும் ஹதீஸிருந்து அவற்றை நாம் அறிந்து கொள்ளலாம்
ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி எனக்கு அறிவிப்பீராக என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் இஸ்லாம் என்பது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும் நிச்சமாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர் என்றும் சாட்சி கூறுவதும் , தொழுகையை நிலைநாட்டுவதும் , ஸகாத்தை நிறைவேற்றுவதும் , ரமலான் மாதம் நோன்பு நோற்பதும், (பொருளாலும் , உடலாலும் ) சென்று வர சக்தி பெற்றிருந்தால் அல்லாஹ்வுடைய (கஃபா) எனும் ஆலயத்தை ஹஜ் செய்வதும் ஆகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி)
நூல் : முஸ்லிம் (9)
இஹ்ஸான் என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கன் இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீ பார்ப்பது போல் வணங்குவதாகும். நீ அவனைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்க்கிறான்.

ஈமானின் கிளைகள் எத்தனை?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஈமான் என்பது எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டதாகும். அவற்றில் மிகச் சிறந்தது ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை’ என்ற சொல்லாகும். அவற்றில் கடைசியானது (மக்கள் நடமாடும்) பாதையில் இடையூறு தரும் பொருட்களை அகற்றுவதாகும். ‘வெட்கம்’ என்பதும் ஈமானின் ஒரு கிளையாகும்.
அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்
நன்றி - இணையம்.

ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 1
ஹாரூன் நபியின் பிறப்பு
பிர்அவ்ன் இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தைகளை வெட்ட வேண்டும் என்று ஆணையிடுவதற்கு முன் பிறந்தவர்கள் நபி ஹாரூன் (அலை) அவர்கள். இவர்களின் தாய் பெயர் யூகானிதா. தந்தை இம்ரான் ஆகும்.
இவர்கள் நபி மூஸா அலை அவர்களை விட உயரமாகவும், மென்மையாகவும், வெண்மையாகவும் இருந்தார்கள். ஹாரூன் என்ற ஹீப்ரு சொல்லின் பொருள் சிவப்பும் வெண்மையும் என்பதாகும்.
மூஸா நபியின் அமைச்சர்
அல்லாஹ் நபி மூஸா அலைம் அவர்களை நோக்கி ஃபிர்அவ்னிடம் சென்று அவனுக்குச் சன்மார்க்கத்தைப் போதிக்குமாறு கூற, தமக்கு அப்பணியில் உறுதுணையாக தம் தமையனார் ஹாரூனை ஏற்படுத்துமாறு வேண்டினார்கள்.
இன்னும்: ‘என் சகோதரர் ஹாரூன் – அவர் என்னை விடப் பேச்சில் மிக்க தெளிவானவர்; ஆகவே என்னுடன் உதவியாய் நீ அவரை அனுப்பி வைப்பாயாக! என்னை அவர் மெய்ப்பிப்பார். நிச்சயமாக, அவர்கள் என்னைப் பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்’ (என்றுங் கூறினார்). – அல்-குர்ஆன் 28:34
எனவே அல்லாஹ் இவர்களை நபியாகவும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அமைச்சராகவும் ஆக்கினான். அதனால் இவ்விருவர்களைப் பற்றியும் அல்லாஹ் தன் அருள்மறையில் ‘அவ்விருவரும் நம்முடைய விசுவாசியான நல்லடியார்களில் உள்ளவர்’ என்று கூறுகின்றான்.
இன்ஷா அல்லாஹ் தொடரும் .......
பதிவு நாள்: 28-12-2017.
Monday, 25 December 2017
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 9
காலம் கடந்த ஞானோதயம்
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம் என்று கூறினான்.இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். (அல்குர்ஆன்: 10:90,91)
அழியாத அத்தாட்சி
உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம். தூய்மையானவற்றை அவர்களுக்கு வழங்கினோம். அறிவு அவர்களிடம் வரும் வரை அவர்கள் முரண்படவில்லை.உமது இறைவன் கியாமத் நாளில் அவர்கள் முரண்பட்டதில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். (அல்குர்ஆன்: 10:92,93)
கொடுங்கோலன் பிர்அவ்னை வல்ல அல்லாஹ் அழித்த நாள் தான் ஆஷுரா எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். திருக்குர்ஆன் கூறும் மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டது. ஆஷுரா நாள் என்றாலே ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டு விட்டதே!
எல்லாம் வல்ல ரஹ்மானின் அருட்கொடைகளையும், ஆற்றலையும் கடந்து போன அந்த சமுதாயத்தின் தியாக வரலாற்றிலிருந்து உணர்ந்து ஏகத்துவச் சிந்தனையை வலுப்படுத்திக் கொள்ளவேண்டிய நம் சமுதாயம், அதைக் கண்டு கொள்ளாமல் கர்பலாவின் பெயரையும், பஞ்சா போன்ற அனாச்சாரங்களையும் உரத்துச்சொல்லி கைசேதப்பட்டு நிற்கிறது. அல்லாஹ் காப்பானாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.......
பதிவு நாள்: 26-12-2017

மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 8
கடல் பிளந்தது, கொடியவன் கொல்லப்பட்டான்
அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள்புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன்: 28:5,6)
காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது நாம் பிடிக்கப்பட்டு விடுவோம் என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்.உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும்,அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். (அல்குர்ஆன்: 26:60-66)
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
பதிவு நாள்: 25-12-2017.
Saturday, 23 December 2017
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 7
சூனியக்காரர்களின் ஈமானிய உறுதி
நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்புபவர்கள் என்று அவர்கள் கூறினர். எங்கள் இறைவனின் சான்றுகள் எங்களிடம் வந்த போது அதை நம்பினோம் என்பதற்காகவே எங்களை நீ தண்டிக்கிறாய் (என்று ஃபிர்அவ்னிடம் கூறி விட்டு) ,எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தருவாயாக! எங்களை முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வாயாக! என்றனர்.(அல்குர்ஆன்; 7:125, 126)
என் இறைவன் அல்லாஹ்வே என்று கூறும் ஒரு மனிதரை கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான் என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கைக் கொண்ட ஒருவர் கூறினார். (அல்குர்ஆன்: 40:28
இன்ஷா அல்லாஹ் தொடரும்........
பதிவு நாள்:24-12-2017.
அல் அக்ஸாவை மீட்போம் - 8
பாலஸ்தீன ஜெருசலேம்
தலைநகரம் விவகாரம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு தலைநகராக ஜெருசலேமை அறிவித்தது
பற்றி
ஜெருசலேமில்தான் உலக இஸ்லாமியர்களுக்கு புனித பள்ளியாக அல் அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ளது,
இஸ்ரேலுக்கு தலைநகர் ஜெருசலேம் என்று அறிவித்ததன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியது இவர்களின் அரசியல் தந்திரங்கள் தான் அதாவது
இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேமில் உள்ளவை அனைத்தும் யூதர்களுக்கு மட்டும்தான்,
அங்கு வாழும் பாலஸ்தீன இஸ்லாமியர்களுக்கு ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதே இவர்களின் அரசியல் திட்டம், என்பது இவர்கள் அறிவித்த
ஜெருசலேம் தலைநகர் விவகாரத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்,
ஐ.நா சபை
இப்போது மீடியாக்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தது எதிராக ஐ.நா சபை கண்டனம்
அமெரிக்க அரசுக்கு எதிராக செயல்படுகிறது என்பதுபோல் பொய்யான வேடமாக மீடியாக்களில் பார்த்துவருகிறோம்,
இந்த விடயத்தில் நாம் சிந்திக்க வேண்டும்,
இது உண்மையில் இஸ்லாமியர்களின் கொந்தளிப்பை தணிப்பதற்காக.
அப்படியானால் ஐ.நா சபை பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு என்றால் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக
ஐ.நா சபை செயல்படுமா?
அப்படி செயல்படுமேயானால் அது கனவு மட்டுமே, அந்த கனவே நாம் இன்று மீடியாக்களில் பார்த்துவருகிறோம்,
ஆனால் உண்மையாக பாலஸ்தீனத்தில் நடப்பதோ வேறுவிதம்,
ஐ.நா சபை பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவு என்றால் என்றோ பிரச்சனைகள் தீர்வுக்கு வந்திருக்குமே, அன்றை காலம் முதல் இன்றைய காலம் வரை பாலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய ராணுவர்களால்
தினந்தோறும் துன்புறுத்தபட்டு வருகிறார்கள், ஐ.நா சபை இதை இஸ்ரேலுக்கு எதிராக கண்டனம் தெரிவிக்க வேண்டியதுதானே?
முடியாது ஏன் என்றால் அந்த அதிகாரமே இஸ்ரேல் அரசிடம் உள்ளது.
இஸ்ரேல் அரசு சொல்வதே அமெரிக்க அரசு செய்து கொண்டிருக்கின்றது, அமெரிக்க அரசு சொல்வதே ஐ.நா சபை செய்து கொண்டு இருக்கின்றது என்பதை இந்த அரசியல் தந்திரங்களை பார்த்தால் புரியும்,
ஒரு பக்கம் இஸ்ரேல், அமெரிக்க அரசாங்கம் இவர்களது அதிகாரத்தை செய்து கொண்டே இருப்பார்கள்,
மறுபக்கம் ஐ .நா சபை அறிவித்த அறிக்கையை கண்டனம் தெரிவித்து கொண்டே இருப்பது போல் பொதுமக்களுக்காக மீடியாக்களில் வந்து கொண்டே இருக்கும், மீடியாக்களில் இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீன நாட்டிற்கு ஆதரவாகவும் தான் அமையும், அப்போது தான் இஸ்லாமியர்கள் கொந்தளிக்காமல், ஐ.நா சபை மீது நம்பிக்கை வைப்பார்கள்.
இதுதான் இந்த ஐ.நா சபையின் நோக்கம்,
ஆக இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது, யோசித்து நிதானமாக மீடியாக்கள் கொண்டு வருவதை ஆராயாமல்
மற்றவர்களுக்கு பகிற வேண்டாம், உண்மையில் பாலஸ்தீனத்தில்ந டந்துகொண்டு இருப்பதோ வேறு விதம் என்பது உண்மை.
அமெரிக்க அதிபர் அறிவித்தது
சரிதான், இதற்கு ஐ.நா சபை ஆதரவு, பாலஸ்தீன மக்களுக்கு எதிர்ப்பு இதுபோல் மீடியாக்களில் வந்தால் என்ன ஆகும்?
முக்கியமாக இஸ்லாமியர்கள் கொந்தளிப்பார்கள் இதை தணிக்கவே இதுபோல் அரசியல் சூழ்ச்சிகள் ஐ.நா சபை செய்து கொண்டு இருக்கின்றது,
இதற்காகதான் ஐ.நா சபை
என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டும்,
இவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டே இருக்கின்றார்கள்,“அல்லாஹ்”
சூழ்ச்சிகளுக்கெல்லாம் சூழ்ச்சி செய்பவன்,
அனைத்து அமெரிக்க அதிபர்களும்
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனைகளை
தீர்க்க பல விதமாக முயற்சி செய்து கொண்டு வந்துள்ளனர், ஆனால் தீர்க்க முடியவில்லை,
காரணம் இஸ்ரேலின் இரகசியங்கள்
ஆனால் அன்றும் இன்றும் இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக மட்டுமே அமெரிக்கா செயல்படுகிறது என்பதை 1947 க்கு
பிறகு வரலாற்றை பார்த்தால் புரியும்.
ஆக இந்த அமெரிக்க அரசு இஸ்ரேலை பாதுகாத்து கொள்ளவே ஆகும்,
ஐ.நா சபை பொதுமக்களுக்காக என்ற
அரசியல் சூழ்ச்சிகளை உருவாக்கி மக்கள் முன்பு மீடியாக்களால் ஆதரவு போல் அன்றும், இன்றும் செயல்பட்டு கொண்டு வருகின்றது,
எத்தனை அமெரிக்க அதிபர்கள் வந்தாலும் சரி எத்தனை ஐ.நா சபை வந்தாலும் சரி இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியாது, ஆனால் இவர்கள் இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள்,
என்பது 1947 இல் இருந்து 2017 வரை வரலாற்றை பார்த்தாலுமா நம் மக்களுக்கு ஐ.நா சபை மீது நம்பிக்கை வரும்?
அப்படி இன்னும் ஐ.நா சபை பார்த்து கொள்ளும் என்றால் அது அவர் அவர்களது மூடத்தனம்,
கடந்த இருபது வருடங்களாக வரலாற்றை பார்ப்போமேயானல் யூதர்களுக்கும் பைத்துல் முகத்தஸுக்கும் சம்மதம் இல்லை,
ஐ.நா சபை தீர்ப்பு (அதிரடி) என்பது போல் மீடியாக்களில் மூலம் தீர்வு அறிவித்து
முழு உரிமை பாலஸ்தீன மக்களுக்கு தான் என்பது போல் பல முறை தீர்பு சொல்லி இருந்துமா... இன்னும் பாலஸ்தீன மக்களுக்கு முழு உரிமை கிடைக்க வில்லை?
ஆக இந்த ஐ.நா சபையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படும் என்பது
உறுதிப்படுத்துகிறது,
இதற்கு தீர்வு என்றால் அந்த
தீர்வு ஈசா அலைஸ்லாம் அவர்களின் மூலமே
“அல்லாஹ் “ நிறைவேற்றுவான்,
இப்போதைய தருணத்தில் பாலஸ்தீன மக்களுக்காக
இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் சிறந்த இஸ்லாமிய கலீஃபா பாலஸ்தீனத்தில் ஆட்சி செய்ய வேண்டும்,
இன்ஷா அல்லா நம் தொழுகையில் முழு மனதுடன் இதற்காக “அல்லா”விடம் பிராத்தனை செய்வோம்,
இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
இஸ்ரேல் அரசுக்கு எதிராக உங்களது கண்டனங்கள்,
முற்றுகை போராட்டங்கள் செய்வது வீண் செயல் பயனற்றது ,
கண்டனங்கள் , போராட்டங்கள் ,
செய்வதற்காக கூடிய கூட்டங்கள்
ஒருவனிடம் கேட்க மறந்துவிட்டோமே ,,
“அல்லாஹ்” நாடாமல் நடந்து விடுமா?
அல்லாஹ் நாடாமல் எதுவும் நடப்பதில்லை
ஏன் ஒன்று சேர்ந்து ஒரே நிய்யத்தாக அல்அக்ஸாவிற்காக தொழுகையில் அவனிடம் கேட்டுள்ளோமா?
ஏன் கேட்க தவறி விட்டோம்
“அல்லா”மீது நம்பிக்கை இல்லையா? “இன்ஷா அல்லாஹ்“
என்று வாய் வார்த்தையில் மட்டுமா நாம் பேச வேண்டும்?
நமது கண்டனங்கள் ஆர்ப்பாட்டங்கள்
பயனற்றவையே இந்தியாவில் பாபர் மசூதி பிரச்சனையில் வருடம் வருடம் டிசம்பர் 6 இல் அரசுக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டம் , போராட்டம் எதற்காக ? வெற்றிகிடைத்து விட்டதா ? எங்கே நமது வெற்றி ?
அந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில்
மீடியாக்கள் வரும் வரை
பிறகு அடுத்த வருடம் மீண்டும் இதுபோலவே கண்டனங்கள், போராட்டங்கள்,
அல்அக்ஸாவிற்காகவோ, பாபர் மசூதிகேகாகவோ
ஒன்று சேர்ந்து நாம் “அல்லாஹ்”விடம் துவா கேட்டுள்ளோமா?
ஒவ்வொரு இஸ்லாமியர் உள்ளங்களுக்கு தெரியும் நாம் இதற்காக முழு மனதுடன் ஒன்று சேர்ந்து தொழுகையில் அல்லாவிடம் துவா கேட்ட வில்லை என்று நம் மனசாட்சியே சாட்சி சொல்லும்,
அல்லாஹ்விடம் இதற்காக பிராத்திப்போம்,
அதன் பிறகு கண்டனங்கள், போராட்டங்கள்,
செய்தால் இன்ஷா அல்லா வெற்றி கிடைக்கும் ,
ஆனால் நாம் இதை செய்ய மாட்டோமே,
எனது குடும்பம்,எனது உறவினர்கள்,
நான்,
எனக்காக , அதாவது உணவு,உடை,இருப்பிடம்,
நோயற்ற வாழ்வு,செல்வம்,
என்று சுயநலம் தொடர்புள்ளதை மட்டுமே
“அல்லா”விடம் கேட்டு கொண்டு இருக்கின்றோம்,
இது பிறருக்காக இல்லை
நமக்காக,
பிறர் மீது குற்றம் சாற்றுவதை விட ,நான் ,நாம் மட்டுமே காரணம் ,
இஸ்லாமியர் ஒவ்வொருவரும்
பிரார்த்தனையில் தான் உள்ளது ,
அல்அக்ஸா பள்ளிவாசல் உலக இஸ்லாமியர்களுக்கு சொந்தமாக வேண்டும் என்றால்
பாலஸ்தீன நாட்டில் இன்ஷா அல்லா
இஸ்லாமிய ஆட்சியாக சிறந்த கலீஃபா ஆட்சி செய்ய வேண்டும்
அதற்காக ஒவ்வொரு இஸ்லாமியராகிய நாம்
“அல்லாஹ்”விடம் துவா செய்வோம்.
- சலீம் அமெரிக்கா.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கான முயற்சி
அவசர அவசரமாக அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வர இருக்கின்றது, மோடியின் அரசு. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கான திட்டமிட்ட முயற்சிதான் இது என்பதில் சந்தேகமில்லை.
முத்தலாக்குக்கு மூன்றாண்டு சிறை என்பதெல்லாம் மிகவும் ஓவர். இது முத்தலாக் பிரச்னையையும் தீர்க்காது. உல்டாவாக இது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன...
இந்தச் சட்டத்தை எதிர்த்து எப்படி போராடப் போகின்றோம்? என்ன செய்யப் போகின்றோம்?
முதலில் ஆவேசப்படக் கூடாது. ஆத்திரப்படக் கூடாது. முடங்கிவிடவும் கூடாது.
அதே சமயம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையே அளிக்காத வகையில் முஸ்லிம்கள் தம்முடைய நடத்தையை அமைத்துக் கொள்வதுதான் ஒரே வழி.
அதற்காக பின்வரும் பத்து அம்சத் திட்டத்தின் படிச் செயல்பட வேண்டும்.
1. முஸ்லிம்கள் மத்தியில் ஷரீஅத் பற்றிய அறிவை, தெளிவை, விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இடைவிடாத, தொடர் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
2. ஷரீஅத்தின்படி வாழ்வதில்தான் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியும் வளமும் சார்ந்து இருக்கின்றன என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
3. மாநிலங்கமெங்கும், மாவட்டந்தோறும், ஊர்கள்தோறும், முஹல்லாகள் அனைத்திலும் இதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.
4. திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும். கவுன்சிலிங் சான்றிதழை நிகாஹ்வுக்கான நிபந்தனையாக ஆக்க வேண்டும்.
5. கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சினை முளைகின்ற போது அதனைத் தீர்ப்பதற்கான முறையான மெக்கானிஸம் முஹல்லாக்கள் தோறும் இருக்க வேண்டும்.
6. கட்டை பஞ்சாயத்து செய்வதைத் தவிர்த்து தாருல் கஸாக்கள் - ஷரீஅத் நீதிமன்றங்களை அமைத்து வழக்குகளை விரைவாகவும் நீதியுடனும் இஸ்லாமிய உணர்வுடன் தீர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
7. குடும்ப வாழ்வு தொடர்பான இஸ்லாமியப் போதனைகளைப் பரப்ப வேண்டும். அவற்றின் படி வாழ வேண்டும்.
8. திருமணங்களில் வீண் விரயங்களைத் தவிர்க்க வேண்டும். வரதட்சணை, சீர்வரிசை, போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
9. பெண்களுக்கு மார்க்க விழிப்பு உணர்வை ஏற்படுத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
10. இஸ்லாமிய ஷரீஅத்தின் படி வாழ்கின்ற உரிமையை நிலைநாட்ட சட்டரீதியான, அரசியல்ரீதியான அனைத்து வழிமுறைகளையும் அமைதியான, ஆக்கப்பூர்வமான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
செய்வோமா?
செய்வோம், இன்ஷா அல்லாஹ்
நன்றி - இணையம்

Thursday, 21 December 2017
ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் தாரமி அர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்
இமாம் தாரமீ
இயற்பெயர் : அப்துல்லாஹ்
குறிப்புப்பெயர் : அபூமுஹம்மத்
குலம் : இவர் தமீமீ அல்லது தாரமீ என்ற கூட்டத்தைச் சார்ந்தவர். இவர் சமர்கன்த் என்ற ஊரில் தங்கிய காரணத்தினால் சமர்கன்தீ என்றும் இவர் கூறப்படுகிறார்.
தந்தைப் பெயர் : அப்துர் ரஹ்மான்
பிறப்பு : இவர் ஹிஜ்ரீ 181 ஆம் ஆண்டு சமர்கன்த் என்ற ஊரில் பிறந்தார்.
கல்வி : இமாம் தாரமீ அவர்கள் நன்கு புத்திக் கூர்மையுள்ளவராக இருந்தார். பல ஆசிரியர்களைச் சந்தித்து கற்றார். இவர் எப்பொழுது கல்வி கற்க ஆரம்பித்தார் என்பது நமக்கு சரியாக தகவல்கள் மூலம் கிடைக்கவில்லை. இவர் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன்னை விட வயதில் கீழ் உள்ளவர்களிடமிருந்தும் கற்றுள்ளார். இவர் தொகுத்துள்ள சுனனுத் தாரமீ என்ற ஹதீஸ் தொகுப்பு நூல் இவரை ஹதீஸ் வல்லுனராக காட்டுக்கிறது. அறிவிப்பாளர்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். பல அறிஞர்கள் இவரை சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.
கல்விக்காகப் பயனித்த ஊர்கள் : ஹுராசான், ஈராக், கூஃபா, பஸரா, ஷாம், பக்தாத், வாசித், திமஷ்க், ஹிமஸ், ஜசீரா, சஃர், ஹிஜாஸ் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள்ளார்.
ஆசிரியர்கள் : யசீத் பின் ஹாரூன், யஃலா பின் உபைத், ஜஃபர் பின் அவ்ன், பிஷ்ர் பின் உமர், முஹம்மத் பின் பிக்ர், வஹப் பின் ஜரீர், அன்னள்ர் பின் ஷுமைர், உஸ்மான் பின் உமர், சயீத் பின் ஆமிர் மற்றும் பலர் இவருக்கு ஆசிரியராக இருந்துள்ளார்கள்.
மாணவர்கள் : இமாம் முஸ்லிம், இமாம் அபூதாவூத், இமாம் திர்மிதி, அப்து பின் ஹமைத், அல்ஹசன் பின் சப்பாஹ், முஹம்மத் பின் பஷ்ஷார், முஹம்மத் பின் யஹ்யா இன்னும் பலர் இவருடைய மாணவராக உள்ளார்கள்.
தொகுப்புகள் : சுனனுத் தாரமீ என்ற சிறந்த ஹதீஸ் தொகுப்பு நூலை இமாம் தாரமீ அவர்கள் தொகுத்துள்ளார்கள். இன்னும் அல்ஜாமிஃ, அத்தஃப்சீர் என்ற நூலையும் தொகுத்துள்ளார். எனினும் இவை காணாமல் போய்விட்டன.
மரணம் : இமாம் தாரமீ அவர்கள் ஹிஜ்ரீ 255 ஆம் ஆண்டு இறந்தார்கள். அப்போது இவருடைய வயது 75 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமையன்று அடக்கம் செய்யப்பட்டார்.

மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 6
சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர். அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம் என்றும் கூறினர். (அல்குர்ஆன்: 7:120-122)
ஃபிர்அவ்னின் ஆணவப்போக்கு
நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திலிருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்றுவதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்! என்று ஃபிர்அவ்ன் கூறினான்.உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன் (என்றும் கூறினான்).(அல்குர்ஆன்: 7:123,124)
பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை என்று ஃபிர்அவ்ன் கூறினான். ஹாமானே! எனக்காக களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு! (அதன் மீது ஏறி) மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன் என்றான். (அல்குர்ஆன்: 28:38)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். ( அல்குர்ஆன்: 79:24)
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
பதிவு நாள்: 21-12-2017
Wednesday, 20 December 2017
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 5
போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள்
இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள் தேர்ந்த சூனியக்காரர் ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள் என்றும் (ஃபிர்அவ்னிடம்) கூறினர். சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா? என்று அவர்கள் கேட்டனர். (அதற்கவன்) ஆம்! நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள் என்று கூறினான். மூஸாவே! (வித்தைகளை) நீர் போடுகிறீரா? நாங்களே போடட்டுமா? என்று கேட்டனர். ''நீங்களே போடுங்கள்!'' என்று (மூஸா) கூறினார். அவர்கள் (தமது வித்தைகளைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள் மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள்.பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். ''உமது கைத்தடியைப் போடுவீராக!'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது அவர்கள் செய்த வித்தையை விழுங்கியது. உண்மை நிலைத்தது. அவர்கள் செய்து கொண்டிருந்தவை வீணாயின. அங்கே அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்; சிறுமையடைந்தனர். (அல்குர்ஆன்: 7:111-119)
Tuesday, 19 December 2017
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 4
ஃபிர்அவ்னின் ஆணவம்
மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். பெரும் பொய்யரான சூனியக்காரர் என்று அவர்கள் கூறினர் (அல்குர்ஆன்: 40 : 23-24)
ஒடுக்கப்பட்டோருக்காக உரிமைக்குரல்;
ஃபிர்அவ்னே! நான் அகிலத்தாருடைய இறைவனின் தூதர் என்று மூஸா கூறினார். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்)கூறாதிருக்கக் கடமைப்பட்டவன். உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றை உங்களிடம் கொண்டு வந்துள்ளேன். எனவே என்னுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பு (எனவும் கூறினார்).நீர் உண்மை கூறுபவராக இருந்து, சான்றைக் கொண்டு வந்திருந்தால் அதைக்கொண்டு வா! என்று அவன் கூறினான்.அப்போது அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது உண்மையாகவே பாம்பாக ஆனது. அவர் தமது கையை வெளியே காட்டினார். உடனே அது பார்ப்போருக்கு வெண்மையாகத் தெரிந்தது.இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்? என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன்: 7: 104-110)
இன்ஷா அல்லாஹ் தொடரும் ......
பதிவு நாள்: 19-12-2017.
Monday, 18 December 2017
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 3
மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார். (அல்குர்ஆன்:; 28:29-30)
இரு பெரும் அற்புதங்கள்:
உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும்பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார்.மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர் (என்று இறைவன் கூறினான்). என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன்.எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப்படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன் (என்றும் கூறினார்).(அல்குர்ஆன்: 28:31-34)
உம் சகோதரர் மூலம் உமது தோளைப் பலப்படுத்துவோம். உங்களுக்குச் சான்றைத் தருவோம். அவர்கள் உங்களை நெருங்க மாட்டார்கள். நமது சான்றுகளுடன் (செல்லுங்கள்!) நீங்கள் இருவரும் உங்களைப் பின்பற்றியோருமே வெற்றி பெறுபவர்கள் என்று அவன் கூறினான். (அல்குர்ஆன்: 28:35)
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
பதிவு நாள்: 18-12-2017.
Sunday, 17 December 2017
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 2
மூஸா நபியின் பிறப்பு:
பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த போது, நபி மூஸா (அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். நபி மூஸா (அலை) அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.
நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது.இந்த வரலாற்றை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்..
தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன் அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று இக்குழந்தையை பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும் அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.மூசாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர். (அல்குர்ஆன் 20:38-40)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
பதிவு நாள்: 17-12-2017.
மூஸா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் தொடர் - 1
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.
இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள். ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.
ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி
மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்: 28:3,4)
இன்ஷா அல்லாஹ் தொடரும்.....
பதிவு நாள்: 17-12-2017.
Monday, 11 December 2017
ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-11
சத்தியத்தை நிராகரிக்கும் மக்களுக்கு அல்லாஹ் விடுக்கும் சவால்:
الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ إِنَّ هَذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا اللَّهُ وَإِنَّ اللَّهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ
இவ்வுண்மை உமது இரட்சகனிடமிருந்து வந்ததாகும். ஆகவே சந்தேகம் கொள்வோரில் நீர் ஆகிவிட வேண்டாம்.(நபியே) உம்மிடம் அறிவு வந்த பின்னரும் அவர் விடயத்தில் யாரும் உம்மிடம் தர்க்கித்தால் வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும் உங்கள் பிள்ளைகளையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் எங்களையும் உங்களையும் நாம் அழைத்து பின்னர் நாம் அழிவு சத்தியம் செய்து அல்லாஹ்வின் சாபத்தை பொய்யர்கள் மீதாக்குவோம் எனக் கூறுவீராக. நிச்சயமாக இது தான் உண்மையான சரித்திரமாகும்.(உண்மையில்) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தான் யாவற்றையும் மிகைத்தவன் ஞானமிக்கவன். அவர்கள் புறக்கணித்தால் நிச்சயமாக குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் நன்கறிவான். (3:61;62)
ஈஸா நபியின் மரணம்
(உயிரோடு உயர்த்தப்பட்ட ஈஸா நபி உலக அழிவுக்கு முன் மீண்டும் பூமிக்கு வருவார். முஹம்மது நபியின் இஸ்லாமிய போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்துவார். அவரை நிராகரித்த யூதர்கள் உட்பட மக்கள் அனைவரும் விசுவாசம் கொண்டு முஸ்லிம்களாவார்கள். பூமியிலே இயற்கை மரணம் எய்துவார். அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடாத்தி நல்லடக்கம் செய்வார்கள் என நபி முஹம்மத் (ஸல்) கூறினார்கள் என்பதை ஹதீஸில்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் முடிவுற்றது.
பதிவு நாள்: 11-12-2017.
Sunday, 10 December 2017
ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-10
ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை:
وَقَوْلِهِمْ إِنَّا قَتَلْنَا الْمَسِيحَ عِيسَى ابْنَ مَرْيَمَ رَسُولَ اللَّهِ وَمَا قَتَلُوهُ وَمَا صَلَبُوهُ وَلَكِنْ شُبِّهَ لَهُمْ وَإِنَّ الَّذِينَ اخْتَلَفُوا فِيهِ لَفِي شَكٍّ مِنْهُ مَا لَهُمْ بِهِ مِنْ عِلْمٍ إِلَّا اتِّبَاعَ الظَّنِّ وَمَا قَتَلُوهُ يَقِينًا
அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் மகன் ஈஸா மஸீஹை நாங்கள் கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதினாலும் (சபிக்கப் பட்டனர்) அவர்கள் அவரை கொல்லவுமில்லை. அவரைச் சிலுவையில் அறையவு மில்லை. மாறாக அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கபட்டான்.நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து முரண்பாடு கொண்டோர் அவர் பற்றிய சந்தேகத்தில் இருக் கின்றனர். வெறும் யூகத்தை பின் பற்றுவதை; த் தவிர அவரைப் பற்றி எவ்வித அறிவும் அவர்களுக்கு இல்லை. உண்மையாக அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை; (4:156-157)
ஈஸா நபி அல்லாஹ்வின் பால் உயிரோடு உயர்த்தப்பட்டார்:
بَلْ رَفَعَهُ اللَّهُ إِلَيْهِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
மாறாக, அவரை அல்லாஹ் தன்னள வில் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (4:158, 3:52-56)
ஈஸா நபியின் மீள் வருகை உலக அழிவின் ஓர் அடையாளம்:
وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا
வேதமுடையோரில் எவரும் (அவர் பூமிக்கு வந்து ) மரணிப்பதற்கு முன்னரே அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். மறுமை நாளிலோ அவர் (வேதமுடைய)அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:159)
وَإِنَّهُ لَعِلْمٌ لِلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُونِ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
நிச்சயமாக் (ஈஸாவாகிய) அவர் இறுதிநாளின் அடையாளமா வார். அது குறித்து நீங்கள் சந்தேகம் கொள்ள வேண்டாம். நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேர்வழியாகும் (என்று நபியே நீர் கூறும்) (43:61)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 11-12-2017
நவம்பர் 2017 வெற்றியாளர்கள்
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கியாமத் நாளை நோக்கியின் நவம்பர் மாதம் 2017 வெற்றியாளர்கள்:
🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்
🥇பீர் முஹம்மது - திருநெல்வேலி 65
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
💰 இரண்டாம் பரிசு 💰
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்
🥇 மஹதி - திருச்சி 64
🥈 ராஜா முஹம்மது - கட்டுமாவடி 64
🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈🥈
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
🥈மூன்றாம் பரிசு🥈
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்
🥉 யாசர் அரஃபாத் - காயல்பட்டணம் 64
🥉 சுல்தான் - திருநெல்வேலி 63
🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉🥉
❇❇ சிறப்பு பரிசு❇❇
💢💢💢💢💢💢💢💢💢💢💢
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்
☂ 🥇 முஹம்மது ஷஃபி - வலையப்பட்டி(நாமக்கல்) 62
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்
☂ 🥈 முகம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 62
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
🎁🎁🎁 ஆறுதல் பரிசு 🎁🎁🎁
💍💍💍💍💍💍💍💍💍💍💍
முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்
🍋 ஜாஹிர் ஹூசைன் - சென்னை(பட்டாபிராம்) 61
🍋 முகம்மது ஃபயாஸ் - சென்னை 59
🍋 முகம்மது முஸ்தபா - சென்னை (பட்டபிராம்) 58
🍋 அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லுர் 48
🍋 அப்துல் ஹக்கீம் - தென்காசி 34
இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்
🍋 நெய்னா முகம்மது அலி - ஜெகதாப்பட்டினம் 57
🍋 முகம்மது அப்ரார் - சென்னை( பட்டாபிராம்) 42
🍋 முஹம்மது ஷஃபி - வெள்ளையப்புரம் 36
💢💢💢💢💢💢💢💢💢💢💢
🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗🎗
இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் "இல்மிற்கு உதவும் கரங்கள்", கியாமத் நாளை நோக்கியின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..
"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன் அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்
கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்
இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக.. ஆமீன்
பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள்புரிவானாக..
" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"
💐💐💐💐💐💐💐💐💐
🎉🎉🎉🎁🎁🎁🎁🎉🎉🎉
இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்
சகோதரர்கள் அனைவருக்கும்
ஜஜகல்லாஹ் ஹைர்
💐💐💐💐💐💐💐💐💐💐💐
இறைவனின் திருபெயரால்..
🌺 அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) 🌺
🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு உதவும் கரங்கள் " இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼
கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி மார்க்க கேள்வி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).
முதல் பரிசு:
900 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(1நபருக்கு)
இரண்டாம் பரிசு:
450 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(2 நபர்களுக்கு)
மூன்றாம் பரிசு:
300 ₹ மதிப்புள்ள ஆன்லைனில் தேர்வு செய்த பரிசு பொருள்கள்(2 நபர்களுக்கு)
சிறப்பு பரிசு
200 ₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(2 நபர்களுக்கு)
ஆறுதல் பரிசு:
100 ₹ மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள்(ஏட்டு நபர்களுக்கு)
நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.
எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.
🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴
பதிவு நாள் : 04 -12 - 2017

Saturday, 9 December 2017
ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-9
ஈஸா நபியின் அற்புதப்படைப்பு ஆதம் நபியின் படைப்புக்கு ஒப்பானது.
إِنَّ مَثَلَ عِيسَى عِنْدَ اللَّهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு (குன்) ஆகுக என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.(3:59)
முஹம்மத் நபி பற்றி ஈஸா நபியின் முன்னறிவிப்பு:
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ
இஸ்ராயீலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவனாகவும் எனக்குப் பின் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதராவேன் என்று மர்யமுடைய மகன் ஈஸா கூறியதை நபியே (முஹம்மதே) நினைவூட்டுவீராக! அவர் தெளிவான சான்றுகளுடன் வந்த போது இது தெளிவான சூனியமே என அவர்கள் கூறினர்.(61:6)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 10-12-2017
Friday, 8 December 2017
ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-8
எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனுமாகிய அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள் என்று நீ (கூறும் படி)நீ எனக்கு கட்டளையிட்டதைத் தவிர வேறு எதனையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்தபோது அவர்களை அவதானித்துக் கொண்டிருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களை கண்கானிப்பவனாக இருந்தாய். நீ தான் யாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றாய்.
அவர்களை நீ தண்டித்தால், நிச்சயமாக அவர்கள் உனது அடியார்களே! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீ மிகைத்தவன், ஞானமிக்கவன் (எனவும் அவர் கூறுவார்). (5:116-118)
يَا أَهْلَ الْكِتَابِ لَا تَغْلُوا فِي دِينِكُمْ وَلَا تَقُولُوا عَلَى اللَّهِ إِلَّا الْحَقَّ إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّهِ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ فَآمِنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَا تَقُولُوا ثَلَاثَةٌ انْتَهُوا خَيْرًا لَكُمْ إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ سُبْحَانَهُ أَنْ يَكُونَ لَهُ وَلَدٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَفَى بِاللَّهِ وَكِيلًا
வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். மர்யமின் மகன் ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது வார்த்தையுமாவார். அவ்வார்த்தையை அவன் மர்யமிடம் போட்டான். அவனிடமிருந்து வந்த ஓர் ஆத்மாவே அவர்! ஆகவே அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள். (கடவுள்கள்;) மூவர் என்று கூறாதீர்கள். அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அது) உங்களுக்குச் சிறந்ததாகும். நிச்சயமாக (வணங்கப்படத் தகுதியானவன்) அல்லாஹ்
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்:09-12-2017.
Thursday, 7 December 2017
ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-6
ஈஸா நபி அல்லாஹ்வின் அடிமை:-
قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ
நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன் என (ஈஸாவாகிய) அவர் கூறினார். (19:30)
لَنْ يَسْتَنْكِفَ الْمَسِيحُ أَنْ يَكُونَ عَبْدًا لِلَّهِ وَلَا الْمَلَائِكَةُ الْمُقَرَّبُونَ وَمَنْ يَسْتَنْكِفْ عَنْ عِبَادَتِهِ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا
(ஈஸா) மஸீஹோ நெருக்கமான வானவர்களோ அல்லாஹ்வுக்கு அடி மையாக இருப்பதை; தரக்குறைவாகக் கருதமாட்டார்கள். யார் அல்லாஹ்வுக்கு அடிமையாக இருப்பதை தரக் குறைவாகக் கருதி பெருமையடிக்கின்றார்களோ அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (மறுமையில்) தன்னிடம் ஒன்று திரட்டுவான். (4:172)
ஈஸா நபி அல்லாஹ்வின் மகன் அல்ல மர்யம் (அலை)யின் குமாரர்):-
وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّهِ وَقَالَتِ النَّصَارَى الْمَسِيحُ ابْنُ اللَّهِ ذَلِكَ قَوْلُهُمْ بِأَفْوَاهِهِمْ يُضَاهِئُونَ قَوْلَ الَّذِينَ كَفَرُوا مِنْ قَبْلُ قَاتَلَهُمُ اللَّهُ أَنَّى يُؤْفَكُونَ
உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறு கின்றனர். மஸீஹ் (ஈஸா) அல்லாஹ்வின் மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறு கின்றனர். இது அவர்களது வாய் களால் கூறும் (வெற்று ) வார்த் தைகளாகும். இதற்கு முன் (ஏக இரட்சகனை) நிராகரித்தோரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகின்றனர். அல்லாஹ் இவர் களை அழித்துவிடுவான். இவர்கள் எவ்வாறு திசைதிருப்பப் படுகின்றனர். (9:30)
مَا كَانَ لِلَّهِ أَنْ يَتَّخِذَ مِنْ وَلَدٍ سُبْحَانَهُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ
எந்தக் பிள்ளையையும்; தனக்கென எடுத்துக் கொள்வது அல்லாஹ் வுக்கு தகுமானதல்ல.அல்லாஹ் தூய்மையானவன். ஏதேனும் ஒரு விடயத்தை அவன் முடிவு செய்தால் அதற்கு ‘‘குன்’’ (ஆகுக) என்று கூறுவது தான் உடனே அது ஆகிவிடும்.(19:35)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 05-12-2017

Monday, 4 December 2017
ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-7
முக்கடவுள் கொள்கையை போதிக்கவில்லை:-
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ ثَالِثُ ثَلَاثَةٍ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا إِلَهٌ وَاحِدٌ وَإِنْ لَمْ يَنْتَهُوا عَمَّا يَقُولُونَ لَيَمَسَّنَّ الَّذِينَ كَفَرُوا مِنْهُمْ عَذَابٌ أَلِيمٌ
நிச்சயமாக அல்லாஹ் என்பவன் (பிதா சுதன் பரிசுத்த ஆவி என) மூவரில் ஒருவன் என்று கூறுபவர்களும் நிராகரித்து விட்டனர். (உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் ஒரே ஓரு இரட்சகனைத் தவிர வேறு யாருமில்லை. ஒரே இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு) யாருமில்லை. அவர்கள் தமது கூற்றிலிருந்து விலகிக் கொள்ளவில்லையானால் (ஏக இறைவனை) மறுப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை வந்தடையும். (5:73)
وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
மர்யமின் மகன் ஈஸாவே! அல்லாஹ்வையன்றி, என்னையும் என் தாயாரையும் கடவுளாக்கிக் கொள்ளுங்கள் என்று நீர்தான் மக்களுக்கு கூறினீரா? என்று அல்லாஹ் (மறுமையில்) கேட்கும் போது யா அல்லாஹ்! மிகத் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத வார்த்தையை நான் கூற எனக்கு எந்த அதிகாரமுமல்லை. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக அதை நீ அறிந்திருப்பாய். என் உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவான வற்றை நீயே அறிப வன் என்று அவர் கூறுவார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 08-12-2017.

ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-5
ஈஸா நபி கடவுளல்ல:-
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ قُلْ فَمَنْ يَمْلِكُ مِنَ اللَّهِ شَيْئًا إِنْ أَرَادَ أَنْ يُهْلِكَ الْمَسِيحَ ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا يَخْلُقُ مَا يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ் என்று கூறியோர் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை) நிராகரித்து விட்டனர். மர்யமின் மகன் மஸீஹையும் அவரது தாயாரையும் பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்? என்று நபியே நீர் கேட்பீராக. வானங்கள் பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (5:17)
لَقَدْ كَفَرَ الَّذِينَ قَالُوا إِنَّ اللَّهَ هُوَ الْمَسِيحُ ابْنُ مَرْيَمَ وَقَالَ الْمَسِيحُ يَا بَنِي إِسْرَائِيلَ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ
நிச்சயமாக மர்யமின் மகன் அல் மஸீஹ் தான் அல்லாஹ் எனக் கூறியவர்கள் (ஏக இரட்சகனான அல்லாஹ்வை நிராகரித்து விட்டனர். இஸ்ராயீலின் சந்ததிகளே! என் இறைவனும் உங்கள் இறை வனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சுவர்க் கத்தை அல்லாஹ் தடுத்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம் தான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர் களும் இல்லை என்றே அல் மஸீஹ் கூறினார். (5:72)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 05-12-2017.

ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-4
ஈஸா நபி போதித்த ஓரிறைக் கொள்கை:-
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
நிச்சயமாக அல்லாஹ்வே எனது இரட்சகனும் உங்கள் இரட்சகனு மாவான். எனவே அவ னையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும் என ஈஸா கூறினார். (3:51)
ஈஸா நபியின் சீடர்களும் முஸ்லிம்களே:
فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ آمَنَّا بِاللَّهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ
(யூதர்களாகிய) அவர்களிடம் இறை மறுப்பை ஈஸா நபி உணர்ந்த போது அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்? என்று கேட்டார். அதற்கு ஹவாரிய்யூன் (எனும் அவரது சீடர்கள்) நாங்கள் அல்லாஹ்வின் உதவி யாளர்கள். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் மேலும் நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீரே சாட்சியாளராக இருப்பீராக என்று கூறினர். (3:52, 5:111)
அல்லாஹ்வின் உத்தரவுப் படி ஈஸா நபி காட்டிய அற்புதங்கள்:-
وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِ الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நிச்சயமாக நான் உங்களுக்கு உங்கள் இரட்சகனிடமிருந்து ஒரு அத் தாட்சியைக் கொண்டு வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண் ணால் ஒருபறவையின் தோற்றத்தைப் போல் உருவாக்கி அதில் ஊது வேன். உடனே அல்லாஹ் வின் அனுமதி கொண்டு அது (உயிருள்ள) பறவையாகி விடும். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குரு டரையும் குஷ்டரோகியையும் குணப்படுத்துவதுடன் இறந்தோரையும் உயிர்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பவற்றையும் உங்க ளுக்குக் அறிவிப்பேன். நீங்கள் விசுவாசம் கொணடவர்களாக இருந்தால் நிச்சயமாக இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி உள்ளது (என்றார் ஈஸா நபி). (3:49, 5:110-114)

ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-3
யூதர்களுக்கு மட்டும் தூதுவராக அனுப்பப்பட்டவர்:-
وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ
இஸ்ராயிலின் சந்ததிகளே! நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என மர்யமின் மகன் ஈஸா கூறினார். (61:6, 3:49, 61:14)
ஈஸா நபி போதித்த மார்க்கம், இஸ்லாம்:-
شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ
நூஹுக்கு எதை அல்லாஹ் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (முஹம்மதே!) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள். அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே உமக்கு நாம் வஹியாக அறிவித்ததும் இப்றாஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு நாம் உபதேசித்ததுமாகும். நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ, அது இணை கற்பிப்போருக்குப் பழுவாக இருக்கின்றது. அல்லாஹ் தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். தன்னிடம் மீளுவோரை நேர்வழியில் செலுத்துகிறான். (42:13)
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللَّهِ فَإِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
அல்லாஹ்விடம் நிச்சயமாக மார்க்கம் (என்பது) இஸ்லாம் தான். வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் அறிவு வந்த பின்னரும் தமக்குள் காணப்பட்ட பொறாமையின் காரணமாகவேயன்றி முரண்படவில்லை. எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ (அவர் களை) நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன்.(3:19)

ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-2
தொட்டில் குழந்தையாக இருக்கும் போது பேசியவர்:
فَأَتَتْ بِهِ قَوْمَهَا تَحْمِلُهُ قَالُوا يَا مَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْئًا فَرِيًّا يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا
(ஈஸாவை பெற்றெடுத்து) அவரை சுமந்தவராக தனது கூட்டத்தாரிடம் (மர்யம்) கொண்டு வந்த போது மர்யமே! விபரீதமான ஒரு செயலைச் செய்து விட்டாயே எனக் கூறினர். ஹாரூனின் சகோதரியே உமது தந்தை கெட்ட மனிதராக இருக்குவுமில்லை. உமது தாயாரும் நடத்தைக் கெட்டவராக இருக்கவும் இல்லையே எனவும் கூறினர். அப்போது மர்யம் தம் குழந்தையை சுட்டிக் காட்னார். தொட்டில் குழந்தையாக இருப்பவரிடம் நாம் எப்படி பேச முடியும் என அவர்கள் கேட்டனர்.( 19:27.28.29.)
தொட்டில் குழந்தையாக இருக்கும் போது நபியாக ஆக்கப்பட்டவர் இன்ஜீல் வேதம் கொடுக்கப்பட்டவர்:
قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِيَ الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا
…(தொட்டிலிலிருந்தவாறு) நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு வேதத்தை வழங்கி நபியாகவும் ஆக்கியுள்ளான் என்று (அக்குழந்தை) கூறியது. (19:30)
மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை உண்மைப்படுத்தியவர்:
وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنْجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ
தமக்கு முன்னுள்ள தவ்ராத்தில் இருப்பதை உண்மைப்படுத்துபவராக மர்யமின் மகன் ஈஸாவை (நபிமார்களான) அவர்களின் அடிச்சுவட்டில் நாம் தொடரச் செய்தோம். மேலும் நாம் அவருக்கு இன்ஜீலையும் வழங்கினோம். அதிலே நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் அது தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக் கூடியதாகவும் நேர்வழியாகவும் பயபக்தியாளர்களுக்கு நல்லுபதே சமாகவும் இருக்கிறது.(5:46, 3:48, 5:110, 57:27)

ஈஸா அலை அவர்களின் வரலாற்றுத் தொடர்-1
ஈஸா நபியின் (அற்புத) பிறப்பு:-
إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ
மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்வார்த்தையின் மூலம் உமக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களில் உள்ளவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார் என வானர்கள் கூறியதை (எண்ணிப்பார்பீராக.)
மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் இளமை பருவத்திலும் மக்களி டம் பேசுவார். மேலும் அவர் நல்லவர்களில் உள்ளவருமாவார் என்றும் கூறினர்
அதற்கு மர்யம் எனது இரட்கசனே! எந்த ஆணும் என் னைத் தீண்டாத நிலையில் எனக்கு எவ் வாறு குழந்தை உருவாகும்? என்று கேட்டார். அவ்வாறே அது நடக்கும் என்று அவன் கூறினான். அல்லாஹ் தான் நாடுவதைப்படைக்கிறான். ஏதேனும் ஒரு காரியத்தைப் பற்றி அல்லாஹ் முடிவு செய்துவிட்டால் “ஆகுக” என்பான். உடனே அது ஆகிவிடும் (3:45-47)
وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آيَةً لِلْعَالَمِينَ
தனது கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் எனும்) பெண்ணிடத்தில் நமது உயிரிலிருந்து (ரூஹிலிருந்து) ஊதி னோம். (அவள் கருத் தரித் தாள்) அவளையும் அவளது குமாரனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாக்கினோம். (21:91)
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பதிவு நாள்: 05-12-20117.

Friday, 1 December 2017
யார் இந்த ஹாதிய்யா..?
ராணுவத்தில் பணிப்புரிந்த ஹாதியாவின் தந்தை அசோகன் பாஜகவை சேர்ந்தவராக இருந்திருக்கிறார்.
அவ்வப்போது தந்தையின் இஸ்லாமிய விரோத பேச்சுக்களை கேட்டு வளர்ந்த ஹாதியாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது தமிழக வருகை...
சேலத்தில் உள்ள சித்த மருத்துவக்கல்லூரியில் இணைந்த ஹாதியாவுக்கு அறை தோழியாக இஸ்லாமிய பெண் அமைகிறார்.
அறை தோழி மற்றும் சக இஸ்லாமிய தோழிகளின் நடவடிக்கைகளை காணும் ஹாதியா அவர்களை உற்று நோக்குகிறார். இஸ்லாமிய பெண்களின் பேச்சு, நடத்தை, ஒழுக்கம், கண்ணியம், தூய்மை, தொழுகை என ஒவ்வொன்றும் ஹாதியாவை இஸ்லாத்தை காதலிக்க தூண்டுகிறது.
இஸ்லாத்தை பற்றிய தேடலில் இறங்குகிறார். இணையதளங்கள் வழியாகவும், இஸ்லாமிய தோழிகளின் வாயிலாகவும் இஸ்லாத்தை பற்றி மேலும் மேலும் தெரிந்து இஸ்லாத்தின் கடவுள் கொள்கை அவரது சிந்தனையை நுட்பமாக தூண்டுகிறது.
ஒரு கடவுள் கொள்கை :
நாமே உருவாக்கிய பொருள் நமக்கு கடவுளாக இருக்க முடியாது. நம்மை உருவாக்கியவனே கடவுளாக இருக்க முடியும். இப்பிரபஞ்சத்திற்கு பல கடவுள் இருக்க முடியாது. ஒரே கடவுள் மட்டுமே இருக்க முடியும் என்ற தெளிவுக்கு வருகிறார்.
இதனால் லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை, முஹம்மது அல்லாஹ்வுடைய தூதர்) என்ற கலிமாவை உறுதி பூண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்கிறார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய பெண்ணாக வாழும் ஹாதியா இஸ்லாமிய சட்டப்படி இஸ்லாமிய ஆணையே திருமணம் முடிக்க வேண்டும் என்ற இஸ்லாமிய சட்டத்திற்கு உட்பட்டு இணையதளங்கள் வழியாக மணமகன் தேவை என பதிவு செய்து இஸ்லாமிய ஆணையே திருமணம் முடிக்கிறார்.
இது பாஜக தந்தைக்கு கோபம் வரவே தம்முடைய மகளுக்கு கட்டாய மதமாற்றம் செய்ததாகவும், கட்டாய திருமணம் செய்ததாகவும், ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்திற்கு அழைத்து செல்வதாகவும் கூறி ஆட்கொணர்வு மனு ஒன்றை கேரளா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம் திருமணத்தை ரத்து செய்து தந்தையுடன் மகளை அனுப்பி சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பை வழங்குகிறது.
இருப்பினும் கணவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தொடர்ந்து தம்முடைய மகள் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என்று பாஜக தந்தை நாடகமாடுகிறார்.
இருப்பினும் மிக உறுதியாக இருந்து 11 மாத வனவாசத்திற்கு பின் தமக்கான அநீதியை உச்சநீதிமன்றத்தில் உரக்க கூறி தமக்கான நீதியை பெற்றுள்ளார் ஹாதியா...
ஹாதியாவின் வெற்றிக்கு இறைவனின் அருளால் அவருடைய மன உறுதியே முக்கிய காரணமாகும்.
இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக பிறமத ஆண்களுடன் ஆங்காங்கே ஓடி சென்று திருமணம் முடிப்பதை காண முடிகிறது. ஆனால் எந்த முஸ்லிமும் அவர்களை கொல்வதில்லை.
ஒரு சாதியை சேர்ந்த பெண் இன்னொரு சாதி ஆணை திருமணம் முடித்தால் ஜோடிகள் இருவரையும் கொலை செய்வதை சர்வசாதாரணமாக காண முடிகிறது.
இந்தியாவில் 18 வயது நிரம்பிய பெண் தாம் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும் என்பதையும், தமக்கான கணவனை தேர்வு செய்வதையும் இந்திய அரசியல் சாசன சட்டம் அனுமதி அளிக்கிறது.
இந்திய சட்டம் அனுமதித்த வகையில் தமது வாழ்கையை தேர்வு செய்த ஹாதியாவுக்கு இவ்வளவு நெருக்கடிக்கு ஒரே காரணம் இந்தியாவின் சட்டத்தை மதிக்காத பாஜக தந்தையின் மதவெறியே காரணமாகும்.
11 மாதம் சட்டத்திற்கு புறம்பாக தந்தையினால் ஹாதியா அடைத்து வைத்திருக்கும்போது ராகுல் மூலமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் தம்முடைய தந்தை அடித்து, உதைத்து, எட்டி மிதிப்பதாகவும். கொடுஞ்சித்ரவதை செய்வதாகவும், தாம் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்றும், தாம் கொலை செய்யப்பட்டால் அதற்கு தம்முடைய தந்தையே காரணம் என்றும் கூறியிருந்தார்.
இப்படி ஏராளமான துயரங்களை சந்தித்து மிக நீண்ட போராட்டங்களுக்கு பிறகே ஹாதியா வென்றுள்ளார்.
ஹாதியா போகிற போக்கில் சொல்லக்கூடிய செய்தி அல்ல, ஹாதியா இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஓர் வரலாறு !

புத்தாண்டும் இஸ்லாமிய சமூகமும்
பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள,ஃபேஸ்புக்,வாட்ஸ்சப்,டுவிட்டர் போன்றதின் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது.
ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை, முஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள், ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் தேதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு, வழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.
புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புரம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்ககப்படுவது மறு புரம்.
ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.
தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்
அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).
ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது: ‘நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).
இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்.
அல்லாஹ்வுக்கா நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடை முறை வாழக்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).
புத்தாண்டு கொண்டாட்டங்கள் மானக்கேடான, அருவெறுப்பான தீமைகளின் மொத்த வடிவம் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய கேடு கெட்ட காரியத்தில் இறைத்தூதர் (இயேசு) ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரை பயன்படுத்துவது கண்டனத்துக்கு உரியதாகும்.
அறியாமை என்ற போர்வையை போர்த்தி கொண்டு சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்கள். அவர்களின் மடமைக்கு பரிசுத்த இஸ்லாம் மார்க்கம் பொறுப்பல்ல.

Subscribe to:
Posts (Atom)