Saturday, 24 June 2017

🌙 மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் -27🌙

நோன்பு - 27

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*5000 ஆண்டுகள் வாழ ஆசையா?*

========================
மனிதன் தன்னைப் படைத்த இறைவனின் பக்கம் திரும்பும்போது அவன் வாழும் 60 ஆண்டுக்குள்
5000 ஆண்டுகள் வாழ்ந்த பேற்றை, இறைவனைப்
பணிந்து வாழும் தவப்பேற்றை அடைய முடியும் என இஸ்லாம் கூறுகிறது.

“இறைத்தூதர் அவர்களே! உங்களைப் பின்பற்றி வாழும் எங்கள் வாழ்க்கையோ மிகக் குறுகிய
காலம். ஆனால் முன்னர் வாழ்ந்த
இறைத்தூதர்களின் காலமோ 900 வருடங்களுக்கு
மேல். ஆகவே இந்த குறுகிய காலத்தில் நிறைந்த நன்மைகள் செய்யும் வாய்ப்பு
எங்களுக்கு உண்டா?” என முஹம்மது நபி صلى الله عليه وسلم
அவர்களிடம் தோழர்கள் கேட்டனர். அதற்கு
நபியவர்கள் இந்த ரமலான் மாதத்தை
சுட்டிக்காட்டி விளக்கம் தந்தார்கள்....
உடலையும் மனதையும் புடம்போடும் நோன்பு
ரமலான் என்ற அரபுச் சொல்லின்
பொருள் “சுட்டெரித்தல்”.
பொன்னைப் புடம் போடுவதன் மூலம்
அதிலுள்ள கசடுகள் தனியாகப் பிரிந்து
சொக்கத் தங்கம் கிடைக்கிறது. அதுபோல்
ரமலான் நோன்பு நன்மையை தீமையிலிருந்து
பிரித்தெடுக்கிறது.
இம்மாதத்தில் காலை சூரிய உதயத்திற்கு
முன்பு தொடங்கி, மாலை சூரியன்
மேற்கில் சாயும்போது நிறைவடைகிறது. இந்த நோன்பால், உடலுக்குச் சக்தியைத் தரும் சர்க்கரை
அளவு குறைவடைந்து மனித உடல் உறுப்புக்கள்
அத்தியாவசிய தேவைகளுக்கான சக்தி மட்டுமே எஞ்சி இருக்கிறது.
கண், காது, மூக்கு, வாய், மெய் என
ஐம்புலன்களும் அவற்றிற்கான முக்கிய பணியை மட்டும் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் உடல் இயங்குகிறது.
ஆகவே, கண் பார்க்க வேண்டியதை மட்டும்
பார்க்கிறது; காது கேட்க வேண்டியதை மட்டும் கேட்கிறது; மூக்கு எதை முகர வேண்டியதை மட்டும்
முகருகிறது; வாய் பேச, சுவைக்க வேண்டியதை மட்டும் செய்கிறது; மெய்யாகிய
இந்த உடல் உணர வேண்டிய சுகத்தை மட்டும் உணருகிறது. அதற்கு மேல் அது எதையும் செய்யாத கட்டு திட்டத்திற்கு வருகிறது.

நோன்பு நம்மை எச்சரிக்கிறது
குளிர்ப்பதனப் பெட்டியைத் திறந்தால்
அங்கே வண்ண வண்ண நிறங்களில்
குளிர்பானங்கள் குலுங்கி வரவேற்கின்றன.
ஆனால் நோன்பு, ‘நீ நோன்பாளி உன்னை
இறைவன் பார்க்கிறான்’ என எச்சரிக்கிறது.
ஆம்! உடல் பசித்திருக்கும்போது மனிதனின்
ஐம்புலங்களுக்கும் ஒரு நிறைவு.
இப்போது அவனது ஆறாம் அறிவான
பகுத்தறிவு விழித்துக்கொள்ள, அவன் தன்னைப் பற்றி சிந்திக்க, அதன் மூலம் தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி தியானிக்க
ஆரம்பிக்கின்றான். இறைநெருக்கமும்
அதனால் அச்சமும் பெறுகின்றான்.
இதனைப் பின்வரும் குர்ஆன் வசனங்கள்
விளக்குகின்றன.
‘இறை நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்
வாழ்ந்த மக்கள் மீது நோன்பு
விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்
விதிக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள்
இறையச்சம் உள்ளவர் ஆகலாம்’ என்கிறது
குர்ஆன் (2:183).
மனிதனை அவனது அதிகப்படியான
இச்சைகளிலிருந்தும் அதனால் ஏற்படும்
அனைத்துத் தீமைகளிலிருந்தும் அதன் காரணமாக அவன் போய்ச்சேர வேண்டிய நரகத் தீயிலிருந்தும் பாதுகாக்கிறது.
அதனால் ‘நோன்பு ஒரு கேடயம்' என்கிறது ஒரு நபிமொழி.

பொழுது சாய்கிறது.
தொழுகைக்கான அழைப்போசை கேட்கிறது.
ஒரு நோன்பாளி ஒரு மிடறுத் தண்ணீர், ஒரு
பேரீச்சை பழத்துண்டைக் கொண்டு நோன்பு
திறக்கிறார். உடல் முழுவதும் ஒரு உஷ்ணம் பரவுகிறது.
உற்சாகம் ஊடுருவுகிறது. காய்ந்துபோன
செடியின் வேரில் நீர் விழுந்ததும் அதன்
இலைகளும் கிளைகளும் பசுமையாகி நிமிர்ந்து
நின்று நமக்கு நன்றி சொல்வதைப் போல
ஒரு நோன்பாளிக்குள் ‘ஒரு மிடறு தண்ணீர், ஒரு பேரீச்சைப்
 பழத்துண்டுக்கு இத்தனை மகிமையா?
இறைவனின் எத்தனை அருட்கொடைகளை
நாம் அனுபவித்திருக்கிறோம்’ என்ற
நன்றியுணர்வு அவனுள் மேலோங்குகிறது. பிறர் பசியும் இந்த நோன்புகாலத்தில் தான்
உணரப்படுகிறது. ஆம் கஞ்சனும்
வள்ளலாகும் சமயம்தான் இந்த
ரமலான் நோன்புக்காலம்.
ஆகவே இத்தனை சிறப்புக்களைக்
கொண்ட இந்த ரமலானை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 வாழும் 60 ஆண்டுகளில் 5000
ஆண்டுகள் வாழ்ந்த தவ வாழ்வைப்
பெறுவோம்.

(83×60= 4,980

ஒரு ஆண்டு இடம் பெறும் லைலதுல் கத்ரில் 83 ஆண்டு நன்மைகள் எனில்..

60 ஆண்டுகளில் 4980 ஆண்டுகளின் வணங்கிய நன்மைகள் கிடைக்கின்றன. )

அதாவது அந்த ஓர் இரவின் நன்மை ஆயிரம் மாதத்தின் நன்மைகளுக்குச் சமம் என்று
குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும்
ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி
மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின்
நன்மையை அளிக்க வல்லது என்பதைச் சிந்திக்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் ஒரு 10 லைலத்துல் கத்ரு இரவின்
நன்மைகள் முழுமையாக நாம் பெற்றால் கூட அது 833 வருடங்களுக்கு நிகரான நன்மைகளை நமக்குப் பெற்றுத்  தரும். 20 ஆண்டுகளின் லைலத்துல்
கத்ரினை பெற்றால் 1666 வருடங்கள் என்று முந்தைய
 சமுதாயத்தினரின் ஆயுளின் அளவிற்கு
நன்மைகளினைப் பெற்று தரவல்லது என்பதை
நினைத்துப் பார்க்கும் போதே நமக்கு அல்லாஹ்வின்
இந்த மகத்தான வெகுமதியினைத் தவற விடக்கூடாது எனும் எண்ணம் வரும். நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த
ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம்
பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே
நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம்
நாடியுள்ளோமா? அதற்காக முறையாக  முயன்றுள்ளோமா? அதைப் பெறக்கூடிய
பாக்கியம் வேண்டி அல்லாஹ்விடம்
பிராத்தித்துள்ளோமா? என்பதை நாம் நம்மையே கேட்டு
பதில் பெற வேண்டும். இதற்கு இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிராத்திப்பதுடன் அதை நபி صلى الله عليه وسلم  அவர்கள் விரும்பிய
வழியில் முயல வேண்டும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் நோன்பு கடமையாக்கப்பட்ட
பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ரமலான்
மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் ‘இஃதிகாப்’
இருந்தார்கள் என்று நபி வழியில் காண முடிகிறது.
அபூ ஸஈத் அல் குத்ரீ رضي الله عنه  அவர்கள்
அறிவிக்கின்றார்கள்: நபி صلى الله عليه وسلم  அவர்கள்
ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப்
இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப்
இருந்தார்கள். பிறகு
சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப்
பெறுவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில்
வானவர் தோன்றி, அந்த இரவு கடைசிப்பத்து நாளில்
உள்ளது என்று அறிவித்தார். உங்களில் யார்
இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க
விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப்
இருக்கட்டும். (முஸ்லிம்)

ஆகையால் கடைசிப் பத்து நாட்களில் அதைத் தேடிக்
கொள்ளுமாறு கூறினார்கள், மேலும் அதன் இரவுகளை வணக்கங்கள் மூலம் சிறப்பிப்பார்கள்;
தங்கள் குடும்பத்தினர்களையும் ஏவுவார்கள் என்றும்
ஹதீஸ்கள் கூறுகின்றன.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும்
விழித்திருந்து லைலத்துல் கத்ரு இரவைப் பெற
வணக்கங்களில் ஈடுபட்டதைப் போல், நாம் முயல
வேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள்
 பள்ளியில் ‘இஃதிகாப்’ இருந்ததைப் போல்
இஃதிகாப் இருக்க வேண்டும். நமது வாழ்நாளில்
நேரம் கிடைக்கும் போது ரமலானில் குறைந்தது ஒரு
முறையேனும்  (ஸுன்னத்தான) இந்த
‘இஃதிகாப்’ இருக்க வேண்டும் என்று உள்ளத்தினால்
நாட்டம் கொள்ளவேண்டும்.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள் : எவர்
துர்பாக்கியசாலிகளோ அவர்களைத் தவிர அனைவரும்
லைலத்துல் கத்ரைப்
பெற்றுக்கொள்வார்கள்.
நாம் அதைப் பெற்ற பாக்கியசாலிகளா
துர்பாக்கியசாலிகளா என்பது நாமறியோம்.
அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக இதை
 மறந்தவர்களாக முஸ்லிம்கள் பலர் வாழும் நிலையும்
 குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது
பொன்னான நேரத்தை இவற்றைவிடவும்
அதிகமாக இதர அலுவல்கள் பெருநாளின்
தேவைகள் துணிமணிகள், காலணிகள், அணிகலன்கள்,
வாசனை திரவங்கள்,போன்ற இதர பொருட்களை
வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழிந்து விடுவதும்
மாலையில் வெளியேறி இரவில் தாமதமாக
அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள்
பஜ்ரு தொழுகை ஸஹ்ர் (உட்பட) லைலத்துல்
கத்ர் எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும்
தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது.
அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும்
இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்க
வைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின்
முயற்சி என்றால் அது மிகையாகாது. இம்முயற்சியை
முறியடிக்கும் விதமாக நமது தேவைகளை கடைசிப் பத்து
நாட்களுக்கு முன்னரே அல்லது இரவுக்கு முன்பே
தாமதமின்றி வாங்கி நேர விரயமின்றி, கடைசிப் பத்து
இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல
அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை
 பெற முயல வேண்டும்.
இதர எத்தனையோ விஷயங்களுக்கு கண் விழித்து இருக்கும்
நாம் இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும்
நரகமீட்சி பெரும் விதத்தில் துவா
செய்யவும் லைலத்துல் கத்ர் இரவினை முறையாகப்
பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

Friday, 23 June 2017

🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் 26*🌙

நோன்பு - 26

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*நோன்பாளிகளே... உங்களைத்தான்!

========================

நோன்பாளிகள்
கவனத்தில் கொள்ள
வேண்டிய சில
அம்சங்களை இங்கே
சுட்டிக் காட்ட
விரும்புகின்றோம்.
2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு
அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப்
பிற்படுத்துதல் என்ற சுன்னத்
விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத்
தொழுகை கூட தவறிவிடும் நிலை
ஏற்படுகின்றது.
சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு
முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும்,
அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என
சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான்
விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’
தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே
ஸஹரை, ‘சுபஹ்’ நெருங்கும் நேரம் வரை
தாமதிப்போமாக!

உண்ணல், பருகலில் எல்லை மீறி அளவு கடந்து ஈடுபடுதல். சிலர் நோன்பு காலத்தில் ஏனைய
காலங்களைவிட அதிகமாகவே
உண்கின்றனர்.அதிகம் உண்ணுவது
அல்லாஹ் விரும்பாத செயலாகும்.
‘லுஹர்’, ‘அஸர்’ போன்ற தொழுகைகளை
ஜமாஅத்துடன் தொழுவதில் சடைவு
காட்டல், உறக்கம் அல்லது சோம்பல் போன்ற
காரணங்களால் இது நிகழலாம்! இதைத்
தவிர்க்க வேண்டும்.

புறம் பேசுதல், அடுத்தவர் குறை பேசுதல், வீண்
விளையாட்டுக்கள், கேளிக்கைகள், அடுத் தவரைக்
குழப்புவதற்காகப் பொய் உரைத்தல்
போன்ற தவறான நடத்தைகளை விட்டும்
விலகா திருப்பது நோன்பின் பலனை
அழித்தவிடும்.

‘ரமழான்’ எனும் புனித மாதத்தின்
கண்ணியமான நேரங்களை வீண்
விளையாட்டுக்களில் கழித்தல். குறிப்பாக
‘ரமழான்’ இரவுகளில் விளையாட்டுக்காக
விழித்திருத்தல், பாதையோரங்களில்
விளையாடுதல், இதன் மூலம் பிறருக்குத்
தொல்லை கொடுத்தல்
நோன்பின் கூலிகளை வீணாக்கிவிடும்.

‘துஆ’, ‘திக்ர்’, ‘குர்ஆன்’ ஓதுதல், ‘நபிலான,
சுன்னத்’தான தொழுகைகளைக்
கடைபிடித்தல் என்பவற்றில்
பொடுபோக்குக் காட்டுதல் ஒரு
நோன்பாளியிடம் இருக்கக் கூடாது.

‘கியாமுல் லைல்’ தொழுகையில்
பொடு போக்குக் காட்டுவது
ரமழானில் கிடைக்கவிருக்கும் பாக்கியங்களை
விட்டும் தூரமாக்கிவிடும்.

‘ரமழான்’ இறுதிப் பத்தில் கூடுதல்
முக்கியத்துவம் கொடுத்து வணக்க
வழிபாடுகளில் ஈடு படவேண்டும் என்றிருக்க, அதை பெருநாள் ஏற்பாட்டில் கழித்து
பாழாக்கிவிடல்.

‘ரமழான்’ மாதத்தில் ஆரம்பத்தில் அதிக
தொழுகையாளிகளையும்,
இபாதத்தாளிகளையும் காணலாம்.
ஆனால், நாள் செல்லச்
செல்ல சோம்பல் அதிகரித்து
இபாதத்தாளிகளின் எண்ணிக்கை குறைவதைக்
காணலாம்! எனவே, இறுதிப்பத்து கூடுதல்
முக்கியத்துவம் கொடுக் கப்பட
வேண்டியது என்பதைக் கவனத்தில்
கொண்டு செயற்படுவோமாக!

சிலர் இரவு பூராக இபாதத்தில்
ஈடுபட்டுவிட்டு ‘சுபஹ்’ த்தொழுகையை
தவறவிட்டு விடுகின்றனர். இதுவும்
தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

‘ரமழானி’ல் தர்மம் செய்வது
ஊக்குவிக்கப்பட்டுள்ளது. எனினும், வசதியுள்ள
பலரும் இதில் கஞ்சத்தனம்
செய்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட
வேண்டியதாகும்.

‘ஸஹரு’டைய நேரம் ‘துஆ’வுக்கும், பாவ
மன்னிப்புக்கும் ஏற்றதாக இருக்கும்போது, ‘இப்
தாரு’டைய நேரம் ‘துஆ’வுக்குரியதாக இருக்கும்
போது, இவ்விரு நேரங்களையும் உண்பதற்கும்,
பருகுவதற்குமுரிய நேரமாக மட்டும் கருதி
‘துஆ’, ‘இஸ்திஃபார்’ விடயத்தில்
அலட்சியமாக இருத்தல்.

பள்ளிக்குச் செல்லும் பெண்கள் அலங்கார
 ஆடைகளுடனும், வாசனைத்
திரவியங்கள் பூசிக் கொண்டும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
ஏனெனில், நபி صلى الله عليه وسلم  அவர்கள்
பெண்கள் மனம் பூசிக்கொண்டு
பள்ளிக்கு வருவதை தடுத்துள்ளார்கள் என்பது
கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

‘ஸகாதுல் பித்ரை’ மிகவும் முற்படுத்துதல்,
‘பித்ரா’வின் பெயரில் பிச்சைக்கார
சமூகத்தை உருவாக்குதல், வீடுதேடி
வருபவர்களுக்கு சில்லறைகளை மாற்றி வைத்து
வழங்கிவிட்டு ‘ஸகாத்’ கொடுத்து விட்டதாக
 எண்ணிக் கொள்ளல்
தண்டணைக்குரிய குற்றமாகும்.

எமது சமூகத்தவர்களில் பலர் புகைத்தல் எனும்
தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை
விட்டும் விலக ரமழானே சிறந்த
வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம்
புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது
சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில்
குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து
விடுகின்றனர். இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச்
சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை
அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி
கொள்ள வேண்டும். புகைத்தல்
ஹராமானது என்பது இஸ்லாமிய
அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவு
என்பதைக் கவனத்தில்
கொள்வோமாக!

இவ்வாறான எமது குறைபாடுகளைக்களைந்து இந்த
 ‘ரமழானை’த் தூய முறையில் கழிக்க
முனைவோமாக!

ஆமீன்...

அல்லாஹ்விடம்
அவனடியான் நெருங்க
அவனியில் வந்தது
அருள்மிகு நோன்பு!

ரஹ்மத் நிறைந்த
ரமழான் நோன்பு
நானில வாழ்வில்
நாம் நோற்கக் கடமை
பர்ளான நோன்பில்
பலவித நன்மைகள்
படைத்தோனிடம் இருந்து
பாரில் இறங்குகிறது!

அல்லாஹ்வின் நோன்பில்
ஆயிரம் மாதங்களைவிட
அதி சிறந்த *‘லைலதுல் கத்ர்’*
அடியானை நாடி!

இதர வணக்கங்களை
எல்லோரும் அறிவர்...
இந்த வணக்க நோன்பை
இறைவன்தான் அறிவான்!

மனித வாழ்வில்
மகத்தான நோன்பு
மறுமை வாழ்வை
மறுமலர்ச்சி செய்யும்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

 தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 24-06-2017.

Wednesday, 21 June 2017

🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் - 25🌙

நோன்பு - 25
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*குடும்ப உறவுகளை புதப்பிப்போம்!*
========================
ரமழான் மாதத்தினை நோன்பு நோற்று, நற்கிரியைகளை
மேற்கொண்டு,அதனை சிறப்பிக்கும் சகல
செயற்பாடுகளிலும் முஸ்லிம் பெருமக்கள்   தம்மை
ஈடுபடுத்திக் கொண்டிரிக்கின்றார்கள். பாவங்களை சுட்டெரிக்கும் மாதமாக ரமழான் இருப்பதனால் அதிகமாக நன்மையான
காரியங்களைச் செய்து இறைவனிடம்
பிரார்த்தனைகள் மூலம் அவனின் நெருக்கத்தினை
பெறுவற்காக இம்மாதத்தினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இம்மாதத்தில் மனிதர்கள் நோன்பு நோற்பது மிகப்
பிரதான கடமையாகும்.நோன்பு நோற்பதன் மூலமே அதனை
சிறப்பித்தவர்கள் பட்டியலில் அல்லாஹ்
மனிதர்களைச் சேர்த்துக்
கொள்கின்றான்.
பின்வருமாறு
அல்லாஹ் கூறிக் காட்டுவதன் மூலம் நோன்பு நோற்பதன் முக்கியத்துவத்தினை அறிந்து கொள்ளலாம்.
(இவ்வாறு விதிக்கப்பெற்ற நோன்பு) சில
குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால்
(அந்நாட்களில்) எவரேனும்
நோயாளியாகவோ,
அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும்.எனினும் (கடுமையான
நோய்,முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப்
பரிகாரமாக “ஃபித்யாவாக” -ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். எனினும் எவரேனும் தாமாக அதிகமாகக்
கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது –
ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை
அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே
உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).
(2:184)
சுவர்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு,நரகத்தின்
வாயல்கள் மூடப்பட்டு, ஷைத்தான்
விலங்கிடப்பட்டிருக்கும் இம்மாதத்தின் நோன்பினை அரிய
சந்தர்ப்பமாகக் கொண்டு முடிந்தளவு
வணக்க செயற்பாடுகளினாலும், மற்றும்
நற்கிரியைகளினாலும் அலங்கரித்து அல்லாஹ்வை
நெருங்கி நன்மைகளைப் பெற
ஒவ்வொருவரும் முனைப்புக் காட்ட வேண்டும்
என்பதை மேற்படி வசனம் எடுத்துக் கூறுகின்றது.
நன்மையான செயற்பாடுகளில் ஈடுபடும் எமது
சகோதரர்கள் இப்புனித மாதத்தில் குடும்ப
உறவினர்களின் உறவினை புதுப்பித்தல்
அவசியமாகும்.
ரமழானில் குடும்ப உறவினர்களின் உறவைப் பேணி
நடப்பதன் மூலமாக எம்மால்
மேற்கொள்ளப்படும் அனைத்து நற்கிரியைகளும்
அல்லாஹ்விடம் கணக்கிடப்பட்டு ஏற்றுக்
கொள்ளப்படும்.

மனிதர்கள் நன்மையினை நாடி மேற்கொள்கின்ற
செயற்பாடுகள் அனைத்தும்
அல்லாஹ்விடத்தில் சென்றடைய வேண்டும்
என்பது எதிர் பார்ப்பாகும்.இதற்கு குடும்ப உறவுகளைப் பேணி நடத்தல் முக்கியமாக்
கொள்ளப்படுகின்றது.
இன்றைய உலகில் குடும்ப உறவுகள் சுருங்கி தானும்,தனது வேலையும் என்ற நிலைமை அதிகரித்து
வருகின்றது. உறவுகளை மரணத்தின் போதாவது
புதுப்பித்துக் கொண்டவர்கள் அதனைக் கூட செய்ய முடியாத தன்மை மனிதர்களிடையே
வளர்ந்து வருகின்றது.
இஸ்லாம் குடும்ப உறவினைப் பேணி நடப்பதன்
முக்கியத்துவத்தினை வலிவுறுத்திக் கூறுகின்றிக்
காட்டுவதை பின்வருமாறு நோக்க முடியும்.
இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற)
இஸ்ராயீல் மக்களிடத்தில், ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது,
(உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும்,
அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்
நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம்
அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை
முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள் ,ஸகாத்தையும்
ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள் என்று
உறுதிமொழியை வாங்கினோம். ஆனால்
உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து)
புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள்
புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள் (2:83).

ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم  அவர்களிடம் என்னை
சுவர்க்கத்திற்கு கொண்டு
செல்லக்கூடிய ஒரு “அமலை” அறிவித்துத்
தருமாறு கேட்டார் அதற்கு நபி صلى الله عليه وسلم  அவர்கள்
பின்வருமாறு கூறினார்கள் : “அல்லாஹ்விற்கு
இணைவைக்காது அவனை நீ வணங்கி,தொழுகையினை நிறைவேற்றி, ஸகாத் கொடுத்து குடும்ப உறவுகளை சேர்ந்து நடப்பதன்
மூலம் சுவர்க்கம் நுழைவாய்” (ஆதாரம் :புஹாரி).
நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள் “உறவுகள்
அர்ஷில் தொங்கிக் கொண்டு யார்
என்னை சேர்ந்து நடந்தாரோ அவரை அல்லாஹ் சேர்த்துக்
கொள்வான், மேலும் யார் என்னை
துண்டித்து வாழ்ந்தாரோ அல்லாஹ் அவனை
விட்டும் துன்டித்து விடுவான் என்று கூறிக்
கொண்டிருக்கும்” (ஆதாரம்: முஸ்லிம்)
மேலே சொல்லப்பட்டுள்ள அல் குர்ஆன்,மற்றும் ஹதீஸ் வசனங்கள் குடும்ப உறவின்
முக்கியத்துவத்தினையும்,அவர்களின் உறவின் மூலமே
சுவர்க்கம் செல்வதற்கான வாய்ப்பு
இருப்பதையும் எமக்குத் தெளிவு படுத்துகின்றன.

இந்த வகையில் எமது சமூக அமைப்பிலுள்ள
குடும்பங்களின் உறவுகள் பேணப்படும் முறைமையினை
எடுத்துக் காட்டாக பின்வருமாறு நோக்க முடியும்.
தந்தை வழி,தாய் வழி உறவு முறைகள், மற்றும் திருமண
உறவு முறை என மூன்று வகையான குடும்ப உறவு
முறைகள் சமூகத்தில் உள்ளன.
அதில் தாய்,தந்தை வழி உறவினர்களுடன் உள்ள
தொடர்புகளைப் பார்க்கும் போது அவை பரஸ்பர உறவுகள் மூலம் புதுப்பிக்கப்படுவதையும், காலம் செல்லச் செல்ல குடும்பத்
தொடர்புகள் தாய் வழி உறவினர்களுடன்
சுருங்கி தந்தை வழி உறவினர்களுடன் உள்ள தொடர்புகள் விசேட வைபவங்களுடன்
மாத்திரம் பிணைக்கப்பட்டுள்ளதையும் பெரும்பாலும் கண்டு கொள்ளலாம்.
சில போது தந்தை வழி உறவினை மறந்த நிலைமையில்
உள்ளனர் என்று சொன்னாலும்
மிகையாகாது.
நவீன காலத்தில் சகல உறவினர்களையும் மறந்து தானும்
 தனது குடும்பமும் என்ற நிலைமை
சமூகத்தினர்களிடையே அதிகரித்திருக்கின்றது. சகோதர,
சகோதரிகளுக்கிடையிலான உறவு பாதிப்புற்று
ஆரோக்கியமற்றிருக்கின்றது. தாய், தந்தையர்களை
கவனியாது, அவர்களது தேவைகளை நிறைவேற்ற உதவாத
 பிள்ளைகளையும், சில கிராமங்களில்
திருமண வைபவங்களின் போது தந்தையினை அழைக்கக் கூடாது
 என்று நிபந்தனை இடுகின்றவர்களையும்
காணலாம்.
திருமண பந்தத்தின் மூலம் இரு குடும்பங்கள் இணைந்து,
அதனால் புதிய முகங்களும்,புதிய உறவுகளும்
கிடைக்கின்றன.அவ்வாறு கிடைக்கப்பெற்ற
உறவினர்கள் தூரமாகி செல்லும் நிலைமையினை
குடும்பங்களில் அவதானிக்கின்றோம். திருமணத்திற்கு
முன்பு உச்சத்தினை எட்டிய திருமணத்தின் மூலமான
உறவுகள் திருமணத்திற்குப்பிறகு இருந்த தடம்
தெரியாமல் திசை மாறும் நிலைமை குடும்ப
உறவினர்களிடையே நிகழ்ந்து கொண்டே
இருக்கின்றது.
இந்நிலையில் குடும்ப உறவினர்களிடையே
அன்பும்,பிணைப்பும் அற்றுப் போனமைக்கான காரணம்
யாது ? அதனை வளர்ப்பதற்கான வழிமுறைகள்
என்ன? சிறந்த குடும்ப உறவின் பன்புகள் யாவை?
போன்ற கேள்விகளுக்கான தெளிவினைப் பெற
முயற்சிக்கலாம்.

குடும்ப பிணைப்பு உறவினர்களிடையே குறைந்து
போனமைக்கான காரணத்தினை எடுத்துக்காட்டாக
பின்வருமாறு சுட்டிக் காட்ட முடியும். குடும்ப உறவினை
 பேணி நடப்பது பற்றிய போதிய
அறிவில்லாமை,மார்க அறிவில் பலவீனமான
நிலைமை, பணத்தாலும், பதவியாலும் பெருமையினை
வெளிப்படுத்துதல், பெற்றோர் தமது குடும்ப
உறவினர்களுடன் உறவைப் பேணாமையினால்
பிள்ளைகள் அதை தொடர்கின்ற நிலைமை , குடும்ப
உறவினர்களிடையே வெறுப்புணர்வினை
வெளிப்படுத்திய பார்வை, சந்திப்பதில் நீண்ட இடைவெளி ,உறவினர் நலனில் விருப்பினை
வெளிப் படுத்தாமை, பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுதல்
 சொத்து பங்கீட்டில் நீதம் பேணாமை,
 உறவினர்கள் விடயத்தில் பொறுமை
இழத்தல் ,பொறாமை, மற்றும் தீய
எண்ணம் போன்ற பல காரணங்களைக் கூறலாம்.
மேற்சொல்லப்பட்ட பல
காரணங்களினால் குடும்பத்தினரிடையே பிளவுகள்
ஏற்பட்டு இரத்த உறவினர்கள் பகைமையினையும்,
குரோதத்தினையும் வெளிப்படுத்தி வருடக்
கணக்காக வாழ்ந்து வருகின்றமையினைக்
காண்கின்றோம்.
இந்நிலைமை மாற்றப்பட்டு, குடும்ப உறவினர்களுடன்
உறவினை புதுப்பித்துக் கொள்ள சகலரும்
முயற்சித்தல் அவசியமாகும்.

 நபி صلى الله عليه وسلم  அவர்கள்
சொன்னார்கள் “நிச்சயமாக ஆதமுடைய
மக்களின் செயற்பாடுகள் ஒவ்வொரு
வெள்ளிக்கிழமை இரவும் என் மீது எடுத்துக்
காண்பிக்கப்படும் அதில் குடும்ப உறவுகளை
துண்டித்து வாழ்வோரின் செயற்பாடுகள்
அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்
படமாட்டாது” (ஆதாரம்: அஹமத்)
விட்டுக் கொடுப்பு, விருந்தளித்தல்,
நோயாளிகளை சந்தித்தல், வாழ்த்துக்களை பரிமாறிக்
கொள்ளல், தர்மங்களைச் செய்தல்,
வயதில் மூத்தவர்களை மதித்தல்,
உறவினர்களுக்கிடையிலுள்ள பிணக்குகளை
சீ்ர்செய்தல், அவர்களுக்காக பிரார்தித்தல்,
வீடுகளை தரிசித்தல் போன்ற பல செயற்படுகளில்
ஈடுபடுவதன் மூலம் உறவுகளை புதுப்பித்துக்
கொள்ள முயற்சிக்கலாம்.
குடும்ப உறவுகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் முக்கிய
 கவனம் செலுத்துதல்
அவசியமாகும்.தமது உறவினர்கள் பற்றி
பிள்ளைகளுக்கு அறிவூட்டி, அவர்களது உறவின்
முக்கியத்துவத்தினைக் கூறி வழிப்படுத்தல் வேண்டும். மேலும்  பிள்ளைகளுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளில்
தலையிட்டு சமரசம் செய்து வைத்தல் அவர்கள் மீதுள்ள
 பொறுப்பாகும். அவ்வாறு
இல்லாவிட்டால் சிறிய பிரச்சினைகள்
பிற்காலத்தில் பெரிதாகி பகைமையினை ஏற்படுத்தி விடும்.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள் “எவர்
அல்லாஹ்வையும்,இறுதி நாளையும் நம்பி
இருக்கின்றாரோ அவர் தனது குடும்ப உறவினர்களுடன்
சேர்ந்து நடக்கட்டும்”. இந்த ஹதீஸ் குடும்ப
உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது ஈமானிய
பன்பாகும் என்பதை மிகத் தெளிவாக எமக்கு சொல்லித் தருகின்றது.
எனவே ஈமானை அதிகரித்து நன்மைகளைப் பெறும்
இம்மாதத்தில் தூரமாகிப் போயுள்ள குடும்ப
உறவினர்களின் உறவினை புதுப்பித்து ஈமானிய
பன்புள்ளவர்களாக வாழ முயற்சித்தல் எல்லோர்
மீதுமுள்ள கடமையாகும்.

செடிகளைப் போன்றே உறவுகளும். அடிக்கடி நீர் பாய்ச்ச வேண்டும்.. அருகே செல்ல வேண்டும்.. உரமிட வேண்டும். இல்லையேல் செடிகளைப் போன்றே
உறவுகளும் வாடிவிடும்.
அவர்கள் நம்மைவிட்டு விலக முற்படும்போது நாம் அடிக்கடி அருகே செல்ல வேண்டும். அதிக அன்பு
வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் தான் அடிக்கடி பிணக்கு ஏற்படும்.
அன்பும் நட்பும் மட்டுமல்ல.. குடும்ப உறுவுகள்
சிதைவதற்கும் ஏதோ ஒரு சிறு காரணம் போதும். விலகி
செல்கிறார் என்று தோன்றும்போதே நாம்
இன்னும் நெருக்கமாக முயல வேண்டும்.
ஒரு மரத்திலிருந்து இலட்சக்கணக்கில் தீக்குச்சிகள்
செதுக்கலாம். அதேவேளை இலட்சோபலட்ச
மரங்களை தீ வைத்துக் கொளுத்தவும் ஒரு
தீக்குச்சியே போதும். உறவுகளும் அப்படித்தான்.
பிடிக்காத ஒரு வார்த்தையால்தான் சேர்ந்து இருந்த உறவுகள் பிரிந்து விடுகிறது. இறுதியில்..
அழைத்தாலும் அலைபேசியை எடுப்பதில்லை. அங்கே
கண்டால் இங்கேயே முகம் திருப்புவோம்.
காலங்கள் கடந்துவிட்டால்.. "எதற்காக
சண்டையிட்டோம்” என்பதுகூட மறந்துவிடுகிறது.
ஆனாலும் உறவாட மனம் வருவதில்லை.
ஒரு தொலைபேசி அழைப்பும், புன்னகையுடன் ஒரு
உரையாடலும் போதும் வெறுப்பு நெருப்பை
அணைக்க.. ஆனாலும் ஏனோ உள்ளுக்குள் ஒரு தயக்கம். ஒரு ஸலாம் போதும் அனைத்தையும்
முடிவுக்குக்கொண்டு
வர.. ஆனாலும் ஏனோ
வீண் பிடிவாதம்.

இறைத் தூதராக வந்தபோது நபி صلى الله عليه وسلم  அவர்களை
உறவுகள் வெறுத்தனர். ஒதுங்கினர்..
ஒதுக்கினர். ஆனால் நபிகளார் விடவில்லை..
அனைவரையும் ஓரிடத்தில் ஒன்றுகூட்டி அவர்களிடம்
பேசினார்கள்:
"என் அருமை இரத்தபந்த உறவுகளே..! உலகமே
உங்களுக்கு தீயவழி காட்டினாலும்.. ஒருபோதும்
நான் உங்களுக்கு தீயவழி காட்டமாட்டேன்.
அருமை உறவுகளே! நான் கொண்டுவந்த
சத்திய மார்க்கத்தை ஏற்பதும் ஏற்காமல்
இருப்பதும் உங்கள் விருப்பம். ஆயினும் நமக்கிடையே
இருக்கும் இரத்த பந்த உறவை ஏன்
துண்டிக்கின்றீர்கள்..?. வாருங்கள் உறவைப்
பேணுவோம்!”

மறந்துவிட வேண்டாம் உலகில்.. " உறவு
இல்லாவிட்டால் துறவு..!”. மறுமையிலோ உறவைத்
துண்டித்து வாழ்ந்ததற்கும் பதில் சொல்ல வேண்டும்.
இந்த ரமலான் மாதத்தில்
யாரிடமெல்லாம் உறவு விட்டுப் போயிருக்கிறதோ
அவர்களிடமெல்லாம்
போன் செய்து உறவுகளைப் புதுப்பித்துக்
கொள்ளுங்கள்.
கருணையாளன் அல்லாஹ் அளப்பரிய அருள் புரிவான்
புரிவான் உங்கள் மீது!

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 21-06-2017.

Tuesday, 20 June 2017

மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 24

நோன்பு - 24


السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் 

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ரமலானில் என்ன செய்தோம்?

========================

ரமலான் மாதம்
அல்லாஹ்விடத்திலே சிறந்த மாதம். அல்குர்ஆன்
இறக்கியருளப்பட்ட மாதம். லைலதுல் கத்ருடைய மாதம்.
பாவமீட்சி பெற்றுத் தரக்கூடிய மாதம். நரக விடுதலையை,
அல்லாஹ்வின் அருளை பெற்றுத் தரும் மாதம்.
இவ்வளவு சிறப்பு பொருந்திய
மாதத்தை வழியனுப்ப
தயாராகும் இவ்வேளையில்
நம்மிடம் நாமே சில
கேள்விகளுக்கு பதிலை தேடிக் கொண்டு சுய
மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். அம்மாதத்தை
சரியாக கழித்திருந்தால் நாம்
வெற்றி பெற்றவர்களாக
ஆகிவிடுவோம்,
இல்லையெனில்
நஷ்டவாளிகளே!

சென்ற வருடம் ரமழானை
அடைந்தும் அதை சரிவர திட்டமிட்டு கழிக்காமல் விட்ட
நிலையிலே அது எம்மைக் கடந்து சென்றிருக்கலாம்.
தொடர்ந்தும் அவ்வாறான தவறுகள் ஏற்படாமல் இந்த
ரமலானில் விட்ட தவறுகள் குறித்து முஹாஸபா
செய்வதுடன் நம் நிலையை திடமாக ஆக்கிக் கொள்ள
வேண்டும். அதற்கு
முயற்சிக்காத வரை மீண்டும் அந்த தவறுகள் ஏற்பட வாய்ப்புகள்
ஏற்படலாம். நம்மை நாமே மாற்றிக்
கொள்ளாத வரை அல்லாஹ் நம்
நிலையை மாற்ற மாட்டான்.
அல்லாஹ் அல்குர்ஆனில்
இவ்வாறு கூறுகிறான்:
“ஒரு சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அந்த
சமூகத்துக்குப் புரிந்த
அருளை மாற்ற மாட்டான்”. அந்த வகையில் நாம் பின்வரும்
விஷயங்கள் பற்றி சற்று சுயவிசாரணை செய்து கொள்வோம்!

முதலாவதாக, அல்லாஹ்
அனுமதித்த காரணங்களுக்காக
அன்றி நோன்பை விடாமல் ஒழுங்காக நோற்றோமா? நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் வழங்கிய
சலுகைகளுக்காக அன்றி எவர் நோன்பை (வேண்டுமென்று)
விடுகிறாரோ அவர் அந்த வருடம் முழுவதும் நோன்பு
நோற்றாலும் அது அந்த ஒரு நாளுக்கு ஈடாக மாட்டாது.”
(அபூதாவூத், இப்னுமாஜா, திர்மிதி)

இரண்டாவதாக, ஜமாஅத்
தொழுகை. ரமலானில் நாம் பெற்ற அடிப்படை பயிற்சிகளில்
ஒன்றான இந்த அமலை நாம் எந்த
அளவு முக்கியத்துவம்
கொடுத்து தொழுதோம்
என்று சற்று சிந்திக்க
வேண்டும். நம்மில் சிலர் ரமலான் மாதம் வந்து விட்டால்
மாத்திரம் பள்ளி வாயல்களோடு
தொடர்பை ஏற்படுத்திக்
கொள்கிறோம். ரமழான் முடிந்த
அடுத்த கணமே
தொழுகையை,
பள்ளிவாயலை மறந்து
விடுகிறோம்.
ரமலானில் ஸுபஹுத்
தொழுகை முதல் அனைத்து
தொழுகைக்காகவும்
பள்ளிவாயல்கள் நிறைந்து காணப்படும். ரமலான் கடந்து
விட்டால் பள்ளிவாயல்கள்
மீண்டும் வெறுமையாகி
விடும். ரமலானில் கிடைத்த
பயிற்சியை ரமலான்
முடிந்ததன் பிறகும்
அமல்படுத்த முயற்சிக்க
வேண்டும்.

மூன்றாவதாக,
கியாமுல்லைல் இரவு
வணக்கம். ஒவ்வொருவரும்
இரவு நேரத்தை சரிவரத் திட்டமிட்டு இரவு நேரத்
தொழுகையை கூட்டாக அல்லது தனியாக
நிறைவேற்றினோமா? நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்:
“ரமலானில் ஈமானோடும்
நன்மையை
எதிர்பார்த்தவராகவும் இரவு நேரத்தில் நின்று
வணங்குபவரின் முன்செய்த பாவங்கள்
மன்னிக்கப்பட்டுவிடும்.”
நான்காவதாக,
அல்குர்ஆனை ஓதினோமா?
குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்உ வீதம் நாம்
ஓதியிருக்க வேண்டும்.
அதன்படி முழு ரமலானிலும் ஒரு முறை குர்ஆனை ஓதி
முடித்திருக்கலாம். அப்படி ஓதி முடித்தோமா?
அதிகமானவர்கள் ஏனோதானோ
என்று அலட்சியமாக
இருந்துவிட்டோம்.
இவ்வாறான தவறுகள் இனி மேலும் நடைபெறாமல் இருக்க
முயற்சிக்க வேண்டும்.

ஐந்தாவதாக, ஆயிரம்
மாதங்களை விட சிறந்த அந்த
லைலத்துல் கத்ரை
அடைவதற்கான முயற்சியை
மேற்கொண்டோமா? அந்த இரவு இன்ன
 தினத்தில்தான் வரும் என்ற அறிவு நமக்கு
கொடுக்கப்படவில்லை.
குறித்த ஒரு இரவில் மாத்திரம்
நாம் அமல்களில் ஈடுபட்டு
லைலத்துல் கத்ரை அடைந்த
திருப்தியை அடைகிறோம்.
ரமலானை சிறந்த முறையில்
கழிக்க வேண்டும் என்பதற்காக
அல்லாஹ் அந்த இரவை மறைத்து
 வைத்திருக்கிறான்.
அதனை தேடிப்பெற முயற்சி
செய்தோமா?

ஆறாவதாக....  பாவமன்னிப்பு
பாவமீட்சியுடைய இந்த மாதத்தில்
 நாம் எந்த அளவுக்கு
நமது பாவங்களை
மன்னிக்குமாறு
அல்லாஹ்விடத்தில் இறைஞ்சி
அழுதோம்? ஜிப்ரீல் عليه السلام  அவர்கள் , யார் ரமலான் மாதம்
வந்தும் பாவமன்னிப்பு
கோரவில்லையோ அவன்
நாசமாகட்டும் என்று
பிரார்த்தனை செய்ய நபி  صلى الله عليه وسلم
அவர்கள் ஆமீன் சொன்னதை”
ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழாவதாக, பித்ரா, ஸதகா போன்ற
 நல்லமல்கள்
செய்தோமா? எவ்வளவு
கொடுத்தோம்? எத்தனை பேருக்கு
 கொடுத்தோம்?
நோன்பு பிடிக்க
வசதியில்லாத எத்தனையோ
ஏழைகள் இருக்கிறார்கள்.
அவர்களை சற்று
சிந்தித்தோமா? போன்ற
கேள்விகளுக்கு விடைகாண
வேண்டும்.
நம் அலுவல்களும்
அலட்சியங்களும்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை தடுத்து
விட்டனவா? உலக இலாபங்கள்
அவை செல்வமாக, அறிவாக
இருக்கட்டும். அது நம்மை
பராக்காக்கியிருப்பின் இந்த ரமலானை
 சரிவரத்
திட்டமிடவில்லை. ஏனைய நாட்கள் போன்று
 கழித்து விட்டோம்.
 அல்லாஹ்
அல்குர்ஆனில்,
“நீங்கள் கப்றுகளை சந்திக்கும்
வரையில் (பொருளை)
அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை
 (அல்லாஹ்வை
விட்டும்) உங்களை பராக்காக்கி
விட்டது” என்கிறான்.
ரமலானைத் தொடர்ந்து ஷவ்வால்
ஷவ்வால் மாதத்தில்
விஷேசமாக அதிக நன்மை பெற்றுத்
 தரக்கூடிய
சுன்னத்தான ஆறு நோன்புகள்
இருக்கின்றன. அவற்றை நோற்க
ரமலான் நோன்பாளிகள்
மறந்துவிடக்கூடாது. நபி صلى الله عليه وسلم
 அவர்கள் கூறினார்கள்:
“யார் ரமலானில் நோன்பு நோற்று
 அதனைத் தொடர்ந்து
வரும் ஷவ்வால் மாதத்தில் ஆறு
நோன்பையும் நோற்கிறாரோ
அவர் அந்த வருடம் முழுவதும்
நோன்பு நோற்றவர்
போலாவார்.”
(ஆதாரம்: புகாரி, நஸாயி
தவிர்ந்த ஏனைய கிரந்தங்கள்)
எனவே, ஒரு வருடம்
நோன்பிருந்த நன்மையை பெற
முயற்சிப்போம். சில இமாம்கள்
ஷவ்வால் மாதத்தின் 2ம்
பிறையிலிருந்து நோன்பு நோற்க
 வேண்டும் எனவும், சில இமாம்கள்
 ஷவ்வால் மாதத்தில்
எந்தத் தினத்திலும் இந்த ஆறு நோன்பை
 நோற்க முடியும்
என்கிறார்கள். எனவே, ஷவ்வால்
மாதத்தில் அவரவர் நேரங்களை
திட்டமிட்டு நோன்பு நோற்கத்
தயாராவோம்.

நன்றி: அல்ஹஸனாத்
(ஜூலை 2015 இதழில்
வெளியான கட்டுரை)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 20-06-2017

Monday, 19 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் 22🌙


நோன்பு - 22



السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋

*எதிரிகளை பதற வைத்த பத்ரு களம்! -6*

========================

சுரகா இப்னு மாலிக்கின்
உருவத்தில் வந்து இருந்த இப்லீஸ், வானவர்கள்
அல்லாஹ்வை
நிராகரிப்பாளர்களை
வெட்டுவதை பார்த்து
விட்டு ஓட்டம் பிடித்தான் எதிரிகளின் அணியில்
சலசலப்பும், தோல்வியின்
அடையாளங்களும் தெரியத் துவங்கின. முஸ்லிம்களின்
கடும் தாக்குதலுக்கு முன் இணை வைப்போரின் அணி
சின்னா பின்னாமாகியது.
எதிரிகள் நாலா
பக்கங்களிலும் விரைந்து
தப்பிக்க முயன்றனர்.
எதிரிகள் நாலா பக்கமும்
சிதறி ஓடினர். முஸ்லிம்கள்
அவர்களை பின் தொடர்ந்து
பணிந்தவர்களை கைது
செய்தனர், மீறியவர்களை வெட்டி வீழ்த்தினர்.
அபுஜஹல் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்,
திமிருடன் தனது
படையினரை
உற்சாகப்படுத்திக் கொண்டே
இருந்தான்.
அபுஜஹலின் கதையை கொஞ்சம் பார்ப்போம்
முஆது, முஅவ்வித்
இரண்டு அன்சாரி இளைஞர்கள்.
இவர்கள் இருவரும் அஃப்ராவின்
இரு புதல்வர்கள். தங்களது சிறிய தந்தையான அப்துர்
ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنه
அவர்களிடம், அபுஜஹலை
தங்களிடம் காடுங்கள் என்று கூறுகின்றனர். அதற்கு அவர் ஏன்? என்று கேட்கிறார்.
“எங்கள் நபியை அவன்
ஏசுவதாக கேள்வி பட்டோம்,
அல்லாஹ்விடம் சபதம் எடுத்துள்ளோம்,
ஒன்றுஅவனை கொல்வோம், அல்லது நாங்கள் மடிவோம்”
என்று அவர்கள் வீரமாக கூறினார்கள். குதிரையில்
உலாவிக்கொண்டும்,
படையினரை
உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்த அபுஜஹலை அவர்
காண்பித்தார். அவ்வளவுதான்,
இராஜாளி பறவையை போல் அவன் மீது இந்த இரண்டு
இளைஞர்களும் பாய்ந்தார்கள்.
(நூல்:புகாரி 3988)

இந்த இருவரில் யார் அவனை முதலில் கொல்வது என்ற
போட்டியே நடந்தது.
முஅவ்விது رضي الله عنه  அவர்கள், முதலில் அபுஜஹல் மீது
பாய்ந்தார்கள், அவனது
கரண்டை கால் வரை
வெட்டினார்கள், அவனது கால்கள் பறந்து வீழ்ந்தன.
இதனை பார்த்த அபுஜஹலின்
மகன் இக்மா முஅவ்வித்
அவர்களின் புஜத்தில்
வெட்டினார், இதனால்
அவரது வலது கை
வெட்டப்பட்டு தோளோடு
தொங்கியது. கீழே சாய்ந்த அபுஜஹலின் மீது பாய்ந்து, முஆது அவர்கள் வெட்டித் தள்ளினார்கள்.
கொல்லப்பட்டான் அபூஜஹல்.
கொல்லப்படும்போது
கூட,”நான் தான்
கொல்லப்படுபவர்களில் மிகவும் உயர்ந்தவன்” என்றான்,
இப்னு மஸ்வூது رضي الله عنه அவர்கள்  அவனது தலையை
தனியாக எடுத்தார்கள்.
இந்த வேலையில், நபி صلى الله عليه وسلم
அவர்கள், “அபூஜஹல் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள்.
அபுஜஹலின் தலையோடு
நபி صلى الله عليه وسلم  அவர்களிடம்
வந்தார்கள், “இதோ நீங்கள்
கேட்டவனுடைய தலை” என்றார்கள் அந்த இரு அன்சாரி
வாலிபர்களும். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “வணக்கத்து
உரியவன் அல்லாஹ்வை தவிர
வேறும் யாரும் இல்லை” என்று மூன்று முறை
கூறிவிட்டு, “அல்லாஹ்
மிகப்பெரியவன்! எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
அவன் தனது வாக்கை
உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும்
தோற்கடித்தான்”என்றார்கள். பின்பு,
.”உங்களில் யார் அவனை கொன்றது” என்று, நபி صلى الله عليه وسلم அவர்கள்
 கேட்க, இருவரும்
“நானே கொன்றேன்”
என்றார்கள்.
இருவரின் வாள்களை வாங்கி பார்த்த நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
“நீங்கள் இருவருமே அவனை கொன்றீர்கள்” என்று கூறி,
அபுஜஹலின் உடமைகளை, இருவரில் ஒருவரான முஆத் அவர்களிடம் கொடுத்தார்கள்.
இரண்டாவது நபரான,
முஅவ்விது இப்னு அஃப்ரா رضي الله عنه
 அவர்கள் இபோரில்
வீரமரணம் அடைந்தார்கள்.
(நூல்: புகாரி)

பிறகு, அபுஜஹலின் உடலை தன்னிடம் காட்டும்படி நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூற,
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது رضي الله عنه  அழைத்து சென்று
காட்டினார்கள். அதனை கண்ட
நபி صلى الله عليه وسلم  அவர்கள், “இவன் தான்
இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்”
என்றார்கள்.

இந்த போரில் ஒரு
முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. அவைகள்,
தந்தை தன் பிள்ளைக்கு
எதிராகவும், பிள்ளை
தந்தைக்கு எதிராகவும்,
சகோதரர்கள் தங்கள்
சகோதரர்களுக்கு
எதிராகவும் போரிட்டனர்.
அதாவது இரு பிரிவாக,
இறை நம்பிக்கையாளர்கள்
இறை மறுப்பாளர்கள்!
இதனை பற்றி கொஞ்சம்
பார்ப்போம்!

பிலால் رضي الله عنه  அவர்களுக்கு
மக்காவில் மிகுந்த
வேதனையளித்தவன்
உமையா, இவரையும், இவரது மகனையும் கைதியாக
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنه  இழுத்து வந்த போது, உமையாவை கண்ட பிலால் رضي الله عنه  அவர்கள், இவன் என்னை அதிகம் துன்பப்படித்தியவன்”
என்று கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنهஅவர்கள் எவ்வளவோ தடுக்க
முயன்றும்,
நபித்தோழர்களால், உமையா
கொல்லப்பட்டான்.
உமையா கொல்லப்
படுவதற்கு முன்பாக
கேட்டான், “தீக்கோழியின்
இறகுகளை தன் நெஞ்சில் செருகி இருக்கும் அந்த
மனிதர் யார்”? என்று
கேட்டான், அதற்கு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنه  அவர்கள் கூறினார்கள்,
“அவர்தான் ஹம்ஜா” என்று, அதற்கு அவன் கூறினான்,
“அவர்தான் போரில்
எங்களுக்கு மிகுந்த
சேதத்தை உண்டாக்கியவர்”
என்றான்.
முஸ்அப் இப்னு உமைர் رضي الله عنه
அவர்கள் தனது சகோதரர் அபூஅஜீஸ் உப்னு உமைரை
பார்த்தார்கள் “இவனை
கைதியா பிடியுங்கள்”
என்று கூறினார்கள்.
அபுபக்ர் رضي الله عنه ,
குரைஷிகளின் கூட்டத்தில் இருந்த தனது மகன் அப்துர்
ரஹ்மானை பார்த்து, “ஏ… கெட்டவனே! எனது செல்வங்கள் எங்கே”? என்று
கேட்டார்கள். “அதற்கு
அவர்,குதிரையும்,
வாளையும் தவிர
வேறொன்றும்
இல்லை”என்றார்.
மக்காவில் தங்களை
அடக்குமுறைக்கு ஆளாக்கி, கொடுமை
படுத்தியவர்களை கொன்று தங்கள் கோபத்தை தணித்துக்
கொண்டனர்.
சிலர் கெஞ்சினார்கள்,
தன்னிடம் உள்ள அனைத்து
ஒட்டகங்களையும் தந்து விடுகிறேன், என்னை கைதியாக பிடித்துக் கொள்,
கொன்று விடாதே”
என்றார்கள். சிலர்
கொல்லப்பட்டனர், பலர் கைதியாக பிடிக்கப் பட்டனர்.

உமர் رضي الله عنه  அவர்களை பற்றி
கூறவேண்டும்.
பத்ரு போர் நடந்தபோது நபி صلى الله عليه وسلم  அவர்களின் வலப் பக்கம்
நின்று போர் புரிந்தார்கள். தனது  தாய் மாமன் என்று
கூட பாராமல் ஆஸ் இப்னு ஹிஷாம்
 இப்னு முகீராவை
கொன்றார்கள். இந்த போரில் முதல்  முதலாக
 முஸ்லிம்கல்
தரப்பில் ஷஹீதான
பெருமைக்குரியவர் உமர் رضي الله عنه
(ரலி) அவர்களின்
அடிமையான மஹ்ஜா رضي الله عنه அவர்கள்
என்று கூறியிருந்தோம்.

இந்த போரில் குரைஷி
குலத்தவரின் அனைத்து
கிளையினரும் வந்த போது பனூ அதி
 குலத்தை சார்ந்த
எவரும் குரைஷிகளின்
சார்பாக கலந்து
கொள்ளவில்லை. காரணம்,
உமர் رضي الله عنه  அவர்கள் இந்த
குலத்தை சார்ந்தவர்கள். அதே
வேளயில், இந்த குலத்தை
சார்ந்தவர்கள்
பெரும்பாலோனோர்
இஸ்லாத்தை தழுவி
இருந்ததால், அவர்களில்
பெரும்பாலோனோர்
முஸ்லிம்கள் தரப்பில் போர் புரிய வந்து
 இருந்தார்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதியாக பிடிபட்டு இருந்த அப்பாஸ் رضي الله عنه  அவர்களை
 பார்த்து,
“அப்பாஸே! நீங்கள்
இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்ளுங்கள்,
அல்லாஹ்வின் மீது
ஆணையாக! எனது
 தந்தை கத்தாப்
முஸ்லிமாகுவதை விட  நீங்கள் முஸ்லிம்
நீங்கள் முஸ்லிம் ஆகுவது தன்
எனக்கு விருப்பமானது,
அதற்கு காரணம் நீங்கள் முஸ்லிம் ஆவது
முஸ்லிமாவது நபி  صلى الله عليه وسلم
அவர்களுக்கு மகிழ்ச்சியான
செய்தியாகும்” என்று
கூறினார்கள்.
போரில் கொல்லப்பட்ட 24 முக்கிய  குரைஷி
தலைவர்களின் சடலங்களை
இழுத்து வரும்படி
கூறினார்கள்.
அவைகள்
நாற்றம் பிடித்த கிணற்றில் தூக்கி எறியப்பட்டன.

இஸ்லாமியர்கள் தரப்பில்
கொல்லப்பட்டு ஷஹீதானவர்கள்
விபரம்.

3:13 . (பத்ரு களத்தில்) சந்தித்த இரு
 சேனைகளிலும்
உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக
உள்ளது.
 ஒரு சேனை
 அல்லாஹ்வின்
பாதையில் போரிட்டது;
பிரிதொன்று காஃபிர்களாக
இருந்தது; நிராகரிப்போர்
அல்லாஹ்வின் பாதையில்
போரிடுவோரைத்
தங்களைப்போல் இரு
மடங்காகத் தம் கண்களால்
கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான்
 நாடியவர்களுக்குத் தன் உதவியைக்
 கொண்டு
பலப்படுத்துகிறான்;
நிச்சயமாக, (அகப்)
பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு
படிப்பினை  இருக்கிறது.
3:123 . “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி
குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ்
உங்களுக்கு உதவி
புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி
 செலுத்துவதற்காக
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து
 கொள்ளுங்கள்.

இஸ்லாமியர்கள் தரப்பில்
கொல்லப்பட்டு ஷஹீதானவர்கள்
விபரம்.
01. உமைர் இப்னு அபீ வக்காஸ்
02. ஸஃப்வான் இப்னு வஹப்
03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து
அம்ர்
04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்
05.ஆகில் இப்னுல் பக்ரு
06.உபைதா இப்னுல் ஹாரித்
இப்னு அப்துல்  முத்தலிப்
(இவர்கள் அனைவரும்
முஹாஜிர்கள்)
07.உமைர் இப்னுல் ஹம்மாம்
08 .யஸீது இப்னுல் ஹாரித்
இப்னு கைஸ்
09 .அவ்ஃப் இப்னு ஹாரித்
இப்னு ரிஃபாஆ
10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு
 ரிஃபாஆ
11 .மஸ்அத் இப்னு ஹத்மா
12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்
13 .ஹாரிதா இப்னு
ஸுராக்கா
14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா رضي الله عنهم
(இவர்கள் அன்சாரிகள்)
மொத்தம் 14 சஹாபா
பெருமக்கள் தன் இன்னுயிரை தந்து
தந்து, பத்ரு போரின்
வரலாற்றிலும்,
அல்லாஹ்வின்
இருப்பிடத்திலும்
அழிவில்லா நிலை
கொண்டார்கள். இந்த 14 பேரில்,
முஹாஜிர்கள்
(மக்காவாசிகள்)6 பேர்கள்,
அன்சாரிகள்(மதினாவாசிகள்)
8 பேர்கள் அடங்கும்.
ஏறாத்தாழ 313
முஸ்லிம்களின் படை,
இறைநிராகரிப்பு
கூட்டமான குரைஷிகளின்
1000 பேரை வெல்ல அல்லாஹ்
உதவி புரிந்தான்.
குரைஷிகளின் தரப்பில் 70 பேர்கள் கொல்லப்பட்டனர், 70
பேர்கள் கைதியாக
சிறைபிடிக்கப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் அபூ ஜஹ்ல்
 உட்பட ,உத்பா இப்னு
ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் கம் இப்னு
 ஹிஷாம், உமையா
 இப்னு கலஃப் போன்ற
பிரபல தலைவர்களும் அடக்கம்.
கொல்லப்பட்ட 70
குரைஷிகளில் உள்ள 24 முக்கிய
 தலைவர்களின்
சடலங்களை இழுத்து
வரும்படி நபி صلى الله عليه وسلم அவர்கள்.  அவைகள்,
பாழடைந்த கிணறு ஒன்றில்
போடப்பட்டன.
எல்லாம் வல்ல அல்லாஹ்
தன்னுடைய உதவியை
கொண்டு,
இறைநம்பிக்கையாளர்களுக்கு
வெற்றியையும்,
இறைநிராகரிப்பாளர்களுக்கு
தோல்வியையும் தந்தான்.
இந்த பத்ரு போரின் மூலம் நமக்கு
 படிப்பிணைகள்
உண்டு.
அல்லாஹ்வை மட்டும்  நம்பி,
அவனிடம் மட்டும் உதவி
தேடுவோருக்கு, அவனின் உதவி
 நிச்சயம் கிட்டும்.

பத்ருபோர் குறித்த சில
காட்சிகளின் விபரம்...

 நபி صلى الله عليه وسلم  நேரடியாக
களத்தில் நின்று எதிரிகளை
சந்தித்த போர்கள் மொத்தம் 19
ஆகும். (ஜைத் பின் அர்கம் رضي الله عنه
 புகாரி 3949) அதில்
முதலாவது போர் பத்ருதான்.

 காபிர்களின் சடலங்கள்
பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள
கிணற்றில் தூக்கிப்
போடப்பட்டன. ‘நான்
சொன்னதெல்லாம் உண்மை என்பதை
 இப்போது
உணர்கிறீர்களா..’ என்று நபி صلى الله عليه وسلم  கேட்டார்கள். (ஆய்ஷா,  அபூதல்ஹா
இப்னுஉமர் رضي الله عنهم புகாரி 3976,3980,4026)
பத்ரில் கொல்லப்பட்ட
ஹாரிஸா பின் சுராகா رضي الله عنه அவர்களுக்கு ஜன்னத்துல்
ஃபிர்தவ்ஸ் என நபி صلى الله عليه وسلم
நன்மாராயம் கூறுகிறார்கள்.
(அனஸ் رضي الله عنه  புகாரி 3952)

 ஒரு திருமணத்தின்
போது பத்ரு போரில்
ஷஹீதாக்கப்பட்டவர்களை புகழ்ந்து
 சிறுமிகள் தப்ஸ்
அடித்து
பாட்டுப்பாடுகிறார்கள்.
(பின்த் முஅவ்வித் رضي الله عنه  புகாரி 4001 )

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங்குடி.

பதிவு நாள்:19-06-2017.

Sunday, 18 June 2017

🌙*மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் -23🌙

நோன்பு - 23



السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*லைலத்துல் கத்ரு*

========================

லைலத்துல் கத்ரு இன்ன இரவுதான் என்பதில்
ஏராளமான கருத்து
வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது
ஆண்டில் ஒரு இரவு என்றும், பராஅத்
இரவு என்றும், ரமலானில் ஓர்
இரவென்றும், ரமலானுடைய 27ஆவது இரவு என்றும் பல கருத்துக்கள்
கூறப்பட்டுள்ளன. இவற்றில்
நம்பிக்கையான சொல் ரமலானில்
இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக
வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு
இரவு என்பதுதான்.

*லைலதுல் கத்ரின் அறிகுறி!*

ஸிர்ரு பின் ஹுபைஷ்
(ரஹிமஹுல்லாஹ்) அவர்கள்
கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் “ஆண்டு முழுவதும் இரவில் நின்று
வணங்கியவர் லைலத்துல்கத்ர் இரவை அடைந்து கொள்வார்” என்று
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்
(ரலியல்லாஹு அன்ஹு)
அவர்கள் கூறி வருவதாகச்
சொல்லப்பட்டது. அதற்கு உபை
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,
“எவனைத் தவிர வேறு இறைவன்
இல்லையோ அவன் மீது சத்தியமாக! அது
(லைலத்துல்கத்ர்) ரமளானில்தான்
உள்ளது (இவ்வாறு சத்தியம்
செய்தபோது அன்னார்
“அல்லாஹ்நாடினால்” என்று கூறாமல்
உறுதியாகவே குறிப்பிட்டார்கள்)
அல்லாஹ்வின்மீதாணையாக! அது எந்த
இரவு என்பதை நான் அறிவேன்; அந்த
இரவில் நின்று வணங்குமாறு
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم  அவர்கள்
எங்களுக்குக்கட்டளையிட்டார்கள். அது
ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும்.
(அதுலைலத்துல் கத்ர் என்ப)தற்கு
அடையாளம், அந்த இரவை அடுத்து வரும் காலைப் பொழுதில்
சூரியன்வெண்ணிறத்தில் ஒளியிழந்து
(மங்கலாக) உதிக்கும்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1397, பாகம்6

உப்பாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
இறைத்தூதர் صلى الله عليه وسلم  நவின்றார்கள், லைலதுல் கத்ரின் அடையாளம் ஒளி வீசும் நிலவுள்ள இரவைப் போன்று தெளிந்த பிரகாசமான அமைதியான இரவு.
அதில் சூடோ குளிரோ இருக்காது.
உதயக் காலை வரை எரிநட்சத்திரங்கள்
எறியப்படுவதில்லை. மேலும்,அதன் அறிகுறி அன்றைய காலைச்
சூரியன் சந்திரனைப் போன்று
ஜுவாலையின்றிக் நேராகக் கிளம்பும்.
அன்றைய தினச் சூரியனுடன்
ஷைத்தானும் கிளம்ப அனுமதி இல்லை.
(இமாம் அஹ்மத், மஜ்மஃ
அஸ்ஸவாயிது,பாகம் – 04, பக்கம் – 75)

லைலத்துல் கத்ரு இரவுக்கு சில
அடையாளங்கள் ஹதீதுகளில்
கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய
இரவில் நட்சத்திரம் எரிந்துத விழாது.
நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான
தன்மையாக இருக்கும். அன்று சூரியன்
உதிக்கும்போது சுடர் அதிகமின்றி
பிறையைப் போல் இருக்கும். மேலும்
ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது.  மஙானி

*லைலத்துல் கத்ரு எந்த நாள்?*

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில்
உள்ள ஒற்றைப்படை இரவுகளில்
லைலதுல்கத்ரைத் தேடுங்கள் என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்)அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு
அன்ஹு), நூல்கள்: புகாரி ' முஸ்லிம்.

*லைலதுல் கத்ர் 27வது இரவு*
*என்பதற்குரிய ஆதாரங்கள்:*

லைலதுல் கத்ரு இரவானது,
இருபத்தேழாவது இரவாகும் என்று நபி
(ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆவியா
(ரலியல்லாஹு அன்ஹு), நூல்:
அபூதாவூத் (1178)
லைலத்துல் கத்ரு பற்றி கூறப்பட்டுள்ள
‘இன்னா அன்ஜல்னாஹ்‘ சூராவில்
லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை
மூன்று தடவை கூறப்பட்டுள்ளது. ஒரு
வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள்
வீதம் மூன்று தடவைக்கு 27
எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே
இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று சிலர்
கூறியுள்ளனர். இவ்வாறு சில
காரியங்களில் இமாம்களில் சிலர்
எழுத்துக்களின் எண்ணிக்கைக்குத்
தோதாக விஷயங்களை
கூறியிருப்பது அறிவுக்குப்
பொருத்தமாகவும் அமைந்துள்ளது.
மஙானி.

கஸ்ஸாலி இமாம் சொன்ன உபகராம்
இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு
அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள்
சிலரும் ரமலானின் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன் கிழமையாக
இருப்பின் லைலத்துல் கத்ரு
இருபத்தொன்பதாம் இரவு என்பதாகவும்
முதற்பிறை
திங்கட்கிழமையாயிருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தொன்றாம்
இரவென்பதாகவும் செவ்வாய்க்கிழமை
அல்லது வெள்ளிக்கிழமையாக
இருப்பின் லைலத்துல் கத்ரு
இருபத்தேழாம் இரவென்றும்
வியாழக்கிழமையாக இருப்பின்
இருபத்தைந்தாம் இரவென்றும்
சனிக்கிழமையாக இருப்பின் இருபத்தி
மூன்றாம் இரவென்றும்
கூறியுள்ளார்கள்.
 இந்த கணக்குப்படி
நான் பருவமடைந்தது முதல் எனக்கு
லைலத்துல் கத்ரு தவறியதே கிடையாது என்று ஷைகு
அபுல்ஹஸன் ஜுர்ஜானி
ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
கூறியுள்ளார்கள்.  மஙானி.

*லைலத்துல் கத்ரின் அமல்கள்.*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்)அவர்கள்
கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும்
லைலத்துல் கத்ரு இரவில்நின்று
வணங்குகிறாரோ அவரது முந்திய
பாவங்கள் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலியல்லாஹு அன்ஹு),நூல்: புகாரி
35)

லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களிடம் செவியுற்றதை எனக்குக்
கூறுங்கள்! என்று கேட்டேன்.
அப்போது அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு),
‘நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள்
இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும்
அவர்களுடன் இஃதிகாப்இருந்தோம்.
அவர்களிடம் ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்)
வந்து ‘நீங்கள் தேடக்
கூடியது
(லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி
வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள். உடனே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும்
அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம்.
அவர்களிடம் ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது
உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள்.ரமளான்
இருபதாம் நாள் காலையில் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் சொற்பொழிவு செய்ய
எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாப்
இருந்தார்களோ அவர்கள் திரும்பிச்
செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான்
மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக
அது கடைசிப் பத்து நாள்களில்
ஒற்றையான நாளிலுள்ளது. நான்
களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது
 போல் கண்டேன்’ என்று
இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
(அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு
பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது.
வானத்தில் (மழைக்கான) எந்த
அறிகுறியும் நாங்கள் காணவில்லை.
திடீரென மேகம் திரண்டு மழை
பொழிந்தது. அப்போது எங்களுக்கு
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி صلى الله عليه وسلم  அவர்களின் நெற்றி மீதும் மூக்கு
மீதும் களிமண், தண்ணீரின்
அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை
 மெய்ப்பிப்பதாக இது
அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பு அபூ ஸலமா
ரலியல்லாஹு அன்ஹு புகாரி 813

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்)அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுபுஹ் தொழுது விட்டு தமது
 இஃதிகாஃப்
இருக்குமிடம் சென்று விடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு
அன்ஹு)நூல்: புகாரி 2041

முடிந்த வரை ஸலவாத்தும்,
இஸ்திக்பாரும், திக்ருகளும், ஓதுங்கள்.

 *லைலத்துல் கத்ரின் துஆ*

ஆயிஷா (ரலியல்லாஹு
அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் திருத்தூதரே!
லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை
நான் அறிந்தால் அதில் நான் என்ன
சொல்ல வேண்டும்?’ என்று நான்
கேட்டேன்.
அதற்கு,
ﺍَﻟﻠّٰﻬُﻢَّ ﺇِﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ ﺍﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ
‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன்
துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’
) பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நீ
மன்னிக்கக் கூடியவன். மேலும்
மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை
 மன்னித்து விடுவாயாக!
(என்று சொல் என்று கூறினார்கள்.
(நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம்,
இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 19-06-2017.

Saturday, 17 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்-21🌙

நோன்பு - 21

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋

*எதிரிகளை பதற வைத்த பத்ரு களம்  -5*

========================

*போர் துவங்கியது!*

மிகுந்த கெட்ட குணமுடைய
அஸ்வத் இப்னு அப்துல் அஸது
மக்ஜூமி என்பவன் போரின் தீயை மூட்டினான். சப்தமாக
சபதமிட்டான் “ நான்
முஸ்லிம்கலின் நீர்நிலையில்
நீர் அருந்துவேன், அவர்களை
கொன்றொழிப்பேன், அல்லது அங்கே செத்துமடிவேன்…
இது இறைவன் மீது சத்தியம்” என்று கூறி கொண்டு
குரைஷிகளின்
படையிலிருந்து
வெளியேறி முஸ்லிம்கள்
பக்கம் உள்ள நீர் நிலையை நோக்கி, ஓங்கிய வாளுடன்
வந்தான். அவன் நீர் தடாகத்தின்
அருகே வந்ததும், ஹம்ஜா رضي الله عنه
 அவர்கள் அவனை
வாளுடன் எதிர் கொண்டார்கள்.
அவனின்
கெண்டைகால் வரை
வெட்டினார்கள். அப்படியும் தான் செய்த சபத்தை நிறைவேற்ற, அந்த நீர் தடாகத்தை நோக்கி தவழ்ந்து
கொண்டே சென்றான்.
இப்போது அவனின் கதையை ஹம்ஜா رضي الله عنه  அவர்கள்
முடித்தார்கள்.
 போரின் முதல் கொலை,
குரைஷிகளின் முதல்
இழப்பு.
குரைஷிகளின் கோபம்
தலைக்கேறியது. மிகவும் காட்டமாக குரைஷிகள் போரை துவக்கினார்கள்
அந்தக் கால போர்விதியின் படி
முதலில், சில வீரர்கள்
நேருக்கு நேர் மோத
வேண்டும், அதன் பின்பே இருதரப்பில் உள்ள அத்தனை
பேரும் மோதிக் கொள்வார்கள்
அதன்படி, குரைஷிகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற
குதிரை வீரர்களில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்,
இஸ்லாமிய படையினரை
நோக்கி வந்து நின்று
நேரிடையாக மோத
வருமாறு அழைத்தார்கள்.
அவர்கள் உத்பா, ஷைபா, வலீது
ஆகியோர்.
இவர்களை எதிர்கொள்ள,
மூன்று அன்சாரி
வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு
ஹாரிஸ், அப்துல்லாஹ்
இப்னு ரவாஹா رضي الله عنهم ஆகியோர் அவர்களுடன்
நேருக்கு நேர் மோத
களத்தில் குதித்தனர்.

அவர்களை நோக்கி, “நீங்கள் யார்?” என்று குரைஷிகளின்
சார்பாக வந்த மூவரும்
கேட்டார்கள், அதற்கு இவர்கள் “நாங்கள் மதினாவாசிகள்”
என்றார்கள். “நீங்கள் எங்களுக்கு
நிகரானவர்கள்தான். ஆனால்,
நீங்கள் தேவை இல்லை.
முஹம்மதே!
மக்காவாசியான எங்கள்
குலத்தவரை எங்களுடன்
போரிட அனுப்புங்கள்” என்று
கத்தினார்கள்.
உடனே நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
உபைதா இப்னு ஹாஸே,
ஹம்ஜாவே, அலியே எழுந்து செல்லுங்கள்” என்று
உத்தரவிட்டார்கள்.
மீண்டும் இவர்களை நோக்கி நீங்கள் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, நேருக்கு நேர் மோத
வந்தார்கள்
இதில் வயதில் மூத்தவரான
உபைதா رضي الله عنه  அவர்கள்
உத்பாவுடனும், ஹம்ஜா رضي الله عنه
ஷைபாவுடனும், அலீ رضي الله عنه
வலீதுடனும் மோதினார்கள்.
(நூல்: இப்னு ஹிஷாம்)

இதில் ஹம்ஜா رضي الله عنه  அவர்களும்,
அலீ رضي الله عنه  அவர்களும்
எதிரிகளுக்கு வாய்ப்பே
கொடுக்காமல் அவர்களை வெட்டி வீசினார்கள். ஆனால்,
உபைதா رضي الله عنه அவர்களும்,
உத்பாவும்
மோதிக்கொண்டதில்
இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது, உபைதா رضي الله عنه
அவர்களின் கால் வெட்டுண்டு
வீழ்ந்தது. இருந்தும் உத்பா
கொல்லப்பட்டான். அலீ رضي الله عنه ம், ஹம்ஜா رضي الله عنه ம்
உபைதா رضي الله عنه  அவர்களை
சுமந்து கொண்டு
திரும்பினார்கள்.
(உபைதா رضي الله عنه  அவர்கள். இதனால் நோய்வாய்ப்பட்டு,
இப்போருக்கு பின் 5 நாட்கள் கழித்து, மதினா செல்லும்
வழியில் “ஸஃப்ரா” என்ற இடத்தில் இறந்தார்கள்.)
இந்த சம்பவத்தை
குறித்துதான் இறைவசனம்
22:19 இறங்கியதாக அலீ رضي الله عنه
அவர்கள் கூறினார்கள்,
போரின் ஆரம்பமே தங்களுக்கு கெட்டதாக அமைந்து விட்டதே! மூன்று குதிரை
வீரர்களான தளபதிகளை இழந்து
விட்டோமே! என்ற ஆத்திரம் மேலோங்க, இஸ்லாமிய
படையினரை நோக்கி
மிகவும் ஆவேசத்துடன்
பாய்ந்தார்கள் குரைஷிகள்
அனைவரும்.
முஸ்லிம்களோ, தங்களது
இறைவனிடம் உதவியும், பாதுகாப்பும் கோரி, தங்களது எண்ணங்களை
தூய்மைபடுத்திக் கொண்டே எதிரிகளின் தொடர்
தாக்குதல்களை சமாளித்தனர்.

முஸ்லிம் படை தங்களைவிட,
மூன்று மடங்கு
பெரிதாகவும், கணக்கற்ற கவச
உடையுடனும்,
குதிரை படையுடனும்
மோதும் குரைஷி
படையினரை மன
வலிமையுடன்
எதிர்கொண்டார்கள்.
“அல்லாஹ் ஒருவனே!
அல்லாஹ் ஒருவனே” என்று கூறிக்கொண்டே பதிலடி கொடுத்தார்கள்.
போர் உச்சகட்டத்தை எட்டியது, இரத்தம் பீறிட்டு ஆறாய் ஓடத்
தொடங்கியது.
நபி صلى الله عليه وسلم  அல்லாஹ்விடம்
மன்றாடினார்கள்.
“அல்லாஹ்வே! நீ வாக்களித்த வாக்கை நீ
நிறைவேற்றுவாயாக!
அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும்,
ஒப்பந்தத்தையும் உன்னிடம்
கேட்கிறேன்” என்று
வேண்டினார்கள்.
போரின் உக்கிரம் உச்சகட்டத்தை
அடைந்ததும், மீண்டும்
வேண்டினார்கள்.
“அல்லாஹ்வே! இக்கூட்டத்தை
நீ அழித்துவிட்டால், உன்னை
வணங்குவதற்கு
இப்பூமியில் யாருமே
இருக்க மாட்டார்கள்!” அழுது அழுது துஆ கேட்டார்கள்.
கரங்களை உயர்த்தியதால்,
அவர்களின் புஜத்திலிருந்து
மேலே போர்த்தி இருந்த நழுவி விழுந்தது.
அவர்களின் போர்வையை
அபூபக்ர் رضي الله عنه  சரி செய்து,
“அல்லாஹ்வின் தூதரே! நீங்கள்
உங்கள் இறைவனிடம் அதிகம்
வேண்டிவிட்டீர்கள்” என்றார்கள்.
அல்லாஹ் தனது
திருவசனத்தின் மூலம் உதவி செய்தான்.

‘(உங்களைப்)
பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள்
 இறைவனிடம்
வேண்டிய போது,
“அணியணியாக உங்களை பின் பற்றி
 வரக்கூடிய ஆயிரம்
வானவர்களைக் கொண்டு
நிச்சயமாக நான் உங்களுக்கு
உதவி செய்வேன்” என்று அவன்
உங்களுக்கு பதிலளித்தான்
(திருக்குர்ஆன் 8:9)
வல்ல அல்லாஹ், நபி صلى الله عليه وسلم
அவர்களின் பிராத்தனையை
ஏற்றுக்கொண்டான், அவன்
வாக்களித்தபடி வானவர்களை
இறக்கினான்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் சற்று
தலையை தாழ்த்தி, பின்பு உயர்த்தி “அபுபக்ரே!
நற்செய்தி அடைந்து
கொள்ளுங்கள். இதோ ஜிப்ரீல்
குதிரையின் கடிவாளத்தை
இழுத்துவருகிறார். அவர் உடம்பில்
 புழுதி படிந்து
இருக்கிறது அவர்
காட்சியளிக்கிறார்”
என்றார்கள்
கவச ஆடை அணிந்து நபி صلى الله عليه وسلم
அவர்கள் தங்களது
கூடாரத்திலிருந்து
வெளியேறினார்கள்.
“அதிசீக்கிரத்தில் இக்கூட்டம்
தோற்கடிக்கபடுவார்கள், (பிறகு) புறங்காட்டி
ஓடுவார்கள்”
 (அல்குர் ஆன் 54:45) என்ற வசனத்தை
கூறியவர்களாக,
பொடிக்கற்கள் நிறைந்த மண்ணை
 அள்ளி, “முகங்கள்
மாறட்டும்” என்று கூறி, எதிரிகளின்
 முகத்தை நோக்கி
 எறிந்தார்கள். அது
எதிரிகளின் கண், தொண்டை, வாய்
 என்று அனைத்தையும்
சென்றடைந்தது.
இது குறித்தே, “நீங்கள்
எறியும் போது உண்மையில்
அதை நீங்கள் எறியவில்லை.
எனினும் அதை
அல்லாஹ்தான்
எறிந்தான்” (அல்குர் ஆன் 9:17)
என்ற வசனம் இறங்கியது.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் தமது
படையினருக்கு ஆர்வ
மூட்டினார்கள்.,
“முஹம்மதின் உயிர் எவன் கைவசம்
 உள்ளாதோ அவன்
மீது ஆணையாக! இன்றைய தினத்தில்
 போர் புரிந்து,
சகிப்புதன்மையுடனும்,
நன்மையை நாடியும்,,
புறமுதுகு காட்டாமலும்,
எதிரிகளை எதிர்த்தவர்களாக
யார் கொலை
செய்யப்படுகிறார்களோ அவரை அல்லாஹ் சொர்கத்தில்
நுழைவிப்பான்.
வானங்களயும்
பூமிகளையும் அகலமாக கொண்ட
 சொர்கத்தின் பக்கம்
விரைந்தோடுங்கள்” என்று
ஆர்வமூட்டினார்கள்.
“ஆஹா! ஆஹா!, நானும்
சொர்க்கவாசிகளில் ஒருவராக
ஆகவேண்டும்” என்று
கூறிக்கொண்டு உமைர்
இப்னு அல்ஹுமாம் رضي الله عنه
எதிரிகளின் மீது
பாய்ந்தார்கள். ஷஹீதானார்கள்.
இதே போன்று அவ்ஃப் இப்னு ஹாரிஸ்  رضي الله عنه  அவர்கள் தான்
அணிந்து இருந்த கவச
ஆடையை தூக்கி எறிந்து விட்டு
 எதிரிகள் மீது
பாய்ந்து ஷஹீதானார்கள்.
(நூல்: முஸ்லிம்)

நபித்தோழர்களின் மனதில், தங்களுக்கு
 சொர்க்கம் வேண்டும்
 என்ற ஆர்வமே
மேலோங்கி இருந்தது
என்பதையே இந்நிகழ்ச்சிகள்
காட்டுகின்றன.
எதிரிகளை தாக்குங்கள்
என்று, நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கட்டளை பிறப்பித்த உடன்
எதிரிகளின் மீது
முஸ்லிம்கள் பாய்ந்தனர்.
அவர்களின் அணிகளை
பிளந்தனர், தலைகளை
கொய்தனர்.அல்லாஹ்வின் பாதையில் போர்
புரியவேண்டும் என்ற தீராத தாகத்தில்
 இருந்த அவர்கள்
எதிரிகளை நிலை
தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின்
தாக்கும் வேகம்
குறைந்தது. வீரமும்
சோர்வுற்றது. எதிரிகளால்
முஸ்லிம்களின் வேகத்திற்கு
தாக்கு பிடிக்க
முடியவில்லை. நபி صلى الله عليه وسلم
“அதி சீக்கிரத்தில் இக்கூட்டம்
சிதறடிக்கப்படும்.மேலும் (இவர்கள்) புறங்காட்டி
ஓடுவார்கள்” (அல்குர் ஆன் 54:45) என்ற வசனத்தை
கூறிகொண்டே இருந்தார்கள்.
முஸ்லிம் படையினருக்கு
மேலும் உற்சாகம்
தோன்றியது, பலமாக தாக்க
தொடங்கினார்கள்.
(நூல்: புஹாரி )

 *வானவர்களின் உதவி*

இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள
கூறுகின்றார்கள்: ஒரு
முஸ்லிம், எதிரியைத் தாக்க பின் தொடர்ந்து
 செல்லும் போது
 மேலிருந்து ஒரு
சாட்டையின் ஒலியும்
“ஹைஸூமே! முன்னேறு” என்று
 கூறும் ஒரு குதிரை
வீரனின் அதட்டலையும்
கேட்டார். அதன் பிறகு அந்த முஸ்லிம்
எதிரியை பார்க்கும்
போது அந்த எதிரி
மூக்கு அறுக்கப்பட்டு, முகம்
பிளக்கப்பட்டு மல்லாந்து
இறந்து கிடந்தான்.”:
இது குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்
 கூறும் போது, “இது
மூன்றாவது
வானத்திலிருந்து அல்லாஹ்
இறக்கிய உதவியாகும்”
என்றார்கள் (நூல்:முஸ்லிம்)
அபூதாவூது அல் மாசினி رضي الله عنه அவர்கள் கூறினார்கள்..
 நான் ஒரு எதிரியை
வெட்டுவதற்காக அவனை பின்
 தொடர்ந்த போது எனது வாள் அவன் மீது  படுவதற்கு
முன்னதாகவே அவனது தலை
கீழே விழுந்தது, அவனை வேறு யாரோ
வெட்டினார்கள் என்பதை உணர்ந்து
 கொண்டேன் (நூல் :
புகாரி)
முஸ்லிம்கள் மிகத்
துணிவுடன்
சண்டையிட்டார்கள்,
வானவர்களும் அவர்களுக்கு
உதவி செய்தார்கள்
அன்சாரிகளில் ஒருவர்,
அப்பாஸ் இப்னு அப்துல்
முத்தலிபை கைது செய்து நபி صلى الله عليه وسلم  அவர்களிடம்
அழைத்து வந்தபோது, அவர் கூறினார்கள்
 “இவர் என்னை
கைது செய்யவில்லை.
என்னை கைது செய்தது, சிறந்த
 குதிரையின் மீது
இருந்த அழகிய முகம் உடைய
ஒருவர்தான்” என்றார். அதற்கு
அந்த அன்சாரி வீரரோ
“இல்லை! நான் தான்
 கைது செய்தேன்”
என்றார்.
“அல்லாஹ்தான் தனது
சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு
 உதவி செய்தான்” என்றார்கள் நபி صلى الله عليه وسلم  அவர்கள்.
அலீ رضي الله عنه  கூறினார்கள்: பத்ரு
போரில் என்னையும்,
அபுபக்கர் رضي الله عنه  அவர்களையும்
பார்த்து நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறினார்கள், உங்கள்
இருவரில் ஒருவருடன்
ஜிப்ரீலும், மற்றொருவருடன்
பெரிய வானவரான
இஸ்ராஃபீலும் போரில் கலந்து
இருக்கிறார்கள்” என்று
கூறினார்கள்.
 (நூல்: முஸ்னது
 அஹமது, பஜ்ஜார்,
முஸ்தத்ரகுல் ஹாகிம்)

இன்ஷா அல தொடரும்...

தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங்குடி.

பதிவு நாள்: 18-06-2017.

Thursday, 15 June 2017

☪ரமலான் இறுதிபத்தும் இஃதிகாபும்☪

☪தலைப்பு: ரமழான் இறுதிப்பத்தும்
இஃதிகாஃபும்☪


ரமலான் மாதத்தின் மிக முக்கியமான பகுதி அதன் கடைசிப்பகுதி.அதில் தான் 1000 மாதங்களை விட மிகச்சிறந்த இரவு என்று குர்ஆன் வர்ணித்திருக்கிற லைலத்துல் கத்ர் இரவு இருக்கிறது.அதனை அடைந்து கொள்வதற்காகத்தான் இந்த நாட்களுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் தருகிறது.

(நோன்பின்) கடைசிப்பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவி மார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

فقد روى محمد بن نصر في كتاب الصلاة عن أبي عثمان النهدي قال : كانوا يعظمون ثلاث عشرات : العشر الأول من المحرم ، والعشر الأول من ذي الحجة ، والعشر الأخير من رمضان
(الدر المنثور 8 / 501).

நம் முன்னோர்கள் வருட நாட்களில் மூன்று பத்துக்களை கண்ணியப் படுத்துபவர்களாக அதற்கு முக்கியம் தருபவர்களாக இருந்திருக்கிறார்கள். முஹர்ரமின் முதல் பத்து, துல்ஹஜ்ஜின் முதல் பத்து, ரமலானின் இறுதிப் பத்து.

அந்த இரவை அடைந்து கொள்ளும் பாக்கியம் பெறுவதற்காக நபி ஸல் அவர்கள் ஏற்படுத்திய மிகச்சிறந்த அமல் தான் இஃதிகாஃப் இருப்பதாகும்.

அதன் நிய்யத்தோடு ஜமாஅத் நடைபெறும் ஒரு பள்ளியில் தங்கி யிருப்பதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

அதாவது உலகக் காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழிபாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவது. ஒருவர் இவ்வாறு இருப்பதை அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன.நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பேயாகும். அவ்வாறு ஒருவர் இந்த நாட்களில் தன் உலக காரியங்களை ஒதுக்கி விட்டு இதில் ஈடுபடும் போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நபி ஸல் அவர்கள் விடாமல் செய்த மிக உயர்ந்த அமல்களில் ஒன்று இந்த இஃதிகாஃப்.

وقال الزهري رحمه الله : ( عجباً للمسلمين ! تركوا الاعتكاف ، مع أن النبي صلى الله عليه وسلم ، ما تركه منذ قدم المدينة حتى قبضه الله عز وجل )
இமாம் ஜுஹ்ரீ ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் :நபி ஸல் அவர்கள் மதினா வந்ததிலிருந்து விடாமல் செய்த ஒரு அமல் இஃதிகாஃப்.அப்படியிருக்க அதில் கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிற முஸ்லிம்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்.

حافظ صلى الله عليه وسلم ، على الاعتكاف في العشر الأواخر ، كما في الصحيحين من حديث عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله عز وجل ثم اعتكف أزواجه من بعده . رواه البخاري ( 1921 ) ومسلم ( 1171)

நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)

وفي العام الذي قبض فيه صلى الله عليه وسلم اعتكف عشرين يوماً البخاري ( 1939

நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

இஃதிகாஃப் குறித்து எண்ணற்ற சிறப்புகள் ஹதீஸ்கள் வந்திருக்கிறது.

روى الطبراني والحاكم والبيهقي وضعفه عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم : ( من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق أبعد مما بين الخافقين ) (5345). والخافقان المشرق والمغرب .

அல்லாஹ்வின் திருப்தியை நாடி ஒருவர் ஒரு நாள் இஃதிகாஃப் இருந்தால் அவருக்கும் நரகிற்குமிடையில் அல்லாஹ் மூன்று ஹன்தக் தூரத்தை ஆக்கி விடுகிறான்.ஒரு ஹன்தக் என்பது கிழக்கு மேற்கிடையே உள்ள தூரமாகும்.{தப்ரானி}

روى الديلمي عن عائشة أن النبي صل الله عليه وسلم قال : ( من اعتكف إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ) 5442.
ஒருவர் இறை நம்பிக்கையோடும் நன்மையை நாடியும் இஃதிகாஃப் இருந்தால் அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. {தைலமி}

روى البيهقي وضعفه عن الحسين بن علي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين

ரமலானில் பத்து நாட்கள் ஒருவர் இஃதிகாஃப் இருப்பவர் இரு ஹஜ் மற்றும் இரு உம்ரா செய்தவரைப்போல.{பைஹகி}

இஃதிகாஃபின் நோக்கங்கள்

1, லைலத்துல் கத்ர் இரவைப் பெற்றுக் கொள்ளுதல்

2, மக்களை விட்டும் ஒதுங்கி அல்லாஹ்வுடன் தனித்திருத்தல்

3, மனதை ஒழுங்கு படுத்துதல்

4, பாவங்களை விட்டும் நீங்கி முழுக்க முழுக்க இபாதத்களில் தன்னை இணைத்துக் கொள்ளுதல்

5, பாவங்கள் செய்யாமல் இருக்க பயிற்சி

6, நம் நோக்கங்கள் முழுவதையும் அல்லாஹ்விடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல்

இஃதிகாஃபின் வகைகள்

1, அவ்வாறு இருப்பதாக நேர்ச்சை செய்தவனுக்கு வாஜிபாகும்.

- واجب : ولا يكون إلا بنذر ، فمن نذر أن يعتكف وجب عليه الاعتكاف ، فقد قال صلى الله عليه وسلم : ( من نذر أن يطيع الله فليطعه ، ومن نذر أن يعصيه فلا يعصه ) وفي الحديث أن ابن عمر رضي الله عنهما : أن عمر سأل النبي صلى الله عليه وسلم قال : كنت نذرت في الجاهلية أن اعتكف ليلة في المسجد الحرام ، قال : ( أوف بنذرك ) البخاري 4/809 .

மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார். அதற்கு நபி ஸல் அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள். {புகாரி ; 2032}

2, ரமலான் மாதத்தின் கடைசி பத்தில் இருப்பது சுன்னத் முஅக்கதா கிஃபாயாவாகும்.ஊரில் ஒருவராவது அந்த சுன்னத்தை நிறைவேற்ற வேண்டும்.

3, மற்ற நாட்களில் பள்ளியில் நுழையும் போது அந்த நிய்யத்துடன் நுழைவது முஸ்தஹப்பாகும்.

இஃதிகாஃபின் ஷர்த்துகள்

1, இஸ்லாம் 2,வாதவிலக்கு மற்றும் பெருந்தொடக்கை விட்டும் சுத்தமாக இருத்தல்.தொடக்கு ஏற்பட்டு உடன் வெளியேறி சுத்தமாக வேண்டும். 3, ஐவேளை ஜமாஅத் நடைபெறும் பள்ளியில் இருப்பது. பெண்கள் வீட்டில் தங்களுக்கென்று ஒதுக்கியிருக்கிற தொழு மிடத்தில் அமர வேண்டும்.

ஜும்ஆ ஈத் போன்ற ஷரீஅத்தின் தேவைகள்,கழிவறை, நஜீஸை நீக்குதல்,குளித்தல் போன்ற இயற்கை தேவைகளைத்தவிர மற்ற விஷயங்களுக்காக பள்ளியை விட்டு வெளியேறுவது கூடாது.

இஃதிகாஃபில் மக்ரூஹானவை

1, வியாபாரப் பொருளை எடுத்து வருவது

2, வியாபார ஒப்பந்தம் செய்வது

3, வணக்கம் என்று எண்ணி அறவே பேசாமல் மௌன விரதம் இருப்பது.

இஃதிகாஃபின் ஒழுங்குகள்

1,தொழுகை, திலாவத், திக்ர் போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது.

2, அவசியம் இருந்தாலே தவிர பேசாமல் இருப்பது

3, அவசியம் இருந்தாலே தவிர மற்ற எந்த காரியங்களையும் செய்யாமல் இருப்பது.

இஃதிகாஃபை முறிக்கும் காரியங்கள்

1, அவசியமின்றி பள்ளியை விட்டும் வெளியேறுதல்

2, மனைவியுடன் சேருவது. இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)

3, மாத விலக்கு ஏற்படுவது.ஆண்களுக்கு குளிப்பு கடமையானால் உடனே குளித்து விட வேண்டும்.

இவற்றையெல்லாம் பேணி இஃதிகாப் இருக்க வேண்டும். இவ்வாறு நல்லமல்கள் புரிந்து இறைவனின் திருப்பொருத்தத்தை அடையும் நல்லடியார்களில் நம்மை ஆக்க வல்ல இறையோனிடம் இறைஞ்சுவோமாக!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பதிவு நாள்: 16-06-2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் -20🌙

நோன்பு - 20

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

எதிரிகளை பதற வைத்த பத்ரு களம் -4

========================

பத்ரு போருக்கு முந்திய நாள் இரவு, வல்ல அல்லாஹ்
மழையை இறக்கினான், அந்த
மழை முஸ்லிம்களுக்கு
மென்மையான தூறலாக இருந்தது, குரைஷிகளுக்கு
அடைமழையாக இருந்தது.
முஸ்லிம்கள் தங்கி இருந்த இடம் மணற்பாங்கான குன்று, அந்த இடம் மழையால் இறுகி
முஸ்லிம்களுக்கு வசதியான
மணற்குன்றாக மாறியது, மழையின் மூலம் அல்லாஹ்
முஸ்லிம்களை
சுத்தப்படுத்தினான்.
ஷத்தானை விட்டும்
அப்புறப்படுத்தினான்.
குரைஷிகள் வருவதற்குள்
அங்குள்ள நீர் நிலைகளை
அடைந்து விடவேண்டும்
என்று இஷா நேரத்தில் ஒரு நீர் நிலையின் அருகே
வந்திறங்கினார்கள். அப்போது,
போர் தந்திரங்களை நன்கு அறிந்த அல்ஹுபாப் இப்னு
முந்திர் رضي الله عنه  அவர்கள், நபி صلى الله عليه وسلم  அவர்களிடம்
”இந்த இடத்தை அல்லாஹ்
தேர்ந்தெடுத்து தந்தானா? அல்லது இங்கே தங்க வேண்டும் என்பது தங்கள் யோசனையா?” என்று கேட்டார், அதற்கு நபி صلى الله عليه وسلم  தனது யோசனையே
என்றார்கள். அதற்கு அவர், “இந்த இடம் சரியில்லை, நாம்
பத்ருக்கு மிக அருகில் உள்ள நீர்தடாகத்தின் அருகே தங்குவோம், மற்ற நீர்
நிலைகளை
அழித்துவிடுவோம், அவர்கள் நீர் அருந்த நீர் நிலைகள் இருக்காது” என்றார்.
அவர்களின் யோசனையை நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஏற்றுக்
கொண்டார்கள். அதன்படி, மற்ற
நீர்நிலைகள் அழிக்கப்பட்டு,
பத்ருக்கு மிக சமீபமாக உள்ள இடத்தில் உள்ள நீர் நிலை ஒன்றின் அருகே தங்கினார்கள்,
மேலும், ஒரு
நீர்தடாகத்தையும் அவர்கள்
ஏற்படுத்தினார்கள்.

ஸஅது இப்னு முஆது رضي الله عنه
அவர்களின் யோசனையின்
படி, நபி صلى الله عليه وسلم  அவர்கள், போர்
நடவடிக்கைகள்
அனைத்தையும் நேரடியாக கவனிக்க ஒரு உயரமான பரண்
வீடு ஒன்றை கட்டினார்கள்.
அதனை சுற்றிலும்
பாதுகாப்பு அரணாக விளங்க
ஸஅது இப்னு முஆது رضي الله عنه அவர்கள்
 தலைமையில் அன்சாரி
வாலிபர்கள் குழு ஒன்று
அமைக்கப்பட்டது.
சந்திரனின் பிரகாச ஒளியில் நாளை போர் நடைபெற உள்ள
மைதானத்தில் நடந்து
சென்று, நபி صلى الله عليه وسلم  அவர்கள்
பார்வையிட்டார்கள்.
அப்போது, “இன்ஷா அல்லாஹ்!
நாளை இன்னார் கொல்லபடும்
இடம் இது” என்று சிலரின்
பெயர்களையும், அந்த
இடங்களையும் தனது
விரலால் சுட்டிகாட்டி, முன் அறிவிப்பு செய்தார்கள்.
முஸ்லிம்கள், மிகுந்த
நம்பிக்கையுடனும், மன
அமைதியுடனும்,
காலையில் இறைவனின்
நற்செய்தியைகளை
கண்கூடாக காணலாம், என்ற ஆதரவுடனும், சற்று உறங்க
ஆரம்பித்தார்கள்
“(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடந்தவர்களாக,
சிறிய தொரு நித்திரை
உங்களை சூழ்ந்து
கொள்ளும்படி (இறைவன்)
செய்ததை நினைத்து
பாருங்கள்! அன்றி, (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள்
சுத்தப்படுத்தி
கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய
அசுத்தத்தை போக்கி
விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி,
உங்கள் பாதங்களை உறுதிப்
படுத்துவதற்காகவும்
(அவனே) வானத்திலிருந்து
மழையை பொழியச்
செய்தான்” – (அல்குர்ஆன் 8:11)

மக்கா படையினர் பத்ருக்கு சமீபமாக வந்திறங்கினார்கள்.
பத்ரு பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியில் கூடாரமடித்து
தங்கினர். முஸ்லிம்
படைகளை வேவு
பார்ப்பதற்காக, உமைர் இப்னு வஹ்பு ஜுமையை
அனுப்பினார்கள், அவரும்
நாலாபக்கமும் தனது
குதிரையில் சென்று,
முஸ்லிம் படையின் அளவை
குரைஷிகளிடம் கூறினார்.
“அவர்கள் சுமார் முன்னூறு பேர் இருக்கலாம், அவர்களிடம்
வாளைத்தவிர வேறு எந்த தற்காப்பு ஆயுதங்களும்
இல்லை. ஆனால், அவர்கள் நம்மைவிட மூன்று மடங்கு
குறைவாக இருந்தாலும்,
அவர்கள் கொல்லப்படும்போது,
நம்மவர்களை கொல்லாமல்
சாகமாட்டார்கள். அத்தனை
உறுதி அவர்களிடம்
தெரிகிறது” என்று கூறி, போர் குறித்து
மறுபரிசீலனை
செய்யுமாறு அபுஜஹலிடம்
கூறினார். அதே போல்,
ஹக்கீம் இப்னு ஹிஸாம்,
உத்பா போன்றோர், போர் களத்தின் எதிரே உள்ளவர்காள்
நம் உறவினர்கள், யார் யாரை கொன்றாலும்
அழியப்போவது நம் இனம்” என்று எவ்வளவோ
எடுத்துகூறியும்,
அபுஜஹல் சம்மதிக்கவில்லை.
முஸ்லிம்களை கூண்டோடு
அழிக்க வேண்டும் என்று கர்ஜித்தான். குரைஷிகளும்
ஆவேசமாக கத்தினார்கள்.

அன்றைய இரவு, நபி صلى الله عليه وسلم
அவர்கள் ஒரு மரத்தடியில்
தொழுதார்கள். அழுது
அழுது எல்லாம் வல்ல
அல்லாஹ்வை
பிரார்த்தித்தார்கள்.
ஹிஜ்ரி2, புனித ரமலான்
மாதம், பிறை 17,
வெள்ளிக்கிழமை
அதிகாலை – (கி.பி. 624, மார்ச் 17) பதுரு போர்களம்.
உலகவரலாற்றின், ஓர்
சிறப்புமிக்க நாள்!
இஸ்லாமிய தற்காப்பிற்கு,
தார்மீக உரிமை
கொண்டாடும் நாள்! வல்ல
நாயனே நேரிடையாக உதவி புரிய, வானவர்களை
வாள்களுடன் இறக்கிய நாள்,
இஸ்லாமிய வரலாற்றின்
முதல் போர்….

பத்ரு பள்ளத்தாக்கில்
இரண்டு
அணிகளும் தயார்
நிலையில்….

ஹிஜ்ரி2, புனித ரமலான்
மாதம், பிறை 17,
வெள்ளிக்கிழமை (கி.பி. 624,
மார்ச் 17) பதுரு போர்களம்.
அதிகாலை!
இஸ்லாமிய படையினர்
ஏற்படுத்தி இருந்த நீர்
நிலையில், மக்கா படையில்
உள்ள சிலர் நீர் அருந்த வந்தனர்.
நபித்தோழர்கள் அவர்களை
தடுக்க முற்பட்டனர். அப்போது
நபி صلى الله عليه وسلم  அவர்கள், “அவர்களை
விட்டுவிடுங்கள்” என்று
கூறினார்கள். (அந்த
நீர்தடாகத்தில் யாரெல்லாம் நீர்
அருந்தினார்களோ
அனைவரும் போரில்
கொல்லப்பட்டனர், ஒருவரை தவிர!
 அவர் ஹக்கீம் இப்னு
ஸாம். இவர் பின்னாலில்
இஸ்லாத்தை ஏற்று சிறந்த முஸ்லிமாக
 திகழ்ந்தார். அவர்
சத்தியம் செய்ய நினைத்தால்
‘பத்ருப் போரில் என்னை
காப்பாற்றியவன் மீது
சத்தியமாக!” என்று
கூறுவார்)
இப்போது, பத்ரு
பள்ளத்தாக்கில் இரண்டு
படைகளும் நேர் எதிரே
திரண்டு நின்றார்கள். நபி صلى الله عليه وسلم
 அவர்கள், “அல்லாஹ்வே!
இதோ குரைஷிகள்
கர்வத்துடனும்,
மமதையுடனும் உன்னிடம்
போர் செய்பவர்களாக,
உன்னுடைய தூதரைப்
பொய்ப்பிப்பவர்களாக
வந்திருக்கின்றனர்.
அல்லாஹ்வே! நீ எனக்கு
வாக்களித்த உதவியை
தருவாயாக! இக்
காலைப்பொழுதில்
அவர்களை அழிப்பாயாக!”
என்று பிரார்த்தனை
செய்தார்கள்.
மக்காபடையினரின் தரப்பில், சிகப்பு நிற
 ஒட்டகையின் மீது
 உத்பா உலாவிக்
கொண்டு இருந்தார். அவரைப்
பார்த்த நபி صلى الله عليه وسلم  அவர்கள், “அந்த
கூட்டத்திலேயே நலத்தை
விரும்பும் ஒருவர்
இவராகத்தான் இருக்க
முடியும். இவருக்கு இந்த கூட்டம்
 கட்டுப்பட்டால்,
அவர்கள் சரியான வழியை
அடையக் கூடும்” என்று
கூறினார்கள்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
முஸ்லிம்களின் அணிகளை
சரிசெய்து கொண்டு
இருந்தார்கள். கையில் ஒரு அம்பு ஒன்று
வைத்துக்கொண்டு
கட்டளைகளை கொடுத்துக் கொண்டு
 இருந்தார்கள்.
முஸ்லிம் படையினர்
வரிசையினை சரிசெய்து கொண்டு
இருக்கும்  போது,
அவர்கள் கையில் இருந்த
அம்பினால் ஸவாது இப்னு
கஸிய்யா رضي الله عنه  அவர்கள்
வயிற்றில் லேசாக தட்டி, வரிசையில்
 ஒழுங்காக
நிற்கும்படி சொன்னார்கள்,
ஆனால் அவரோ, நீங்கள் என்
வயிற்றில் அம்பால்
குத்திவிட்டீர்கள், எனக்கு வலி
ஏற்பட்டுவிட்டது” என்றார்.
நபி صلى الله عليه وسلم  தனது வயிற்றை
திறந்து காட்டி, “இதோ, உன் பழியை
 தீர்த்துக் கொள்”
என்றார்கள். ஆனால், அவரோ,
நபி صلى الله عليه وسلم  அவர்களை
கட்டியணைத்து, அவர்களின்
வயிற்றில் முத்தமிட்டார்கள்.
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு. “ இதோ கண்
எதிரே எதிரிகள்! எனக்கு என்ன
வேண்டுமென்றாலும்
நிகழலாம், அதற்குள் உங்கள் மேனியை
 தொட்டுவிட ஆசைப்
 பட்டேன்” என்று
ஆனந்தத்துடன் கூறினார்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள், தம்
படையினருக்கு
கட்டளைகளை
பிறப்பித்தார்கள். “எனது இறுதி
 கட்டளை வரும் வரை
போரை தொடங்காதீர்கள்!
அவர்கள் உங்களை நோக்கி நெருங்கும்
 போது,
அவர்களை நோக்கி அம்பை
எறியுங்கள்! அதே சமயம்
அம்புகளில் கொஞ்சம் மீதம் வைத்துக்
 கொள்ளுங்கள்.,
அவர்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும் வரை  நீங்கள்
வாட்களை உருவாதீர்கள்”
என்று கூறினார்கள்
(நூல்:அபுதாவூத்)

அதன் பிறகு நபி صلى الله عليه وسلم
அவர்களும், அபுபக்ர் رضي الله عنه
அவர்களும் பரணி வீட்டிற்கு
சென்றார்கள். ஸஅது இப்னு முஆது رضي الله عنه  அவர்கள், தனது
பாதுகாப்பு படையினருடன்
அவ்வீட்டை சுற்றிதொகுப்பு  அரணாக
நின்றார்கள்.
இப்போது அபுஜஹில் தனது
இறைவனிடம், “தங்களுக்கே
வெற்றி வேண்டும்,
முஹம்மதும் அவரது
கூட்டமும் தோற்றகடிக்கப்
படவேண்டும்” என்று நீண்ட
ஒரு பிரார்த்தனை செய்தான்.
இது குறித்தே அல்லாஹ்
இந்த வசனத்தை இறக்கினான். .
“(நிராகரிப்பவர்களே!) நீங்கள்
வெற்றி(யின் மூலம்
தீர்ப்பைத்) தேடிக்
கொண்டிருந்தால், நிச்சயமாக
அவ்வெற்றி
(முஃமின்களுக்கு) வந்து விட்டது.
 இனியேனும் நீங்கள்
(தவறை விட்டு) விலகிக்
கொண்டால் அது உங்களுக்கு
நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும்
 (போருக்கு) வந்தால்
நாங்களும் வருவோம்;
உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக
 இருந்தாலும்,
அது உங்களுக்கு எத்தகைய
பலனையும் அளிக்காது.
மெய்யாகவே அல்லாஹ்
நம்மிக்கையாளர்களுடன் தான்
இருக்கின்றான் (குர்ஆன் 8:19)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 16-06-2017.

Wednesday, 14 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் - 19🌙

நோன்பு - 19


السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*எதிரிகளை பதற வைத்த பத்ரு களம் - 3

========================

 இஸ்லாமிய
படையினர்கள்
 “தஃபிரான்”
பள்ளத்தாக்கில் இருக்கும் போது, மதினாவின் ஒற்றர்கள்,
அபுசுப்யானின்
வியாபாரக்கூட்டம், மற்றும் மக்கா படையினரின்
நிலமைகளை பற்றிய
செய்திகளை கொண்டு
வந்தனர். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியை நன்கு
ஆராய்ந்த நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
தனது தளபதிகளுடன்
ஆலோசனை நடத்தினார்கள்.
முழுமையான வீரத்துடனும்,
துணிவுடனும்
நிராகரிப்பாளர்களை
எதிர்த்தே ஆக வேண்டும் என்ற
முடிவுக்கு வருகிறார்கள்.
அதற்கு காரணம், 1- அவர்களை
எதிர்க்காமல் விட்டால், அந்த பகுதியில்
தங்கள்  ராணுவம்
மற்றும் அரசியல்
செல்வாக்கை நிலை
நிறுத்துவார்கள்,
2 – அவர்களை எதிர்க்காமல்
திரும்பினால், அவர்கள்
மதினாவரை வரமாட்டார்கள் என்ற
 எந்த உத்ரவாதமும்
இல்லை. 3- இதன் மூலம், மற்ற அரபு
 தேசத்தவர்களுக்கும்
துணிவு பிறக்கும்,
அவர்களும் மதினாவை தாக்க
வருவார்கள். 4 -இதனால்
முஸ்லிம்களுக்கு அந்த பகுதியில்
கேவலமும்
அவமானமும் ஏற்படலாம்.
இஸ்லாத்தின் மீது
வெறுப்பும் பகைமையும்
ஏற்படலாம். இதனால்
இஸ்லாமிய அழைப்பு பணி தனது
 வலிமையை இழந்து
விடலாம். மேற்கண்ட
காரணங்களை கூறி
அனைவரிடமும் கருத்து கேட்டு
 ஆலோசனை
நடத்தினார்கள்.
அப்போது சிலரது உள்ளங்கள்
அச்சத்தால் நடுங்கின.
இவர்களை பற்றி அல்லாஹ்
தனது திருமறையில்
இவ்வாறு கூறுகின்றான்:
“(நபியே) உங்களது இறைவன் உங்கள்
 இல்லத்திலிருந்து
சத்தியத்தை கொண்டு
வெளியேற்றிய
 சமயத்தில்
நம்பிக்கையாளர்களில் ஒரு கூட்டத்தினர்
(உங்களுடன் வர)
விரும்பாதவாறே, (போர் செய்வது
 அவசியம் என)
அவர்களுக்கு தெளிவாக தெரிந்த
 பின்னரும், இந்த
உண்மையான விஷயத்தில்
அவர்கள் உங்களுடன்
தர்க்கின்றனர். தங்கள் கண்ணால் காணும்
மரணத்தின்  பக்கமே
அவர்கள் ஓட்டிச்செல்லப்
படுகின்றனர் போலும்!
(திருக் குர்ஆன் 8:5-6)

ஆனால், படையின்
தளபதிகளோ
மிகத்துணிவுடன்
இருந்தார்கள். அபுபக்கர் رضي الله عنه
அவர்கள் எழுந்து
அவர்களிடையே அழகாக
பேசினார்கள். பின்பு, உமர் رضي الله عنه
 எழுந்து வீர உரை
நிகழ்த்தினார்கள். அதே போல், மிக்தாத் رضي الله عنه  அவர்களும் வீர
உரை நிகழ்த்தினார்கள்.
இவரின் உரையை கேட்டு நபி صلى الله عليه وسلم  அவர்கள் பாராட்டி
புகழ்ந்து அவருக்காக
பிரார்த்தனை செய்தார்கள்.
வீர உரை நிகழ்த்திய மூவரும்
முஹாஜிர்கள், இவர்கள்
குறைவாகவே இருந்தார்கள்.
அதனால் அன்ஸாரிகளின்
கருத்துகளை
கேட்கவிரும்பினார்கள்.
காரணம், படையில்
அன்ஸாரிகளே அதிகமாக
இருந்தார்கள். மேலும்
போரின் முடிவு
அன்ஸாரிகளையே மிகவும் பாதிக்க
 கூடியதாக
இருக்கும். நபி صلى الله عليه وسلم  அவர்கள்
அன்ஸாரி தோழர்களின்
கருத்தை அறிந்து கொள்ள
முயன்றதற்கு காரணம்,
அவர்களுடன் அகபாவில் செய்து  கொண்ட
உடன்படிக்கையில்,
அன்ஸாரிகள், மதினாவிற்கு
வெளியே சென்று போர் புரிய வேண்டும்
 என்ற நிபந்தனை
 இல்லை. எனவே,
அன்ஸாரிகளை மனதில் கொண்டு
 “மக்களே!
ஆலோசனை கூறுங்கள்”
என்று, நபி صلى الله عليه وسلم  அவர்கள்
பொதுவாக கூறினார்கள்.
அண்ணலாரின் நோக்கத்தை
புரிந்து கொண்ட
அன்சாரிகளின் தளபதியாக
இருந்த ஸஅது இப்னு முஆது رضي الله عنه
 அவர்கள், நபி صلى الله عليه وسلم
அவர்களிடம், “அல்லாஹ்வின்
மீது சத்தியமாக!
அல்லாஹ்வின் தூதரே! நீங்கள்
எங்களிடம் கேட்பது போல் தெரிகிறது” என்றார். அதற்கு
நபி صلى الله عليه وسلم  அவர்கள் “ஆம்”
என்றார்கள்.
ஸஅது இப்னு முஆது رضي الله عنه அவர்கள்
 எழுந்து பின்
வருமாறு கூறினார்கள்....
“நாங்கள் உங்களை
விசுவாசித்தோம், உங்களை
உண்மையானவர்கள் என்று
நம்பினோம், நீங்கள் கொண்டு வந்ததுதான்
 சத்தியமென சாட்சி
 கூறினோம், இதை ஏற்று உங்களின்
  கட்டளைகளை
செவிமடுத்தோம், அதற்கு
கட்டுபடுவோம் என்று
உடன்படிக்கையும்,
ஒப்பந்தமும் செய்து
கொடுத்தோம். எனவே, நீங்கள் விரும்பிய
 வழியில்
செல்லுங்கள். உங்களை அனுப்ப இறைவன் மீது ஆணையாக! நீங்கள் எங்களை
அழைத்துக்கொண்டு
கடலுக்குள் மூழ்கினாலும்
நாங்களும் மூழ்குவோம்.
எங்களிடமிருந்து ஒருவரும் பின்
 தங்கிவிடமாட்டார்.
எதிரிகளை சந்திப்பதில்
உண்மையாளர்களாக
இருப்போம் இதனை
அன்ஸாரிகளின் சார்பாக
கூறுகின்றேன்” என்று
அவர்கள் கூறினார்கள். அவரின் பேச்சையும்
உற்சாகத்தையும் கண்ட நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஆனந்தம்
அடைந்தார்கள்.
பின்பு, “நற்செய்தி அடைந்து
கொள்ளுங்கள்! நிச்சயமாக
அல்லாஹ் இரண்டு
கூட்டங்களில் ஒன்றை எனக்கு
வாக்களித்துள்ளான்.
அல்லாஹ்வின் மீது
ஆணையாக! அக்கூட்டத்தினர்
வெட்டுண்டு விழும்
இடங்களை நான் இபோது
பார்ப்பதைப் போன்று
இருக்கின்றது” என்று
கூறினார்கள்
இஸ்லாமிய படை தனது
பயணத்தை தொடர்ந்தது.
ஃதபிரான் என்ற
இடத்திலிருந்து புறப்பட்டு,
அஸாஃபிர் வழியாகச்
சென்று, “தப்பா” என்ற இடத்தை அடைந்து, பின்பு அங்கிருந்து
 மலை போன்ற மணற்பாங்கான
பெரிய குன்றான
 ஹன்னானை
வலப்பக்கம் விட்டுவிட்டு
பத்ருக்கு சமீபமாக
வந்திறங்கினார்கள்.

அங்கிருந்து தனது தோழர்
அபுபக்ர் رضي الله عنه  அவர்களுடன் நபி صلى الله عليه وسلم  அவர்கள் மக்கா படையினர்
 எங்கு
கூடாரமிட்டுள்ளனர் என்பதை அறிந்து
 கொள்ள
புறப்பட்டார்கள். எதிரே வந்த முதியவர்
 ஒருவர் மூலம்,
மக்கா படைகள்
கூடாரமிட்டுள்ள பகுதியை அறிந்து
 கொண்டு
திரும்புகிறார்கள்.
அன்று மாலை, எதிரிகளை பற்றி
 மேலும் தெரிந்து
கொள்ள முஹாஜிர்களில்
உள்ள மூன்று தளபதிகளான,
அலி, ஸஅது இப்னு
அபீவக்காஸ், ஸுபைர்
இப்னு அவ்வாம் رضي الله عنهم ஆகியோரை
 அனுப்பி
வைக்கிறார்கள். அவர்கள் மூவரும்
 பத்ரின் தண்ணீர் உள்ள
உள்ள இடத்திற்கு சென்ற போது  அங்கு இருவர் மக்கா
படைகளுக்காக தண்ணீர் எடுத்து
 கொண்டு
இருந்தனர். அவர்கள்
இருவரையும் கைது
செய்து நபி صلى الله عليه وسلم  அவர்களிடம்
கொண்டு வந்தார்கள்.
அவர்களிடம் விசாரித்த போது , மக்கா
படைகளுக்காகவே தண்ணீர் எடுக்க
 வந்ததாக
கூறினார்கள். மேலும்
அவர்களை விசாரித்த போது," நீங்கள்
 பார்க்கும் அந்த பெரிய
மேட்டிற்கு பின்னால்
குரைஷிகள் உள்ளனர்” என்றனர்.
“அவர்கள் எத்தனை பேர்?” என்று
கேட்டதற்கு, “மிக அதிகமாக
உள்ளனர்” என்றார்கள். “அவர்கள்
ஒவ்வொரு நாளும் எத்தனை
ஒட்டகங்கள் அறுக்கிறார்கள்”
என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கேட்க,
“ ஒரு நாள் ஒன்பது ஒட்டகங்கள்,
மறுநாள் பத்து ஒட்டகங்கள்
அறுக்கிறார்கள்” என்று
கூறினார்கள். “அவர்கள் 900 முதல் 1000 நபர்கள்
 இருக்கலாம்”
என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கணக்கிட்டார்கள். மேலும், குரைஷி
 பிரமுகர்களில்
யாரெல்லாம் வந்து
இருக்கிறார்கள் என்ற
தகவலையும் கேட்டு
பெற்றார்கள்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் மக்களை
நோக்கி, “இதோ! மக்கா தனது
ஈரக்குலைகளை உங்களுக்கு
முன் கொண்டு
வந்திருக்கிறது” என்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி

கடலங்குடி.

பதிவு நாள்: 15-06-2017

இஸ்லாமிய முதல்போர் "பத்ரு" யுத்தம் தொடர் - 5


இவ்வாறு பல விளைவுகள் ஏற்பட்டதோடு, இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்ற மனப்பதிவு அனைவர் உள்ளத்திலும் ஏற்பட்டது.

உலகத்தின் மதிப்பீடுகளுக்கு அப்பால் பத்ர் களம் மகத்தான வெற்றியை வழங்கியது. புடைப்பலத்தை மட்டும் வைத்து நோக்குவது ஈமானற்ற சடவாத உள்ளங்களின் நிலைப்பாடாகும். ஈமானிய உள்ளங்கள் முழுமையாக அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்த்து தம்மைத் தயார்படுத்தும். இஸ்லாமிய உலகு புனித ரமழானில் பல படையெடுப்புக்களை சந்தித்துள்ளது. அந்த வகையில் இந்த ரமழான் எமது ஈமானை வலுப்படுத்தி,முழுமையான முஸ்லிமாக வாழக் கூடிய மனப்பக்குவத்தை வழங்கட்டுமாக.

நாங்கள் உங்களை விசுவாசித்தோம் உங்களை உண்மையாளர் என நம்பினோம் நீங்கள் கொண்டுவந்த இஸ்லாம் தான் சத்தியமென்று முழங்கினோம். எனவே, உங்களது கட்டளைகளை செவிமடுத்தோம.;எந்நேரத்திலும் உங்களுக்கு கட்டுப்படுவோம் என உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செய்து கொண்டோம்.

எனவே, நீங்கள் விரும்பிய வழியில் செல்லுங்கள் உங்களை சத்தியத்தை கொண்டு அனுப்பிய இறைவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு கடலுக்குள் மூழ்கினாலும் நாங்களும் மூழ்குவோம் எங்களில் எவரும் பின் நிற்க மாட்டார்.

எதிரிகளோடு போராடுவதை நாங்கள் வெறுக்கவில்லை நிச்சயமாக நாங்கள் போர் புரிவதில் உறுதியாக இருப்போம் உங்களுக்கு கண் குளிர்ச்சி தருபவற்றை அல்லாஹ் எங்களால் வழங்கலாம் அல்லாஹ்வின் அருளைப் பெற எங்களை அழைத்துச் செல்லுங்கள் யா ரஸூலல்லாஹ்"

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போரை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் அசத்தியத்தை தோற்கடிக்க வேண்டும் வேறு வழி முறையில் அதனை எதிர்கொள்ள முடியாது என்று உணர்ந்த பின் முஹாஜிர், அன்ஸார் ஸஹாபாத் தோழர்களில் இராணுவ உயர் மட்ட குழுவில் இருந்த சிலரை அழைத்து அது தொடர்பாக ஆலோசனை கேட்ட போது, அன்ஸாரி ஸஹாபி ஸஅத் இப்னு முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் உதிர்த்த வார்த்தைகளே இவை.

மறு பக்கம் முஹாஜிர்களில் அபூபக்கர், உமர் பின் மிக்தாத் (ரழியல்லாஹு அன்ஹும்) அவர்கள் தமது கருத்துக்களை உறுதியாகத் தெரிவித்திருந்தார்கள். "இஸ்ரவேலர்கள் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் கூறியதைப் போல் நாம் உங்களிடம் கூற மாட்டோம். சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீதாணையாக! நீங்கள் எங்களை அழைத்துக் கொண்டு 'ஷபர்குல் ஃகிமாத்' (மக்காவிற்கு அருகில் உள்ள இடம்) என்ற இடம் வரை சென்றாலும் நாமும் உங்களுடன் சேர்ந்து வருவோம்" என மிக்தாத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறிய கருத்தைச் செவியுற்ற நபிகளார் அவருக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

அசத்தியம் முறியடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அனைத்து ஸஹாபிகளும் உணர்ந்து கொண்டார்கள் எவரும் பின் வாங்கவில்லை. எனவே தான் மக்கா வியாபார குழுவின் பொருளாதாரத்தை மாத்திரம் இலக்காக கொண்டு வெளியேறிய313 ஸஹாபிகளுக்கு பெரும் குறைஷி படையை எதிர்கொள்வது சிரமமாக இருக்கவில்லை.

முஸ்லிம் தரப்பிடம் இரண்டு குதிரைகள் 70 ஒட்டகங்கள் மாத்திரமே இருந்தன. ஓர் ஒட்டகத்தில் ஒருவர்,இருவர் அல்லது மூவராக மாறி மாறி பிரயாணம் செய்து "பத்ர்" பள்ளதாக்கை சென்றடைந்தனர். மறுபக்கம் குறைஷியரின் படை பதறியடித்துக் கொண்டு தம்மை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தது. 1,300 வீரர்கள், 100போர் குதிரைகள், எண்ணிலடங்காத ஒட்டகங்கள் மற்றும் 600 போர் கவச அங்கிகள் என போருக்கான அத்தனை ஆயத்தங்களுடனும் அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாமின் தலைமையில் குறைஷியர் படை தயாராகியது.

பத்ருப் போரில் மக்கா குறைஷிகள் வெற்றியீட்டினால் இஸ்லாத்தை புதைத்து விடலாம் என்ற எதிர்பார்ப்புடன் ஷைத்தான்

மனித உருதரித்து குறைஷிகளை தூண்டி விட்டான். எனினும், முழுப் பிரபஞ்சத்தையும் படைத்து ஆட்சி புரியும் அல்லாஹ் மலக்குமார்களை அனுப்பி ஷைத்தானையும் அவனின் வாரிசுகiயும் அடக்கினான்.

இதனால், அசத்தியத்தின் முதுகெலும்பு உடைத்தெறியப்பட்டது. குறைஷியர் போர் வெறியுடன் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வந்து கொண்டிருக்கையில் வியாபாரக் குழுவின் தலைவரான அபூ ஸுப்யான் (அப்போது அவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை),மதீனா முஸ்லிம்களிடம் அகப்படாமல் தான் வேறாரு பாதையால் வியாபார குழுவை செலுத்தி தப்பித்து விட்டதாகவும் வியாபாரக் கூட்டம் மற்றும் அதன் செல்வங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டதாகவும் குறைஷியரை திரும்பி சென்று விடுமாறும் செய்தி அனுப்பினார்.

இச்செய்தியை கேள்விப்பட்ட குறைஷியருள் சிலர் திரும்பி விடலாம் என கருத்துத் தெரிவித்தனர். எனினும், தலைவன் அபூ ஜஹ்ல், "இறைவன் மீதாணையாக! நாம் திரும்ப மாட்டோம் பத்ருக்கு சென்று மூன்று நாட்கள் தங்கி ஒட்டகங்களை அறுத்துச் சாப்பிடுவோம் மது அருந்துவோம் பெண்கள் பாடலிசைப்பர் எமது சக்தியை,வல்லமையை மதீனா அரேபியர் அறிந்து எமக்கு அஞ்சி வாழ வேண்டும்" எனக் கர்ஜித்தான்.

எனினும், இச்சந்தர்ப்பத்தில் ஜுஹ்ரா கிளையினர் சார்பாக வந்திருந்த 300பேர் திரும்பிச் செல்லவே 1000பேருடன் குறைஷிப் படை பத்ர் பள்த்தாக்கு நோக்கிச் சென்று‘ஷஅல்உத்வதுல் குஸ்வா’ எனும் மேட்டு பகுதிக்கு பின்னால் தங்கியது.

அன்றிரவு மழை பொழிந்தது. அம்மழை குரைஷியருக்கு அடை மழையாகவும் முஸ்லிம்களுக்கு சாந்தமான தூறலாகவும் அமைந்தது. அதன் மூலம் அல்லாஹ் ஷைத்தான்களின் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம்களை பரிசுத்தப்படுத்தினான். முஸ்லிம்கள் தங்கியிருந்த மணற் பாங்கான பூமியை தங்குவதற்கு வசதியாக ஆக்கிக் கொடுத்தான். உள்ளங்களையும் பாதங்களையும் ஸ்திரப்படுத்தினான்.

நபியவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், ஹிஜ்ரி 2,ரமழான் மாதம் பிறை 17,வெள்ளிக்கிழமை பத்ர் மைதானத்தில் இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டன. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இறைவா இதோ குறைஷிகள் மமதையுடனும் கர்வத்துடனும் உன்னோடு போர் புரிய வந்துள்னர். உன் தூதரை பொய்ப்பித்தவர்களாக வந்திருக்கும் இவர்களைத் தோற்கடிப்பதற்காக எனக்கு வாக்களித்த உதவியை தந்தருள்வாயாக, இக்காலை பொழுதிலேயே அவர்களை அழித்து விடுவாயாக!" என பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபியவர்கள் படையினருக்கு போர் ஒழுக்கங்களை அழகுற விக்கிவிட்டு தலைமைக்கு கட்டுப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள். எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாது இப்போரில் வெற்றி பெற நபியவர்கள் எண்ணவில்லை.

போருக்கான உடல், உள, இராணுவ ரீதியாக அத்தனை முஸ்தீபுகiயும் முன்னெடுத்து விட்டு புனித ரமழான் நோன்பை நோற்றவர்களாகவே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் உதவியை நாடினார்கள். "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஆன்மிகத்தையும் இராணுவ உத்தியையும் கச்சிதமாக நிறைவேற்றியமையும் பத்ரின் வெற்றிக்கு வழிவகுத்தது என அறிஞர் ‘ஸய்யித் அஸ்ஸாத்’குறிப்பிடுகின்றார்கள்.

தவிரவும் எதிரணிப் படையினரை உளவு பார்த்து அவர்களது பலம்,பலவீனங்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப தமது படையினரை பலப்படுத்துகின்ற பணியையும் நபிகளார் திறம்படச் செய்தார்கள். தெய்வாதீனமாக வெற்றி கிடைக்க வேண்டுமென ஸஹாபிகள் எதிர்பார்க்கவில்லை. அல்லாஹ்வும் அவர்களின் முயற்சிக்குத் தக்க கூலியாக மலக்குகளை இறக்கி மாபெரும் உதவி செய்தான்.

"அஹத்! அஹத்! " என்று கோஷமெழுப்பியவர்களாக எதிரிகளை அகோரமாகத் தாக்கி களத்தில் முன்னேறினார்கள் ஸஹாபிகள். உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனிடம் மனம் உருகப் பிரார்த்திக்கின்றார்கள்.

அல்லாஹ் பதிலளிக்கின்றான். "(உங்களை) பாதுகாக்குமாறு நீங்கள் இறைவனிடம் வேண்டிய போது அணி அணியாக உங்களை பின்பற்றி வரக்கூடிய ஆயிரம் வானவர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன் என்று அவன் உங்களுக்குப் பதிலளித்தான்."

ஸஹாபிகளோடு சேர்ந்து மலக்குகளும் போராடினார்கள். மலக்குகள் பக்கத்தில் நின்று போராடுவதைக் கண்ட சுராகா இப்னு மாலிக்கின் உருவத்தில் போருக்கு வந்திருந்த இப்லீஸ் போர் களத்தை விட்டு வெருண்டோடி கடலில் குதித்து விட்டான்.

தமது படை பலவீனப்பட்ட போதும் திமிருடன் தம்பட்டமடித்து முன்னேறி வந்த அபூ ஜஹ்லை இரண்டு ஸஹாபா சிறுவர்களின் வாள் முனை பதம் பார்க்கிறது. முஆத் இப்னு அம்ர் இப்னு ஜமூஹ் (ரழியல்லாஹு அன்ஹு), முஅவ்வித் இப்னு அஃப்ரா ரழியல்லாஹு அன்ஹு ஆகியோரே இவ்விரு இளம் தியாகிகள் இப்போரில் முஅவ்வித் இப்னு அஃப்ரா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஷஹீதானார்கள்.

கொல்லப்பட்ட அபூ ஜஹ்லுக்கு "இந்த சமுதாயத்தின் பிர்அவ்ன்" என்ற பட்டமும் சூட்டப்பட்டது. இப்போர் நிராகரிப்பார்களுக்கு பெரும் தோல்வியாகவும் இறை விசுவாசிகளுக்கு மகத்தான வெற்றியாகவும் முடிவடைகிறது.

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போர் முடிந்த பிறகு பத்ரு மைதானத்தில் மூன்று நாட்கள் தங்கி மதீனா சென்றடைகின்றார்கள். நோன்பு நோற்ற நாளின் பெரும் பகுதியை தூக்கத்திலும் பொழுதுபோக்குகளிலும் கழிப்பவர்கள், பத்ரு களம் புனித ரமழானில் நோன்பாளிகளின் வாள் வீச்சில் வெற்றி கொள்ளப்பட்டதை மறந்து விடுகின்றார்கள்.

எனவே, ரமழான் மாதம் சோம்பேறிகளின் மாதமல்ல அது வீர வரலாற்று பெட்டகங்களின் திறவுகோல் அல்லாஹ்வுக்காக உயிரைத் துச்சமாக மதித்து களமிறங்கிய தியாகிகளின் மாதம் என்பதையே பத்ரு களம் எமக்கு கற்றுத் தருகிறது. உலகில் அராஜக சக்திகள், அநியாய அட்டூழியங்கள் ஒடுக்கப்பட்டு சத்தியமும், நீதியும்,சமாதானமும் நிலவச் செய்து அல்லாஹ்வின் சட்டம் அகிலத்தை அரவணைக்கும் வரை பத்ருகள் ஓய்வதில்லை. நிச்சியம் அந்த பத்ரின் போது, முஃமின்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிட்டியது போல், இன்னும் கிட்டிக்கொண்டே இருக்கும் (இன்ஷாஅல்லாஹ்)

முடிவுற்றது.

பதிவு நாள்: 15-06-2017