Thursday, 15 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் -20🌙

நோன்பு - 20

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

எதிரிகளை பதற வைத்த பத்ரு களம் -4

========================

பத்ரு போருக்கு முந்திய நாள் இரவு, வல்ல அல்லாஹ்
மழையை இறக்கினான், அந்த
மழை முஸ்லிம்களுக்கு
மென்மையான தூறலாக இருந்தது, குரைஷிகளுக்கு
அடைமழையாக இருந்தது.
முஸ்லிம்கள் தங்கி இருந்த இடம் மணற்பாங்கான குன்று, அந்த இடம் மழையால் இறுகி
முஸ்லிம்களுக்கு வசதியான
மணற்குன்றாக மாறியது, மழையின் மூலம் அல்லாஹ்
முஸ்லிம்களை
சுத்தப்படுத்தினான்.
ஷத்தானை விட்டும்
அப்புறப்படுத்தினான்.
குரைஷிகள் வருவதற்குள்
அங்குள்ள நீர் நிலைகளை
அடைந்து விடவேண்டும்
என்று இஷா நேரத்தில் ஒரு நீர் நிலையின் அருகே
வந்திறங்கினார்கள். அப்போது,
போர் தந்திரங்களை நன்கு அறிந்த அல்ஹுபாப் இப்னு
முந்திர் رضي الله عنه  அவர்கள், நபி صلى الله عليه وسلم  அவர்களிடம்
”இந்த இடத்தை அல்லாஹ்
தேர்ந்தெடுத்து தந்தானா? அல்லது இங்கே தங்க வேண்டும் என்பது தங்கள் யோசனையா?” என்று கேட்டார், அதற்கு நபி صلى الله عليه وسلم  தனது யோசனையே
என்றார்கள். அதற்கு அவர், “இந்த இடம் சரியில்லை, நாம்
பத்ருக்கு மிக அருகில் உள்ள நீர்தடாகத்தின் அருகே தங்குவோம், மற்ற நீர்
நிலைகளை
அழித்துவிடுவோம், அவர்கள் நீர் அருந்த நீர் நிலைகள் இருக்காது” என்றார்.
அவர்களின் யோசனையை நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஏற்றுக்
கொண்டார்கள். அதன்படி, மற்ற
நீர்நிலைகள் அழிக்கப்பட்டு,
பத்ருக்கு மிக சமீபமாக உள்ள இடத்தில் உள்ள நீர் நிலை ஒன்றின் அருகே தங்கினார்கள்,
மேலும், ஒரு
நீர்தடாகத்தையும் அவர்கள்
ஏற்படுத்தினார்கள்.

ஸஅது இப்னு முஆது رضي الله عنه
அவர்களின் யோசனையின்
படி, நபி صلى الله عليه وسلم  அவர்கள், போர்
நடவடிக்கைகள்
அனைத்தையும் நேரடியாக கவனிக்க ஒரு உயரமான பரண்
வீடு ஒன்றை கட்டினார்கள்.
அதனை சுற்றிலும்
பாதுகாப்பு அரணாக விளங்க
ஸஅது இப்னு முஆது رضي الله عنه அவர்கள்
 தலைமையில் அன்சாரி
வாலிபர்கள் குழு ஒன்று
அமைக்கப்பட்டது.
சந்திரனின் பிரகாச ஒளியில் நாளை போர் நடைபெற உள்ள
மைதானத்தில் நடந்து
சென்று, நபி صلى الله عليه وسلم  அவர்கள்
பார்வையிட்டார்கள்.
அப்போது, “இன்ஷா அல்லாஹ்!
நாளை இன்னார் கொல்லபடும்
இடம் இது” என்று சிலரின்
பெயர்களையும், அந்த
இடங்களையும் தனது
விரலால் சுட்டிகாட்டி, முன் அறிவிப்பு செய்தார்கள்.
முஸ்லிம்கள், மிகுந்த
நம்பிக்கையுடனும், மன
அமைதியுடனும்,
காலையில் இறைவனின்
நற்செய்தியைகளை
கண்கூடாக காணலாம், என்ற ஆதரவுடனும், சற்று உறங்க
ஆரம்பித்தார்கள்
“(நம்பிக்கையாளர்களே! உங்கள் மனம்) சாந்தியடந்தவர்களாக,
சிறிய தொரு நித்திரை
உங்களை சூழ்ந்து
கொள்ளும்படி (இறைவன்)
செய்ததை நினைத்து
பாருங்கள்! அன்றி, (அது சமயம்) உங்கள் தேகத்தை நீங்கள்
சுத்தப்படுத்தி
கொள்வதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய
அசுத்தத்தை போக்கி
விடுவதற்காகவும், உங்கள் உள்ளங்களை பலப்படுத்தி,
உங்கள் பாதங்களை உறுதிப்
படுத்துவதற்காகவும்
(அவனே) வானத்திலிருந்து
மழையை பொழியச்
செய்தான்” – (அல்குர்ஆன் 8:11)

மக்கா படையினர் பத்ருக்கு சமீபமாக வந்திறங்கினார்கள்.
பத்ரு பள்ளத்தாக்கின் மேற்கு பகுதியில் கூடாரமடித்து
தங்கினர். முஸ்லிம்
படைகளை வேவு
பார்ப்பதற்காக, உமைர் இப்னு வஹ்பு ஜுமையை
அனுப்பினார்கள், அவரும்
நாலாபக்கமும் தனது
குதிரையில் சென்று,
முஸ்லிம் படையின் அளவை
குரைஷிகளிடம் கூறினார்.
“அவர்கள் சுமார் முன்னூறு பேர் இருக்கலாம், அவர்களிடம்
வாளைத்தவிர வேறு எந்த தற்காப்பு ஆயுதங்களும்
இல்லை. ஆனால், அவர்கள் நம்மைவிட மூன்று மடங்கு
குறைவாக இருந்தாலும்,
அவர்கள் கொல்லப்படும்போது,
நம்மவர்களை கொல்லாமல்
சாகமாட்டார்கள். அத்தனை
உறுதி அவர்களிடம்
தெரிகிறது” என்று கூறி, போர் குறித்து
மறுபரிசீலனை
செய்யுமாறு அபுஜஹலிடம்
கூறினார். அதே போல்,
ஹக்கீம் இப்னு ஹிஸாம்,
உத்பா போன்றோர், போர் களத்தின் எதிரே உள்ளவர்காள்
நம் உறவினர்கள், யார் யாரை கொன்றாலும்
அழியப்போவது நம் இனம்” என்று எவ்வளவோ
எடுத்துகூறியும்,
அபுஜஹல் சம்மதிக்கவில்லை.
முஸ்லிம்களை கூண்டோடு
அழிக்க வேண்டும் என்று கர்ஜித்தான். குரைஷிகளும்
ஆவேசமாக கத்தினார்கள்.

அன்றைய இரவு, நபி صلى الله عليه وسلم
அவர்கள் ஒரு மரத்தடியில்
தொழுதார்கள். அழுது
அழுது எல்லாம் வல்ல
அல்லாஹ்வை
பிரார்த்தித்தார்கள்.
ஹிஜ்ரி2, புனித ரமலான்
மாதம், பிறை 17,
வெள்ளிக்கிழமை
அதிகாலை – (கி.பி. 624, மார்ச் 17) பதுரு போர்களம்.
உலகவரலாற்றின், ஓர்
சிறப்புமிக்க நாள்!
இஸ்லாமிய தற்காப்பிற்கு,
தார்மீக உரிமை
கொண்டாடும் நாள்! வல்ல
நாயனே நேரிடையாக உதவி புரிய, வானவர்களை
வாள்களுடன் இறக்கிய நாள்,
இஸ்லாமிய வரலாற்றின்
முதல் போர்….

பத்ரு பள்ளத்தாக்கில்
இரண்டு
அணிகளும் தயார்
நிலையில்….

ஹிஜ்ரி2, புனித ரமலான்
மாதம், பிறை 17,
வெள்ளிக்கிழமை (கி.பி. 624,
மார்ச் 17) பதுரு போர்களம்.
அதிகாலை!
இஸ்லாமிய படையினர்
ஏற்படுத்தி இருந்த நீர்
நிலையில், மக்கா படையில்
உள்ள சிலர் நீர் அருந்த வந்தனர்.
நபித்தோழர்கள் அவர்களை
தடுக்க முற்பட்டனர். அப்போது
நபி صلى الله عليه وسلم  அவர்கள், “அவர்களை
விட்டுவிடுங்கள்” என்று
கூறினார்கள். (அந்த
நீர்தடாகத்தில் யாரெல்லாம் நீர்
அருந்தினார்களோ
அனைவரும் போரில்
கொல்லப்பட்டனர், ஒருவரை தவிர!
 அவர் ஹக்கீம் இப்னு
ஸாம். இவர் பின்னாலில்
இஸ்லாத்தை ஏற்று சிறந்த முஸ்லிமாக
 திகழ்ந்தார். அவர்
சத்தியம் செய்ய நினைத்தால்
‘பத்ருப் போரில் என்னை
காப்பாற்றியவன் மீது
சத்தியமாக!” என்று
கூறுவார்)
இப்போது, பத்ரு
பள்ளத்தாக்கில் இரண்டு
படைகளும் நேர் எதிரே
திரண்டு நின்றார்கள். நபி صلى الله عليه وسلم
 அவர்கள், “அல்லாஹ்வே!
இதோ குரைஷிகள்
கர்வத்துடனும்,
மமதையுடனும் உன்னிடம்
போர் செய்பவர்களாக,
உன்னுடைய தூதரைப்
பொய்ப்பிப்பவர்களாக
வந்திருக்கின்றனர்.
அல்லாஹ்வே! நீ எனக்கு
வாக்களித்த உதவியை
தருவாயாக! இக்
காலைப்பொழுதில்
அவர்களை அழிப்பாயாக!”
என்று பிரார்த்தனை
செய்தார்கள்.
மக்காபடையினரின் தரப்பில், சிகப்பு நிற
 ஒட்டகையின் மீது
 உத்பா உலாவிக்
கொண்டு இருந்தார். அவரைப்
பார்த்த நபி صلى الله عليه وسلم  அவர்கள், “அந்த
கூட்டத்திலேயே நலத்தை
விரும்பும் ஒருவர்
இவராகத்தான் இருக்க
முடியும். இவருக்கு இந்த கூட்டம்
 கட்டுப்பட்டால்,
அவர்கள் சரியான வழியை
அடையக் கூடும்” என்று
கூறினார்கள்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
முஸ்லிம்களின் அணிகளை
சரிசெய்து கொண்டு
இருந்தார்கள். கையில் ஒரு அம்பு ஒன்று
வைத்துக்கொண்டு
கட்டளைகளை கொடுத்துக் கொண்டு
 இருந்தார்கள்.
முஸ்லிம் படையினர்
வரிசையினை சரிசெய்து கொண்டு
இருக்கும்  போது,
அவர்கள் கையில் இருந்த
அம்பினால் ஸவாது இப்னு
கஸிய்யா رضي الله عنه  அவர்கள்
வயிற்றில் லேசாக தட்டி, வரிசையில்
 ஒழுங்காக
நிற்கும்படி சொன்னார்கள்,
ஆனால் அவரோ, நீங்கள் என்
வயிற்றில் அம்பால்
குத்திவிட்டீர்கள், எனக்கு வலி
ஏற்பட்டுவிட்டது” என்றார்.
நபி صلى الله عليه وسلم  தனது வயிற்றை
திறந்து காட்டி, “இதோ, உன் பழியை
 தீர்த்துக் கொள்”
என்றார்கள். ஆனால், அவரோ,
நபி صلى الله عليه وسلم  அவர்களை
கட்டியணைத்து, அவர்களின்
வயிற்றில் முத்தமிட்டார்கள்.
ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு. “ இதோ கண்
எதிரே எதிரிகள்! எனக்கு என்ன
வேண்டுமென்றாலும்
நிகழலாம், அதற்குள் உங்கள் மேனியை
 தொட்டுவிட ஆசைப்
 பட்டேன்” என்று
ஆனந்தத்துடன் கூறினார்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள், தம்
படையினருக்கு
கட்டளைகளை
பிறப்பித்தார்கள். “எனது இறுதி
 கட்டளை வரும் வரை
போரை தொடங்காதீர்கள்!
அவர்கள் உங்களை நோக்கி நெருங்கும்
 போது,
அவர்களை நோக்கி அம்பை
எறியுங்கள்! அதே சமயம்
அம்புகளில் கொஞ்சம் மீதம் வைத்துக்
 கொள்ளுங்கள்.,
அவர்கள் உங்களை சூழ்ந்து கொள்ளும் வரை  நீங்கள்
வாட்களை உருவாதீர்கள்”
என்று கூறினார்கள்
(நூல்:அபுதாவூத்)

அதன் பிறகு நபி صلى الله عليه وسلم
அவர்களும், அபுபக்ர் رضي الله عنه
அவர்களும் பரணி வீட்டிற்கு
சென்றார்கள். ஸஅது இப்னு முஆது رضي الله عنه  அவர்கள், தனது
பாதுகாப்பு படையினருடன்
அவ்வீட்டை சுற்றிதொகுப்பு  அரணாக
நின்றார்கள்.
இப்போது அபுஜஹில் தனது
இறைவனிடம், “தங்களுக்கே
வெற்றி வேண்டும்,
முஹம்மதும் அவரது
கூட்டமும் தோற்றகடிக்கப்
படவேண்டும்” என்று நீண்ட
ஒரு பிரார்த்தனை செய்தான்.
இது குறித்தே அல்லாஹ்
இந்த வசனத்தை இறக்கினான். .
“(நிராகரிப்பவர்களே!) நீங்கள்
வெற்றி(யின் மூலம்
தீர்ப்பைத்) தேடிக்
கொண்டிருந்தால், நிச்சயமாக
அவ்வெற்றி
(முஃமின்களுக்கு) வந்து விட்டது.
 இனியேனும் நீங்கள்
(தவறை விட்டு) விலகிக்
கொண்டால் அது உங்களுக்கு
நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும்
 (போருக்கு) வந்தால்
நாங்களும் வருவோம்;
உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக
 இருந்தாலும்,
அது உங்களுக்கு எத்தகைய
பலனையும் அளிக்காது.
மெய்யாகவே அல்லாஹ்
நம்மிக்கையாளர்களுடன் தான்
இருக்கின்றான் (குர்ஆன் 8:19)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 16-06-2017.

No comments:

Post a Comment