Saturday, 17 June 2017

🌙மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்-21🌙

நோன்பு - 21

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋

*எதிரிகளை பதற வைத்த பத்ரு களம்  -5*

========================

*போர் துவங்கியது!*

மிகுந்த கெட்ட குணமுடைய
அஸ்வத் இப்னு அப்துல் அஸது
மக்ஜூமி என்பவன் போரின் தீயை மூட்டினான். சப்தமாக
சபதமிட்டான் “ நான்
முஸ்லிம்கலின் நீர்நிலையில்
நீர் அருந்துவேன், அவர்களை
கொன்றொழிப்பேன், அல்லது அங்கே செத்துமடிவேன்…
இது இறைவன் மீது சத்தியம்” என்று கூறி கொண்டு
குரைஷிகளின்
படையிலிருந்து
வெளியேறி முஸ்லிம்கள்
பக்கம் உள்ள நீர் நிலையை நோக்கி, ஓங்கிய வாளுடன்
வந்தான். அவன் நீர் தடாகத்தின்
அருகே வந்ததும், ஹம்ஜா رضي الله عنه
 அவர்கள் அவனை
வாளுடன் எதிர் கொண்டார்கள்.
அவனின்
கெண்டைகால் வரை
வெட்டினார்கள். அப்படியும் தான் செய்த சபத்தை நிறைவேற்ற, அந்த நீர் தடாகத்தை நோக்கி தவழ்ந்து
கொண்டே சென்றான்.
இப்போது அவனின் கதையை ஹம்ஜா رضي الله عنه  அவர்கள்
முடித்தார்கள்.
 போரின் முதல் கொலை,
குரைஷிகளின் முதல்
இழப்பு.
குரைஷிகளின் கோபம்
தலைக்கேறியது. மிகவும் காட்டமாக குரைஷிகள் போரை துவக்கினார்கள்
அந்தக் கால போர்விதியின் படி
முதலில், சில வீரர்கள்
நேருக்கு நேர் மோத
வேண்டும், அதன் பின்பே இருதரப்பில் உள்ள அத்தனை
பேரும் மோதிக் கொள்வார்கள்
அதன்படி, குரைஷிகளில் மிகவும் தேர்ச்சி பெற்ற
குதிரை வீரர்களில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்,
இஸ்லாமிய படையினரை
நோக்கி வந்து நின்று
நேரிடையாக மோத
வருமாறு அழைத்தார்கள்.
அவர்கள் உத்பா, ஷைபா, வலீது
ஆகியோர்.
இவர்களை எதிர்கொள்ள,
மூன்று அன்சாரி
வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு
ஹாரிஸ், அப்துல்லாஹ்
இப்னு ரவாஹா رضي الله عنهم ஆகியோர் அவர்களுடன்
நேருக்கு நேர் மோத
களத்தில் குதித்தனர்.

அவர்களை நோக்கி, “நீங்கள் யார்?” என்று குரைஷிகளின்
சார்பாக வந்த மூவரும்
கேட்டார்கள், அதற்கு இவர்கள் “நாங்கள் மதினாவாசிகள்”
என்றார்கள். “நீங்கள் எங்களுக்கு
நிகரானவர்கள்தான். ஆனால்,
நீங்கள் தேவை இல்லை.
முஹம்மதே!
மக்காவாசியான எங்கள்
குலத்தவரை எங்களுடன்
போரிட அனுப்புங்கள்” என்று
கத்தினார்கள்.
உடனே நபி صلى الله عليه وسلم  அவர்கள்,
உபைதா இப்னு ஹாஸே,
ஹம்ஜாவே, அலியே எழுந்து செல்லுங்கள்” என்று
உத்தரவிட்டார்கள்.
மீண்டும் இவர்களை நோக்கி நீங்கள் யார் என்று கேட்டு தெரிந்து கொண்டு, நேருக்கு நேர் மோத
வந்தார்கள்
இதில் வயதில் மூத்தவரான
உபைதா رضي الله عنه  அவர்கள்
உத்பாவுடனும், ஹம்ஜா رضي الله عنه
ஷைபாவுடனும், அலீ رضي الله عنه
வலீதுடனும் மோதினார்கள்.
(நூல்: இப்னு ஹிஷாம்)

இதில் ஹம்ஜா رضي الله عنه  அவர்களும்,
அலீ رضي الله عنه  அவர்களும்
எதிரிகளுக்கு வாய்ப்பே
கொடுக்காமல் அவர்களை வெட்டி வீசினார்கள். ஆனால்,
உபைதா رضي الله عنه அவர்களும்,
உத்பாவும்
மோதிக்கொண்டதில்
இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது, உபைதா رضي الله عنه
அவர்களின் கால் வெட்டுண்டு
வீழ்ந்தது. இருந்தும் உத்பா
கொல்லப்பட்டான். அலீ رضي الله عنه ம், ஹம்ஜா رضي الله عنه ம்
உபைதா رضي الله عنه  அவர்களை
சுமந்து கொண்டு
திரும்பினார்கள்.
(உபைதா رضي الله عنه  அவர்கள். இதனால் நோய்வாய்ப்பட்டு,
இப்போருக்கு பின் 5 நாட்கள் கழித்து, மதினா செல்லும்
வழியில் “ஸஃப்ரா” என்ற இடத்தில் இறந்தார்கள்.)
இந்த சம்பவத்தை
குறித்துதான் இறைவசனம்
22:19 இறங்கியதாக அலீ رضي الله عنه
அவர்கள் கூறினார்கள்,
போரின் ஆரம்பமே தங்களுக்கு கெட்டதாக அமைந்து விட்டதே! மூன்று குதிரை
வீரர்களான தளபதிகளை இழந்து
விட்டோமே! என்ற ஆத்திரம் மேலோங்க, இஸ்லாமிய
படையினரை நோக்கி
மிகவும் ஆவேசத்துடன்
பாய்ந்தார்கள் குரைஷிகள்
அனைவரும்.
முஸ்லிம்களோ, தங்களது
இறைவனிடம் உதவியும், பாதுகாப்பும் கோரி, தங்களது எண்ணங்களை
தூய்மைபடுத்திக் கொண்டே எதிரிகளின் தொடர்
தாக்குதல்களை சமாளித்தனர்.

முஸ்லிம் படை தங்களைவிட,
மூன்று மடங்கு
பெரிதாகவும், கணக்கற்ற கவச
உடையுடனும்,
குதிரை படையுடனும்
மோதும் குரைஷி
படையினரை மன
வலிமையுடன்
எதிர்கொண்டார்கள்.
“அல்லாஹ் ஒருவனே!
அல்லாஹ் ஒருவனே” என்று கூறிக்கொண்டே பதிலடி கொடுத்தார்கள்.
போர் உச்சகட்டத்தை எட்டியது, இரத்தம் பீறிட்டு ஆறாய் ஓடத்
தொடங்கியது.
நபி صلى الله عليه وسلم  அல்லாஹ்விடம்
மன்றாடினார்கள்.
“அல்லாஹ்வே! நீ வாக்களித்த வாக்கை நீ
நிறைவேற்றுவாயாக!
அல்லாஹ்வே! நீ எனக்களித்த உனது வாக்கையும்,
ஒப்பந்தத்தையும் உன்னிடம்
கேட்கிறேன்” என்று
வேண்டினார்கள்.
போரின் உக்கிரம் உச்சகட்டத்தை
அடைந்ததும், மீண்டும்
வேண்டினார்கள்.
“அல்லாஹ்வே! இக்கூட்டத்தை
நீ அழித்துவிட்டால், உன்னை
வணங்குவதற்கு
இப்பூமியில் யாருமே
இருக்க மாட்டார்கள்!” அழுது அழுது துஆ கேட்டார்கள்.
கரங்களை உயர்த்தியதால்,
அவர்களின் புஜத்திலிருந்து
மேலே போர்த்தி இருந்த நழுவி விழுந்தது.
அவர்களின் போர்வையை
அபூபக்ர் رضي الله عنه  சரி செய்து,
“அல்லாஹ்வின் தூதரே! நீங்கள்
உங்கள் இறைவனிடம் அதிகம்
வேண்டிவிட்டீர்கள்” என்றார்கள்.
அல்லாஹ் தனது
திருவசனத்தின் மூலம் உதவி செய்தான்.

‘(உங்களைப்)
பாதுகாக்குமாறு நீங்கள் உங்கள்
 இறைவனிடம்
வேண்டிய போது,
“அணியணியாக உங்களை பின் பற்றி
 வரக்கூடிய ஆயிரம்
வானவர்களைக் கொண்டு
நிச்சயமாக நான் உங்களுக்கு
உதவி செய்வேன்” என்று அவன்
உங்களுக்கு பதிலளித்தான்
(திருக்குர்ஆன் 8:9)
வல்ல அல்லாஹ், நபி صلى الله عليه وسلم
அவர்களின் பிராத்தனையை
ஏற்றுக்கொண்டான், அவன்
வாக்களித்தபடி வானவர்களை
இறக்கினான்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் சற்று
தலையை தாழ்த்தி, பின்பு உயர்த்தி “அபுபக்ரே!
நற்செய்தி அடைந்து
கொள்ளுங்கள். இதோ ஜிப்ரீல்
குதிரையின் கடிவாளத்தை
இழுத்துவருகிறார். அவர் உடம்பில்
 புழுதி படிந்து
இருக்கிறது அவர்
காட்சியளிக்கிறார்”
என்றார்கள்
கவச ஆடை அணிந்து நபி صلى الله عليه وسلم
அவர்கள் தங்களது
கூடாரத்திலிருந்து
வெளியேறினார்கள்.
“அதிசீக்கிரத்தில் இக்கூட்டம்
தோற்கடிக்கபடுவார்கள், (பிறகு) புறங்காட்டி
ஓடுவார்கள்”
 (அல்குர் ஆன் 54:45) என்ற வசனத்தை
கூறியவர்களாக,
பொடிக்கற்கள் நிறைந்த மண்ணை
 அள்ளி, “முகங்கள்
மாறட்டும்” என்று கூறி, எதிரிகளின்
 முகத்தை நோக்கி
 எறிந்தார்கள். அது
எதிரிகளின் கண், தொண்டை, வாய்
 என்று அனைத்தையும்
சென்றடைந்தது.
இது குறித்தே, “நீங்கள்
எறியும் போது உண்மையில்
அதை நீங்கள் எறியவில்லை.
எனினும் அதை
அல்லாஹ்தான்
எறிந்தான்” (அல்குர் ஆன் 9:17)
என்ற வசனம் இறங்கியது.

நபி صلى الله عليه وسلم  அவர்கள் தமது
படையினருக்கு ஆர்வ
மூட்டினார்கள்.,
“முஹம்மதின் உயிர் எவன் கைவசம்
 உள்ளாதோ அவன்
மீது ஆணையாக! இன்றைய தினத்தில்
 போர் புரிந்து,
சகிப்புதன்மையுடனும்,
நன்மையை நாடியும்,,
புறமுதுகு காட்டாமலும்,
எதிரிகளை எதிர்த்தவர்களாக
யார் கொலை
செய்யப்படுகிறார்களோ அவரை அல்லாஹ் சொர்கத்தில்
நுழைவிப்பான்.
வானங்களயும்
பூமிகளையும் அகலமாக கொண்ட
 சொர்கத்தின் பக்கம்
விரைந்தோடுங்கள்” என்று
ஆர்வமூட்டினார்கள்.
“ஆஹா! ஆஹா!, நானும்
சொர்க்கவாசிகளில் ஒருவராக
ஆகவேண்டும்” என்று
கூறிக்கொண்டு உமைர்
இப்னு அல்ஹுமாம் رضي الله عنه
எதிரிகளின் மீது
பாய்ந்தார்கள். ஷஹீதானார்கள்.
இதே போன்று அவ்ஃப் இப்னு ஹாரிஸ்  رضي الله عنه  அவர்கள் தான்
அணிந்து இருந்த கவச
ஆடையை தூக்கி எறிந்து விட்டு
 எதிரிகள் மீது
பாய்ந்து ஷஹீதானார்கள்.
(நூல்: முஸ்லிம்)

நபித்தோழர்களின் மனதில், தங்களுக்கு
 சொர்க்கம் வேண்டும்
 என்ற ஆர்வமே
மேலோங்கி இருந்தது
என்பதையே இந்நிகழ்ச்சிகள்
காட்டுகின்றன.
எதிரிகளை தாக்குங்கள்
என்று, நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கட்டளை பிறப்பித்த உடன்
எதிரிகளின் மீது
முஸ்லிம்கள் பாய்ந்தனர்.
அவர்களின் அணிகளை
பிளந்தனர், தலைகளை
கொய்தனர்.அல்லாஹ்வின் பாதையில் போர்
புரியவேண்டும் என்ற தீராத தாகத்தில்
 இருந்த அவர்கள்
எதிரிகளை நிலை
தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின்
தாக்கும் வேகம்
குறைந்தது. வீரமும்
சோர்வுற்றது. எதிரிகளால்
முஸ்லிம்களின் வேகத்திற்கு
தாக்கு பிடிக்க
முடியவில்லை. நபி صلى الله عليه وسلم
“அதி சீக்கிரத்தில் இக்கூட்டம்
சிதறடிக்கப்படும்.மேலும் (இவர்கள்) புறங்காட்டி
ஓடுவார்கள்” (அல்குர் ஆன் 54:45) என்ற வசனத்தை
கூறிகொண்டே இருந்தார்கள்.
முஸ்லிம் படையினருக்கு
மேலும் உற்சாகம்
தோன்றியது, பலமாக தாக்க
தொடங்கினார்கள்.
(நூல்: புஹாரி )

 *வானவர்களின் உதவி*

இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள
கூறுகின்றார்கள்: ஒரு
முஸ்லிம், எதிரியைத் தாக்க பின் தொடர்ந்து
 செல்லும் போது
 மேலிருந்து ஒரு
சாட்டையின் ஒலியும்
“ஹைஸூமே! முன்னேறு” என்று
 கூறும் ஒரு குதிரை
வீரனின் அதட்டலையும்
கேட்டார். அதன் பிறகு அந்த முஸ்லிம்
எதிரியை பார்க்கும்
போது அந்த எதிரி
மூக்கு அறுக்கப்பட்டு, முகம்
பிளக்கப்பட்டு மல்லாந்து
இறந்து கிடந்தான்.”:
இது குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்
 கூறும் போது, “இது
மூன்றாவது
வானத்திலிருந்து அல்லாஹ்
இறக்கிய உதவியாகும்”
என்றார்கள் (நூல்:முஸ்லிம்)
அபூதாவூது அல் மாசினி رضي الله عنه அவர்கள் கூறினார்கள்..
 நான் ஒரு எதிரியை
வெட்டுவதற்காக அவனை பின்
 தொடர்ந்த போது எனது வாள் அவன் மீது  படுவதற்கு
முன்னதாகவே அவனது தலை
கீழே விழுந்தது, அவனை வேறு யாரோ
வெட்டினார்கள் என்பதை உணர்ந்து
 கொண்டேன் (நூல் :
புகாரி)
முஸ்லிம்கள் மிகத்
துணிவுடன்
சண்டையிட்டார்கள்,
வானவர்களும் அவர்களுக்கு
உதவி செய்தார்கள்
அன்சாரிகளில் ஒருவர்,
அப்பாஸ் இப்னு அப்துல்
முத்தலிபை கைது செய்து நபி صلى الله عليه وسلم  அவர்களிடம்
அழைத்து வந்தபோது, அவர் கூறினார்கள்
 “இவர் என்னை
கைது செய்யவில்லை.
என்னை கைது செய்தது, சிறந்த
 குதிரையின் மீது
இருந்த அழகிய முகம் உடைய
ஒருவர்தான்” என்றார். அதற்கு
அந்த அன்சாரி வீரரோ
“இல்லை! நான் தான்
 கைது செய்தேன்”
என்றார்.
“அல்லாஹ்தான் தனது
சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு
 உதவி செய்தான்” என்றார்கள் நபி صلى الله عليه وسلم  அவர்கள்.
அலீ رضي الله عنه  கூறினார்கள்: பத்ரு
போரில் என்னையும்,
அபுபக்கர் رضي الله عنه  அவர்களையும்
பார்த்து நபி صلى الله عليه وسلم  அவர்கள்
கூறினார்கள், உங்கள்
இருவரில் ஒருவருடன்
ஜிப்ரீலும், மற்றொருவருடன்
பெரிய வானவரான
இஸ்ராஃபீலும் போரில் கலந்து
இருக்கிறார்கள்” என்று
கூறினார்கள்.
 (நூல்: முஸ்னது
 அஹமது, பஜ்ஜார்,
முஸ்தத்ரகுல் ஹாகிம்)

இன்ஷா அல தொடரும்...

தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங்குடி.

பதிவு நாள்: 18-06-2017.

No comments:

Post a Comment