நோன்பு - 22
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋
*எதிரிகளை பதற வைத்த பத்ரு களம்! -6*
========================
சுரகா இப்னு மாலிக்கின்
உருவத்தில் வந்து இருந்த இப்லீஸ், வானவர்கள்
அல்லாஹ்வை
நிராகரிப்பாளர்களை
வெட்டுவதை பார்த்து
விட்டு ஓட்டம் பிடித்தான் எதிரிகளின் அணியில்
சலசலப்பும், தோல்வியின்
அடையாளங்களும் தெரியத் துவங்கின. முஸ்லிம்களின்
கடும் தாக்குதலுக்கு முன் இணை வைப்போரின் அணி
சின்னா பின்னாமாகியது.
எதிரிகள் நாலா
பக்கங்களிலும் விரைந்து
தப்பிக்க முயன்றனர்.
எதிரிகள் நாலா பக்கமும்
சிதறி ஓடினர். முஸ்லிம்கள்
அவர்களை பின் தொடர்ந்து
பணிந்தவர்களை கைது
செய்தனர், மீறியவர்களை வெட்டி வீழ்த்தினர்.
அபுஜஹல் இதனை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல்,
திமிருடன் தனது
படையினரை
உற்சாகப்படுத்திக் கொண்டே
இருந்தான்.
அபுஜஹலின் கதையை கொஞ்சம் பார்ப்போம்
முஆது, முஅவ்வித்
இரண்டு அன்சாரி இளைஞர்கள்.
இவர்கள் இருவரும் அஃப்ராவின்
இரு புதல்வர்கள். தங்களது சிறிய தந்தையான அப்துர்
ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنه
அவர்களிடம், அபுஜஹலை
தங்களிடம் காடுங்கள் என்று கூறுகின்றனர். அதற்கு அவர் ஏன்? என்று கேட்கிறார்.
“எங்கள் நபியை அவன்
ஏசுவதாக கேள்வி பட்டோம்,
அல்லாஹ்விடம் சபதம் எடுத்துள்ளோம்,
ஒன்றுஅவனை கொல்வோம், அல்லது நாங்கள் மடிவோம்”
என்று அவர்கள் வீரமாக கூறினார்கள். குதிரையில்
உலாவிக்கொண்டும்,
படையினரை
உற்சாகப்படுத்திக் கொண்டும் இருந்த அபுஜஹலை அவர்
காண்பித்தார். அவ்வளவுதான்,
இராஜாளி பறவையை போல் அவன் மீது இந்த இரண்டு
இளைஞர்களும் பாய்ந்தார்கள்.
(நூல்:புகாரி 3988)
இந்த இருவரில் யார் அவனை முதலில் கொல்வது என்ற
போட்டியே நடந்தது.
முஅவ்விது رضي الله عنه அவர்கள், முதலில் அபுஜஹல் மீது
பாய்ந்தார்கள், அவனது
கரண்டை கால் வரை
வெட்டினார்கள், அவனது கால்கள் பறந்து வீழ்ந்தன.
இதனை பார்த்த அபுஜஹலின்
மகன் இக்மா முஅவ்வித்
அவர்களின் புஜத்தில்
வெட்டினார், இதனால்
அவரது வலது கை
வெட்டப்பட்டு தோளோடு
தொங்கியது. கீழே சாய்ந்த அபுஜஹலின் மீது பாய்ந்து, முஆது அவர்கள் வெட்டித் தள்ளினார்கள்.
கொல்லப்பட்டான் அபூஜஹல்.
கொல்லப்படும்போது
கூட,”நான் தான்
கொல்லப்படுபவர்களில் மிகவும் உயர்ந்தவன்” என்றான்,
இப்னு மஸ்வூது رضي الله عنه அவர்கள் அவனது தலையை
தனியாக எடுத்தார்கள்.
இந்த வேலையில், நபி صلى الله عليه وسلم
அவர்கள், “அபூஜஹல் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள்.
அபுஜஹலின் தலையோடு
நபி صلى الله عليه وسلم அவர்களிடம்
வந்தார்கள், “இதோ நீங்கள்
கேட்டவனுடைய தலை” என்றார்கள் அந்த இரு அன்சாரி
வாலிபர்களும். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள், “வணக்கத்து
உரியவன் அல்லாஹ்வை தவிர
வேறும் யாரும் இல்லை” என்று மூன்று முறை
கூறிவிட்டு, “அல்லாஹ்
மிகப்பெரியவன்! எல்லா புகழும் அல்லாஹ்விற்கே!
அவன் தனது வாக்கை
உண்மைப்படுத்தினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி படைகள் அனைத்தையும்
தோற்கடித்தான்”என்றார்கள். பின்பு,
.”உங்களில் யார் அவனை கொன்றது” என்று, நபி صلى الله عليه وسلم அவர்கள்
கேட்க, இருவரும்
“நானே கொன்றேன்”
என்றார்கள்.
இருவரின் வாள்களை வாங்கி பார்த்த நபி صلى الله عليه وسلم அவர்கள்,
“நீங்கள் இருவருமே அவனை கொன்றீர்கள்” என்று கூறி,
அபுஜஹலின் உடமைகளை, இருவரில் ஒருவரான முஆத் அவர்களிடம் கொடுத்தார்கள்.
இரண்டாவது நபரான,
முஅவ்விது இப்னு அஃப்ரா رضي الله عنه
அவர்கள் இபோரில்
வீரமரணம் அடைந்தார்கள்.
(நூல்: புகாரி)
பிறகு, அபுஜஹலின் உடலை தன்னிடம் காட்டும்படி நபி صلى الله عليه وسلم அவர்கள் கூற,
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது رضي الله عنه அழைத்து சென்று
காட்டினார்கள். அதனை கண்ட
நபி صلى الله عليه وسلم அவர்கள், “இவன் தான்
இந்த சமுதாயத்தின் ஃபிர்அவ்ன்”
என்றார்கள்.
இந்த போரில் ஒரு
முக்கியமான நிகழ்வுகள் நடந்தன. அவைகள்,
தந்தை தன் பிள்ளைக்கு
எதிராகவும், பிள்ளை
தந்தைக்கு எதிராகவும்,
சகோதரர்கள் தங்கள்
சகோதரர்களுக்கு
எதிராகவும் போரிட்டனர்.
அதாவது இரு பிரிவாக,
இறை நம்பிக்கையாளர்கள்
இறை மறுப்பாளர்கள்!
இதனை பற்றி கொஞ்சம்
பார்ப்போம்!
பிலால் رضي الله عنه அவர்களுக்கு
மக்காவில் மிகுந்த
வேதனையளித்தவன்
உமையா, இவரையும், இவரது மகனையும் கைதியாக
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنه இழுத்து வந்த போது, உமையாவை கண்ட பிலால் رضي الله عنه அவர்கள், இவன் என்னை அதிகம் துன்பப்படித்தியவன்”
என்று கூறினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنهஅவர்கள் எவ்வளவோ தடுக்க
முயன்றும்,
நபித்தோழர்களால், உமையா
கொல்லப்பட்டான்.
உமையா கொல்லப்
படுவதற்கு முன்பாக
கேட்டான், “தீக்கோழியின்
இறகுகளை தன் நெஞ்சில் செருகி இருக்கும் அந்த
மனிதர் யார்”? என்று
கேட்டான், அதற்கு, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்,
“அவர்தான் ஹம்ஜா” என்று, அதற்கு அவன் கூறினான்,
“அவர்தான் போரில்
எங்களுக்கு மிகுந்த
சேதத்தை உண்டாக்கியவர்”
என்றான்.
முஸ்அப் இப்னு உமைர் رضي الله عنه
அவர்கள் தனது சகோதரர் அபூஅஜீஸ் உப்னு உமைரை
பார்த்தார்கள் “இவனை
கைதியா பிடியுங்கள்”
என்று கூறினார்கள்.
அபுபக்ர் رضي الله عنه ,
குரைஷிகளின் கூட்டத்தில் இருந்த தனது மகன் அப்துர்
ரஹ்மானை பார்த்து, “ஏ… கெட்டவனே! எனது செல்வங்கள் எங்கே”? என்று
கேட்டார்கள். “அதற்கு
அவர்,குதிரையும்,
வாளையும் தவிர
வேறொன்றும்
இல்லை”என்றார்.
மக்காவில் தங்களை
அடக்குமுறைக்கு ஆளாக்கி, கொடுமை
படுத்தியவர்களை கொன்று தங்கள் கோபத்தை தணித்துக்
கொண்டனர்.
சிலர் கெஞ்சினார்கள்,
தன்னிடம் உள்ள அனைத்து
ஒட்டகங்களையும் தந்து விடுகிறேன், என்னை கைதியாக பிடித்துக் கொள்,
கொன்று விடாதே”
என்றார்கள். சிலர்
கொல்லப்பட்டனர், பலர் கைதியாக பிடிக்கப் பட்டனர்.
உமர் رضي الله عنه அவர்களை பற்றி
கூறவேண்டும்.
பத்ரு போர் நடந்தபோது நபி صلى الله عليه وسلم அவர்களின் வலப் பக்கம்
நின்று போர் புரிந்தார்கள். தனது தாய் மாமன் என்று
கூட பாராமல் ஆஸ் இப்னு ஹிஷாம்
இப்னு முகீராவை
கொன்றார்கள். இந்த போரில் முதல் முதலாக
முஸ்லிம்கல்
தரப்பில் ஷஹீதான
பெருமைக்குரியவர் உமர் رضي الله عنه
(ரலி) அவர்களின்
அடிமையான மஹ்ஜா رضي الله عنه அவர்கள்
என்று கூறியிருந்தோம்.
இந்த போரில் குரைஷி
குலத்தவரின் அனைத்து
கிளையினரும் வந்த போது பனூ அதி
குலத்தை சார்ந்த
எவரும் குரைஷிகளின்
சார்பாக கலந்து
கொள்ளவில்லை. காரணம்,
உமர் رضي الله عنه அவர்கள் இந்த
குலத்தை சார்ந்தவர்கள். அதே
வேளயில், இந்த குலத்தை
சார்ந்தவர்கள்
பெரும்பாலோனோர்
இஸ்லாத்தை தழுவி
இருந்ததால், அவர்களில்
பெரும்பாலோனோர்
முஸ்லிம்கள் தரப்பில் போர் புரிய வந்து
இருந்தார்கள்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
கைதியாக பிடிபட்டு இருந்த அப்பாஸ் رضي الله عنه அவர்களை
பார்த்து,
“அப்பாஸே! நீங்கள்
இஸ்லாத்தை
ஏற்றுக்கொள்ளுங்கள்,
அல்லாஹ்வின் மீது
ஆணையாக! எனது
தந்தை கத்தாப்
முஸ்லிமாகுவதை விட நீங்கள் முஸ்லிம்
நீங்கள் முஸ்லிம் ஆகுவது தன்
எனக்கு விருப்பமானது,
அதற்கு காரணம் நீங்கள் முஸ்லிம் ஆவது
முஸ்லிமாவது நபி صلى الله عليه وسلم
அவர்களுக்கு மகிழ்ச்சியான
செய்தியாகும்” என்று
கூறினார்கள்.
போரில் கொல்லப்பட்ட 24 முக்கிய குரைஷி
தலைவர்களின் சடலங்களை
இழுத்து வரும்படி
கூறினார்கள்.
அவைகள்
நாற்றம் பிடித்த கிணற்றில் தூக்கி எறியப்பட்டன.
இஸ்லாமியர்கள் தரப்பில்
கொல்லப்பட்டு ஷஹீதானவர்கள்
விபரம்.
3:13 . (பத்ரு களத்தில்) சந்தித்த இரு
சேனைகளிலும்
உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக
உள்ளது.
ஒரு சேனை
அல்லாஹ்வின்
பாதையில் போரிட்டது;
பிரிதொன்று காஃபிர்களாக
இருந்தது; நிராகரிப்போர்
அல்லாஹ்வின் பாதையில்
போரிடுவோரைத்
தங்களைப்போல் இரு
மடங்காகத் தம் கண்களால்
கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான்
நாடியவர்களுக்குத் தன் உதவியைக்
கொண்டு
பலப்படுத்துகிறான்;
நிச்சயமாக, (அகப்)
பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு
படிப்பினை இருக்கிறது.
3:123 . “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி
குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ்
உங்களுக்கு உதவி
புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி
செலுத்துவதற்காக
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து
கொள்ளுங்கள்.
இஸ்லாமியர்கள் தரப்பில்
கொல்லப்பட்டு ஷஹீதானவர்கள்
விபரம்.
01. உமைர் இப்னு அபீ வக்காஸ்
02. ஸஃப்வான் இப்னு வஹப்
03. துஷ்ஷம்மாஃ இப்னு அப்து
அம்ர்
04 .முஸஜ்ஜஃ இப்ன ஸாலிஹ்
05.ஆகில் இப்னுல் பக்ரு
06.உபைதா இப்னுல் ஹாரித்
இப்னு அப்துல் முத்தலிப்
(இவர்கள் அனைவரும்
முஹாஜிர்கள்)
07.உமைர் இப்னுல் ஹம்மாம்
08 .யஸீது இப்னுல் ஹாரித்
இப்னு கைஸ்
09 .அவ்ஃப் இப்னு ஹாரித்
இப்னு ரிஃபாஆ
10 .மஸ்வூது இப்னு ஹாரித் இப்னு
ரிஃபாஆ
11 .மஸ்அத் இப்னு ஹத்மா
12 .முபஷ்ஷிர் இப்னு அப்துல் முன்திர்
13 .ஹாரிதா இப்னு
ஸுராக்கா
14 .ராஃபிஃ இப்னுல் முஅல்லா رضي الله عنهم
(இவர்கள் அன்சாரிகள்)
மொத்தம் 14 சஹாபா
பெருமக்கள் தன் இன்னுயிரை தந்து
தந்து, பத்ரு போரின்
வரலாற்றிலும்,
அல்லாஹ்வின்
இருப்பிடத்திலும்
அழிவில்லா நிலை
கொண்டார்கள். இந்த 14 பேரில்,
முஹாஜிர்கள்
(மக்காவாசிகள்)6 பேர்கள்,
அன்சாரிகள்(மதினாவாசிகள்)
8 பேர்கள் அடங்கும்.
ஏறாத்தாழ 313
முஸ்லிம்களின் படை,
இறைநிராகரிப்பு
கூட்டமான குரைஷிகளின்
1000 பேரை வெல்ல அல்லாஹ்
உதவி புரிந்தான்.
குரைஷிகளின் தரப்பில் 70 பேர்கள் கொல்லப்பட்டனர், 70
பேர்கள் கைதியாக
சிறைபிடிக்கப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் அபூ ஜஹ்ல்
உட்பட ,உத்பா இப்னு
ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, அபுல் கம் இப்னு
ஹிஷாம், உமையா
இப்னு கலஃப் போன்ற
பிரபல தலைவர்களும் அடக்கம்.
கொல்லப்பட்ட 70
குரைஷிகளில் உள்ள 24 முக்கிய
தலைவர்களின்
சடலங்களை இழுத்து
வரும்படி நபி صلى الله عليه وسلم அவர்கள். அவைகள்,
பாழடைந்த கிணறு ஒன்றில்
போடப்பட்டன.
எல்லாம் வல்ல அல்லாஹ்
தன்னுடைய உதவியை
கொண்டு,
இறைநம்பிக்கையாளர்களுக்கு
வெற்றியையும்,
இறைநிராகரிப்பாளர்களுக்கு
தோல்வியையும் தந்தான்.
இந்த பத்ரு போரின் மூலம் நமக்கு
படிப்பிணைகள்
உண்டு.
அல்லாஹ்வை மட்டும் நம்பி,
அவனிடம் மட்டும் உதவி
தேடுவோருக்கு, அவனின் உதவி
நிச்சயம் கிட்டும்.
பத்ருபோர் குறித்த சில
காட்சிகளின் விபரம்...
நபி صلى الله عليه وسلم நேரடியாக
களத்தில் நின்று எதிரிகளை
சந்தித்த போர்கள் மொத்தம் 19
ஆகும். (ஜைத் பின் அர்கம் رضي الله عنه
புகாரி 3949) அதில்
முதலாவது போர் பத்ருதான்.
காபிர்களின் சடலங்கள்
பத்ரு போர் நடந்த இடத்திலுள்ள
கிணற்றில் தூக்கிப்
போடப்பட்டன. ‘நான்
சொன்னதெல்லாம் உண்மை என்பதை
இப்போது
உணர்கிறீர்களா..’ என்று நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். (ஆய்ஷா, அபூதல்ஹா
இப்னுஉமர் رضي الله عنهم புகாரி 3976,3980,4026)
பத்ரில் கொல்லப்பட்ட
ஹாரிஸா பின் சுராகா رضي الله عنه அவர்களுக்கு ஜன்னத்துல்
ஃபிர்தவ்ஸ் என நபி صلى الله عليه وسلم
நன்மாராயம் கூறுகிறார்கள்.
(அனஸ் رضي الله عنه புகாரி 3952)
ஒரு திருமணத்தின்
போது பத்ரு போரில்
ஷஹீதாக்கப்பட்டவர்களை புகழ்ந்து
சிறுமிகள் தப்ஸ்
அடித்து
பாட்டுப்பாடுகிறார்கள்.
(பின்த் முஅவ்வித் رضي الله عنه புகாரி 4001 )
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
தொகுப்பு....
S. S. ஷேக் ஆதம் தாவூதி
கடலங்குடி.
பதிவு நாள்:19-06-2017.

No comments:
Post a Comment