Friday, 26 January 2018

யூனுஸ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் - 4

அத்துடன் அல்லாஹ் முடித்துக்கொள்ளவில்லை. மாறாக குளிரில் கிடந்து வந்த மனிதனுக்கு சூடு வழங்க வேண்டுமென்பதற்காக ~யக்தீன~; என்ற மரத்தை முளைக்கச் செய்தான். அது அவருக்கு நிழல் கொடுத்து, மறைத்து வைத்து, சூட்டை வழங்கியது. இதைத் தான் அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்:

(அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.)
அஸ் ஸாஃப்பாத் – 146.

மீண்டும் அல்லாஹ் அவர்களை அழைப்பு விடுவதற்குத் தேர்ந்தெடுக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:
(அவரை ஒரு லட்சம் அல்லது (அதைவிட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம்.) அஸ் ஸாஃப்பாத் – 147.

(அவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமதானமும் உண்டாவதாக!)
இச்சம்பவம் மூலம் உண்மையுள்ள விசுவாசி பல படிப்பினைகளைப் பெற வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பதிவு நாள்: 27-01-2018.

No comments:

Post a Comment