பர்மாவின் அழுகுரல்!
உடைந்துவிட்ட என் உள்ளமே !வேண்டாம் போதும்..
அழுத கண்ணீர் ஆறாய் ஓடி பலகீனமான என் உறுப்புகளே போதும்..
இனியும் என்னால் அழ முடியாது.
வெறிபிடித்த என் புத்த சகோதரன் (பினந்திண்ணியாக மாறி)
என் குழந்தைகளை உயிரோடு எரித்தான் ,
என் இறையில்லங்களை கரித்தான்.
,என் பரிசுத்த வேதத்தை தூளாய் கிழித்தான்,(இருந்தும்)
என் இஸ்லாமிய உடன்பிறப்பே.... !!!( நீ அமைதியாய் இருக்கிறாய்)
உன் மனம் மட்டும்,
இருண்டுகிடக்கின்றது
எனது கவலையும் கஷ்டமும் உனக்கு கவலையளிக்கவில்லையோ.. ?
தயவு செய்து கேள்!!!
அந்த குப்ரின் ஓநாய்கள் எங்கள் பிள்ளைகளில் எத்தனை பேரை கொன்றார்கள் என்று ?..
அவர்களின் கஃபனிற்கு கூட ஆடை இருக்கவில்லை ...
*ஈமான் கொண்ட காரணத்தால் மட்டுமே என் சகோதரி ஈவின்றி ,
இரக்கமின்றி விலங்கிட்டு கெடுக்கப்பட்டாள்*
என் சொந்தங்களே ! நாங்களும் முஸ்லிம்களே !!!
என் காயத்திற்கு மருந்திட மறந்தீர்கள் ! இன்றும் நொண்டி சாக்குகளை மட்டுமே கூறிக்கொண்டு இருக்கிறீர்கள் ...
அல்லாஹவின் மீது சத்தியமாய் !
ஏன் இன்னும் மெளனம் ,இனியாவது எனக்கு உதவ மாட்டீர்களா ???....
(கண்ணீருடன் - பர்மா சகோதரன் )
translated by _✍🏽moulavi *ilyas bilali
No comments:
Post a Comment