இஸ்லாமிய அடிப்படையில் சொத்துக்களை பங்கிடுவது எப்படி?
பாடம்-1
பொதுமக்கள் சொத்துக்களை பங்கீடு செய்யும் முறைகளை அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதற்காக, எளிய வடிவில் இந்த பகுதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. பெரிய பாடமாக அமைக்காமல், சொத்துக்களை பெறுவோர் இருந்தால், இல்லாவிட்டால் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் என்பதை உதாரணங்கள் மூலமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கணவன் (or) மனைவி மட்டும் இருந்தால்
முழு சொத்தும் இருக்கும் ஒருவருக்கே உரியது.
மனைவி இறந்து, பெற்றோர் இல்லாவிட்டால்?
இருப்பதில் கணவன் = (1/4) மீதி உள்ளதில், மகன் = (2/3) மகள் = (1/3)
கணவன் இறந்து, பெற்றோர் இல்லாவிட்டால்?
இருப்பதில் மனைவி = (1/8) மீதி உள்ளதில், மகன் = (2/3) மகள் = (1/3)
பிள்ளைகள் தவிர யாரும் இல்லை*,
இருப்பதில், மகன் = (2/3) மகள் = (1/3)
பெற்றோர் தவிர யாரும் இல்லை
இருப்பதில், தந்தை = (2/3) தாய் = (1/3)
கணவன் இறந்து, பிள்ளை இல்லாவிட்டால்
இருப்பதில் மனைவி = (1/4) மீதி உள்ளதில், தந்தை = (2/3) தாய் = (1/3)
*மனைவி இறந்து, பிள்ளை இல்லாவிட்டால்*
இருப்பதில் கணவன் = (1/2) மீதி உள்ளதில், தந்தை = (2/3) தாய் = (1/3)
*மனைவி இறந்து, அனைவரும் இருந்தால்?*
இருப்பதில் கணவன் = (1/4) தாய் = (1/6) தந்தை = (1/6) மீதி உள்ளதில், மகன் = (2/3) மகள் = (1/3)
*கணவன் இறந்து, அனைவரும் இருந்தால்?*
இருப்பதில் மனைவி = (1/8) தாய் = (1/6) தந்தை = (1/6) மீதி உள்ளதில், மகன் = (2/3) மகள் = (1/3)
No comments:
Post a Comment