Friday, 4 August 2017

*கழிவறையின் மற்றும் குளிப்பின் சுன்னத்துக்கள்:*

*கழிவறையின் சுன்னத்துக்கள்:*

1.தலையை மூடிச் செல்வது.

2.காலணி அணிந்து செல்வது.

3.துஆ ஒதிய பின் உள்ளே நுழைவது.

4.முதலாவதாக இடது காலை உள்ளே        வைப்பது.

5.கிப்லாவின் பக்கம்முகத்தையோ,முதுகையோ காட்டாமல் இருப்பது.

6.முற்றிலும் பேசாமல் இருப்பது.

7.நின்ற நிலையில் சிறுநீர் கழிக்காமல் இருப்பது.

8.இடது கையால் சுத்தம் செய்வது.

9.சுத்தம் செய்த பின் மண் அல்லது சோப்பு  கொண்டு கையை நன்கு கழுவது.

10.வலது காலை முன் வைத்து வெளியேவருவது.
வெளியே வந்த பின் துஆ ஓதுவது.

   *குளிப்பின் சுன்னத்தான முறை*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடமையான குளிப்பை கீழ்காணும் முறையில் நிறைவேற்றுவார்கள்.

1.இரண்டு கைகளையும் கழுவுவது.

2.இடது கையில் தண்ணீரை ஊற்றி வெட்கஸ்தளத்தை கழுவுவது.

3.தொழுகைக்கு உழூ செய்வது போல உழூ செய்வது.

4.தண்ணீரை எடுத்து தமது விரல்கள் மூலம் தலை முடியின் வேர் கால்களில் செலுத்துவது.

5.இரண்டு கைநிறைய தண்ணீரை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக தலையில் ஊற்றுவது.

6.உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவது.

7.இரண்டு கால்களையும் கழுவுவது.

No comments:

Post a Comment