நோன்பு - 18
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
*எதிரிகளை பதற வைத்த பத்ரு களம்- 2
========================
*இஸ்லாமிய படையின் விபரம்*
நபி صلى الله عليه وسلم அவர்கள்
மதினாவிலிருந்து
வெளியேற ஆயத்தமானார்கள்.
அதற்கு முன்பாக
அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தூம் رضي الله عنه அவர்களை,
மதினாவில் தொழுகை
நடத்தவும், தனது
பிரதிநிதியாகவும்
நியமித்தார்கள்.
மதினாவில் அவர்களுடன்
313லிருந்து 317 நபிதோழர்கள்
புறப்பட்டார்கள்
அதில், முஹாஜிர்கள்
82லிருந்து 84 வரை
அவ்ஸ் கிளையை சேர்ந்த அன்சாரிகள் 61மற்றும்
கஸ்ரஜ் கிளையை சேர்ந்த 170
அன்சாரிகள் புறப்பட்டார்கள்.
வெளியேரும் போது
எந்தவித ஆராவாரமும்
இல்லை. முஸ்லிம்களிடம்
இரண்டு குதிரைகள் மற்றும் 70 ஒட்டகங்கள் மட்டுமே
இருந்தன.
இப்னு அவ்வாம் رضي الله عنه அவர்களிடம் ஒரு
குதிரையும், மிக்தாது
இப்னு அஸ்வத் رضي الله عنه அவர்களிடம் ஒரு குதிரை மட்டுமே இருந்தன.
மொத்ததில் இரண்டு
குதிரைகள், 70 ஒட்டகங்கள் மட்டுமே இருந்தன. ஒரு
ஒட்டகதிற்கு இருவர் அல்லது
மூவர் மாறிமாறி பயணம் செய்தனர்.
நபி صلى الله عليه وسلم , அலி, மர்ஸத்
இப்னு அபூ மர்ஸத் கனவி رضي الله عنهما
ஆகிய மூவரும் ஒரு
ஒட்டகத்தில் மாறி மாறி பயணம் செய்தனர்.
இப்போருக்கான பொதுவான
தலைமைத்துவத்தின்
வெள்ளைக்கொடியை முஸ் அப்இப்னு அல்குரைஷி
அல்அப்த رضي الله عنه அவர்களிடம்
வழங்கினார்கள்.
படையை இரண்டு பிரிவாக
ஆக்கினார்கள்
1) முஹாஜிர்களின் படை;
இதற்குரிய கொடியை அலி رضي الله عنه
அவர்களிடம்
கொடுத்தார்கள்.
இக்கொடிக்கு “உகாப்” என்று
சொல்லப்பட்டது
(2) அன்ஸாரிகளின் படை:
இதற்குரிய கொடியை
ஸஅது இப்னு முஆத் رضي الله عنه
அவர்களிடம் கொடுத்தார்கள்.
இந்த இரு படைபிரிவினரின்
கொடிகள் கருப்பு
நிறமுடையதாக இருந்தது.
படையின் வலப்பக்க
பிரிவிற்கு ஸுபைர் இப்னு அவ்வாம் رضي الله عنه அவர்களை
தலைவராக்கினார்கள். இடப்பக்க பிரிவிற்கு மிக்தாது இப்னு
அம்ரு رضي الله عنه அவர்களை
தலைவராகினார்கள். முன்பு கூறியது போல் இந்த இருவரும்தான் குதிரை வீரர்களாக இருந்தார்கள்.
கடைசி பிரிவிற்கு கைஸ் இப்னு அபூ ஸஃஸஆ رضي الله عنه
அவர்களை
தலைவராக்கினார்கள். பொது தளபதியாகவும், படையை வழி நடத்துபவராகவும் நபி صلى الله عليه وسلم அவர்களே
விளங்கினார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் சரியான
தயாரிப்பு, போர் அனுபவம் இல்லாத இப்படையுடன்
மதினாவின் மதினா
வலப்பக்கத்திலிருந்து
வெளியேறி மக்காவை
நோக்கி செல்லும் பிரதான பாதையில் சென்றார்கள்.
“ரவ்ஹா” என்ற இடத்தில் தங்கினார்கள். அப்போது,
அபுலூலுபா இப்னு அப்துல் முந்திர் رضي الله عنه அவர்களை
பிரதிநிதியாக நியமித்து
மதினா அனுப்பி
வைத்தார்கள்.
பின்பு, மக்காவின்
பாதையை தனது
இடப்பக்கத்தில் விட்டுவிட்டு
வலப்பக்கமாக “நாஸியா” என்ற
இடம் வழியாக பயணித்து
“ருஹ்கான்” என்ற
பள்ளத்தாக்கை கடந்தார்கள்.
ஒரு குறுகலான வழியாக சென்று ஸஃப்ரா என்ற இடத்தில் தங்கினார்கள். அப்போது பஸ்பஸ் இப்னு அம்ர் அல்
ஜுஹனி, அதி இப்னு
அபூஸக்யா அல் ஜுஹ்னி رضي الله عنهما
ஆகிய இருவரையும்,
பத்ரு பள்ளத்தாக்கிற்கு
சென்று குரைஷிகளின்
வியாபாரக் கூட்டத்தின் செய்தியை துப்பறிந்து
வருமாறு அனுப்பினார்கள்.
இப்போது மக்காவாசிகளின்
படையை பற்றி பார்ப்போம்...
மக்கா குரைஷிகள் தங்களை
சுற்றியுள்ள அரேபியர்களை
ஒன்று சேர்த்தார்கள்
அதில் “அதீ”
கிளையிலிருந்து ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை.
இதற்கு என்ன காரணம் என்பதை பிறகு பார்ப்போம்.
மக்கா படை புறப்படும்
போது அதில் 1300 வீரர்கள் இருந்தனர். இவர்களிடம் 100
குதிரைகளும், 600 கவச ஆடைகளும், இன்னும்
குறிப்பிட்டு
சொல்லமுடியாத அதிக அளவிலான ஒட்டகங்கலும்
இருந்தன. இந்த படையின்
பொதுத்தலைவராக
அபூஜஹல் இருந்தான். இந்த படைக்கு செலவு
செய்வதற்குரிய பொறுப்பை ஒன்பது குரைஷிகளின்
முக்கியமானவர்கள் ஏற்றுக் கொண்டனர். மதினாவில் உள்ள
முஸ்லிம்களை தாக்கி
அவர்களை அழிக்க வேண்டும், அதன் மூலம் இஸ்லாம்
பரவுவதை
தடுத்துவிடலாம்,
மக்காவும் பாதுகாப்புடன்
தங்களது கட்டுப்பாட்டில்
இருக்கும் என்ற உத்வேகத்தில்
மிகுந்த ஆத்திரத்துடன்
புறப்பட்டார்கள்.
மக்கவின் வலப்புறமாக
புறப்பட்டு, “உஸ்வான்”
பள்ளத்தாக்கு, பின்பு
குகைத், பிறகு
கஜுஹ்பாவை அடைந்தனர்.
இப்போது, அபுசுப்யான் ஒரு தந்திரம் செய்கிறார், வழியில்
செல்வோரிடம் மதினாவின்
படையை குறித்து கேட்டு, உறுதி செய்து கொள்கிறார்.
மக்கா நோக்கி செல்லும் தனது பாதையை
மாற்றிவிடுகிறார், இதன் மூலம் பாதுகாப்பாக மக்கா
சென்று விடலாம் என்று எண்ணி செல்கிறார். அவரது
எண்ணமும் ஈடேறுகிறது.
இதன் செய்தியை
அபுஜஹலுக்கு தெரிய
படுத்துகிறார்.
இந்த அபுசுப்யானின்
செய்தியை அறிந்த மக்கா
படையினரிடயே பிளவு ஏற்படுகிறது. சிலர் திரும்பி
சென்று விடுவோம்
என்கின்றனர். அதற்கு
அபூஜஹல் சம்மதிக்கவில்லை.
காரணம், அவன்
முன்கூட்டியே திட்டமிட்ட செயல் அல்லவா இது. எப்படி
பின் வாங்குவான்? கர்வத்துடன்
கூறினான். “பதுருக்கு
செல்வோம், மூன்று நாட்கள் தங்குவோம், ஒட்டகங்களை
அறுத்து சாப்பிடுவோம்,
மது அருந்துவோம், அடிமை பெண்கள் இசைபாடுவார்கள்.
இதனை மற்ற அரேபியர்களும்
அறிந்து கொள்வார்கள்,
இனிமேல் அவர்களும் நமக்கு பயந்து வாழ்வார்கள்” என்று
கூறுகின்றான்.
ஆனால், இவனுடைய
கருத்துக்கு எதிராக அக்னஸ் இப்னு ஷரீக் திரும்பியே
ஆகவேண்டும் என்று
கூறினார். ஆனால் யாரும் காதில் வாங்கிகொள்ள
வில்லை. ஆனால், ஜுஹ்ரா கிளையினர் மட்டும் இவரது
பேச்சுக்கு கட்டுபட்டனர். இந்த
போருக்கு அக்னஸ் தான் ஜுஹ்ரா கிளையினரின்
தலைவராக இருந்தார். எனவே ஜுஹ்ரா கிளையினர் எவரும்
போரில் கலந்து
கொள்ளாமால் திரும்பினர்.
இவர்கள் ஏறக்குறைய 300 பேர்
இருந்தார்கள்.
(போர் முடிந்து,
குரைஷிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பார்த்து, அக்னஸ்
எடுத்த முடிவை எலோரும்
பாராட்டினர்)
இதே போன்று ஹாஷிம்
கிளையினரும்
திரும்பிவிடவே எண்ணினர், ஆனால், அபூஜஹல் அவர்களை
பலவந்தமாக இழுத்து
சென்றான். ஜுஹ்ரா
கிளையினர் 300 பேர்
நீங்களாக, மீதமுள்ள 1000 பேருடன் மக்கா படை பத்ருவை நோக்கி புறப்பட்டது. “அல் உத்வதுல்
குஸ்பா என்ற மேட்டு
பகுதிக்கு பின்னால்
தங்கினார்கள்.
தற்போது இஸ்லாமிய
படையினரின் நிலமையை அடுத்து
பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங்குடி.
பதிவு நாள்: 15-06-2017.

No comments:
Post a Comment