*🎯சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்*
*📖அல்குர்ஆன்
*يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ*
*இஸ்ராயீலின் மக்களே! உங்களுக்கு நான் வழங்கியிருந்த அருட்கொடையையும், உலக மக்கள் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தியிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்!*
*திருக்குர்ஆன் 2:47*
*🔘 2:47, 2:122* ஆகிய வசனங்களில் *"இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருந்தேன்"* என்று இறைவன் கூறுகிறான்.
🔘 பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச் சிறப்பும் பெற முடியாது என்பது இஸ்லாமியக் கோட்பாடு. *(பார்க்க : திருக்குர்ஆன் 2:111, 3:75, 49:13)* எனவே இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய *ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி* போன்ற சிறப்புக்களையே இது குறிக்கிறது.
*🔘 யஃகூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், தாவூத், ஸுலைமான், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா* உள்ளிட்ட அதிகமான இறைத்தூதர்கள் *இஸ்ரவேலர்களில்* தான் அனுப்பப்பட்டனர்.
🔘 இந்தச் சிறப்பு மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை. திருக்குர்ஆனின் *5:20 வசனம்* இதைத் தெளிவாகவே கூறுகிறது.
🔘 ஆன்மிக நிலையைப் பொறுத்தவரை நன்மையை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு சிறந்த சமுதாயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் திகழ்வதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. *(பார்க்க : திருக்குர்ஆன் 2:143, 3:110)*
🔘 இந்தச் சிறப்பு இஸ்ரவேலர்களுக்கு இல்லை. *2:47, 2:122* ஆகிய வசனங்களில் *"சிறப்பித்திருந்தேன்"* என்ற இறந்தகால வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
🔘 ஒரு காலத்தில் அவர்களுக்குச் சில வசதிகள் வழங்கப்பட்டதை இது குறிக்குமே தவிர காலாகாலத்துக்கும் அவர்கள் சிறப்புற்று விளங்குவார்கள் என்ற கருத்தைத் தராது.
🔘 சிறப்பிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் பின்னர் இறைவனின் கடுமையான கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளானதாகத் *திருக்குர்ஆன் 2:88, 2:159, 4:46-47, 5:13, 5:60, 5:64, 5:78* ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
பதிவு நாள்: 09-06-2017

No comments:
Post a Comment