Thursday, 8 June 2017

🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 12*🌙

நோன்பு - 12
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*பேச்சில் பேணுதல்!*

========================

அல்குர்ஆனில் அல்லாஹ்
பேசுவதின் ஒழுங்கு குறித்து பேசியது போன்று மனித வாழ்வின் மற்றைய வேறெந்த அம்சங்கள்
குறித்தும் மிக அதிகமாகப்
பேசியதில்லை.
உறவுகள் மேம்பட நல்லதைப்
பேசுங்கள்...

”அவர்களிடம் நல்ல
வார்த்தைகளைபக் கொண்டு
பேசுங்கள்.” (அல்குர்ஆன்:4:5)
பாவங்கள் மன்னிக்கப்பட, செயல்கள் சீராக.. நேர்மையாகப் பேசுங்கள்..

இறைநம்பிக்கை கொண்டவர்களே!
அல்லாஹ்விற்கு அஞ்சுங்கள்! மேலும்,
நேர்மையான சொல்லை
மொழியுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்
உங்கள் செயல்களைச் சீராக்குவான்; மேலும் , உங்களுடைய
குற்றங்களையும்
மன்னிப்பான்.” (அல்குர்ஆன்:33:71)
நீதியோடு பேசுங்கள்..

”இன்னும் பேசும் போது நீதியுடன் பேசுங்கள்!
(அல்குர்ஆன்:6:152)

கவனமாகப் பேசுங்கள்…

”இரு எழுத்தர்கள் அவனுடைய
வலப்புறமும், இடப்புறமும் அமர்ந்து
ஒவ்வொன்றையும் பதிவு செய்து
கொண்டிருக்கின்றனர். அவன் மொழிகிற
எந்த ஒரு வார்த்தையையும் அவர்கள் பதிவு செய்யாமல்
இருப்பதில்லை.” (அல்குர்ஆன்:50:17,18)
இன்னும் ஏராளமான வசனங்கள் இவ்வாறு பேச்சின் ஒழுக்கங்கள்
குறித்து நமக்கு வழிகாட்டுகின்றன.
அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி رحمة الله عليه அவர்கள்
கூறுகின்றார்கள். மனிதன் பேசுகின்ற
சில பேச்சுக்கள் சில போது அவனை
இறைவழிபாட்டிற்கும், சில போது
இறைநிராகரிப்பிற்கும் அழைத்துச்
சென்று விடுகின்றது.
பயனற்ற பேச்சு, வழிகேடான
சொற்கள், ஆபாசமாக பேசுவது, எல்லை கடந்த வார்த்தையாடல், பிறரை பரிகாசம் செய்தல், பிறர் ரகசியத்தை
வெளியிடுதல், பிறரை
பயமுறுத்தும் வகையில் பேசுதல்,
பொய், புறம், கோள், இட்டுக்கட்டுதல்,
அவதூறு சுமத்துதல் என்று
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم  அவர்கள்
தண்டனைக்குரிய நீண்ட பேச்சுக்களின்
வகைகளை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள்: “ ஓர் அடியான்
பின் விளைவுகளை அறியாது சில போது  யதார்த்தமாக
பேசிவிடுகிறான். அதனால் அவன்
எழுபது மைல் தூரம் நரகத்தில்
வீசப்படுகிறான்.”
இன்னும் பேச்சின் விபரீதத்தை
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் ஒரு படி மேலே சென்று
உணர்த்துகின்றார்கள்.
ஹஜ், நோன்பு, ஸதக்கா போன்ற
இபாதத்கள் ஏற்றுக் கொள்ளப்படாமல்
போவதற்கும் சில வகையான
பேச்சுக்களே காரணம் என்று.

மொத்தத்தில், ஒரு பலமொழி
சொல்லப்படுவது போன்று “பல்லக்கு
ஏறுவதும் வாயாலே.. பல்
உடைபடுவதும் வாயாலே… என்பது
போன்று வாழ்வில் மிகவும் கவனமாகப்
பேச வேண்டும்.

ஸபா நாட்டு அரசிக்கு
ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய
கடிதத்தை ஹுத் ஹுத் பறவையிடம்
கொடுத்து அனுப்பினார்கள்.
அது கொண்டு சென்று
அரசியின் மாளிகையில் கொண்டு
போட்டது. அதைப் பிரித்துப் படித்து
விட்டு அந்த அரசி உடனடியாக தம்
அரசவைக் கூட்டத்தைக் கூட்டி தம் அவைப் பிரதானிகளிடம் விவாதிக்க
ஆரம்பித்த போது…

”அரசவைப் பிரமுகர்களே! மிக
முக்கியமான, கண்ணியம் நிறைந்த
கடிதம் ஒன்று என்னிடம்
போடப்பட்டுள்ளது. அது ஸுலைமான்
என்பவரிடமிருந்து வந்துள்ளது.
மேலும், அருளாளன் அன்பாளன்
அல்லாஹ்வின் திருப்பெயரால் அது
தொடங்கப்பட்டுள்ளது. எனக்கு எதிராக
நீங்கள் ஆணவத்துடன் நடந்து
கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாய் –
பணிந்தவர்களாய் என்னிடம் வரவேண்டும்”
எனும் வாசகம் அதில் உள்ளது.”
சமுதாயத்தலைவர்களே! என்னுடைய
 இந்த விவகாரத்தில் நீங்கள் எனக்கு
 நல்லதொரு ஆலோசனையை
வழங்க வேண்டும்!”
(அல்குர்ஆன்:27:27-32) என்று கூறினார்.
இந்த இறை வசனத்திற்கு விளக்கம்
தருகிற அறிஞர் பெருமக்களில் சிலர்
”அந்த அரசி சொன்ன இந்த வார்த்தை தான்
அவருக்கும், அவரின் சமூகத்திற்கும்
இஸ்லாம் எனும் நற்பேற்றை
வழங்கியது” என்று கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم
அவர்கள் மதீனா வந்த பின்னர் அருகில்
இருக்கிற நாடாளும் மன்னர்களுக்கு
இஸ்லாமிய அழைப்பை அனுப்பி
வைத்தார்கள்.
பாரசீக மன்னர் குஸ்ரு பர்வேஸ்
என்பவருக்கும் நபித்தோழர்
அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா رضي الله عنه
அவர்களிடம் இஸ்லாமிய அழைப்பை ஏந்திய
 கடிதம் ஒன்றை
கொடுத்தனுப்பினார்கள்.
அரசவையில் நுழைந்த
அப்துல்லாஹ் رضي الله عنه  அவர்களின் தோற்றம்,
மற்றும் எளிமை ஆகியவற்றைக் கண்ட
மன்னர் உள்ளே வர அனுமதி மறுத்து, தம்
மந்திரியிடம் கடிதத்தைக்
கொடுக்குமாறு
கேட்டுக்கொண்டான்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم
அவர்கள் எனக்கு இட்ட கட்டளை மன்னரை
சந்தித்து கடிதத்தை நேரில்
கொடுப்பது தான், ஆகவே நான் தான்
மன்னரிடம் நேரில் கொடுப்பேன் என்றார்.
வேண்டா வெறுப்பாக மன்னர் அனுமதி
 வழங்க, மன்னரின் அருகே சென்று
 கடிதத்தைக் கொடுத்தார்கள்
அப்துல்லாஹ் رضي الله عنه  அவர்கள்.
கடிதத்தின் முதல் வாசகம்....
“இறைத்தூதர் முஹம்மது صلى الله عليه وسلم  அவர்கள்
மரியாதைக்குரிய பாரசீக மன்னருக்கு
எழுதிக் கொள்வது என்னவெனில்…
இதை மொழிபெயர்ப்பாளர்
கூறியது தான் தாமதம் கடிதத்தை வாங்கி
 கிழித்து எறிந்து விட்டான் மன்னன்.
அதன் பின்னர் அவன் வாயில் இருந்து வந்த
 வார்த்தைகள்.. என்ன? யார் இந்த முஹம்மது
 நபி? முதலில் அவரது
பெயர், அதன் பிறகு எனது பெயரா?
என்னவொரு அவமரியாதை? முதலில் இந்த தூதரை வெளியே
அனுப்புங்கள்.”
பல மைல் தூரம் சென்று திரும்பிய
 அப்துல்லாஹ்வை அழைத்த
பெருமானார் ஆவலுடன் கேட்டார்கள்...
பாரசீக மன்னர் என்ன சொன்னார் என்று?
அவனின் பதிலையும்,
அவனுடைய செயலையும்
அப்துல்லாஹ் رضي الله عنه  சொல்லி முடித்த
போது, பெருமானார் صلى الله عليه وسلم   அவர்கள்
“அல்லாஹ் அவனுடைய ஆட்சியையும்
கிழித்தெறிவானாக!” என்று
கூறினார்கள்.
( நூல்: அல்
பிதாயா வன் நிஹாயா )

இங்கே, இரண்டு நாடாளும்
மன்னர்களுக்கு அவர்களின் வாயில்
இருந்து வந்த வார்த்தைகளே அவர்களின்
முடிவுகளுக்கு காரணமாய்
அமைந்ததை வரலாறு நமக்கு
உணர்த்துகிறது.

ஆகவே, நம் வாயிலிருந்து நாம்
உதிர்க்கும் அந்த வார்த்தைகள் தாம் நம்
வாழ்க்கையின் கண்ணியத்தை
தீர்மானிக்கிறது.
வார்த்தையில் கண்ணியத்தைப்
பேணுவோம்! வாழ்க்கையில்
கண்ணியத்தைப் பெறுவோம்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு....

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்: 08-06-2017

No comments:

Post a Comment