Wednesday, 7 June 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 15📓

*🎯அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?*

*📖அல்குர்ஆன்

*قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ*

*"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.*

*திருக்குர்ஆன்  2:38*

 🔘ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவரைத் தான் அல்லாஹ் வெளியேற்றினான். *"அனைவரும் வெளியேறுங்கள்!"* என்று ஏன் திருக்குர்ஆனின் *2:38 வசனத்தில்* குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.

🔘 உலகம் அழியும்வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். எனவே அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

🔘 ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை இறைவன் வெளியாக்கி, *"நான் உங்கள் இறைவன் அல்லவா?"* என்று கேட்ட செய்தி திருக்குர்ஆன் *7:172* வசனத்தில் இடம்பெற்றுள்ளது

🔘ஆதம் சுமந்திருந்த அனைவரையும் கருத்தில் கொண்டு அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *08-06-2017*

No comments:

Post a Comment