Thursday, 8 June 2017

🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான் தொடர் - 13🌙

நோன்பு - 13

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه


 🌾🌾 رمضان كريم  🌾 🌾

உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

       🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

*சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள்!*

========================

சொர்க்கவாசிகளின் பண்பாக அல்லாஹ்
குறிப்பிட்டுள்ளான்.ஹ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள்
செய்வோரை சொர்க்கத்தில் உள்ள
மாளிகையில்
குடியமர்த்துவோம்.
அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில்
நிரந்தரமாக
இருப்பார்கள்.உழைத்தோரின் கூலி
அழகானது. அவர்கள் பொறுமையைக்
கடைப்பிடிப்பார்கள்.
தமது
இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
அல்குர்ஆன் 29:58, 59
பின்வரும் செய்தியிலிருந்தும்
பொறுமை சொர்க்கவாசிகளுக்குரிய தகுதி என்பதை அறியலாம்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم  அவர்கள் அன்சாரிப் பெண்களிடம்,
“உங்களில் ஒருவருடைய மூன்று
பிள்ளைகள் (பருவ வயதை அடைவதற்குமுன்) இறந்தும் அப்பெண்
நன்மையை எதிர்பார்(த்து பொறுமை
கா)த்தால், அவர் சொர்க்கத்தில்
நுழையாமல் இருப்பதில்லை” என்று
கூறினார்கள்.
அப்போது அப்பெண்களில் ஒருவர்,
“அல்லாஹ்வின் தூதரே! இரு
பிள்ளைகள் இறந்தாலுமா?” என்று
கேட்டார். “இரு பிள்ளைகள்
இறந்தாலும்தான்” என்று அல்லாஹ்வின்
தூதர் صلى الله عليه وسلم  அவர்கள்
விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் அபூஹூரைரா رضي الله عنه , முஸ்லிம் 5129

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும்
இறைவனிடமே திரும்பும் குணம்
சொர்க்கவாசிகளின் குணம் என அல்லாஹ்
கூறுகிறான்.பிறகு எப்படி அதைக்
குறிப்பிடாமல் இருக்க இயலும்? நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்து, தமது இறைவனை நோக்கித்
திரும்பியோரே சொர்க்கவாசிகள்.
அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்குர்ஆன் 11: 23

மறுமை நாளில் அல்லாஹ்வின்
முன்னிலையில் நிறுத்தப்பட்டு
விசாரிக்கப்படுவோம் என்ற இறை பயம்
சொர்க்கம் செல்வோரின் முக்கியத்
தகுதியாக அங்கம் வகிக்கின்றது.
தமது இறைவன் முன் நிற்பதை
அஞ்சியவருக்கு இரண்டு சொர்க்கச்
சோலைகள் உள்ளன. அல்குர்ஆன் 55:46
உங்கள் இறைவனிடமிருந்து
கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள்
மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட
சொர்க்கத்திற்கும் விரையுங்கள்!
(இறைவனை) அஞ்சுவோருக்காக அது
தயாரிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 3 :133
(இறைவனை) அஞ்சுவோர் சொர்க்கச்
சோலைகளிலும், நீரூற்றுகளிலும்
இருப்பார்கள். அல்குர்ஆன் 15:45

அல்லாஹ் ரசூலுக்கு எதிராக யார் என்ன சொன்னாலும் அதை ஏற்க மாட்டார்கள், அவர்கள் பெற்றோராக
இருப்பினும் அல்லாஹ் ரசூலுக்கே
முன்னுரிமை வழங்குவார்கள் என்று
அல்லாஹ் சொர்க்கவாசிகளை பற்றி
தெரிவிக்கிறான்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும்
நம்பும் சமுதாயத்தினர்
அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை
நேசிப்பதை நீர் காண மாட்டீர்.அவர்கள்
தமது பெற்றோராக இருந்தாலும்,
பிள்ளைகளாக இருந்தாலும்,
சகோதரர்களாக இருந்தாலும், தமது
குடும்பத்தினராக இருந்தாலும்
சரியே!அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ்
நம்பிக்கையைப் பதித்து விட்டான்.
தனது ரூஹு மூலம்
அவர்களைப் பலப்படுத்தியுள்ளான்.
அவர்களைச் சொர்க்கச் சோலைகளில்
நுழையச் செய்வான்.
அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.அதில்
நிரந்தரமாக இருப்பார்கள்.
அவர்களை
அல்லாஹ் பொருந்திக் கொண்டான்.
அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக்
கொண்டனர்.அவர்களே அல்லாஹ்வின்
கூட்டத்தினர். கவனத்தில் கொள்க!
அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி
பெறுபவர்கள். அல்குர்ஆன் 58:22

திருக்குர்ஆனின் மேலும் சில
இடங்களில் அல்லாஹ் சொர்க்கவாசிகளின்
பண்புகளை, சொர்க்கம் செல்ல
தகுதியானவர்களை மிக விரிவாகவே
விளக்குகிறான்.பல்வேறு குணங்களை
குறிப்பிட்டு அவை யாவும் சொர்க்கம்
செல்ல விரும்புவோரிடம்
குடிகொண்டிருக்கும் என்பதாக
அல்லாஹ் தெரிவிக்கிறான்.
அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை
நிறைவேற்றுவார்கள்.உடன்படிக்கையை
முறிக்க மாட்டார்கள்.
இணைக்கப்பட
வேண்டும் என அல்லாஹ் கட்டளை
இட்டவற்றை (உறவினரை) இணைத்துக்
கொள்வார்கள்; தமது இறைவனுக்கு
அஞ்சுவார்கள்; கடுமையான
விசாரணைக்கும் அஞ்சுவார்கள்.அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி
பொறுமையை
மேற்கொள்வார்கள்.தொழுகையை
நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து
இரகசியமாகவும்,
வெளிப்படையாகவும் (நல்வழியில்)
செலவிடுவார்கள். நன்மை மூலம்
தீமையைத் தடுப்பார்கள்.
அவர்களுக்கே
அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு.
அவர்களும், அவர்களின் பெற்றோர்,
மனைவியர் மற்றும் சந்ததிகளில்
நல்லோரும் நிலையான சொர்க்கச்
சோலைகளில் நுழைவார்கள்.வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும்
அவர்களிடம் வருவார்கள். நீங்கள்
பொறுமையாக இருந்ததால்
உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்.
இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு)
நல்லதாக உள்ளது (என்று வானவர்கள்
கூறுவார்கள்).ஹ
அல்குர்ஆன் 13 20,21,22,23,24

அல்முஃமினூன் எனும் 23வது
அத்தியாயத்தின் துவக்கத்தில்
முஃமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லிவிட்டு அந்த வெற்றிக்கு வித்திட்ட குணங்கள்
யாவை என்பதை அல்லாஹ்
பட்டியலிட்டு கூறுகிறான். இவைகள்
தான் முஃமின்களை வெற்றி பெறச்
செய்து சொர்க்கம் நுழைய தகுதியாக்கியது
 என்று பின்வரும்
வசனங்கள் சான்றளிக்கின்றன.
நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்.
(அவர்கள்) தமது தொழுகையில்
பணிவைப் பேணுவார்கள்.வீணானதைப்
புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும்
நிறைவேற்றுவார்கள். தமது
மனைவியர் அல்லது தமது அடிமைப்
பெண்களிடம் தவிர தமது கற்பைக்
காத்துக் கொள்வார்கள்.அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர். இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே
வரம்பு மீறியவர்கள். தமது
அமானிதங்களையும்,
உடன்படிக்கையையும் அவர்கள்
பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது
தொழுகைகளைப் பேணிக்
கொள்வார்கள்.
பிர்தவ்ஸ் எனும்
சொர்க்கத்திற்கு அவர்களே
உரிமையாளர்கள்.
அதில் அவர்கள்
நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 23:1
11

*சொர்க்கவாசிகள் மூவர்*

ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும்
சொர்க்கவாசிகளின் தகுதிகளை அதிகம்
காண்கிறோம். நபி صلى الله عليه وسلم
அவர்களும் சொர்க்கம் செல்ல தகுதி
பெறச் செய்யும் பண்புகள் யாவை
என்பதை விலாவரியாக விளக்கிக்
கூறியுள்ளார்கள். பின்வரும்
செய்தியில் சொர்க்கம் செல்லும்
மூன்று நபர்களை பற்றி விளக்கி
இம்மூன்று குணங்கள் முக்கியத் தகுதி
என்பதை வலியுறுத்துகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم   அவர்கள் ஒரு
நாள் உரையாற்றியபோது
பின்வருமாறு கூறினார்கள்:
மேலும், சொர்க்கவாசிகள் மூவர் ஆவர். ஒருவர், நீதிநெறி வழுவாமல்
வாரி வழங்கி நல்லறம் புரிய
வாய்ப்பளிக்கப்படும் அரசர்.இரண்டாமவர்,
உறவினர்களிடமும் மற்ற
முஸ்லிம்களிடமும் அன்புடனும்
இரக்கத்துடனும் நடந்துகொள்பவர்.
மூன்றாமவர், குழந்தை குட்டிகள் இருந்தும்
 (தவறான வழியில்
பொருளீட்டிவிடாமல்)
தன்மானத்துடனும்
சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர்.
அறிவிப்பவர் இயாள் பின் ஹிமார் رضي الله عنه
முஸ்லிம் 5498

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங்குடி.

பதிவு நாள்: 09-06-2017

No comments:

Post a Comment