நோன்பு - 14
السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه
🌾🌾 رمضان كريم 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!
بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين
☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕
🌙 *மனிதனை புனிதனாக்க வந்த ரமலான்*🌙
🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋
சொர்க்கத்தில் நுழைவதற்கான தகுதிகள் -2
========================
அல்லாஹ் ரசூலுக்குக்
கட்டுப்படும்போதுதான் ஒருவன் உண்மை முஸ்லிமாக இருக்கிறான்.
சொர்க்கம் செல்ல தகுதி பெறச் செய்யும்
குணங்களில் அல்லாஹ் மற்றும் அவன் தூதருக்கு கட்டுப்படுதல் என்பது மிக முக்கியமான அம்சமாகும்.
இதை பல குர்ஆன் வசனங்களும்,
ஹதீஸ்களும் வலியுறுத்துகின்றன.
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் யார் கட்டுப்படுகிறாரோ
அவரை சொர்க்கச் சோலைகளில் அவன்
நுழையச் செய்வான்.
அவற்றின்
கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும்.யார்
புறக்கணிக்கிறாரோ அவருக்குத்
துன்புறுத்தும் வேதனை அளிப்பான்.
அல்குர்ஆன் 48:17
இவை அல்லாஹ்வின்
வரம்புகள்.அல்லாஹ்வுக்கும், அவனது
தூதருக்கும் கட்டுப்படுவோரை
சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான்.
அவற்றின் கீழ்ப்பகுதியில்
ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக
இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
அல்குர்ஆன் 4:13
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், “என் சமுதாயத்தார்
அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க
மறுத்தவரைத் தவிர” என்று கூறினார்கள்.
மக்கள், “அல்லாஹ்வின்
தூதரே!ஏற்க மறுத்தவர் யார்?” என்று
கேட்டார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், “எனக்குக்
கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்;
எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை)
ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று
பதிலளித்தார்கள். அறிவிப்பவர்
அபூஹூரைரா رضي الله عنه , புகாரி 7280
அல்லாஹ் மட்டுமே வணங்கப்படவும்,
துதிக்கப்படவும் பள்ளிவாசலை கட்டிட
பொருளாதார உதவியை
செய்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தை
பரிசாக அளிப்பதிலிருந்து
சொர்க்கவாசிகளின் தகுதிகளில் இதுவும் அடங்கும் என்பதை
புரியலாம்.
உஸ்மான் رضي الله عنه அவர்கள் அல்லாஹ்வின்
தூதரது (மஸ்ஜிதுந் நபவீ)
பள்ளிவாசலை (நபியவர்களின்
காலத்திலிருந்த அமைப்பை மாற்றி
விரிவுபடுத்திக்) கட்டத்
திட்டமிட்டபோது அது குறித்து மக்கள்
(ஆட்சேபனை) கூறினர். அப்போது
உஸ்மான் رضي الله عنه அவர்கள் (மக்களிடம்)
“நீங்கள் (உங்கள் எதிர்ப்பை) அதிகமாக்கி
விட்டீர்கள். யார் பள்ளிவாசல் ஒன்றைக்
கட்டுகிறாரோ அது போன்ற ஒன்றை
சொர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ்
கட்டுகிறான்” என நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறியதை நான்
செவிமடுத்துள்ளேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உபைதுல்லாஹ்
அல்கவ்லானீ رحمة الله عليه , புகாரி 450
பள்ளியுடன் தொடர்பு
சொர்க்கம் செல்லும் தகுதி பெற்றவர்
பள்ளிவாசலுடன் அதிகத் தொடர்பில்
இருப்பார் என்று நபிகள் நாயகம்
கூறியுள்ளார்கள்.
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பள்ளிவாசலுக்கு
(வணங்குவதற்காகச்) சென்று வந்தால்
அவர் ஒவ்வொரு முறை சென்று
வரும்போதும் அவருக்காக அல்லாஹ்
சொர்க்கத்தில் அவருடைய
மாளிகையை ஆயத்தப்படுத்துகிறான்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா رضي الله عنه , புஹாரி.
நோய்வாய்ப்பட்டவர்களை நலம்
விசாரிப்பது சொர்க்கவாசிகளின்
குணமாகும்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள்
கூறினார்கள்: நோயாளியை நலம்
விசாரித்துக் கொண்டிருப்பவர்,
திரும்பி வரும்வரை சொர்க்கத்தின்
கனிகளைப் பறித்துக்
கொண்டிருக்கிறார்.
அறிவிப்பவர் : ஸவ்பான் رضي الله عنه , முஸ்லிம்
ஒரு அடியார் நல்லறங்கள் சங்கமிக்கும்
சங்கமமாக இருப்பார் எனில் அவர்
சொல்லும் தகுதியைச் சந்தேகமறப்
பெறுகிறார் என்று நபிகள் நாயகம் صلى الله عليه وسلم
கூறியுள்ளார்கள்.
அபூபக்கர் رضي الله عنه அவர்கள் தொடர்புடைய
நிகழ்வில் நபிகள் நாயகம் صلى الله عليه وسلم கூறிய
இத்தகவலை பின்வரும் நிகழ்வில்
அறிந்து கொள்கிறோம்.
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم
அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில்
நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று
கேட்டார்கள். அபூபக்ர் رضي الله عنه அவர்கள்
“நான்’ என்றார்கள். “இன்றைய தினம்
உங்களில் ஜனாஸாவை (பிரேதம்)
பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று
கேட்டார்கள். அபூபக்ர் رضي الله عنه அவர்கள்
“நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர்
ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?”
என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் رضي الله عنه அவர்கள் “நான்’ என்றார்கள்.
“இன்றைய தினம் ஒரு நோயாளியை
உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?”
என்று அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم
அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் رضي الله عنه அவர்கள்
“நான்’ என்றார்கள். அப்போது
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள், “எந்த
மனிதர் (நல்லறங்களான) இவை
அனைத்தையும் மொத்தமாகச்
செய்தாரோ அவர் சொர்க்கத்தில்
நுழையாமல் இருப்பதில்லை”
என்றார்கள்.
அறிவிப்பவர் அபூஹூரைரா رضي الله عنه , முஸ்லிம். 1865
கடமையல்லாத நாமாக விரும்பித்
தொழும் உபரியான தொழுகைகளும்
சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும்
ஓர் தகுதியாகும். இதைத் தெரிவிக்கும்
சான்றுகள் கணக்கற்ற
வகையில் இருந்தாலும் பிலால் رضي الله عنه அவர்களின்
நிகழ்விலிருந்து தெளிவாக
அறிந்து கொள்ளலாம்.
(ஒரு நாள்) அதிகாலைத்
தொழுகையின் போது அல்லாஹ்வின்
தூதர் صلى الله عليه وسلم அவர்கள் பிலால்
அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில்
இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர்
கருதிச் செய்துவரும் நற்செயல்
ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில்,
சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை
எனக்கு முன்னால் நான்
செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.
அதற்கு பிலால் رضي الله عنه அவர்கள், “நான்
இஸ்லாத்தில் இணைந்த பிறகு
பயனுள்ளதாகக் கருதி அப்படி
(பிரமாதமாக) எந்த நற்செயலையும்
செய்யவில்லை. ஆயினும், நான்
இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில்
முழுமையாக உளு செய்தாலும், அந்த
உளூ மூலம் நான் தொழ வேண்டும் என
அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள
அளவுக்கு (கூடுதல் தொழுகை
யை)த் தொழாமல் இருந்ததில்லை.
(இதுவே இஸ்லாத்தில் நான் செய்த
பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)”
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூஹூரைரா رضي الله عنه , முஸ்லிம் 4854
சொர்க்கம் செல்பவருக்கு என்னென்ன
தகுதிகள் இருக்க வேண்டும்,
எதையெல்லாம்
சொர்க்கவாசிகளுக்குரிய தகுதிகளாக
அல்லாஹ், ரசூல் குறிப்பிடுகிறார்கள்
என்பதை
அறிந்து கொண்டோம். இந்த
அடிப்படையில் நன்மைகளைச் செய்து,
நல்லடியார்களாக மரணிக்கிற
பாக்கியத்தை நம் அனைவருக்கும்
அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!
ஆமீன்!
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
தொகுப்பு...
S. S. ஷேக் ஆதம் தாவூதி.
கடலங் குடி.
பதிவு நாள்: 10-06-2017

No comments:
Post a Comment