இஸ்லாம் கூறும் சமய நல்லிணக்கம்
இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களின் உரிமையை, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவற்றை ஒரு முஸ்லிம் நிறைவேற்றி சமய நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உலகில் இஸ்லாம் வழங்கிய மத உரிமை, மத சுதந்திரம், மத சகிப்புத்தன்மை போன்ற சமய நல்லிணக்க ஊக்குவிப்புகளை வேறெந்த மதமும் இந்தளவு பேணியதில்லை.
இஸ்லாம் வகுத்தளித்துள்ள நெறிகளில் சமய நல்லிணக்கமும் ஒன்று. இதைப் பயபக்தியுடன் கடைப்பிடித்தாக வேண்டிய கடமை உணர்வு அனைத்து முஸ்லிம்களுக்கும் உண்டு. சமய நல்லிணக்கம் பேணுவதை மனித நேயக்கோட்பாடாகவும் மார்க்க நெறியாகவும் இஸ்லாம் வகுத்துள்ளது.
சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து சமயப் பிணக்கு உருவாகக் காரணம் என்ன? யாருடைய தெய்வம் சிறந்தது? பெரியது என்கிற முரட்டு வாதம்தான் காரணம். இந்தப் பிணக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அழகானதொரு தீர்வை இஸ்லாம் கண்டுள்ளது.
‘‘உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான். அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்பாளன்.’’ (திருக்குர்ஆன்–6:163)
‘‘அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்’’ (திருக்குர்ஆன்–2:139)
‘‘அவனே உங்களுக்கும், உங்கள் முன்னோர்களுக்கும் இறைவன் ஆவான்’’ (திருக்குர்ஆன்–44:8)
யார் கடவுள் சிறந்தது? உயர்ந்தது என்ற பிணக்குகளால் பிரிந்து கிடந்த சமயத்தை, உங்கள் யாவருக்கும் அவன்தான் இறைவன் என்று இஸ்லாம் கூறி, சமய நல்லிணக்கத்தை தழைத்தோங்கச் செய்கிறது.
ஒருவர் தான் வழிபடும் கடவுளைப் புகழ்ந்தும், பிறர் வழிபடும் கடவுளை இகழ்ந்தும் பேசுவது சமய நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தி விடுகிறது. மற்ற தெய்வங்களை நினைக்காவிட்டாலும், அவற்றை நிந்திக்கக் கூடாது என திருக்குர் ஆன் பின்வருமாறு அறிவுறுத்துகிறது:
‘‘அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பு மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக அமைத்துள்ளோம்.’’ (திருக்குர்ஆன்–6:108)
இன்றைய உலகில் சாதிப் பூசல்களும், மத மோதல்களும் நிகழ்வதற்கு முழு முதற்காரணம், சாதித் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் அவமானப்படுத்துவதுதான். இந்தச் செயல் சமய நல்லிணக்கத்தையே கெடுத்து விடுகிறது. இந்தப் போக்கை இஸ்லாம் அழகான முறையில் மாற்றிக் காட்டியது. ஏனைய சமயங்களையும், சமயத் தலைவர்களையும், மதிக்கக் கற்றுக் கொடுத்த முதல் வேதமே திருக்குர்ஆன்தான்.
‘‘(இறை நம்பிக்கையாளர்களே!) நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)தையும், இப்ராகீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், ஏனைய இறைத் தூதர்களுக்கு அவர்களின் இறைவனிடம் இருந்து வழங்கப்பட்டதையும் நம்புகிறோம். அவர்கள் யாருக்கிடையிலும், எந்த வேற்றுமையும் பாராட்டுவதில்லை. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்த முஸ்லிம் களாக இருக்கிறோம் என்று கூறுவீர்களாக’’ (திருக்குர்ஆன்–2:136)
சமயத்தலைவர்களுக்கிடையே பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாகப் பார்ப்பவர்களே உண்மையான முஸ்லிம்கள். முந்தைய சமயங்கள் சமர்ப்பித்த வேதங்களையும், அதற்காக உழைத்த மதத் தலைவர்களையும் போற்றிய மார்க்கம், இஸ்லாம். 1436 ஆண்டுகளுக்கு முன்பு அதை உண்மைப்படுத்தியது, அன்றைய உலகில் வரலாறு காணாத சமய நல்லிணக்கமாகும்.
ஒருவரின் மத நம்பிக்கையை இன்னொருவர் மீது திணிப்பது இஸ்லாமிய கொள்கையின்படி கூடாது. சமய நல்லிணக்கத்திற்கு எதிரான மதத் திணிப்பை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றதில்லை.
‘‘(இஸ்லாமிய) மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை.’’ (திருக்குர் ஆன்–2:256)
‘‘விரும்புபவர் (சத்தியத்தை) நம்பட்டும். விரும்பாதோர் நிராகரித்து விடட்டும்’’ (திருக்குர் ஆன்–18:29)
சமய நல்லிணக்க பாதுகாவலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமயப் பாதுகாப்பும், ஆலயங்களின் பாதுகாப்பும் வழங்கி, சமய சார்பற்ற அரசை நிறுவி, சமய நல்லிணக்கம் தழைக்க அரும்பாடுபட்டார்கள்.
சமயப் பாதுகாப்பையும், அனைத்து சமயத்தாரின் ஆலயங் களின் பாதுகாப்பையும் பற்றி இதோ திருக்குர்ஆன் பேசுகிறது:
‘‘மனிதர்களில் சிலரைக் கொண்டு சிலரை இறைவன் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும், கிறிஸ்தவக் கோவில் களும், யூதர்களின் ஆலயங்களும், இறை நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்’’ (திருக்குர்ஆன்–22:40)
பூமியில் உள்ள அனைவரும் ஒரேவிதமான நம்பிக்கை உள்ளவராக இருக்க வேண்டும் என நினைப்பது இயற்கைக்கு எதிரானது மட்டுமல்ல; சமய நல்லிணக்கத்திற்கும் எதிரானதுதான்.
‘‘மேலும் உம் இறைவன் நாடினால், பூமியில் உள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே மனிதர்கள் யாவரும் மூமீன்களாக ஆகி விட அவர்களை நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது.’’ (திருக்குர்ஆன்–10:99)
‘‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்’’ (திருக்குர்ஆன்–109:6)
இவ்வாறு இஸ்லாம் சமய நல்லிணக்கத்தை முக்காலத்திலும் பேணி வருகிறது.
ஒரு யூதரின் பிரேதத்தைக் கண்டு எழுந்து நின்று நபிகளார் மரியாதை செலுத்தியது, மகத்தான சமய நல்லிணக்கமாகும்.
நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் சென்றபோது எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், ‘‘அது யூதரின் சடலம் எனக் கூறப்பட்டது.’’ அதற்கு நபிகளார், ‘‘அவர் மனிதரில்லையா?’’ என்று பதில் கூறினார்கள். (புகாரி–1312)
சமய நல்லிணக்கம் காப்பது இறை வாக்கும் இறைத்தூதரின் போக்கும் ஆகும்.
–அ.செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

No comments:
Post a Comment