Saturday, 13 May 2017

திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 1

*📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 1📓*

 *🎯மறைவானவற்றை நம்புதல்*

*📖அல்குர்ஆன்👇🏻👇🏻*


*الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ*

*அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.*

*திருக்குர்ஆன்  2:3*

🔘ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி மறைவானவற்றை நம்புவது என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை நம்புவதைக் குறிக்கும்.

*🔘 அல்லாஹ், வானவர்கள், சொர்க்கம், அதில் கிடைக்கும் இன்பங்கள், நரகம்,* அதில் அமைக்கப்பட்ட பல்வேறு தண்டனைகள், நியாயத் தீர்ப்பு நாள், அந்நாளில் ஏற்படும் அமளிகள் போன்றவற்றைக் கண்ணால் காணாமல் இருந்தும் நம்புவது தான் மறைவானவற்றை நம்புதல் எனத் திருக்குர்ஆனில் *(2:3)* கூறப்பட்டுள்ளது.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 13-05-2017

No comments:

Post a Comment