*நபிவழி மருத்துவக் குறிப்புகள்*
1.இளைத்த உடம்புக்கு சிகிச்சை
அன்னை ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:"நபி (ஸல்) அவர்களுடன் என்னை அனுப்பி வைத்திட என் தாய் விரும்பிய போது, எனது இலைத்த உடலை பருமனாக்க என் தாய் வைத்தியம் செய்யலானார்.ஆனால், எதுவும் மாற்றம் தெரியவில்லை.இறுதியாக நான் பேரித்தம பழத்துடன் வெள்ளரிக்காய் சாப்பிட ஆரம்பித்தேன்.பிறகு நடுத்தரமான உடல் பருமனை அடைந்தேன்."
(இப்னுமாஜா:3324)
2.வயிற்று வலிக்கு
அபூஹுரைரா (ரழி) கூறியதாவது:"நான் தொழுத பின்பு அண்ணலாரின் சமூகத்தில் வந்து உட்கார்ந்து கொண்டேன்.என்னைக் கவனித்த அண்ணலார் 'உமக்கு வயிற்று வலியா?' என்றார்கள்.நான் 'ஆம்' என்றேன்.'எழுந்து தொழுதிடுங்கள்.தொழுகையில் நிவாரணமுன்டு' என்றார்கள் அண்ணலார்.
(இப்னுமாஜா:3548)
3.நோயைத் தவிர்த்திட
"பாத்திரங்களை மூடி வையுங்கள்.ஏனெனில் வருடத்தில் ஓர் இரவு தொற்று நோய் இறங்குகிறது.எந்த வீட்டில் பாத்திரம் திறந்து கிடக்கிறதோ,அதில் அந்த நோய் இறங்கி விடுகிறது என நபி (ஸல் )கூறினார்கள்.
(முஸ்லிம்:5255)
4.உடல் வலிக்கான சிகிச்சை
நபி ஸல் அவர்களின் சமூகம் சென்ற உதுமான் பின் அபுல் ஆஸ் ரழி அவர்கள் தமது உடல் வலி பற்றிக் கூறினார்கள்.அதற்கு நபியவர்கள் 'எங்கு வலி உள்ளதோ, அங்கு கையை வைத்து மூன்று முறை 'பிஸ்மில்லாஹ் 'கூறி கீழ்க்கண்ட துஆவை ஏழு தடவை ஓதுங்கள் 'எனப் பகர்ந்தார்கள்.
اعوذ بعزة الله وقدرته من شر ما اجد واحاذر
(அஊது பிஇஜ்ஜதில்லாஹி வகுத்ரதிஹி மின் சர்ரி மா அஜிது வஉஹாதிரு)
பொருள்:அல்லாஹ் மற்றும் அவனது ஆற்றலைக் கொண்டு நான் அஞ்சுகின்ற எனது வலியிலிருந்து நிவாரணம் வேண்டுகிறேன்.
அவ்வாறே செய்து அந்த ஸஹாபி சுகமடைந்தார்.பிறகு தமது குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் இதையே ஓதிவிட்டார்.
(முஸ்லிம்:5737)

No comments:
Post a Comment