Thursday, 4 May 2017

ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 9

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 9

🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

ஆனால் என்றாவது ஒருநாள் என் ஆசைக்கு அவர் இணங்கவில்லை என்றால் அவர் நிச்சயம் சிறையில் அடைக்கபடுவார் அவர் இழிவானவர்களில் உள்ளவராக மாறிவிடுவார் என்று கூறினாள்.
இதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர் அல்லாஹுவிடம் பிராத்தித்தார் என்னுடைய ரட்சகனே இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறாரோ அதைவிட எனக்கு சிறைச்சாலையே எனக்கு  மேலானது  இப்பெண்களின் சூழ்ச்சியில் இருந்து நீ என்னை காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவேனோ என்று நான் அஞ்சுகிறேன் மேலும் அறிவீனர்களில் ஒருவராக நான் ஆகிவிடுவேன் என்று கூறினார் இந்த பிரார்த்தனையை அங்கிகரித்த அல்லாஹ் அந்த பெண்களின் சூழ்ச்சியை திருப்பிவிட்டான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்.
இந்த சம்பவங்களை அறிந்த அந்நாட்டு அரசன் நம் பெண்களின் இழிவான செயலிலிருந்து அவரை காக்க அவரை சிறையில் இட்டான் பிறகு சிலகாலம் அவர் சிறை வாசம் அனுபவித்தார் சிறையில் இருக்கும் வேளையில் அல்லாஹுவின் ஆற்றலை மக்களுக்கு  எடுத்துரைத்து  இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டும் இருந்தார் இவ்வேளையில் அங்கு உள்ள சிறைவாசிகள் இருவர் கனவு கண்டார்கள் அதில் ஒருவர் நான் திராட்சை பழங்களில் இருந்து மதுரசம்  பிழிவதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் மேலும் மற்றொருவர் நான் என் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு போகும் பொழுது பறவைகள் அதை கொத்தி தின்பதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் இவ்வாறு கூறிவிட்டு அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லவராக மேலும் அறிவு ஜீவியாகவே காண்கிறோம் ஆதலால் எங்களுக்கு இதன் விளக்கத்தை எங்களுக்கு கூறும் என்று கூறினார்கள்.

🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓🎓

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 04-05-2017

No comments:

Post a Comment