Thursday, 4 May 2017

ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 10

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 10

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

இதை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ் எனக்கு அருளிய இந்த அறிவிலிருந்து நான் இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறுகிறேன் . என்று கூறி........ யார் மதுரசம் பிழிவதை போல் கனவு கண்டாயோ நீ மிக விரைவில் விடுதலையாகி உன்னுடைய முதலாளிக்கு மதுரசம் பிழிவாய் மற்றொருவன் சிலுவையில் அறையப்பட்டு இறப்பான்  இறந்தபின் அவனின் உடலை பறவைகள் கொத்தி  தின்னும் இதுவே உங்களுடைய கனவின் விளக்கம் என்று கூறினார் . மேலும் அந்த விடுதலையா இருக்கும் அந்த சிறை தோழரிடம் நீர் வெளியில் போனவுடன் என்னை பற்றி நாட்டின் மன்னனிடம் எடுத்துக்கூறும் என்று கோரிக்கை விடுத்தார் ஆனால் அவன் விடுதலை ஆனவுடன் ஷைத்தான் அவனை மறக்க செய்துவிட்டான் ஆதலால்  மேலும் சில காலம் அவர் சிறையில் இருக்க நேரிட்டது
பிறகு சிறிது காலம் சென்ற பிறகு அந்நாட்டு மன்னன் ஒரே கனவு கண்டான் அதில் நல்ல கொளுத்த பசுக்களையும் மெலிந்த பசுக்களையும் மேய்வதை கண்டேன் அதில் ஏழு பசுமையான கதிர்களும் ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன் . என் பிரதானிகளே நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் தரகூடியவராக இருந்தால்  இந்த கனவிற்கு விளக்கம் கொடுங்கள் என்று அந்த மன்னன் கேட்டான்
அதற்கு அந்த பிரதானிகள் இது பொய்யான கனவு அதற்கு விளக்கம் கொடுக்க நான் அறிந்திருக்க வில்லை என்று கூறினார்கள் இந்த சம்பவத்தை அறிந்த சிறையில்இருந்து விடுதலையான மனிதர் யூசுபை நினைவு கூர்ந்து அவர் மன்னரிடம் நான் இந்த கனவிற்கு விடை கூறுகிறேன் ஆனால் என்னை நீங்கள் சிறைகூடத்திர்க்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார் அவ்வாறே அவரை அழைத்து செல்ல அங்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் யூசுபே உண்மையாளரே எனக்கு மேலும் ஒரு  கனவிற்கு விளக்கம் தேவை என்று கூறினார்.

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 04-05-2017

No comments:

Post a Comment