Thursday, 4 May 2017

ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 11

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 11

🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

நபி யூசுப் அலைஹி வசல்லம் என்ன கனவு என்று கேட்க ஏழு கொளுத்த பசுவையும் மெலிந்த ஏழு பசுவையும் மேலும் பசுமையான ஏழு கதிரையும்  காய்ந்த ஏழு கதிரையும் கனவில் கண்டால் அதன் பொருள் என்ன என்று கேட்டார்  அதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் முதல் ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வதை போல் செய்வீர்கள் அதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பொருட்களை சேமித்து கொள்ளுங்கள் அதன் பிறகு கடுமையான பஞ்சம் ஏற்படும் அதில் உணவிற்கே கஷ்டம் வரும் அப்பொழுது சேமித்தவற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம் பிறகு ஒரு ஆண்டு வரும் அதில் மழை பொழிந்துகொண்டே இருக்கும் அப்பொழுது அனைவரும் பழரசங்கள் பிளிந்தவர்களாக  இருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார்கள் ,,
இவ்வாறே விளக்கத்தை அரசனிடம் கொண்டு சென்றார்கள் இந்த விளக்கத்தை கேட்ட அரசன் அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
அதற்கு அந்த மன்னன் அந்த பெண்களை அழைத்து நீங்கள் யூசுபை கண்டு விரும்பியபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன என்று வினவினார் அதற்க்கு அந்த பெண்கள் அல்லாஹுவின் மீது ஆணையாக நிச்சயமாக நாங்கள் யாதொரு தீங்கையும் அவரிடம் காணவில்லை மேலும் அமைச்சரின் மனைவி  உண்மை இப்பொழுது வெளிப்பட்டுவிட்டது நான் தான் அவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தேன் யூசுப் அதனை ஏற்க்கவில்லை நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவராவார் என்று கூறினாள்.


🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 04-05-2017

No comments:

Post a Comment