Thursday, 4 May 2017

ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 12

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 12

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

இவ்வாறு நான் இதனை ஒத்துகொள்ள காரணம் நிச்சயமாக மறைவாக இருந்த சமையத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக துரோகிகளின்  சூழ்ச்சிக்கு  அல்லாஹ் வழிகாட்ட மாட்டான் என்பதை அவர் அறிந்து கொள்வதற்காகத்தான் என்று கூறினாள் மேலும் நான் யூசுபின் மீது மோகம்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மை படுத்தவில்லை நிச்சயமாக ரட்சகன் அருள் புரிகின்றவர்களை அன்றி மனிதர்களுடைய மனம் பாவம் செய்ய தூண்டகூடியதாகவே இருக்கிறது நிச்சயமாக எனது ரட்சகன் மிக்க மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன் என்று அந்த பெண்  கூறினாள்.
 சிறைச்சாலையில் இருந்த  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது அறிவாற்றலை அறிந்த அந்த அரசன் அவரை அழைத்துவாருங்கள் அவரை எனக்கு மட்டும் பிரத்யோகமானவராக அமர்த்தி விடுகிறேன்  என்று கூறினார் அவ்வாறே அவரை அழைத்து வரப்பட்டு யூசுபிடம் நீர் இன்றிலிருந்து எங்களிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் உடையவராக ஆகிவிட்டீர் என்று கூறினான்.
அதற்கு  நபி யூசுப் அலைஹி வசல்லம் என்னை உங்களது நாட்டின் நிதியமைச்சராக ஆக்கி விடு என்று கோரினார் அதை பற்றி நன்கறிந்தவன் பாதுகாப்பவன் என்று கூறினார் அவ்வாறே அரசனும் அந்நாட்டு நிதியமைச்சராக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை ஆக்கினான்.
இதனை தொடர்ந்து அல்லாஹ் மூமின்களுக்கு ஒரு சுப செய்தியையும் தருகிறான்.
மேலும் விசுவாசம்கொண்டு பயபக்தியுடயவர்கலாகவும் இருந்தார்களே  அவர்களுக்கு மறுமையின் கூலி மிகவும் மேலானதாக இருக்கும்  (யூசுப்  12-57)
பிறகு சிறிதுகாலத்தில் பஞ்சம் தொடங்கிவிட்டது அனைவரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள் அப்பொழுது அரசவையில் சேமித்து வைக்கப்பட்ட பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள்.

🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 04-05-2017

No comments:

Post a Comment