Thursday, 4 May 2017

ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 13

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 13

🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷

அவரே கண்ஹானில் இருந்து யூசுபிடம்  அவர்களது சகோதர்கள் வந்தபொழுது நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களை அறிந்து கொண்டார் இவர்கள்தான் நம்முடைய சகோதரர்கள் என்று..... ஆனால் அவர்களுக்கு புலப்படவில்லை. இவர்தான் யூசுப் என்று...
இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார் செய்து அவர்களிடம் கொடுத்து நீங்கள் மறுமுறை வரும்பொழுது உங்கள் தந்தையிடம் இருக்கும் உங்களது சகோதரன் புன்யாமினையும் அழைத்து வாருங்கள் அவ்வாறு நீங்கள் வந்தால் மேலும் உங்களுக்கு தானியங்களை கொடுக்கிறேன் என்று வாக்களித்தார் அவ்வாறு நீங்கள் அழைத்து வரா விட்டால் நீங்கள் என்னை நெருங்க வேண்டாம் என்னிடம் இருந்து எந்த ஒரு பொருளும் தரப்பட மாட்டாது என்று கூறினார்.
இதனை கேட்ட அவர்கள் கூறினார்கள் நிச்சயம் அவரை அழைத்துவர நாங்கள் முயற்சிக்கிறோம் என்று   கூறிவிட்டு தங்கள் தந்தையிடம் வந்து தந்தையே எங்களுக்கு தானியம் அளப்பது நிறுத்தப்பட்டுவிட்டது நாங்கள் புன்யாமினை அழைத்து சென்று பாதுகாப்புடன் கொண்டுவருவோம் அவருடன் அதிக தானியங்களை நமக்காக வாங்கியும் வருவோம் என்று கூறினார்கள்.
அவரது தந்தை நபி யாகூப் அலைஹி  வசல்லம் அவர்கள் கூறினார்கள் இவருடைய சகோதரர் யூசுபின் விசயத்தில் உங்களை நம்பியது போதும் இவரையும் நான் இழக்க தயாராக இல்லை என்று கூறினார் மேலும் பாதுகாப்பதில் அல்லாஹுவே மேலானவன் அவனையே நான் நம்புகிறேன் என்று கூறினார்.

🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷🇬🇷

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 04-05-2017

No comments:

Post a Comment