Monday, 8 May 2017

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 16

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 16

என்று அழ தொடங்கிவிட்டார்கள் நான் அல்லாஹுவின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறேன் அவனே எங்களை சேர்த்து வைக்க போதுமானவன். .
நபி யாகூப்  அலைஹி வசல்லம் அவர்கள் அழுது அழுது அவருடைய பார்வை மங்கிவிட்டது அழுதுகொண்டே இருபதை கண்ட அவருடை பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் வேண்டுமென்றால் யூசுபை தேடி வருகிறோம் என்று கூறி மீண்டும் மிஸ்ரு நாட்டிற்கு சென்று அங்கு மீண்டும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் அமைச்சரே எங்களுடைய தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார் எங்களுக்கு மேலும் நல்ல தானியங்கள் நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் எங்கள் தந்தையை நன்கு  கவனித்து கொள்வோம் என்று கூறினார்கள் அப்பொழுது நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் நீங்கள் உங்கள் சகோதரன் யூசுபை என்ன செய்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா என்று கேட்டார்.
அப்பொழுது  அவர்களுக்குப் புலப்பட்டது அப்போ நீங்கள் தான் யூசுபோ என்று கேட்டார்கள் அதற்கு ஆம் நான்தான் யூசுப் இவர்தான் எனது சகோதரன் புன்யாமின் என்று கூறினார் அப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்பட்டு  எப்படி நீ மந்திரியானாய் என்று கேட்டார்கள் நாமாக இருந்தால் என்ன பதில் வந்திருக்கும் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தேன் தெரியுமா என்று ஒரு பக்கத்துக்கு கதை சொல்வோம் ஆனால்நமது தந்தை  நபி யூசுப் அலைஹி வசல்லம்  அவர்கள்  அல்லாஹ்தான்  தான் நாடியவருக்கு அருளை பொழிகிறான் அவன்தான் என்னை உயர்த்தினான்  என்று கூறினார்கள்.
அப்பொழுது அந்த பத்து பேரும் தங்கள் குற்றங்களை ஒத்து கொண்டோம் என்று கூறி அவர்கள் அஞ்சினார்கள் நம்மை யூசுப் பழிவாங்கி விடுவாரோ என்று ஆனால் அவர் தனது சகோதரர்களை பார்த்து இன்று நான் எந்த பழிவாங்கலும் நடத்தபோவதில்லை அல்லாஹ் உங்களுடைய பாவத்தை மன்னிப்பான் என்று கூறினார்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 09-05-2016

No comments:

Post a Comment