Monday, 8 May 2017

ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 15

🎗ஹஜ்ரத் யூசுஃப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 15



💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍

பிறகு சிறிது தூரம் சென்றவுடன் காவலாளிகள் அவர்களை அழைத்து நில்லுங்கள் மந்திரியின் முக்கியமான பொருள் காணமல் போய்விட்டது அதனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு ஒரு ஒட்டக நிறையாக தானியம் வழங்குவதாக அரசவையில் அறிவித்துவிட்டார்கள் நீங்கள் தான் கடைசியாக அங்கு வந்தீர்கள் நீங்கள்தான் எடுத்திருக்க கூடும் என்று அந்த காவலாளிகள் கூறினார்கள் அதற்கு புன்யாமினின் சகோதரர்கள் பத்து பேரும் நிச்சயமாக நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை அவ்வாறு எங்களிடம் அந்த பொருள் இருந்தால் அவரை நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களது தானிய மூட்டைகளை சோதித்தார்கள் யாரிடமும் இல்லை இறுதியாக புன்யாமினின் மூட்டையை சோதிக்கையில்  அதில் அந்த குவளையை கண்டதும் அதிர்ச்சியுற்றார்கள் பிறகு அந்த காவலாளிகள் நாங்கள் இவரை கைது செய்து அமைச்சரிடம் ஒப்படைக்க போகிறோம் என்று கூறினார்கள் அதற்கு அவர்கள் இவரின் தந்தை மிகவும் பலகீனமானவர் அவரிடம் இவருக்கு எந்த ஆபத்தும்  வர விடமாட்டோம் என்று அல்லாஹுவின் மீது சத்தியம் செய்து கூட்டிவந்தோம் ஆனால் இப்பொழுது எங்களில் யாரேனும் நீங்கள் கைது செய்து இவரை விட்டு விடுங்கள் என்று கோரினார்கள் ஆனால் அவர்கள் இல்லை அவ்வாறு செய்தால் நாங்கள் அனியாய காரர்களில் உள்ளவராக மாறிவிடுவோம் ஆதலால் அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம் என்று புன்யாமினை அழைத்து சென்று விட்டார்கள்.
அப்பொழுது அந்த பத்து சகோதரர்களும் என்ன செய்வது என்று அறியாமல்  இருந்தார்கள் வேறு வழியில்லை தந்தையிடம் கூறிவிடுவோம் என்று கூறி  புறப்பட்டார்கள் அங்கு தந்தையிடம் கூறியபொழுது அவர் அதனை ஏற்க வில்லை இவ்வாறுதான் நீங்கள் யூசுபை அழைத்து சென்றீர்கள் இப்பொழுது அவன் சகோதரனையும் இவ்வாரே செய்துவிட்டீர்கள்.

💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍💍

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 09-05-2016

No comments:

Post a Comment