Friday, 14 April 2017

இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் திருடனுக்கு செய்த அறிவுரை

கடைத்தெருவில் ஒருவன் பழமொன்றை திருடி அதை மற்றொருவருக்கு  
தர்மம் செய்வதை  இமாம் அபூஹனீபா (ரஹ்)  பார்த்தார்கள்.


அவன் அருகே சென்று  ஏன் இவ்வாறு செய்கிறாய்? எனக்கேட்டார்கள்.

தன்னிடம் கேள்வி கேட்பவர்  இமாம் என்பதை அறியாத அவன்

ஒன்றை திருடினால் அல்லாஹ் ஒரு மடங்கு தண்டனை தான் தருவான்

ஆனால்  அதையே தர்மம் செய்தால் ஒன்றுக்கு பத்து மடங்கு நன்மைகளைத் தருவான்

திருடியதற்கான ஒரு பாவம் போக மீதம் ஒன்பது நன்மைகள் எனக்கு கிடைக்குமல்லவா?
என்றான்.

   அவனது அறியாமையைக் கண்டு புன்னகைபுரிந்த இமாம் தம்பி ! அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றையே ஏற்றுக்கொள்வான்.

நீ செய்த தர்மம் ஏற்றுக்கொள்ளப்படாது. நீ திருடியதற்கான பாவமட்டுமே உனக்கு மிஞ்சும் என்றார்கள் இமாம் அவர்கள்.

 #இப்படித்தான் இக்காலத்தில் பலர் தாங்கள் செய்யும் பல காரியங்களுக்கு எவ்வித ஆதாரமுமின்றி தங்களுக்குத் தாங்களே பத்வா கொடுத்துக்கொள்கின்றனர்.

தாங்கள் சத்தியத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு  அசத்தியத்திற்காக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குர்ஆனிலுள்ள வசனங்களையும், நபி மொழிகளையும்  மேல் எழுந்தவாரியாக படித்துவிட்டு அவை தொடர்பாக கற்றறிந்த அறிஞர்களிடம் மீளாய்வு செய்யாமல் பத்வா கொடுக்கிறார்கள்
 
அல்லாஹ் உங்களையும், என்னையையும் மன இச்சையை பின்பற்றாத நல்லடியார்கள் கூட்டத்தில் இணைப்பானாக!
ஆமீன்.
            ----முனைவர் உமர் அய்மன் அவர்களின் அரபி பதிவிலிருந்து கணியூர் இஸ்மாயீல் நாஜி

பதிவு நாள்: 14-04-2017

No comments:

Post a Comment