📖தண்ணீரை பற்றி இறைமறை கூற்றுகள்:
اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَ
அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
(அல்குர்ஆன் : 56:68)
ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ
மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
(அல்குர்ஆன் : 56:69)
لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ
நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
(அல்குர்ஆன் : 56:70).
وَهُوَ الَّذِىْۤ اَرْسَلَ الرِّيٰحَ بُشْرًا بَيْنَ يَدَىْ رَحْمَتِهٖ وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۙ
இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே!) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.
(அல்குர்ஆன் : 25:48).
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)
பஷீர் அஹ்மத் உஸ்மானி அவர்களின் குறிப்புகள்:
தண்ணீர் ஒர்மாபெரும் அருட்கொடை!
🌏உலக அளவில் தண்ணீர் ஒருமாபெரும் பிரச்சனையாகஉருவெடுத்துள்ளது. உலகில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பல கோடிமக்கள் நீர்
பற்றாக்கறை உள்ள பகுதியில் வசிக்கின்றார்கள்
என்று ஐ.நா.சபை தெரிவிக்கின்றது.
♻எதிர்கால தண்ணீர் தேவையை மனதிற் கொண்டு சந்திரன்,
செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?அங்கு தண்ணீர் உள்ளதா?என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
☸உலகத்தில் 97.5 சதவீதம்உப்பு சுவை கொண்ட நீர் உள்ளது. மீதமுள்ள 2.5 சதவீதம்தான்
சுத்தமான நீர். அதிலும் 2.24 சதவீதம் துருவ பகுதிகளில்
பனிப்பாறைகளாகவும், மக்கள்பயன்படுத்த முடியாத நிலையிலும்உள்ளது. மீதமுள்ள 0.26 சதவீத தண்ணீரைத்தான் உலகமனைத்திலுமுள்ள மனிதர்கள் அனைவரும் குடிநீராகவும்,
விவசாயத்துக்கும் பயன்படுத்தும் நிலை
உள்ளதாக ஒரு புள்ளி விவரம்
கூறுகின்றது.
தண்ணீருக்கான சண்டைகள்நாள் தோறும் நடந்துகொண்டிருக்கின்றன. வீதிகளில் மட்டுமில்லாமல்
மாநிலங்களுக்கு இடையிலும் அது தொடருகின்றன.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *14-04-2017

No comments:
Post a Comment