கடுமையான வேதனைகள்
سَاَصْرِفُ عَنْ اٰيٰتِىَ الَّذِيْنَ يَتَكَبَّرُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَـقِّ ؕ وَاِنْ يَّرَوْا كُلَّ اٰيَةٍ لَّا يُؤْمِنُوْا بِهَا ۚ وَاِنْ يَّرَوْا سَبِيْلَ الرُّشْدِ لَا يَتَّخِذُوْهُ سَبِيْلًا ۚ وَّاِنْ يَّرَوْا سَبِيْلَ الْغَىِّ يَتَّخِذُوْهُ سَبِيْلًا ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَذَّبُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا عَنْهَا غٰفِلِيْنَ
🔛பெருமையடிப்பவர்களுக்கு மறுமையிலே கடுமையான வேதனைகள் காத்திருப்பதோடு, இம்மையிலே அவர்களுக்கு வழங்கப்படுகின்ற தண்ட னையைப் பற்றி அல்லாஹ் அருள்மறையிலே கூறுகிறான்
“நியாயமின்றி பூமியில் கர்வம் கொண்டிருப்பவர்களை எனது சான்றுகளை விட்டும் திருப்புவேன். அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். நேரான வழியை அவர்கள் கண்டால் அதை (தங்களது) வழியாகக் கொள்ள மாட்டார்கள். வழிகேடான பாதையை அவர்கள் கண்டால் அதை (தமது) வழியாக்கிக் கொள்வார்கள்.
(அல்குர்ஆன் 7:146)
♻எவர்களெல்லாம் நியாயமின்றி பெருமையடிக்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். அவர்கள் இறைவசனங்களைச் செவியேற்றாலும் அதற்கு கட்டுப்படாமல் உண்மையை உதாசினப்படுத்திய வர்களாக, அசத்தியத்திலேயே தங்களை அர்ப்பணித்தவர்களாக மாறி விடுவார்கள். இந்தப் படிப்பினையை நமக்கு புரியவைப்பதற்காக,
பெருமையடித்து வரம்பு மீறியோரின் வரலாற்றை திருமறையிலே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அவற்றில் சிலவற்றறை நாம் காண்போம்.
இறுமாப்புக் கொண்ட இப்லீஸ்
ஆதம் (அலை) அவர்களுக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் ஆணையிடும்போது, மலக்குமார்கள் இறைவனின் கட்டளைக்கு முழுமையாகக் கட்டுப்படுகிறார்கள். ஆனால் இப்லீஸ் மட்டும் இரட்சகனின் போத னைக்குப் பணியாமல் இறுமாப்பு கொண்டவனாக வழிதவறிப் போகின் றான். வானவர்களின் அவையிலே அங்கம் வகிக்கின்றஅளவிற்கு அந்தஸ்தைப் பெற்றிருந்தவன், அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவனாகவும் எச்சரிக்கப் பட்டவனாகவும் வெளியேற்றப்படுகிறான். இதைப்பற்றி அல்லாஹ் அருள் மறையில் இவ்வாறு கூறுகிறான்.
قَالَ مَا مَنَعَكَ اَلَّا تَسْجُدَ اِذْ اَمَرْتُكَ ؕ قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ ۚ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ
قَالَ فَاهْبِطْ مِنْهَا فَمَا يَكُوْنُ لَـكَ اَنْ تَتَكَبَّرَ فِيْهَا فَاخْرُجْ اِنَّكَ مِنَ الصّٰغِرِيْنَ
📖“நான் உனக்குக் கட்டளையிட்டபோது பணிவதைவிட்டும் உன்னைத்தடுத்தது எது? என்று (இறைவன்) கேட்டான். நான் அவரை விடச்சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய்! அவரைக் களிமண்ணால் படைத்தாய்!” என்று கூறினான். இங்கிருந்து இறங்கிவிடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்” என்று (இறைவன்) கூறினான்.
(அல்குர்ஆன் 7:12,13)
🎓”ஆதம் (அலை) அவர்கள் கீழ்நோக்கி விழுகின்ற களிமண்ணால் படைக் கப்பட்டவர். ஆனால் நான் எப்போதும் மேல்நோக்கி எழுகின்ற நெருப் பால் படைக்கப்பட்டவன். ஆதலால் அவரைவிட நான்தான் உயர்ந்தவன்” என்று இப்லீஸ் பெருமையடித்தான். இவ்வாறு அவன் படைப்பின்
விதத்தைக்கொண்டுப் பெருமையடித்ததால் வழிகேட்டிலே வீழ்ந்துவிட்டான்.
நூஹ் நபியை நிராகரித்தவர்கள்
فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ
950 ஆண்டுகள் அசத்தியத்திற்கு எதிராக, நூஹ் (அலை) அவர்கள் அழகிய முறையில் பிரச்சாரம் செய்தும்கூட, மிகச் சொற்பமான மக்களே அவருடைய சொற்களை செவிமடுத்தார்கள். இறைத்தூதருடைய அழைப் புக்கு வளைந்து கொடுக்காமல் அவரைப் பலவிதமாக வசைபாடியதோடு, தாங்கள் இறை மறுப்பிலே வீரியமாக வீற்றிருப்பதற்குப் பலகருத்துக்களையும் காரணங்களையும் நிராகரிப்பாளர்கள் தெரிவித்தார்கள். இவர்க ளைப்பற்றி திருமறையிலே அல்லாஹ் கூறுகிறான்
“எங்களைப்போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களைவிட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.
(அல்குர்ஆன் 11:27)
நூஹ் (அலை) அவர்களைப் பின்பற்றுபவர்கள், சிந்தனைத் தெளிவற்ற வர்கள், அறியாதவர்கள் என்று குற்றம் சாட்டினர் பெரும் தலைவர்கள். ஏழையாகவும், பெரிய பொறுப்புகளில் இல்லாதவர்களாகவும் நபி நூஹ் (அலை) அவர்களை பின்பற்றியவர்கள் இருந்ததால் எங்களை விட இவர்கள் உயர்ந்தவர்களா? எங்களின் மதிப்பு என்ன? மரியாதை என்ன? தகுதி என்ன? என்று பெருமையடித்து சத்தியத்தை ஏற்காமல் இறைவனின் கோபத்திற்கு ஆளானார்கள்.
(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)
பதிவு நாள்: *15-04-2017*

No comments:
Post a Comment