Saturday, 15 April 2017

♻இன்றைய குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்♻

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

*நாள்தோறும் ஓர் இறை வசனம்:*
بسم الله الرحمن الرحيم

(நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”

   📚 அல்குர்ஆன் 3:29

🌟💢💥🌟💢💥🌟💢💥🌟💥
*நாள்தோறும் ஓர் நபிமொழி:*

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 " அடிமை, தம் உரிமையாளருக்கு விசுவாசமாக நடந்து, அல்லாஹ்வையும் நன்முறையில் வழிபடுவாராயின் அவருக்கு இரு முறை(யினாலும்) நன்மை உண்டு."

🎭அறிவிப்பவர்:
இப்னு உமர் (ரலி)

📓நூல்:
ஸஹீஹ் முஸ்லிம் -3422
🌟⭕💢💥16-4-17💢🌟⭕💥

🌴 *கியாமத் நாளை நோக்கி குழுமம்*🌴



🍂🌱🍂🍃🌱🍂🌿🍂🌿🌿🍂

No comments:

Post a Comment