Sunday, 16 April 2017

தண்ணீர் ஒர் மாபெரும் அருட்கொடை குறித்த தொடர் - 2

ஓர் எழுத்தாளன் இப்படிசொன்னான்:

😈“மூன்றாம் உலகப்போர் அது தண்ணீருக்காக வேண்டிநடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை”.


எனவே தான் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு, தேவை, அவசியம், குறித்து மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமென
ஐநா. சபை மார்ச் 22ம் தேதியை தண்ணீர் தினமாக அறிவித்து ஒருவார காலம் உலகெங்கும்கொண்டாடப்பட வேண்டும்
என கேட்டுக் கொண்டுள்ளது.

💈ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் கழிவுகள் நீரை மாசுப்டுத்துகின்றன. இப்படி மாசுபட்ட தண்ணீரை அருந்துவதால் உலகம் முழுக்கதினமும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துபோவதாகவும், டைபாய்டு, அமீபியாசிஸ், ஜியார்டியாசிஸ்,அஸ்காரியாசிஸ், கொக்கி புழு,தோல் நோய், காது வலி, கண்நோய், வயிற்று போக்கு உள்ளிட்ட நோய் தாக்குதல் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

🌾மறுபுறம், வறட்சியாலும், நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டும், நீர்வள ஆதாரங்கள் பாதிக்கப்பட்டும் வருவதால் எதிர்காலத்தில் உலகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

🎓ஆக “நீரின்றி அமையாதுஉலகு” என்று வள்ளுவன் சொன்னது போல மனித சமுதாயத்தின் அரணாக, இயக்கமாக விளங்கும் “தண்ணீர்” பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது? என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டியஅவசியம் முழு
முஸ்லிம் உம்மாவிற்கும் உண்டு.

தண்ணீர் பற்றி இஸ்லாம்,

அல்லாஹ் கூறுகின்றான்:

“தண்ணீரிலிருந்தே நாம்தான் உயிரினங்களை(படைத்தோம்)வெளிப்படுத்தினோம்”அல்குர் ஆன்: 21:30

அல்லாஹ் கூறுகிறான்!

மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற் செய்தியாக அனுப்புகின்றான். பின்னர், வானிலிருந்து சுத்தமான நீரைவெளியாக்குகின்றான். பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு இதன்மூலம் நாம் உயிரூட்டுவதற்காகவும்,  மேலும் நம்முடைய படப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும் தான்!  இந்தநிகழ்வுகளை அவர்களிடையே அடிக்கடி நாம் உண்டு பண்ணுகின்றோம். அவர்கள் படிப்பினை பெற
வேண்டும் என்பதற்காக!
அல்குர் ஆன்: 25:48

அல்லாஹ் கூறுகின்றான்:

“என்ன?இவர்கள் பார்க்கவில்லையா?வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாகநாம் தண்ணீரை ஒலித்தோடசெய்கின்றோம். அதிலிருந்து பயிகளை முளைக்கச்செய்கின்றோம். அதிலிருந்து இவர்களும் உண்ணுகின்றனர்,இவர்களுடைய
 கால்நடைகளும் உண்ணுகின்றது”
அல் குர் ஆன்: 32:27

அல்லாஹ் கூறுகின்றான்:

“மேலும் வானத்திலிருந்து அருள் மிக்க நீரினை இறக்கினோம்.பின்னர் அதன்மூலம் தோட்டங்களையும், தானியங்களையும், குலைகள்அடுக்கடுக்காய் தொங்குகின்றபேரீச்ச மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்குவாழ்வாதாரம்
வழங்குவதற்கான ஏற்பாடாகும்”
அல்குர் ஆன்: 50: 9-11

அல்லாஹ் கூறுகிறான்:

“நீங்கள் குடிக்கும் தண்ணீரைகவனித்தீர்களா?மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்காளா?அல்லது நாம்பொழியச் செய்கின்றோமா?நாம் விருப்பினால் நீங்கள் குடிக்கமுடியாதபடி உவர்ப்பு நீராக ஆக்கியிருப்போம். நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
அல்குர் ஆன்: 56: 68-70

அல்லாஹ் கூறுகின்றான்:

பின்னர், மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும். நிச்சயமாக, நாம்நீரை தாராளமாக பொழிந்தோம்.பின்னர் வியக்கத்தகுந்த முறையில் பூமியைப் பிளந்தோம். பிறகு,அதில் தானியங்களையும்,திராட்சைகளையும், காய்கறிகளையும், ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும்,
அடர்ந்த தோட்டங்களையும், விதவிதமானகனிகளையும், புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம்.உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருட்களாகும் பொருட்டு”
அல்குர் ஆன்: 80: 24-32

மேற்கூறிய இறைவசனங்கள்அனைத்தும் தண்ணீரின்
மூலம் மனித சமுதாயம் அடைந்துகொண்டிருக்கின்ற பயன்பாடுகள் குறித்தும், மனிதனின் மூலமேதண்ணீர் தான் என்பது பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *17-04-2017*

No comments:

Post a Comment