Sunday, 16 April 2017

🌺இறை மறுப்பைத் தூண்டும் பெருமை - தொடர் 4🍀

🎓மக்கத்துக் காஃபிர்கள்

பரிசுத்த வாழ்விற்கு சொந்தக்காரராகிய நபி(ஸல்) அவர்கள், இணை வைக்கின்ற இரத்த பந்தங்களின் கடும் எதிர்ப்புகளைத் தாங்கிக்கொண்டு, அரும்பாடுபட்டு இறைப் பணியாற்றினார்கள். ஆனால் அன்றைய காஃபிர்களோ, நபி(ஸல்) அவர்களை தங்களின் வழிக்கு இழுக்கவும், சத்தியத்திலே சமரசம் செய்து கொள்ளவும் அளவற்ற ஆசை வார்த்தைகளை அள்ளி
வீசினார்கள். பிறகு அல்லாஹ்வின் அடியார்களுடைய உறுதியை அசைக்க முடியாதபோது, அவர்களுக்கு எதிராக அவதூறுகளையும் இழிவான கருத்துகளையும் பரப்பினார்கள். பல கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டு கொலை செய்யத் துடித்தார்கள். இவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்…

وَكَذٰلِكَ فَتَـنَّا بَعْضَهُمْ بِبَـعْضٍ لِّيَـقُوْلُـوْۤا اَهٰٓؤُلَآءِ مَنَّ اللّٰهُ عَلَيْهِمْ مِّنْۢ بَيْنِنَا ؕ اَلَـيْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِالشّٰكِرِيْنَ‏

“நம்மில் இ(ந்த அற்பமான)வர்களுக்குத்தானா அல்லாஹ் அருள்புரிய வேண்டும்?” என்று அவர்கள் கூறுவதற்காக அவர்களிள் ஒருவர் மூலம் மற்றவரை இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துவோரை அல்லாஹ் நன்கறிந்தவன் அல்லவா?
(அல்குர்ஆன் 6:53)

عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏
اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ‏
وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏
اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ‏
اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ‏

முஹம்மத் நபி(ஸல்) அவர்களை தூதர் என்று முன்மொழிந்தவர்களை விட, தாங்கள்தான் குலத்தால், இனத்தால் உயர்ந்தவர்கள் என்று பெரு மையடித்தவர்களாக நேர்வழியைப் புறக்கணித்தார்கள். இன்னும் இறைத் தூதரிடம் உமது அறிவுரையை ஏற்றுக்கொண்ட வறியவர்களையும் அடி மைகளையும் விரட்டிவிட்டுவந்தால்தான் உமது வழிமுறையை ஏற்றுக் கொள்வோம் என்று பேரம்பேசினார்கள். இது தொடர்பான சம்பவத்தில் தான் கண் தெரியாத உம்மி மக்தூம்(ரலி) அவர்கள் அங்கே வரும்போது, அல்லாஹ்வின் துதர் அவரைக் கடிந்து பேசிவிடுகிறார்கள் ஆனால் அல் லாஹ் நபி(ஸல்) அவர்களைக் கண்டித்து வசனங்களை இறக்கினான்.
(அல்குர்ஆன் 80:1-5)

♻ஆகவே அசத்தியத்தில் அழிந்து போனவர்களில் அதிகமானவர்கள், பெருமையடித்து ஆணவத்தால் தட்டழிந்தவர்கள்தான் என்பதை மேற் கண்ட ஆயத்துக்கள் அடையாளம் காட்டுகின்றன. இதற்கேற்ப மறுமை யிலே நரகத்தில் கருகும் குற்றவாளிகளைப்பற்றி அல்லாஹ் கூறுகிறான்…

اِنَّا كَذٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِيْنَ‏
اِنَّهُمْ كَانُوْۤا اِذَا قِيْلَ لَهُمْ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسْتَكْبِرُوْنَۙ‏

“குற்றவாளிகளை இப்படித்தான் நாம் நடத்துவோம். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு
யாருமில்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமையடிப்போராக அவர்கள் இருந்தனர்.
(அல்குர்ஆன் 37:34-35)

முடிவுரை

இன்றும் கூட வெள்ளையன், கருப்பன் என்று நிறத்தைக் கொண்டும், ஏழை பணக்காரன் என்று செல்வத்தைக்கொண்டும், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று குலத்தைக்கொண்டும், படித்தவன் படிக்காதவன் என்று கல்வி யைக்கொண்டும் இன்னும் பல விஷயங்களைக்கொண்டும் பெருமையடிப்பர்களைப் பார்க்கிறோம். இதனால் இழிவாகக் கருதப்படுபவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், உண்மைகள் மூடிமறைக்கப்படுவதையும் நாம் காண்கிறோம்.

இதற்கெல்லாம் மேலாக முஸ்லிம்களில் பலர் இணைவைப்பு, பித்அத், ஹராமான காரியங்கள் மற்றும் அனாச்சாரங்களில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய செயல்களுக்கு எதிராகவுள்ள மார்க்க ஆதாரங்களை சமர்ப்பித்து, அவர்களின் வழிகேட்டை விளக்கிய பிறகும், ”எங்களுடைய மூதாதயர்கள் உங்களை விடச் சிறந்த பண்டிதர்கள்; அவர்களின் வழிகாட்டுதல்கள் எப்படி வழிகேடாக இருக்கும். நீங்களெல் லாம் இப்போது முளைத்தவர்கள்; ஆனால் நாங்கள் இக்காரியங்களை காலம்காலமாக செய்து கொண்டிருக்கிறோம்” என்று பெருமையடித்தவர்களாக மார்க்கத்திற்கு விரோதமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே இறைமறுப்பின் பக்கம் தூண்டக்கூடிய பெருமையடிக்கின்ற பண்பை விட்டும் விலகியிருப்போமாக.  
ஆமீன்.



(முடிவுற்றது அல்ஹம்துலில்லாஹ்)

பதிவு நாள்: *17-04-2017*

No comments:

Post a Comment