Tuesday, 11 April 2017

நபி இஸ்ஹாக் (அலை) அவர்களின் வாழ்கை வரலாறு தொடர் 2


ஆனால் அவர்களின் கை உணவின் பக்கம் நெருங்கவில்லை அந்த சமயத்தில் நமது தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சற்று அச்சம் கொள்கிறார்கள் அவர்களிடம் நீங்கள்  யார் ஏன் இங்கு வந்தீர்கள் என்று வினவ தொடங்கிவிட்டார். அதற்கு அந்த மலக்குகள் நபி இப்ராஹீமே அச்சமுற வேண்டாம். நங்கள் இருவரும் மலக்குகள் நாங்கள் உனது சகோதரனின் மகனான லூத் அலைஹி வசல்லம் அவர்களது சமூகத்தை அழிக்க அல்லாஹ் எங்களை அனுப்பியிருக்கிறான் என்று கூறினார்கள்.

மேலும் அல்லாஹ் உங்களுக்கு ஒரு சுப செய்தி கூற சொன்னான் அது என்ன வென்றால் உங்களுக்கு சாரா அம்மையாருக்கும் ஒரு அழகான மகன் பிறப்பான். அவரது பெயர் நபி இஸ்ஹாக்  அலைஹிஸ்ஸலாம். மேலும்  அல்லாஹ் பல நபிமார்கள் இவர்களது சந்ததியினர்களில்  உருவாவார்கள் என்றார்கள் .அப்போது இவர்களுக்கு வயது அதிகமாக இருந்ததால் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

இவர்களின் தாயார் ஸாரா அம்மையார் தமது 130ஆவது வயதில் காலமாயினர்.

No comments:

Post a Comment