Tuesday, 11 April 2017

இல்லங்களை இஸ்லாமிய மயமாக்குவோம் தொடர் -3

7.பின் வருமாறு குடுப்பத்தை அமைத்துக் கொண்டால் கருணை பாக்கியம் பெருகிடும்.


سنن النسائي 1610 -عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّى، ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ، فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللَّهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ، ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّى، فَإِنْ أَبَى نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ»

💈எந்த மனிதன் இரவில் தானும் விழித்து தன் மனைவியையும் விழிக்கச் செய்து தொழுகையை நிறைவேற்றுகிறான் அவள் விழிக்கவில்லையென்றால் தண்ணீரை முகத்தில் தெளிக்கின்றானே அந்த மனிதனுக்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!     எந்த பெண் இரவில் தானும் விழித்து தன் கணவரையும் விழிக்கச்செய்து அவர் விழிக்கவில்லையென்றால் தண்ணீரை முகத்தில் தெளித்து தொழுகையை நிறைவேற்றுகிறாளே அந்த பெண்ணிற்கும் அல்லாஹ் அருள்பாலிப்பானாக! என்று நபி(  ஸல்)அவர்கள் துஆ செய்தார்கள்.

நம் இல்லங்களில் உருவப்படங்களை அகற்றுவோம்

5960-  عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ وَعَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ فَرَاثَ عَلَيْهِ حَتَّى اشْتَدَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَقِيَهُ، فَشَكَا إِلَيْهِ مَا وَجَدَ، فَقَالَ لَهُ: ((إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ)).

⌛5960. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்  (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரின் வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி(ஸல்) அவர்களுக்குத் கவலை உண்டானது. அப்போது, நபி(ஸல்) அவர்கள் வெளியே புறப்பட ஜிப்ரீல்(அலை) அவர்களைச் சந்தித்தார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், “(வானவர்களாகிய) நாங்கள் உருவப் படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்“ என்று கூறினார்கள்.137
ஸஹீஹ் புகாரி.

5957-  عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَابِ فَلَمْ يَدْخُلْ. فَقُلْتُ أَتُوبُ إِلَى اللَّهِ مِمَّا أَذْنَبْتُ. قَالَ: ((مَا هَذِهِ النُّمْرُقَةُ)). قُلْتُ لِتَجْلِسَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا. قَالَ: ((إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ، يُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ. وَإِنَّ الْمَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ)).
🕋5957. ஆயிஷா(ரலி) அறிவித்தார்  நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி(ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், “நான் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்“ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “இந்தத் திண்டு என்ன?“ என்று கேட்டார்கள். நான், “இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்“ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், “இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)“ என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்“ என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி.

🇨🇨4282. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டுவாசலை) உருவப்படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்துவிட்டார்கள். பிறகு ”மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில், அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்” என்று சொன்னார்கள். - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்...” என்று ஹதீஸ் ஆரம்பமாகி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு முடிகிறது. ஆயினும், அதில் ”பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தத் திரைச் சீலையை நோக்கிச் சென்று, தமது கையாலேயே அதைக் கிழித்துவிட்டார்கள்” என்று (கூடுதலாக) இடம்பெற்றுள்ள து. - மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் மற்றும் அப்து பின் ஹுமைத் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் ”மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர்” என்றே இடம்பெற்றுள்ளது. ”வேதனைக்குள்ளாவோரில்...” என்று இடம்பெறவில்லை.
ஸஹீஹ் முஸ்லிம்.

🌴தினை விதைத்வன் தினை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்

وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُمْ بِإِيمَانٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَا أَلَتْنَاهُمْ مِنْ عَمَلِهِمْ مِنْ شَيْءٍ كُلُّ امْرِئٍ بِمَا كَسَبَ رَهِينٌ (21)
📖எவர்கள் இறைநம்பிக்கை கொண்டார்களோ, அவர்களையும், இறைநம்பிக்கையில் ஓரளவாவது அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய அவர்களின் வழித்தோன்றல்களையும் நாம் (சுவனத்தில்) ஒன்று சேர்த்து வைப்போம். மேலும், அவர்களின் செயல்களில் எந்த இழப்பையும் அவர்களுக்கு நாம் ஏற்படுத்தமாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதித்தவற்றுக்குப் பணயமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 52:21).

*முடிவுற்றது*

பதிவு நாள்: *12-04-2017*

No comments:

Post a Comment