Sunday, 16 April 2017

நபி யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 3

நபி யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 3

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

🎓இவ்விஷயம் அறிந்த ஈசு நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வெறுக்க  தொடங்கினார்கள். எந்த அளவிற்கு என்றால் தனது தம்பியை கொன்றுவிடும் அளவிற்கு வெறுத்தார்கள். இதை அறிந்து கொண்ட யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரவோடிரவாக தங்கள் மாமன் வீட்டிற்கு ஓடினார்கள். இதனால் இவர்களுக்கு இரவில் சென்றவர் என்று பொருள்படும் ‘இஸ்ராயீல்’ என்னும் பெயர் ஏற்பட்டது. இவர்களின் வழித்தோன்றல்களே பனீ இஸ்ராயீல் என்று வழங்கப் பெற்றார்கள்.

📖இவ்வாறு நாட்கள் கழிய கழிய தனது  தாய் தனது சகோதரன் லாபான் என்றவரிடம்   நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அனுப்பி வைத்தார். போகும் வழியில் ஒரு இடத்தில் உறங்கும் வேளையில் அவர்  ஒரு கனவை காண்கிறார் அதில் மலக்குகள் வானத்தின்  பக்கம்  போவதையும் கீழே இறங்குவதையும்  காண்கிறார்கள். மேலும் அல்லாஹ்  அவருக்கு   சுபசெய்தியையும் அறிவிக்கிறான். அல்லாஹ்  உங்களுக்கு ஒரு பொக்கிசத்தை மிக விரைவில் அருளவிருக்கிறான் என்று. இதனை கேட்டதும் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் திருப்தி கொண்டவராக இருக்கிறார்கள்.

🌴பிறகு நிம்மதியாக தனது தாய் மாமன் வீட்டிற்கு சென்றார் நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.  அந்த லாபான் அவர்களுக்கு இரு மகள்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தபெண் ரய்யா இரண்டாவது பெண்  ராஹீல். நபி யாகூப் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தாய்மாமன் லாபான் தனது இரு மகள்களையும் திருமணம் செய்து கொடுத்து இரு அடிமை பெண்களையும் குறிப்பிட்ட ஆடுகளையும்  அவர்களுக்கு  கொடுக்கிறார்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *17-04-2017*

No comments:

Post a Comment