Sunday, 16 April 2017

நபி யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 2

நபி யஃகூப் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்று தொடர் - 2

♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎓நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மனைவி “ரிப்கா”. அந்த அம்மையார்  நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் யாகூபே நீ தந்தையுடன் இணக்கமாக  இருந்துகொள். அவரின் துஆவை நாடு என்று அறிவுரை  கூறுகிறார்கள். இவ்வாறு இருக்க நாட்கள் ஆக ஆக நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பார்வை மங்கிவிடுகிறது.

♻நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மூத்த மகனிடம் ஒரு உணவை கேட்டார்கள். அதனை  ஈசு அவர்கள் கொண்டுவருவதற்கு முன்  அவர்களின் தாயார் தனது இரண்டாவது மகன் யாகூபிடம் அந்த பொருளை கொடுத்து மேலும் தனது மூத்த மகனின் சட்டையை போட்டு அனுப்பினார்கள்.

🔛மேலும் நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவரால் யார் என்று கணிக்க முடியாத நிலையில் அவர் நீ யார் என்று கேட்க, நபி யாகூப்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நான் உங்களது மகன்’ என்று பதில் கொடுக்க அந்த உணவை வாங்கி  உண்டுவிட்டு  அந்த மகனுக்காக உருக்கமாக  நபி இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்  துஆ செய்தார்கள்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *17-04-2017*

No comments:

Post a Comment