*🎯மணி டிரான்ஸ்பர் செய்யலாமா ❓❓❓*
*🔘அதாவது ஒருவரிடம் டாலர்உள்ளது. அவருக்கு நாம் இந்தியரூபாயாக மாற்றி தருவதற்குகுறிப்பிட்ட சதவிகிதம் கட்டணம்வசூலிக்க படுகிறது. இதை நாம்செய்யலாமா❓❓❓*
🔘ஒரே வகையான நாணயத்திற்குள் நடக்கும் நாணயமாற்றுதல். வெவ்வேறு வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதல் என இது இரு வகைகளில் அமைந்துள்ளன.
🔘ஒரே வகையான நாணயங்களுக்குள் நடக்கும் நாணயமாற்றுதலில் கூடுதல் குறைவு இல்லாமல் சம்மான மதிப்பில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
🔘பத்து கிராம் தங்கக் காசைக் கொடுத்து பத்து ஒரு கிராம் தங்கக் காசுகள் வாங்கலாம். விற்கலாம். பதினொரு அல்லது ஒன்பது காசுகள் என்ற வகையில் மாற்றினால் அது ஹராமாகும். அது போல் ஒரு நாட்டின் ரூபாய்க்கு சில்லரை மாற்றும் போது கூடுதல் குறைவு இருக்கக் கூடாது. நூறு ரூபாயை பத்து ரூபாயாக மாற்றும் போது பத்து நோட்டுகள் வாங்கலாம். பதினொன்று அல்லது ஒன்பது நோட்டுக்கள் வாங்க்க் கூடாது. அது போல் நோட்டுக்கு பதிலாக காயன்ஸ் வாங்கும் போது அதற்குச் சம்மான மதிப்பில் தான் வாங்க வேண்டும்.
🔘நாணய வகை மாறுபட்டால் மார்கெட் நிலவரப்படி அல்லது நம் விருப்ப்ப்படி விலை நிர்ணயிக்கலாம். மார்க்கத்தில் இது குற்றமாகாது. டாலருக்கு ரியாலை அல்லது ரூபாய்க்கு திர்ஹமை மாற்றும் போது அல்லது தங்கத்துக்கு வெள்ளியை மாற்றும் போது எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இது உடனுக்குடன் நடக்க வேண்டும். கடனாக இருக்க்க் கூடாது. இன்று ஒரு நூறு டாலர் கொடு நாளை ஐந்தாயிரம் த்ருகிறேன் என்று வியாபாரம் நட்ந்தால் கடனுக்காக நாம் அதிகம் பெற்றதாக ஆகி வட்டியில் சேர்ந்து விடும்.
🔘ஒரே வகையான நாணயத்தை மாற்றும் போது நாம் அதிகமாக பெறுவதில்லை எனப்தால் கடனாக இருக்கலாம். இன்று ஆயிரம் ரூபாய் கொடுத்து நாளை அதற்கான சில்லறையைப் பெறலாம்.
🔘இவை அனைத்துக்குமான ஆதாரங்கள் புகாரியில் இடம்பெற்ற கீழ்காணும் ஹதீஸ்களில் உள்ளன.
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*2060 & 2061 அபுல் மின்ஹால்(ரஹ்) அவர்கள் கூறியதாவது*
*நான் நாணயமாற்று வியாபாரம்செய்து வந்தேன்; அது பற்றி(யமார்க்கச் சட்டத்தை) ஸைத் பின்அர்கம் (ரலி), பராஉ பின் ஆஸிப்(ரலி) ஆகியோரிடம் கேட்டேன்.அதற்கவர்கள், நாங்கள் நபி (ஸல்)அவர்களது காலத்தில்வியாபாரிகளாக இருந்தோம்:அவர்களிடம் நாணயமாற்றுவியாபாரம் பற்றிக் கேட்டோம்;அதற்கு உடனுக்குடன் மாற்றிக்கொண்டால் அதில் தவறில்லை;தவணையுடன் இருந்தால் அதுகூடாது என அவர்கள்பதிலளித்தார்கள் என்றார்கள்.*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*2175 அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:*
*சரிக்குச் சரியாகவே தவிர,தங்கத்திற்குத் தங்கத்தைவிற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவேதவிர, வெள்ளிக்கு வெள்ளியைவிற்காதீர்கள்! தங்கத்திற்குவெள்ளியையும், வெள்ளிக்குத்தங்கத்தையும் விரும்பியவாறுவிற்றுக்கொள்ளுங்கள்.*
*இதை அபூபக்ரா (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*2176 சாலிம் பின் அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறியதாவது:*
*உமர் (ரலி) சம்பந்தப்பட்டமுந்தைய ஹதீஸ் போன்றுஅபூசயீத் (ரலி) அவர்கள், இப்னுஉமர் (ரலி) அவர்களுக்கு ஒருஹதீஸை அறிவித்தார்கள். மற்றொரு சந்தர்ப்பத்தில் அபூசயீத்(ரலி) அவர்களை இப்னு உமர்(ரலி) அவர்கள் சந்தித்து, நீங்கள்நபி (ஸல்) அவர்கள் வழியாகஎன்ன அறிவித்தீர்கள்? என்றுகேட்டார்கள். அதற்கு அபூசயீத்(ரலி), நாணயம் மாற்றும் போதுதங்கத்திற்குத் தங்கத்தையோவெள்ளிக்கு வெள்ளியையோமாற்றினால் சரிக்குச் சரியாகஇருக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான்செவியுற்றுள்ளேன் என்றார்கள்.*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*2177 அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:*
*சரிக்குச் சரியாகவே தவிர,தங்கத்திற்குத் தங்கத்தைவிற்காதீர்கள்! ஒன்றைவிடமற்றொன்றைஅதிகமாக்கிவிடாதீர்கள்! சரிக்குச்சரியாகவே தவிர, வெள்ளிக்குவெள்ளியை விற்காதீர்கள்!ஒன்றைவிட மற்றொன்றைஅதிகமாக்காதீர்கள்! ஒன்றுரொக்கமாகவும் மற்றொன்றுதவணையாகவும் இருக்கும்நிலையில் விற்காதீர்கள்!*
*இதை அபூசயீத் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*2180 & 2181 அபுல் மின்ஹால்(ரஹ்) அவர்கள் கூறியதாவது*
*பராஉ பின் ஆஸிப் (ரலி), ஸைத்பின் அர்கம் (ரலி) ஆகியோரிடம்நாணயமாற்று பற்றிக் கேட்டேன்.நபி (ஸல்) அவர்கள் கடனாகவெள்ளிக்குத் தங்கத்தைவிற்பதைத் தடை செய்தார்கள் எனஅவ்விருவரும் பதிலளித்தனர்.பிறகு இருவரும் மற்றவரைச்சுட்டிக்காட்டி, இவர் என்னைவிடச் சிறந்தவர் என்றனர்.*
*📚ஹதீஸ்👇🏻👇🏻*
*2497 & 2498 சுலைமான் பின் அபீமுஸ்லிம் (ரஹ்) அவர்கள்கூறியதாவது:*
*நான் அபுல் மின்ஹால் (ரஹ்) அவர்களுடன் உடனுக்குடன் செய்யும் நாணய மாற்றுவியாபாரம் குறித்துக் கேட்டேன்.அப்போது அவர்கள் பின்வருமாறுபதிலளித்தார்கள்: நானும் என்வியாபாரக் கூட்டாளி ஒருவரும்ஒரு பொருளை (சிறிது)உடனுக்குடனும் (சிறிது) தவணைமுறையிலும் வாங்கினோம்.அப்போது பராஉ பின் ஆஸிப் (ரலி)அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.நாங்கள் அவர்களிடம் (இதுகுறித்துக்) கேட்டோம். அதற்குஅவர்கள், நானும் எனதுகூட்டாளியான ஸைத் பின் அர்கம்(ரலி) அவர்களும் இந்தவியாபாரத்தைச் செய்து வந்தோம்.நபி (ஸல்) அவர்களிடம் இதுகுறித்துக் கேட்டோம். அதற்குஅவர்கள், உடனுக்குடன் மாற்றிக்கொண்டதை எடுத்துக்கொள்ளுங்கள்; ஆனால், தவணைமுறையில் மாற்றிக்கொண்டிருப்பீர்களாயின் அதைரத்துச் செய்து விடுங்கள்' என்றுபதிலளித்தார்கள் எனக்கூறினார்கள்.*
(♻இன்ஷா அல்லாஹ் வேறொரு பிரச்சினை மற்றும் தீர்வுடன் தொடரும்♻)
பதிவு நாள்: 04-04-2017
No comments:
Post a Comment