Thursday, 13 April 2017

🌺இறை மறுப்பைத் தூண்டும் பெருமை - தொடர் 1🍀


🌴அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
                      
🌺இறை  மறுப்பைத் தூண்டும் பெருமை - தொடர் 1🍀                                    

🔛முன்னுரை :

☸அனைத்துவிதமான மோசமான தன்மைகள், தீய செயல்பாடுகள் மற்றும் வழிகேடுகளை விட்டும் விலகியிருக்குமாறும், அவற்றிலிருந்து மீண்டு
வருமாறும், மனித சமுதாயத்திற்கு இஸ்லாமிய மார்க்கம் வேண்டு கோள் விடுக்கிறது. இவ்வகையிலே இன்று சர்வசாதாரணமாக சகமனிதர்களிடத்தில் தென்படுகின்ற பெருமையடிக்கின்ற பண்பைப் பற்றியும் குர்ஆன் ஹதீஸிலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

👨‍👨‍👦‍👦பொதுவாகவே பெருமையடிப்பவர்கள் தங்களுடைய தொழில், நற்செயல்கள், குடும்பம் மற்றும் பழக்க
வழக்கங்களைப் பற்றி அடுத்தவர்களிடம் அவசியமின்றி கூறி ஆனந்தமடைவதை அறிந்துள்ளோம். மேலும்
இப்பண்புடையவர்களுக்கு மற்றொரு வரையறையை நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

*மட்டமாக கருதுவது*

275 – وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَإِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ جَمِيعًا عَنْ يَحْيَى بْنِ حَمَّادٍ – قَالَ ابْنُ الْمُثَنَّى حَدَّثَنِى يَحْيَى بْنُ حَمَّادٍ – أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ عَنْ فُضَيْلٍ الْفُقَيْمِىِّ عَنْ إِبْرَاهِيمَ النَّخَعِىِّ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ

« لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِى قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ ». قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً. قَالَ « إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ ».

“சிறிய அளவேனும் தன் உள்ளத்தில் பெருமை கொண்ட ஒருவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ஒரு மனிதர் தன் ஆடை அழகாகவும் தன் செருப்பு அழகாகவும் இருந்திட விரும்புகிறார். இது (பெருமையாகுமா?)” என்று கேட்டார். “நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகை விரும்புகிறான். பெருமை கொள்வது என்பது சத்தியத்தை நிராகரிப்பதும், மக்களை இழிவாக எண்ணுவதுமாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

🗣அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)

📖நூல் : முஸ்லிம் 131.

😇அல்லாஹ்வால் அருளப்பட்ட அருட்கொடைகளின் அடிப் படையை விளங்காமல், தங்களை தாங்களே உயர்வாகவும் சிறப்பாகவும் கருதிக்கொண்டு, மற்றவர்களை மட்டமாகவும் இழிவாகவும் நினைப்பவர்களெல்லாம் பெருமையடிப்பவர்கள்தான் என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து அறியமுடிகின்றது.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 13-04-2017

No comments:

Post a Comment