*நபிமார்கள் வரலாறு* - *நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்*
*வாழ்க்கை வரலாறு தொடர் - 5*
👑வந்திருப்பவர்கள் மலக்குகள் என்று ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு தெரியாது. அவர்கள் சந்தித்த நேரம் சூரியன் மறையும் நேரம் என்பதால், இருள் சூழும் நேரமாக இருந்ததால் யாரும் பார்க்காமல் வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தார்கள். ஹஸ்ரத் லூத்தின் குடும்பத்தாரை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் ஹஸ்ரத் லூத்தின் மனைவியோ வெளியே சென்று தம் ஜனங்களிடம் இந்த விசயத்தை தெரிவித்துவிட்டாள்.
🌼ஹஸ்ரத் லூத்தின் மனைவி ஜனங்களிடம் தன் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர் பற்றியும் இவ்வளவு அழகான இளைஞர்களை தான் இதுவரை பார்த்தே இல்லை என்றும் கூறினாள். உடனே, அவளுடைய சமூகத்தார் அவளுடைய வீட்டை நோக்கி விரைந்தோடி வந்து முற்றுகையிட்டனர். அவர்களை கண்ட ஹஸ்ரத் லூத் நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மிகவும் வெட்கப்பட்டார்கள். வேதனை அடைந்தார்கள்.
🌿ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) வந்தவர்களை நோக்கி, இவர்கள் என் விருந்தினர்கள். ஆகவே அவர்கள் முன் என்னை கேவலப்படுத்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்றார்கள். அதற்கு அவர்கள் “உலக மக்களை பற்றியெல்லாம் பேசுவதை விட்டும் உம்மை நாங்கள் தடுக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
🌵மேலும் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) "இதோ என்னுடைய பெண்மக்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று கருதினால் இவர்களை திருமணம் செய்து கொள்ளலாம்” என்று சொன்னார்கள்.
🎄அதற்கு அக்கொடிய மக்கள் “நாங்கள் விரும்புவது என்ன என்பதை நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
🌲அந்த கொடிய அரக்கர்களின் வன்முறைக்கு மத்தியில் ஹஸ்ரத் லூத் நபியவர்கள் செய்வதறியாது நின்றனர். எப்படியாவது தம் விருந்தினர்களை இக்கொடியவர்களின் தீங்கில் இருந்து பாதுக்காக்க வேண்டும் என்று ஆதங்கத்தில் கவலையுடன் இருந்தனர்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *06-03-2017*
No comments:
Post a Comment