*நபிமார்கள் வரலாறு* - *நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்*
*வாழ்க்கை வரலாறு தொடர் - 6*
🌿அப்போது விருந்தினராக வந்த வானவர்கள் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர. உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும" என்று கூறினார்கள்.
🏢ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவியைத் தவிர, அவர்களையும் அவர்கள் குடும்பத்தினரையும் இரவோடு, இரவாக திரும்பிப் பாராமல் ஊரைவிட்டு வெளியேறுமாறு இறைவனின் வானவர்கள் கூறினார்கள். அவ்வாறே ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) செய்தார்கள்.
🚧ஸதூம் நகர மக்களின் அழிவு
மறுநாள் அதிகாலை; இறைவன் அவ்வூரை தோசையை போல் தலைகீழாக திருப்பி போட்டான். சுடப்பட்ட களிமண் கற்கள் வானிலிருந்து அம்மக்கள் மீது மழையாய்ப் பொழிந்தன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. ஹஸ்ரத் லூத் நபியின் சமூகத்தார் அழிந்தனர். அவர்களின் மனைவியும் அழிந்தாள்.
🚦ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் இறுதி காலம்
ஸதூம் நகர அழிவிற்கு பின்னர் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மீண்டும் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்தனர். வந்து நடந்ததை கூறும் முன்னர் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஏற்கனவே அங்கு நடந்ததை அறிந்திருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள்.
🚥பின்னர் தம் மறைவு வரை அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்த வண்ணம் இருந்தார்கள்.
🌄ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களின் புனித அடக்கஸ்தலம் தற்போதைய பாலஸ்தீன் நாட்டில் பனி நாயிம் என்னும் இடத்தில் அமையப் பெற்றுள்ளது.அதனுடன் சேர்த்து ஒரு பள்ளிவாசலும் காணப்படுகிறது.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *06-03-2017*
No comments:
Post a Comment