*நபிமார்கள் வரலாறு* - *நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்*
*வாழ்க்கை வரலாறு தொடர் - 4*
🐞இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் வந்த அந்த மலக்குமார்கள் மூன்று பேரும் ஹஸ்ரத் ஜிப்ரீல், ஹஸ்ரத் மீக்காயீல், ஹஸ்ரத் இஸ்ராபீல் ஆகியோர் ஆவார்கள்.
🦋மலக்குமார்கள், இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) வீட்டை விட்டு ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் இருக்கும் நகரத்திற்கு மதியம் வந்தார்கள். அங்கு ஸதூம் ஆற்றை கடக்கும் போது, ஹஸ்ரத் லூத்தின் மகள் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு இரண்டு பெண்மக்கள் இருந்தனர். மூத்தவள் பெயர் ரிதா (Ridha), இளையவள் பெயர் ஜஹ்ரதா (Zaghrata)
🐤மலக்குமார்கள் அந்த பெண்ணிடம் இங்கு தங்குவதற்கு ஏதாவது இடம் உண்டா என்று கேட்டார்கள்? அதற்கு அந்த பெண் இங்கேயே இருங்கள். நான் வரும் வரை ஊருக்குள் நுழைய வேண்டாம் என்று கூறி வேகமாக சென்றார். ஆண்களை மோகம் கொள்ளும் தம் ஊர் மக்களை பற்றிய பயத்தினால் அவர் அவ்வாறு செய்தார். வேகமாக தந்தை ஹஸ்ரத் லூத்திடம் சென்று “நாம் ஒரு போதும் பாத்திராத அழகான இளைஞர்களை கண்டேன்” என நடந்த விபரத்தைக் கூறினார்.
🐠மேலும் இந்த ஊர் மக்களிடம் அழைத்து வரவேண்டாம். இந்த கெட்டவர்களிடம் ஏற்கனவே இவர்கள் உங்கள் வீட்டிற்கு யாராகிலும் ஆண் விருந்தாளிகள் வந்தார்களா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அப்பெண் கூறினார்.
🌳ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஸதூம் நுழைவாயிலுக்கு சென்று அவர்களை சந்தித்தார்கள். (நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார். (அல் குர்ஆன் 11:77)
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *06-03-2017*
No comments:
Post a Comment