*நபிமார்கள் வரலாறு* - *நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்*
*வாழ்க்கை வரலாறு தொடர் - 3*.
🌹இறைவன் மூன்று வானவர்களை அனுப்பி வைத்தான். அந்த மலக்குகள் இறைவனின் கட்டளைப்படி இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களின் வீட்டிற்கு சென்று, முதல் மனைவி சாராவுக்கு மகன் பிறக்கப்போகும் நற்செய்தியை கூறினார்கள்.
♻மேலும் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம், ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) இருக்கும் இடத்திற்கு சென்று, அந்த ஊரை அழிக்க அல்லாஹ்விடம் இருந்து உத்தரவு வந்துள்ளது எனவும் கூறினார்கள்.
😡இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அங்கு லூத் இருக்கிறார்களே என்று கேட்டார்கள். அதற்கு அந்த மலக்குகள் “அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாங்கள் அவரையும், அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றுவோம், அவருடைய மனைவியை தவிர” என்றார்கள்.
📚இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்), லூத் சமூகத்தினருக்காக மிகவும் வாதாடினார்கள். “கண்டிப்பாக ஒரு நாள் திருந்துவார்கள். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வார்கள்” என்றும் கூறினார்கள்.
❌“இப்றாஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது. மேலும், அவர்களுக்குத் தவிர்க்க முடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்" என்று அம்மலக்குகள் கூறினார்கள்.
👨👩👧👦மேலும் அங்கு எத்தனை பேர் இறை நம்பிக்கையாளர்கள் இருப்பார்கள்? என்று மலக்குமார்கள் கேட்டார்கள். அதற்கு இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) 300 பேர் என்றார்கள். இல்லை... 150 பேர் என்றார்கள். இல்லை.... 40 பேர் என்றார்கள். ? இல்லை.....14 பேர் என்றார்கள்? இல்லை....ஒருவர் கூட இறை நம்பிக்கை கொள்ளவில்லை என்றார்கள்.
🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *06-03-2017*
No comments:
Post a Comment