Monday, 6 March 2017

நபி லூத் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 2*


*நபிமார்கள் வரலாறு*  - *நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்*
*வாழ்க்கை வரலாறு தொடர் - 2*

🌹அதற்கு முன் மனித சமூகத்தில் யாருமே செய்யாத புதியதொரு பாவச் செயலை அவர்கள் செய்தனர். அதுதான் ஆணோடு ஆண் உறவு கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஆகும். அதையும் கேளிக்கை விடுதிகளில், மக்கள் கூடும் பொது இடங்களில் என்று பலர் பார்க்குமளவில், எத்தகைய வெட்கமுமின்றி செய்தனர். தொடர்ந்து செய்து அது அவர்களுக்கு மிக பழகிப் போய்விட்டது. இயல்பாகிவிட்டது. அவமானம் என்றொரு வார்த்தையே அவர்களது மொழியில் இல்லை என்றானது.

😡ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸ்லாம்) இதை பார்த்து கொதித்து எழுந்தார்கள். "என்ன கொடுமை இது? படைப்பினங்களிலேயே இதற்கு முன் எவரும் செய்யாத ஒரு பாவத்தை புரிகிறீர்கள். உங்களுக்கு மனைவிகளாக அமைய பெண்களை இறைவன் படைத்திருக்க, ஆண்கள் ஆண்களுடன் காமம் கொள்கிறீர்களே? எல்லை மீறும் பாவம் புரியும் மக்களாய் இருக்கிறீர்கள் நீங்கள்" என்று சொல்லிப் பார்த்தார்கள். விவரித்துப் பார்த்தார்கள். கதறிப் பார்த்தார்கள். இறைவனின் தண்டனையைச் சொல்லி பயமுறுத்தியும் பார்த்தார்கள். ம்ஹும்! எதுவும் அவர்கள் காதில் விழவில்லை.

💔'இதோ வந்துவிட்டார் ஒழுக்க சீலர்' என்று கேலியும், கிண்டலும் தான் செய்தார்களே தவிர ஒருவரும் கேட்டு திருந்தி நடக்கவில்லை.

💐"நீர் உண்மையானவர் என்றால் உம் இறைவனின் தண்டனையை எங்கள் மீது கொண்டு வாரும் பார்ப்போம்" என்று அகங்காரத்தோடு கூறினார்கள் அந்த மட மக்கள்.

🌾ஹஸ்ரத் லூத் நபியவர்களின் பிரார்த்தனையும் மலக்குகள் மனித ரூபத்தில் வருதலும்
ஹஸ்ரத் லூத் நபி (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்கள், “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்கள். இறுதியில் ஒருநாள் இறைவன், நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் துவாவை எற்றுக்கொண்டான்.

கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *06-03-2017*

No comments:

Post a Comment