Monday, 6 March 2017

நபி லூத் (அலை) அவர்களின் வரலாறு தொடர் - 1*.


*நபிமார்கள் வரலாறு*  - *நபி லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின்*
*வாழ்க்கை வரலாறு தொடர் - 1*.

           *🌹பிறப்பு*
ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்களின் தந்தைக்கு இப்ராஹிம், நாஹூர் (Nahor), ஹரன் (Haran) என்று மூன்று மக்கள் இருந்தனர். ஹரனுடைய மகன்தான் ஹஸ்ரத் நபி லூத் (அலைஹிஸ்ஸலாம்) அன்னவர்கள் ஆவர். எனவே இவர்கள் ஹஸ்ரத் இப்ராஹிம் நபியின் சகோதரரின் மகன் முறையானவர்கள் ஆவர்.

🗣 *ஏகத்துவ பிரச்சாரம்*
ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நாட்டை விட்டு வெளியேறியபோது ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களும், ஹஸ்ரத் இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கொள்கையை ஏற்று அவர்களுடன் வெளியேறினார்கள்.

*நபித்துவம்:*
ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஸதூம் நகருக்கு (city of Sodom) சென்றார்கள். அல்லாஹ் அவர்களை அம்மக்களுக்கு நபியாக அனுப்பி வைத்தான்.


                   🔎ஸதூம் நகரம்
ஸதூம் நகர் ஜோர்தான் சாக்கடலின் மேற்கு புரத்தில் அமைந்துள்ளது. முதஃபகாத் என்பது ஜோர்தான் நதிக்கு அருகிலுள்ள ஸதூம் (Sodom), கொமோரா (Gomorrah), ஆதாம், ஸபோயின், ஸுனூக்கு என்னும் ஐந்து நகரங்களை கொண்ட நாடாகும்.

♻அந்த காலத்தில் ஸதூம் மிக முக்கியமான ஒரு நகரமாக இருந்தது. அங்கு ஹஸ்ரத் நபி இப்ராஹிம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் கூறியபடி, இறைவன் 'ஒருவன்' என்ற ஓரிறை கொள்கையை பரப்பப் ஹஸ்ரத் லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் சென்றார்கள் .

👥ஸதூம் நகர மக்களின் இழிநிலை:
அங்கு வாழ்ந்துவந்த மக்கள் விவரிப்பிற்கும் அப்பாற்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள். மகா கொடியவர்கள். விலங்குகளை விடக் கீழானவர்களாக இருந்தனர். பிரயாணிகளை வழிமறித்து கொள்ளையடிப்பது' அவர்களின் அடிப்படைத் தொழில்.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
_அட்மின் குழு_
பதிவு நாள்: *06-03-2017*




No comments:

Post a Comment