Sunday, 5 March 2017

நிக்காஹ் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார் தொடர் -1



*📖அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ள திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் யார்? தொடர் -1*

🌾திருமணம் செய்ய ஹராமாக்கப்பட்ட பெண்கள் இரு வகையினர் :

1.எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤبدا ):  எத்தருணத்திலும் ஒரு ஆணாகிறவன் இவர்களை திருமணம் செய்வது  கூடாது .
நிகழ் காலத்தில் ஹராமாக்கப் பட்டவர்கள் ( محرمات مؤقتا):
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை காரணமாக ஆண்கள் இவ்வகையின பெண்களை திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது . அந்த சூழலோ அல்லது ஒரு திருமண உறவு முறியும் பட்சத்தில் திருமணம் செய்ய ஹலாலாகுவாள் .

🔎இவ்விருவகையின பெண்களைப்பற்றி விரிவாக பார்ப்போம்:

❌1 .எப்போதும் ஹராமாக்கப் பட்டவர்கள் :
அ ).உறவுவின் (காரணமாக ) ஹராமாக்கபட்டவர்கள் (ஏழு நபர்கள் )
(1) தாய்மார்கள் :  ஒரு ஆணை பெற்றேடுத்ததின் வகையில் தாய்வழி உறவும், தந்தை வழி உறவும் ஹராம், அதாவது தாய் , தாயுடைய தாய் (பாட்டி), தந்தையுடைய தாய் (பாட்டி ) என முன் செல்லும் சந்ததி ஹராமாகும் .

(2) மகள்கள் : ஒரு ஆண் பெற்றெடுத்ததின் முறையில் ஹராமாகக்கபடுவாள் .மேலும் மகளின் மகள் என அவளின் கீழ் வரும் சந்ததியும் ஹராமாக்க படுவர்.

(3) சகோதரிகள் : எப்போதும்  சரி சகோதரிகள்  ஹரமாக்கப்படுவார்கள்.

(4) மாமி : இவர்கள் தந்தையின் சகோதரிகள் மேலும் அவர்களின் மேல் உள்ள சந்ததி (மாமியின் தாய்) , இதில்  தந்தையின் மாமி , தாயின் மாமியும் அடங்குவர் .

(5) சாச்சி (பெரியம்மா , சின்னம்மா ) : இவர்கள் தாயின் சகோதரிகள், தந்தையின் தாய்மார்கள் (சாச்சி).

(6) சகோதரனின் மகள் ,

(7) சகோதரியின் மகள் : சகோதரனின் மகள் , சகோதரியின் மகள் என்றாலும் சரி இருவரும் ஹராமாக்கபடுவர் , மேலும் அவர்களின் வழி  வரும் சந்ததியும் ஹராமாகபடுவர் . மேற்கூறப்பட்ட ஏழு நபர்களும் எப்போதும் திருமணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளது . இதில் நான்கு இமாம்களும் ஒருமித்த கருத்து கொண்டுள்ளனர். மேலும் குறிப்பாக ஒருவிடயம் உறவு முறை விடயத்தில் தெளிவாகிறது .
“நிச்சயமாக (இரத்த) உறவுகளில் ஒரு ஆணிற்கு அனைவருமே ஹராமகின்றனர் .நான்கு பேரை தவிர :

👥*சாச்சா (பெரிய தந்தை , சிறிய தந்தை மகள் ,
*மாமன் மகள்,
*மாமி மகள்,
*சாச்சி மகள் (பெரியம்மா , சின்னம்மாவின் மகள்,“
இவர்கள் நான்கு நபர்களும் உறவுகளில் திருமணம் செய்ய அனுமதிக்க பட்டவர்கள். இந்த நான்குபேரை நபிகளாருக்கு ஹலாலாக்கி இறங்கிய வசனம் : நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்;

📁அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் – இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); (சூரா அஹ்சாப் 33:50 )

📋மேலும் மஜ்மூ அல் பதாவா ஷேக்குள் இஸ்லாம் (32/62) நான்கு பேரை அல்லாஹ் நபிகளாருக்கு ஹலாக்கியது குறிப்பிட பட்டுள்ளது .

 (♻இன்ஷா அல்லாஹ் தொரும்♻)

பதிவு நாள்: *06-03-2017*


No comments:

Post a Comment