🕋 மார்க்க_🕌*கேள்வி எண்: 413
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *வீரமுள்ள செயல் எது❓*
*குரல்களில் வெறுக்கத்தக்க குரல் எது*
💠 *பதில் =*
1. _உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்._
2. _கழுதையின் குரலாகும்._
*ஆதாரம் = அல்குர்ஆன்: 31:17 & 31:19*
📖“என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
(அல்குர்ஆன் : 31:17)
📋“உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும்.
(அல்குர்ஆன் : 31:19)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *சகுனம் - களில் சிறந்தது எது❓*
💠 *பதில் =*
_நற்குறி - நற்குறி என்றால் நீங்கள் செவியுறுகிற நல்ல மங்கலகரமான சொல்தான்_
*ஆதாரம் = புகாரி:5754*
*முஸ்லிம்:4473*
📚5755. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்' என்று கூறினார்கள். மக்கள், 'நற்குறி என்பது என்ன இறைத்தூதர் அவர்களே?' என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், 'நீங்கள் செவியுறுகிற நல்ல (மங்கலகரமான) சொல்தான்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📙4473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், "பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்" என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது, "நற்குறி என்பது என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நீங்கள் செவியுறுகின்ற நல்ல (மங்கலகரமான) சொல்தான்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "செவியுற்றேன்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை. ஷுஐப் பின் அல்லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றேன்" என இடம்பெற்றுள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
3. ஹக்கிம் - தென்காசி 2
4. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
5. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
7. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
8. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
2. சுல்தான் - திருநெல்வேலி 2
3. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
4. அப்துல் பாசித் - சவுதி 2
5. ஹுசைன் - நாகர்கோவில் 2
6. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
7. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
8. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
9. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 21 - 03 - 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment