📌📌📌📌📌📌📌📌
மரணம்
📌📌📌📌📌📌📌📌
மரணம்( இறப்பு) என்பது இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கு நிச்சியக்கப்பட்ட ஒன்று. அது இன்று வரலாம் நாளை வரலாம் எப்போது எந்த ரூபாத்தில் அல்லாஹ் நமக்கு இறப்பை வைத்திருக்கிறான் என்று யாராலும் கணிக்க முடியாது.
ஆனால் நாமோ இவ்வுலக வாழ்க்கையே பெரிதாக என்னி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
போட்டி,பொறாமை,எரிச்சல்,கெடுதல்
இப்படி பல வழிகளில் நம்மை நாமே மறந்து மறுமை நாளையும் மறந்து நம் செய்யும் காரியங்கள் படைத்தவனுக்கு பொருத்தமில்லாமல் இருக்கிறதே என்பது கூட தெரியாமல் தவறுக்கு மேல் தவறுகள் செய்து வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மனிதன் என்று வேடம் அனிந்து மிருகமாக வாழ்கிறோம்.
மறுமை என்னும் தீர்ப்பு ஒன்று இருப்பதை மறந்து தீமைகளை மேலும் மேலும் செய்கிறோம்.
இந்த வாழ்க்கை நிரந்தரம் அல்ல என்ற என்னம் நம் மனதில் வந்து விட்டால் இந்த பேராசை பிடித்த உலக வாழ்க்கை நமக்கே வெறுத்து விடும்.
நானும் யோகியன் என்று சொல்ல வரவில்லை என்னிடமும் குறைகளை தவிர நிறைகளை இன்றும் தேடி கொண்டுதான் இருக்கிறேன்.
சில சமையங்களில் நமது இறப்பு க்கு பின் நம்மை அடக்கம் செய்த பின் மன்னுக்குள் நமக்கான கேள்விகள் என்னவாக இருக்கும் என்கின்ற பயம் தோற்றிக்கொள்வது நிதர்சன உன்மை.
இவ்வுலகில் நல்ல பொற்றோர்கள் கிடைப்பார்,நல்ல மனைவி கிடைப்பார்,நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்,நல்ல சொந்தங்கள் கிடைப்பார்கள்.
இவை எல்லாம் நிரந்தரம் மில்லை
நிரந்தரமானது நல்ல முறையில் நம் இறப்பை அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.
நம்முடைய பாவாங்களை மன்னித்து நம்முடைய கபுருகளை வெளிச்சமாகி தருவானாக.
நிச்சியம் மரணம் வரும் நீ ஒரு நாள் இறந்துடுவாய்.
நேசர் எல்லாம் அழுத பின்னர் நீ சந்தூக்கு ஏறிடுவாய்.
இந்த நிலை அறிந்திடாமல் ஆனாவத்தால் ஆடுக்கிறோம்
📌📌📌📌📌📌📌📌
மலுக்ஸா இம்ரான்
📌📌📌📌📌📌📌📌
பதிவு நாள்:21-03-2017

No comments:
Post a Comment