Saturday, 18 March 2017

🕋 மார்க்க_🕌 கேள்வி எண்: 408


🕋 மார்க்க_🕌 கேள்வி எண்: 408

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *இயற்கை மார்க்கம் எது❓*

💠 *பதில் =*
_இஸ்லாமிய மார்க்கம் எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்;_

*ஆதாரம் = அல்குர்ஆன்: 30:30*

📜ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 30:30)

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *மனிதன் எப்போது பொய் பேசி, வாக்குறுதி அளித்து மாறு செய்கிறான் என பெருமானார் கூறுகிறார்கள்❓*

💠 *பதில் =*
_கடன்' படும்போது_

*ஆதாரம் = புகாரி:2397*
*முஸ்லிம்: 1031*

📃2397. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, 'இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன?' என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்' என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.

🗂1031. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் "அல்லாஹும்ம இன்னீ அஊது பி(க்)க மின் அதாபில் கப்றி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜாலி, வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஃஸமி வல்மஃக்ரம்" (இறைவா! உன்னிடம் நான் சவக்குழியின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் மரணத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று பிரார்த்திப்பார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "தாங்கள் கடன்படுவதிலிருந்து (இவ்வளவு) அதிகமாகப் பாதுகாப்புக் கோரக் காரணம் என்ன, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி அளித்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்" என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
3. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
4. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
5. ஹக்கிம் - தென்காசி 2
6. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

1. ஜாகிர் உசேன் - திருநெல்வேலி 2
2. சுல்தான் - திருநெல்வேலி 2
3. ஹுசைன் - நாகர்கோவில் 2
4. அப்துல் பாசித் - சவுதி 2
5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
6. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
7. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
8. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
9. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
10. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
11. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2

💰💰💰💰💰💰💰💰💰💰💰

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

💰💰💰💰💰💰💰💰💰💰💰

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 19- 03 - 2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment