🕋 _மார்க்க_🕌 *கேள்வி எண்: 403
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *அத்தாட்சிகளை குறித்து மக்களிடம் என்ன கூறுமாறு நபியிடம் அல்லாஹ் கூறுகிறான்❓*
*வானம் மற்றும் பூமியை எதைக் கொண்டு படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்❓*
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
💠 *பதில் =* _“அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக._
✅ _உண்மையைக் கொண்டே_
*ஆதாரம் = அல்குர்ஆன்: 29:50 & 29:44*
📄வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான் - நிச்சயமாக இதில் முஃமின்களுக்கு அத்தாட்சி இருக்கிறது.
(அல்குர்ஆன் : 29:44)
📑“அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது அத்தாட்சிகள் ஏன் இறக்கப்படவில்லை?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; “அத்தாட்சிகளெல்லாம் அல்லாஹ்விடம் உள்ளன; ஏனெனில் நான் வெளிப்படையாக அச்ச மூட்டி எச்சரிக்கை செய்பவன் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 29:50)
🔵 *இரவில் எழுந்து தொழவில்லையா என்று கேட்டதற்கு, அல்லாஹ் எழுப்புவிக்கும் போது தான் எழுந்திருக்க முடியும் என்று பெருமானாரிடம் கூறியவர் யார்❓*
💠 *பதில் =*
_அலி (ரலி)_
*ஆதாரம் =*
*புகாரி:1127,4724,7347,7465* *முஸ்லிம்: 1424*
📋1127. அலீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமும் ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் வந்தார்கள். 'நீங்கள் இருவரும் தொழவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள்.
ஸஹீஹ் புகாரி.
📁4724. அலீ(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும், ஃபாத்திமாவிடமும் இரவு நேரத்தில் வந்து, 'நீங்கள் இருவரும் ('தஹஜ்ஜுத்') தொழவில்லையா?' என்று கேட்டார்கள்.
அப்போது நான் இறைத்தூதர் அவர்களே! எங்களின் உயிர்கள் அல்லாஹ்வின் கையிலுள்ளன. அவன் எழுப்பும்போதே நாங்கள் எழ முடியும் என்று கூறினேன். இதை நான் கூறியபோது எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் செல்லலானார்கள். பின்னர் தம் தொடையில் அடித்து 'மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' (திருக்குர்ஆன் 18:54) என்று கூறிக் கொண்டே திரும்பிச் சென்றார்கள். பார்க்க ஹதீஸ் 1127
ஸஹீஹ் புகாரி.
📂7347. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம், 'நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்' என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபடி தம் தொடையில் தட்டிக்கொண்டே 'மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:
(இங்கு 'இரவில் வந்தார்கள்' என்பதைக் குறிக்க 'தர(க்)க' எனும் வினைச்சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரவில் வரும் எதுவாயினும் அதற்கு 'தாரிக்' என்று சொல்லப்படும். நட்சத்திரத்திற்கும் 'தாரிக்' என்று சொல்வதுண்டு. 'ஸாம்ப்' என்பது 'பிரகாசிக்கச் கூடியது' என்று பொருள்படும். 'உஸ்குப்' (உன் நெருப்பைப் பிரகாசிக்கச் செய்) என்று தீ மூட்டுபவனிடம் சொல்லப்படும்.
ஸஹீஹ் புகாரி.
🗂7465. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடமும் தம் புதல்வி ஃபாத்திமா(ரலி) அவர்களிடமும் ஒரு (நாள்) இரவு நேரத்தில் வந்தார்கள். எங்களிடம் 'நீங்கள் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?' என்று கேட்டார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் உயிர்களெல்லாம் அல்லாஹ்வின் கரத்தில் தானே இருக்கின்றன! அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நாடினால் எங்களை எழுப்பிவிடுவான்' என்று சொன்னேன்.
நான் இவ்வாறு சொன்னபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல் திரும்பிச் சென்றார்கள். திரும்பிச் சென்ற நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையில் தட்டிக் கொண்டே 'மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்' என்று சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டேன்.107
ஸஹீஹ் புகாரி.
🗞1424. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் இரவு நேரத்தில் வந்து, "நீங்கள் இருவரும் (தஹஜ்ஜுத்) தொழவில்லையா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்களது உயிர் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவன் எங்களை (தூக்கத்திலிருந்து) எழுப்ப நினைத்தால் எங்களை அவன் எழுப்பிவிடுவான்" என்று கூறினேன். நான் இவ்வாறு கூறியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனக்கு எந்த மறுமொழியும் கூறாமல்) திரும்பிச் சென்றார்கள். அவர்கள் திரும்பிச் சென்றபோது தமது தொடையில் அடித்துக்கொண்டே (நான் உடனடியாக பதில் சொன்னதை எண்ணி) "மனிதன் அதிகமாகத் தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்" (எனும் 18:54ஆவது வசனத்தைக்) கூறியபடியே சென்றார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
2. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
3. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
4. ஹக்கிம் - தென்காசி 2
5. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
6. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
7. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
8. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
1. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
2. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
3. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
4. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
5. முஜீப் - சென்னை (ராயபுரம்) 1
6. ஹுசைன் - நாகர்கோவில் 2
7. அப்துல் பாசித் - சவுதி 2
8. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛
1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1
⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 18- 03- 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment