🕋 _மார்க்க_🕌*கேள்வி எண்: 395:*
🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀
*குர்ஆனில் உள்ள கேள்வி👇*
🔴 *அல்லாஹ் நமக்கு இவ்வுலகில் வழங்கப்பட்டிருப்பவைப் பற்றி என்ன கூறுகிறான்?❓*
*எவர்களுக்கு இருமுறை நற்கூலி அளிக்கப்படும்❓*
("படிக்க வேண்டிய வசனம்: *சூரத்துல் கஸல்(வரலாறுகள்)* 28:51:60 (இரண்டு கேள்விக்கும் ஆதாரத்துடன் பதிலளிக்க வேண்டும்)
*ஹதீஸில் உள்ள கேள்வி👇*
🔵 *எந்த இரண்டு வியாபார முறைகளை பெருமானார் தடை செய்தார்கள்?❓*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
_அல்குர்ஆன் :👇_
*ஆதாரம் =*
📗 அல்குர்ஆன்: 28:60 & 54
📜இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 28:54)
📙மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்; ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன; (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?”
(அல்குர்ஆன் : 28:60)
💠 *பதில் =*
_அற்பமாகிய இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்._
⛵ _பொறுமையை மேற்கொண்டதற்காக_
_ஹதீஸ் :👇_
*ஆதாரம் =*
📕 புகாரி:368,2144,2145,2147,2207,5819,5820,6284
📕 முஸ்லிம்:3088,3110,3111,3112,3113, 3114, 3133,3134
📋368. முனாபதா' 'முலாமஸா' எனும் இருவகை வியாபாரங்களையும், கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும், ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, இரண்டு முட்டுக் கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'முனாபதா' குறிப்பிட்ட ஒரு பொருளை எடுத்து எறியும்போது அது எந்தப் பொருளின் மீது படுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பதைக் குறிக்கும்.
'முலாமஸா' குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதித்து விற்பதைக் குறிக்கும்.)
ஸஹீஹ் புகாரி.
🗒2144. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் 'முனாபதா' வியாபாரத்தைத் தடை செய்தார்கள்! 'முனாபதா' என்பது. ஒருவர் தம் துணியை, வாங்குபவர் விரித்துப் பார்ப்பதற்கு முன் அதை வாங்குபவரை நோக்கி எறிந்து (விட்டால் அதை அவர் வாங்கியாக வேண்டும் என்ற நிபந்தனையுடன்) அவரிடம் விற்பதாகும்! மேலும், 'முலாமஸா' எனும் வியாபாரத்தையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்! 'முலாமஸா' என்பது துணியை (விரித்துப் பார்க்காமலேயே அதை) தொட்டவுடன் (வியாபாரம் உறுதியாகிவிடும் என்ற நிபந்தனையுடன்) விற்பனை செய்வதாகும்!' (பார்க்க பின் குறிப்பு)
ஸஹீஹ் புகாரி.
📖2145. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டை தடைசெய்தார்கள். அவற்றுள் ஒன்று. ஒரே துணியைப் போர்த்தி கைகளால் முழங்கால்களைக் கட்டி அமர்வதும் அதையே தோள் புஜத்தில் போட்டுக் கொள்வதுமாகும்! மேலும் 'முலாமஸா முனாபதா' என்ற வியாபார முறைகளையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்!'
ஸஹீஹ் புகாரி.
2147. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைஇரண்டையும் 'முலாமஸா, முனாபதா' என்ற வியாபார முறைகளையும் தடை செய்தார்கள்!'
ஸஹீஹ் புகாரி.
📚6284. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஆடை அணியும் முறைகள் இரண்டையும் வியாபார முறைகள் இரண்டையும் தடை செய்தார்கள். (முறையே) அந்த நான்குமாவன:
1. இஷ்திமாலுஸ் ஸம்மாஉ (ஒருவர் ஒரே துணியைத் தம் தோள்களில் ஒன்றில் போட்டுக் கொள்ள, அவரின் உடலின் இரண்டு பக்கங்களில் ஒன்று துணியின்றி வெளியே தெரிவது.)
2. இஹ்திபா, அதாவது ஒரே துணியால் (முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரிய அமர்வது.
3. முலாமஸா. (அதாவது ஒரு துணியைத் தொட்டுவிட்டாலே அதை விலைக்கு வாங்கியே ஆக வேண்டும்.)
4. முனாபதா. (ஒருவரின் மீது ஒருவர் துணியைத் தூக்கி எறிந்தாலே அதை விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
ஸஹீஹ் புகாரி.
💠 *பதில் =*
_"முலாமசா" என்பது, விற்பவர் வாங்குபவர் ஆகிய இருவரில் ஒவ்வொருவரும் மற்றவரின் விற்பனைக்கான துணியை யோசிக்காமல் தொட்டு விட்டாலே வியாபார ஒப்பந்தம் முடிந்துவிட்டதாக ஆகி)விடுவதாகும்._
_"முனாபதா" என்பது, இருவரில் ஒவ்வொருவரும் மற்றவரை நோக்கித் தமது துணியை எறிய, அவர்களில் எவரும் மற்றவரின் துணியைப் பிரித்துப் பார்க்காமலேயே வியாபாரத்தை முடித்து விடுவதாகும்._
💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇�
⛵1. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
⛵2. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
⛵3. ரஜாக் முஹல்லிஸா - பண்டாரவாடை 2
⛵4. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
⛵5. ஹக்கிம் - தென்காசி 2
⛵6. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 1
⛵7. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
⛵8. கத்தாப் - கந்தரவக்கோட்டை 1
⛵9. இர்ஃபான் - பண்டாரவாடை 1
⛵10. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
⛵11. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2
⛵12. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇
💊1. சுல்தான் - திருநெல்வேலி 2
💊2. ஹுசைன் - நாகர்கோவில் 2
💊3. அப்துல் பாசித் - சவுதி 1
💊4. முஜீப் - சென்னை (ராயபுரம்) 2
💊5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
💊6. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
💊7. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
💊8. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
💊9. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
💊10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
💊11. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2
♻யா அல்லாஹ்! எங்களுடைய கண்ணியம் செலுத்தக் கூடியவர்களாக எங்களை ஆக்கி வைப்பாயாக♻
*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
📆பதிவு நாள் : 06-03- 2017
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌
No comments:
Post a Comment