Sunday, 5 March 2017

🕋 _மார்க்க_🕌*கேள்வி எண்: 394 :*


🕋 _மார்க்க_🕌*கேள்வி எண்: 394 :*

🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀🎀

*குர்ஆனில் உள்ள கேள்வி👇*

🔴 *எவனைவிட மிக வழி கெட்டவன் எவன் இருக்கிறான்  என்று அல்லாஹ் கூறுகிறான்❓*
குர்ஆன் கேள்விக்கு ("படிக்க வேண்டிய வசனம்: *சூரத்துல் கஸல்(வரலாறுகள்)*  28:41:50

*ஹதீஸில் உள்ள கேள்வி👇*

🔵 *ஒரு முஸ்லீமுக்கு எதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிப்பதாக பெருமானார் கூறுகிறார்கள்❓*

🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

_அல்குர்ஆன் :👇_

*ஆதாரம் =*
📗 அல்குர்ஆன்:28:50

உமக்கு அவர்கள் பதில் கூறாவிடில், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்; இன்னும் அல்லாஹ்விடமிருந்து நேர்வழி காட்டியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுபவனைவிட, மிக வழி கெட்டவன் எவன் இருக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் அக்கிரமக்கார சமூகத்தாருக்கு நேர்வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் : 28:50)

💠 *பதில் =*
_தன் மன இச்சையை பின்பற்றுபவனைவிட_

_ஹதீஸ் :👇_

*ஆதாரம் =* *புகாரி:5640,5641,5642*
*முஸ்லிம்:5025,5026,5027,5028,5029,5030*

💠 *பதில் =*
_ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை_

📕5640. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புஹாரி.

📗5641 5642. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவரின் பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.
இதை அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி.

📘5643. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைநம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர்ப் பயிருக்கு ஒப்பானாதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்.3
இதை கஅப் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸஹீஹ் புகாரி.

📙5025. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அவருக்கு ஓர் அந்தஸ்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; அல்லது அவருடைய தவறு ஒன்றை அவரைவிட்டுத் துடைத்துவிடுகிறான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📚5026. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் ஒரு முள்ளாயினும் அதைவிட அற்பமானதாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருடைய தவறுகளில் சிலவற்றைக் கழித்துவிடுகிறான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📖5027. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட எத்துன்பமாயினும் அதற்குப் பதிலாக அவரது பாவம் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம்.

📋5028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் முள் உள்பட எத்துன்பமாயினும் அதற்குப் பதிலாக "அவருடைய தவறுகளில் சில கழிக்கப்படாமல்" அல்லது "அவருடைய தவறுகளில் சில மன்னிக்கப்படாமல்" இருப்பதில்லை. (அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் இவ்விரண்டில் எதைக் கூறினார் என்பது அறிவிப்பாளர் யஸீத் பின் குஸைஃபா (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.)
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

🗒5029. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளரைத் தைக்கும் முள் உள்பட (துன்பங்கள்) எதுவாயினும் அதற்குப் பதிலாக அல்லாஹ் அவருக்கு ஓர் நன்மையைப் பதிவு செய்யாமல், அல்லது அதற்குப் பதிலாக அவருடைய தவறுகளில் ஒன்று மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்.

📜5030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கையாளருக்கு ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி), அபூ ஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"தீமை செய்பவர் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவார்" (4:123) எனும் இறைவசனம் அருளப்பெற்றபோது, அது முஸ்லிம்களுக்குக் கடுமையான கவலையை ஏற்படுத்தியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நற்செயல்களில்) நடுநிலையாகச் செயல்படுங்கள்; சரியானதைச் செய்யுங்கள். (நாம் மிகப்பெரிய அளவில் வழிபாடுகள் செய்யவில்லையே என வருந்தாதீர்கள்.) ஏனெனில், கால் இடறி (காயமடைவது), அல்லது முள் தைப்பது உள்பட ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் அவருக்குப் பாவப் பரிகாரமாகவே அமையும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) இப்னு முஹைஸின் என்பவர், மக்காவாசியான உமர் பின் அப்திர் ரஹ்மான் பின் முஹைஸின் என்பவர் ஆவார்.
ஸஹீஹ் முஸ்லிம்.

💐 *முதல் குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

💎1. முஹம்மது ஷஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 2
💎2. முகம்மது ரம்ஜான் அலி - திருநெல்வேலி 2
💎3. ஹக்கிம் - தென்காசி 2
💎4. அபூதல்ஹா - திருநெல்வேலி 2
💎5. இர்ஃபான் - பண்டாரவாடை 2
💎6. சதாம் ஹுசேன் - திருநெல்வேலி 2
💎7. ராஜா முஹம்மது - கட்டுமாவடி 2
💎8. முஹம்மது கலீம் - பெங்களூர் 2
💎9. பீர் முஹம்மது - திருநெல்வேலி 2
💎10. கத்தாப் - கந்தரவக்கோட்டை 2
💎11. ஹபிப் ரஹ்மான் - துபாய் 2

🌹 *2வது குழுமத்தில் சரியான பதில் சொன்ன நபர்கள் :*👇

⭐1. யாசர் அரஃபாத் -காயல்பட்டணம் 2
⭐2. பத்ருத்தீன் - கடையநல்லூர் 2
⭐3. முஹம்மது அஸ்லம் - கடையநல்லூர் 2
⭐4. முஹம்மது சஃபி - வெள்ளையபுரம் 2
⭐5. அப்துல்காதர் - திருநெல்வேலி 2
⭐6. முஜீப் - சென்னை (ராயபுரம்)2
⭐7. அப்துல் பாசித் - சவுதி 2
⭐8. ஹுசைன் - நாகர்கோவில் 2
⭐9. சுல்தான் - திருநெல்வேலி 2
⭐10. முஹம்மத் பஷீர் -கடையநல்லூர் 2
⭐11. சாதிக் - மல்லிப்பட்டினம் 2
⭐12. நூகு அமீர் -கீழக்கரை 2
⭐13. முஹம்மது ஆசிக் -வழுத்தூர் (தஞ்சை) 2

🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

1. ஆயிஷா பர்வின் - இராஜகிரி(தஞ்சை) 1

🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

♻யா அல்லாஹ்! எங்களுடைய ஹலாலான தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக♻

*🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴*
  📆பதிவு நாள் : 06-03-2017
   
🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌

No comments:

Post a Comment